கிழக்கு இந்தியாவின் மிகப்பெறிய வண்ணத்துப்பூச்சிகள் பூங்கா

TNPSC PAYILAGAM
By -
0



கிழக்கு இந்தியாவின் மிகப்பெறிய வண்ணத்துப்பூச்சிகள் பூங்கா

ஜார்கண்ட் மாநிலம், ராஞ்சிக்கு அருகில் உள்ளது பக்வான் பிர்சா உயிரியல் பூங்கா. அங்கு 20 ஏக்கர் பரப்பளவில் வண்ணத்துப்பூச்சிகளுக்கென தனியாக திறந்தவெளி பூங்கா உருவாக்கப்பட்டுள்ளது. இந்த பூங்கா நவம்பர் 7 அன்று வனத்துறையின் கூடுதல் தலைமைச் செயலாளரான எல்.கியாங்க்ட் அவர்களால் பார்வையாளர்களுக்கு துவக்கிவைக்கப்பட்டது.

இந்த பூங்காவில் 88 வகையான வண்ணத்துப்பூச்சியினங்களைக் காணலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இங்கு 'நீல பென்சி' என்றழைக்கப்படும் அரியவகை வண்ணத்துப்பூச்சியிலிருந்து சாதரணமான லியோபார்ட் வண்ணத்துப்பூச்சியினம் வரை அனைத்தும் இடம் பெற்றுள்ளது. 

இது கிழக்கு இந்தியாவின் மிகப்பெறிய வண்ணத்துப்பூச்சிகள் பூங்கா ஆகும். இந்தப் பூங்கா, வண்ணத்துப்பூச்சிகளைப் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்துவதாகவும் வண்ணத்துப்பூச்சி விரும்பிகளுக்கு ஒரு பொழுதுபோக்கு அம்சமாகவும் அமைந்துள்ளது. உலகச் சூழலியலில் வண்ணத்துப்பூச்சிகள் எவ்வளவு முக்கியமானவை என்பதை இந்த பூங்கா எடுத்துரைக்கிறது.

பார்வையாளர்களுக்கு வண்ணத்துப் பூச்சியினங்கள் பூக்களின் மகரந்தச்சேர்க்கைக்கு எப்படி இன்றியமையாத உதவியாக உள்ளன என்பதை எடுத்துரைக்கின்றது. இந்த பூங்காவின் பரப்பு வண்ணத்துப்பூச்சிகளுக்கான இடம், அவைகளுக்கான தேன் செடிகள், நடைபாதை, சிறிய குளம் ஆகியவைகளை உள்ளடக்கியது. 

இந்த பூங்காவில் வண்ணத்துப்பூச்சிகள் வாழ்வதற்கு ஏற்ற சூழல் உருவாக்கப்பட்டுள்ளது என உயிரியல் பூங்காவின் விலங்கியல் மருத்துவர் டாக்டர். ஓம் பிரகாஷ் தெரிவித்துள்ளார். வண்ணத்துப்பூச்சிகள் பறவைகளால் பாதிக்கப்படாமல் இருக்க தகுந்த முன்னேற்பாடுகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இந்த பூங்காவைப் பராமரிக்க ஆண்டுக்கு 25 லட்சம் செலவிடப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

SOURCE : DINAMANI

Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn more
Ok, Go it!