TODAY CURRENT AFFAIRS IN TAMIL 07.11.2023
கிழக்கு இந்தியாவின் மிகப்பெறிய வண்ணத்துப்பூச்சிகள் பூங்கா:
ஜார்கண்ட் மாநிலம், ராஞ்சிக்கு அருகில் உள்ளது பக்வான் பிர்சா உயிரியல் பூங்கா. அங்கு 20 ஏக்கர் பரப்பளவில் வண்ணத்துப்பூச்சிகளுக்கென தனியாக திறந்தவெளி பூங்கா உருவாக்கப்பட்டுள்ளது. இந்த பூங்கா நவம்பர் 7 அன்று வனத்துறையின் கூடுதல் தலைமைச் செயலாளரான எல்.கியாங்க்ட் அவர்களால் பார்வையாளர்களுக்கு துவக்கிவைக்கப்பட்டது.
KEY POINT : கிழக்கு இந்தியாவின் மிகப்பெறிய வண்ணத்துப்பூச்சிகள் பூங்கா
சர்வதேச வளாகம் தொடக்கம்
சென்னை ஐஐடி-ஆனது தன்னுடைய சர்வதேச வளாகத்தினை தான்சானியாவின் சான்சிபாரில் தொடங்கி உள்ளது.
இதன் மூலம் சர்வதேச வளாகத்தினை தொடங்கும் முதல் ஐஐடி என்ற பெருமையை சென்னை ஐஐடி பெறுகிறது.
பயிர்க் கழிவுகள் எரிப்பதை உடனே நிறுத்த வேண்டும்' - 4 மாநிலங்களுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு:
தில்லியில் காற்று மாசு கடந்த சில தினங்களாக மிகவும் மோசமான நிலையில் உள்ளது. காற்றின் தரக் குறியீடு 450 புள்ளிகளுக்கு மேல் கடந்து 'கடுமை' பிரிவில் உள்ளது. இதையடுத்து காற்று மாசைக் குறைக்க தில்லி அரசு தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. பஞ்சாப், ஹரியாணா உள்ளிட்ட அண்டை மாநிலங்களில் பயிர்க் கழிவுகள் எரிக்கப்படுவதுதான் இதற்கு முக்கிய காரணமாகப் பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் தில்லியில் காற்று மாசு தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் சஞ்சய் கிஷன் கவுல் மற்றும் சுதன்சு துலியா அமர்வு முன்பாக இன்று விசாரணைக்கு வந்தது.அப்போது, 'பஞ்சாப், ஹரியாணா, உத்தர பிரதேசம், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் விவசாயிகள் பயிர்க்கழிவுகளை எரிப்பதை உடனே தடுத்து நிறுத்த வேண்டும். அதுவே தில்லி காற்று மாசுக்கு முக்கிய காரணமாக இருக்கிறது' என்று தெரிவித்தனர்.
வான் வழியாக 50,000 விதைப்பந்துகளை தூவியுள்ளது:
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் இந்திய கடற்படையானது வான் வழியாக 50,000 விதைப்பந்துகளை தூவியுள்ளது.
இந்த விதைப்பந்தினை ஐ.என்.எஸ். தேசாய் ஹெலிக்காப்டர் மூலம் விதைத்துள்ளது.
26 ஜனவரி 1950-ஆம் ஆண்டு இந்திய கடற்படையானது துவக்கப்பட்டது.
பெண்களுக்காக நீர்; நீருக்காக பெண்
மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகம் சார்பில் பெண்களுக்காக நீர்; நீருக்காக பெண் (Water for Women; Water for Women) என்ற இயக்கமானது தொடங்கப்பட்டுள்ளது.
இவ்வியக்கம் மூல் நீருக்கும் பெண்களுக்கும் உள்ள தொடர்பை அதிகரிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.
100 நடமாடும் விற்பனை வாகனங்கள்:
பொதுமக்களுக்கு மலிவு விலையில் கோதுமை மாவு விற்பனைக்காக 100 நடமாடும் விற்பனை வாகனங்களை மத்திய நுகர்வோர் துறை அமைச்சர் பியூஷ் கோயல் தொடங்கி வைத்துள்ளார்
இதற்காக மத்திய நுகர்வோர் பாதுகாப்பு உணவு, பொது விநியோகத்துறையானது பாரத் கோதுமை மாவு திட்டத்தினை துவங்கியள்ளது.
1கிலா கோதுமை மாவானது ரூ.27.50 மிகாமல் மக்களுக்கு அளிக்கப்பட உள்ளது.
சிறுத்தை புலி தனிப்படை (Leopard Task Force) :
சிறுத்தைகளுக்காக பெங்களூருவில் சிறுத்தை புலி தனிப்படை (Leopard Task Force) அமைக்கப்பட உள்ளது.
இந்தியாவில் சிறுத்தை புலிகள் அதிகமாக உள்ள மாநிலமாக மத்தியபிரதேசம் திகழ்கிறது.
டைம் அவுட் முறையில் தனது விக்கெட்டினை பறிகொடுத்த முதல் சர்வதேச கிரிக்கெட் வீரர் :
இலங்கை அணியின் கிரிக்கெட் வீரரான ஏஞ்சலோ மேத்யூஸ் டைம் அவுட் முறையில் தனது விக்கெட்டினை பறிகொடுத்த முதல் சர்வதேச கிரிக்கெட் வீரராகியுள்ளார்.
கிரிக்கெட் போட்டியில் ஒரு வீரர் ஆட்டமிழந்த பின் அடுத்த வீரர் அடுத்த 3 நிமிடங்களுக்கு அவரது முதல் பந்தினை சந்திருக்க வேண்டும். இல்லையெனில் டை அவுட் முறையில் தனது விக்கெட்டினை பறிகொடுப்பார்.
ஃபார்முலா 1 ரேஸின் – பிரேலியன் கிராண்ட் ப்ரீ பிரிவு :
நெதர்லாந்து அணி வீரரும், ரெட் புல் அணி டிரைவரான மேக்ஸ் வெர்ஸ்டாபென் வெற்றி பெற்றுள்ளார்.
இது நடப்பு சீசின் இவரது 20வது வெற்றியாகும்.
உலகக் கோப்பையில் அதிக வீரர்களை போல்டாக்கிய வீரர் என்ற சாதனை
உலகக் கோப்பையில் மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்று வரும் போட்டியில் ஆஸ்திரேலியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் விளையாடி வருகின்றன. இந்தப் போட்டியில் ஆப்கானிஸ்தான் கேப்டன் ஷகிதியை போல்டாக்கி பெவிலியனுக்கு அனுப்பினார் மிட்செல் ஸ்டார்க். இந்த விக்கெட்டின் மூலம் உலகக் கோப்பையில் ஸ்டார்க் புதிய சாதனை ஒன்றையும் படைத்துள்ளார். உலகக் கோப்பையில் அதிக வீரர்களை போல்டாக்கிய வீரர் என்ற சாதனையை அவர் படைத்துள்ளார். இதுவரை 26 விக்கெட்டுகளை போல்டு மூலம் மிட்செல் ஸ்டார்க் கைப்பற்றியுள்ளார்.
மிட்செல் ஸ்டார்க் - 26 விக்கெட்டுகள் ,வாசிம் அக்ரம் - 25 விக்கெட்டுகள் ,லாசித் மலிங்கா - 18 விக்கெட்டுகள் ,முத்தையா முரளிதரன் - 17 விக்கெட்டுகள் , கிளன் மெக்ராத் - 15 விக்கெட்டுகள்
உலகக் கோப்பையில் சதம் விளாசிய முதல் ஆப்கானிஸ்தான் வீரர்:
உலகக் கோப்பையில் மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்று வரும் இன்றையப் போட்டியில் ஆஸ்திரேலியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் விளையாடி வருகின்றன. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் முதலில் பேட் செய்து வருகிறது. இப்போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இப்ராஹிம் ஸ்த்ரான் 131 பந்துகளில் சதம் விளாசி அசத்தினார். அவரது இந்த சதத்தின் மூலம் உலகக் கோப்பையில் சதம் விளாசிய முதல் ஆப்கானிஸ்தான் வீரர் என்ற பெருமையையும் அவர் பெற்றுள்ளார். இதற்கு முன்னதாக ஆப்கானிஸ்தான் வீரர் சமியுல்லா ஷின்வாரி உலகக் கோப்பையில் 96 ரன்கள் எடுத்திருந்ததே தனிநபர் அதிகபட்ச ஸ்கோராக இருந்தது.
LIST OF IMPORTANT DAYS AND DATES IN OCTOBER 2023 IN TAMIL :
- LIST OF IMPORTANT DAYS AND DATES IN OCTOBER 2023 IN TAMIL
- இந்திய தேசிய தினங்கள் முக்கிய நாட்கள் மற்றும் தேதிகள் பட்டியல்
- யுனெஸ்கோவில் அனுசரிக்கப்படும் சர்வதேச தினங்கள்
- 2023 ஆம் ஆண்டின் தமிழ் முக்கிய நாட்கள் மற்றும் தேதிகள் பட்டியல்
- SUMMITS AND CONFERENCES JUNE 2023 IN TAMIL
- SUMMITS AND CONFERENCES JULY 2023 IN TAMIL
- SUMMITSAND CONFERENCES AUGUST 2023 IN TAMIL
- SUMMITSAND CONFERENCES SEPTEMBER 2023 IN TAMIL
- SUMMITS AND CONFERENCES - OCTOBER 2023 IN TAMIL
No comments:
Post a Comment