இந்தியாவில் உள்ள இரண்டு நகரங்கள் உலகளவிலான படைப்பூக்கமிக்க நகரங்கள் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன.
யுனெஸ்கோ கிரியேட்டிவ் சிட்டிஸ் நெட்வொர்க் (UCCN) :
உலக நகரங்கள் தினத்தன்று (அக். 31 ) 55 படைப்பு நகரங்களின் புதிய பட்டியலை யுனெஸ்கோ வெளியிட்டுள்ளது , இதில் 2 இந்திய நகரங்களான கோழிக்கோடு மற்றும் குவாலியர் சேர்க்கப்பட்டுள்ளன.
அக்.31 உலக நகரங்கள் தினமாகக் கொண்டாடப்படுகிறது. அதனையொட்டி இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது, ஐக்கிய நாடுகளின் கல்வி, அறிவியல் மற்றும் பண்பாட்டு அமைப்பான யுனெஸ்கோ.
கேரளத்தில் உள்ள கோழிக்கோடும் மத்திய பிரதேசத்தில் உள்ள குவாலியரும் இந்தப் பட்டியலில் இணைகின்றன. கலாச்சாரம், படைபூக்கம் மற்றும் புத்தாக்க நகர மேம்பாட்டுக்கான அங்கீகாரமாக உலகம் முழுவதுமிருந்து 55 நகரங்களை இந்தப் பட்டியலில் புதிதாக சேர்த்துள்ளது, யுனெஸ்கோ.
கோழிக்கோட்டுக்கு இலக்கிய நகரம் என்கிற அங்கீகாரத்தை வழங்கியுள்ளது. கேரள இலக்கிய விழா மற்றும் புத்தக வெளியீடுகள் தொடர்ச்சியாக அங்கு நடைபெற்று வருகின்றன.
குவாலியருக்கு, இசைக்கான நகரம் என்கிற அங்கீகாரத்தை யுனெஸ்கோ வழங்கியுள்ளது. இந்தியாவின் பழமையான ஹிந்துஸ்தானி இசை, நாட்டுப்புற இசை மற்றும் பக்தி இசையில் குவாலியர், தனித்துவமான கலாச்சாரத்தையும் பன்முகத்தன்மையையும் கொண்டுள்ளது.
UCCN இல் உள்ள இந்திய நகரங்கள்:
கைவினைப்பொருட்கள் மற்றும் நாட்டுப்புற கலைகள்- ஜெய்ப்பூர் (2015), ஸ்ரீநகர் (2021)
திரைப்படம்- மும்பை (2019)
காஸ்ட்ரோனமி -ஹைதராபாத் (2019)
இலக்கியம் - கோழிக்கோடு (2023)
இசை -சென்னை (2017), வாரணாசி (2015), குவாலியர் (2023)
தேர்ந்தெடுக்கப்பட்ட நகரங்கள் 2024 இல் போர்ச்சுகலில் உள்ள பிராகாவில் நடைபெறும் UCCN வருடாந்திர மாநாட்டில், ' அடுத்த பத்தாண்டுகளுக்கு இளைஞர்களை மேசைக்குக் கொண்டுவருதல் ' என்ற கருப்பொருளின் கீழ் பங்கேற்கும்
யுனெஸ்கோ கிரியேட்டிவ் சிட்டிஸ் நெட்வொர்க் (UCCN): துவக்க ஆண்டு-2004
குறிக்கோள் - இது கலாச்சார நடவடிக்கைகள், பொருட்கள், சேவைகள் மற்றும்நிலையான வளர்ச்சிக்கான சர்வதேச ஒத்துழைப்பை வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது .