TODAY CURRENT AFFAIRS IN TAMIL 26.11.2023

TNPSC PAYILAGAM
By -
0


 

TODAY CURRENT AFFAIRS IN TAMIL 26.11.2023 :


ஆதித்யா எல்-1 விண்கலம்:

‘சூரியனை ஆய்வு செய்வதற்காக இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் சாா்பில் அனுப்பப்பட்ட ஆதித்யா எல்-1 விண்கலம் விண்ணில் தான் சென்றடைய வேண்டிய ‘எல்-1’ பகுதியை நெருங்கியிருப்பதாக’ இஸ்ரோ தலைவா் எஸ்.சோமநாத் தெரிவித்தாா். ‘விண்கலம் ‘எல்-1’ பகுதிக்குள் நுழைவது வரும் 2024 ஜனவரி 7-ஆம் தேதி நிறைவடையும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது’ என்றும் அவா் தெரிவித்தாா்.

ஸ்டார்ட் அப் தமிழா-Start Up Tamilha:

ஸ்டார் அப் தமிழா தொலைக்காட்சி நிகழ்ச்சியை தொழில் முனைவோரை ஊக்குவிக்க, தொழில்முனைவு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த தமிழக அமைச்சர் தா.மோ.அன்பரசன் தொடங்கி வைத்துள்ளார்.மேலும் www.starupthamizha.tv என்ற இணையதளத்தினை துவங்கி வைத்துள்ளார்.

இந்திய-சீன எல்லை ஒப்பந்தத்தின் 30 ஆண்டு நிறைவு

முப்பது ஆண்டுகளுக்கு முன்பு, இரு தரப்பு அதிகாரிகளும் எல்லை அமைதி மற்றும் சமாதான ஒப்பந்தத்தில் (BPTA-Border Peace and Tranquility Agreement, 1993) கையெழுத்திட்டனர்.

(எல்லை அமைதி மற்றும் அமைதி ஒப்பந்தம் (BPTA அல்லது MPTA; முறையாக இந்தியா-சீனா எல்லைப் பகுதிகளில் உள்ள உண்மையான கட்டுப்பாட்டுக் கோட்டில் அமைதி மற்றும் அமைதியைப் பராமரிப்பதற்கான ஒப்பந்தம் ) செப்டம்பர் 1993 இல் சீனா மற்றும் இந்தியாவால் கையெழுத்திடப்பட்ட ஒப்பந்தமாகும்.)

இதற்கு "இந்தியா-சீனா இடையேயான எல்லைப் பகுதிகளில் உள்ள மெய்கட்டுப்பாட்டுப் பகுதியில் (LAC) அமைதி மற்றும் சமாதானத்தைப் பேணுவதற்கான ஒப்பந்தம்" என்று பெயரிடப்பட்டது.

இரு தரப்பினரும் அப்போதைய நிலையைத் தொடர்ந்து பேணிக் காத்து, எதிர்பாரா மோதல்கள் நிகழும் அபாயத்தைக் குறைப்பதற்காக சட்டப்பூர்வமாக உறுதியளித்தது இதுவே முதல் முறையாகும்.

இந்த ஒப்பந்தம் ஆனது, இரு தரப்பினரையும் அப்போதைய நிலையைப் பேணிக் காக்கவும், எதிர்பாராத மோதல்கள் நிகழும் அபாயத்தைக் குறைக்கவும், LAC பகுதியில் இராணுவப் படைகளைக் குறைக்கவும் உறுதியளிக்கச் செய்தது.

+ LAC ஆனது இந்தியக் கட்டுப்பாட்டில் உள்ள பகுதியை சீன நாட்டின் கட்டுப்பாட்டுப் பகுதியிலிருந்து பிரிக்கிறது.

இது மூன்று பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது:

  1. கிழக்குப் பகுதி (அருணாச்சலப் பிரதேசம் மற்றும் சிக்கிம்)
  2. மத்தியப் பகுதி (உத்தரகாண்ட் மற்றும் இமாச்சலப் பிரதேசம்)
  3. மேற்குப் பகுதி (லடாக்)

புதுப்பிக்கத்தக்க மின் உற்பத்தி:

இந்தியாவில் புதுப்பிக்கத்தக்க மின் உற்பத்தியில் குஜராத் முதலிடத்தையும், தமிழகம் இரண்டாம் இடத்தையும் பிடித்துள்ளது.கடந்த அக்டோபர் வரை தமிழகத்தின் சூரிய சக்தி மின் உற்பத்தி திறனானது 7,146.59 மெகா வாட்டாக உள்ளது.புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறையால் இவ்வறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

பனி மண்டலத்தின் நிலை குறித்த அறிக்கை 2023

சர்வதேச பனி மண்டல (தாழ் வெப்ப மண்டலம்) பருவநிலை முன்னெடுப்பு அமைப்பானது இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளது.

  • தற்போதைய 1.2 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை உயர்வால் வடக்கு ஆண்டிஸ், கிழக்கு ஆப்பிரிக்கா மற்றும் இந்தோனேசியாவின் பல பனிப்பாறைகள் வேகமாக மறைந்து வருகின்றன.
  • சுவிட்சர்லாந்து நாட்டில் அமைந்துள்ள பனிப்பாறைகளில் எஞ்சியுள்ள 10 சதவீதபனிப்பாறைகள் இரண்டே ஆண்டுகளில் குறைந்துள்ளன.
  • அண்டார்டிகாவைச் சுற்றியுள்ள கடல் பனியானது, இந்த ஆண்டில் இதுவரை இல்லாத குறைந்த கோடை மற்றும் குளிர்கால சாதனை அளவை எட்டியது.
  • ஆர்க்டிக் மற்றும் வடக்கு அட்லாண்டிக் பகுதிகளில் நீரின் வெப்பநிலையானது இயல்பை விட 4-6 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருந்தது.
  • வளிமண்டலக் கார்பன் டை ஆக்சைடின் செறிவு ஆனது, 2023 ஆம் ஆண்டில் தொழில் துறை காலத்திற்கு முந்தைய அளவை விட 50 சதவீதம் அதிகமாக இருந்தது.
  • ஒரு மில்லியனுக்கு 424 பாகங்கள் என்ற அளவிலான CO2 செறிவு ஆனது, கடந்த மூன்று மில்லியன் ஆண்டுகளில் எந்த நேரத்திலும் இல்லாத அளவுக்கு அதிகமாகும்.
  • பூமியின் பனிப்பரவல்களில், 1992 மற்றும் 2022 ஆகிய ஆண்டுகளுக்கு இடையில் 7,560 பில்லியன் டன் பனி குறைந்துள்ளது.
  • கிரீன்லாந்து மற்றும் அண்டார்டிகாவின் சில பகுதிகளில் உள்ள பனிக்கட்டிகள் 2 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் 12-20 மீட்டர் கடல் மட்ட உயர்வுக்கு பங்களிக்கும்.

கட்டணமில்லா உதவி எண்

வெளிநாடு வாழ் தமிழர்களை தொடர்பு கொள்ள கட்டணமில்லா உதவி எண்ணாக 9600023645  அறிவிக்கப்பட்டுள்ளது.

சொற்குவை தளம் -Sorkuvai

சொற்குவை தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்ட சொற்களின் எண்ணிக்கை 14 லட்சத்தை கடந்துள்ளது.சொற்குவை தளமானது தமிழக அரசின் அகரமுதலித் திட்ட இயக்ககத்தின் கீழ் உருவாக்கப்பட்டது.சொற்குவை தளத்திலுள்ள சொற்களை பயன்படுத்துவோரின் எண்ணிக்கையும் 3 லட்சத்தினை கடந்துள்ளது

அஸ்ஸாம் ஆராய்ச்சி நிறுவனம் (ARRI) :

அஸ்ஸாம் ஆராய்ச்சி நிறுவனமானது ஜோஹா அரிசியை (Joha Rice) உருவாக்கும் பணியினை மேற்கொண்டுள்ளது.இவ்வகை அரிசியானது அதிக மகசூல் தரும் உயர்தர நறுமண அரிசி ரகமாகும்.1923-ல் அஸ்ஸாம் ஆராய்ச்சி நிறுவனமானது 45-க்கும் மேற்பட்ட அரிசி ரகங்களை உருவாக்கியுள்ளது.

கின்னஸ் சாதனை :

இந்தியாவின் கல்பனா பாலன் வழக்கமாக இருக்கும் 32 பற்களை விட கூடுதலாக 6 பற்களை கொண்டு உலகிலேயே அதிக பற்களையுடையவராக திகழ்கிறார்.உலகிலேயே அதிக பற்களையுடைய நபர் என்ற கின்னஸ் சாதனையை புரிந்துள்ளார்.

ஆப்கானிஸ்தான் தூதரகம் நிரந்தரமாக மூடப்பட்டுள்ளது- Afghan embassy

தில்லியில் அமைந்துள்ள ஆப்கானிஸ்தானின் தூதரகம் நிரந்தரமாக மூடப்பட்டுள்ளது.2021 ஆம் ஆண்டு முதல் ஆப்கானிஸ்தானில் தலிபன் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றின.உலக நாடுகள் தலிபன்களின் ஆட்சியை அங்கீகரிக்கவில்லை. இதனையொட்டி  இந்தியாவும் ஆப்கானிஸ்தான் தூதரகத்தை மூடியுள்ளது.

LIST OF IMPORTANT DAYS AND DATES IN NOVEMBER 2023 IN TAMIL 

நவம்பர் 26 - தேசிய பால் தினம்

இந்தியாவின் வெண்மைப் புரட்சியின் தந்தை டாக்டர் வர்கீஸ் குரியனின் பிறந்தநாளை நினைவுகூரும் வகையில் நவம்பர் 26 அன்று அனுசரிக்கப்படுகிறது.

நவம்பர் 26 - இந்திய அரசியலமைப்பு தினம்

ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 26 அன்று, இந்தியா அரசியலமைப்பு தினமாக அனுசரிக்கப்படுகிறது, இது சட்ட தினம் அல்லது சம்விதன் திவாஸ் என்றும் அழைக்கப்படுகிறது. நவம்பர் 26, 1949 அன்று, இந்திய அரசியலமைப்புச் சபை இந்திய அரசியலமைப்பை ஏற்றுக்கொண்டது. இது ஜனவரி 26, 1950 அன்று நடைமுறைக்கு வந்தது.

LIST OF IMPORTANT DAYS AND DATES IN OCTOBER 2023 IN TAMIL :

SUMMITS AND CONFERENCES 2023 IN TAMIL:

  1. SUMMITS AND CONFERENCES JUNE 2023 IN TAMIL
  2. SUMMITS AND CONFERENCES JULY 2023 IN TAMIL
  3. SUMMITSAND CONFERENCES AUGUST 2023 IN TAMIL
  4. SUMMITSAND CONFERENCES SEPTEMBER 2023 IN TAMIL
  5. SUMMITS AND CONFERENCES - OCTOBER 2023 IN TAMIL

Post a Comment

0Comments

Post a Comment (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn more
Ok, Go it!