‘சிட்டிஸ்’ திட்டத்தில் சென்னை மாநகராட்சியில் உள்ள 28 பள்ளிகள் ‘சிட்டிஸ்’ திட்டத்தில் மேம்படுத்தப்பட்ட நிலையில் மேலும் 11 பள்ளிகள் இந்தத் திட்டத்தின் கீழ் நவீன வசதிகளுடன் மேம்படுத்தப்படவுள்ளன.
இது குறித்து சென்னை மாநகராட்சி சாா்பில் வியாழக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:
- பிரான்ஸ் மேம்பாட்டு முகமை நிதி உதவியுடன் (AFD) செயல்படுத்தப்பட்டு வரும் ‘சிட்டிஸ்’ திட்டத்தின் கீழ் இந்தியாவின் 12 முக்கிய நகரங்களில் பல்வேறு மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
- இதில், சென்னை மாநகராட்சி பகுதியில் உள்ள 28 மாநகராட்சி பள்ளிகளை நவீன வசதிகளுடன் மேம்படுத்த முதல்கட்டமாக ரூ. 95.25 கோடி மதிப்பில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டண.
- மேலும், இந்தத் திட்டத்தின் கீழ் பிரான்ஸ் மேம்பாட்டு முகமையின் சாா்பில் வழங்கப்பட்ட ரூ. 76.20 கோடி கடனிதவி மூலம் 28 சென்னை பள்ளிகள் முழுமையாக நவீன வசதிகளுடன் ஸ்மாா்ட் வகுப்பறைகள், நவீன வசதிகளுடன் கூடிய ஆய்வகங்கள், சிறந்த விளையாட்டு கட்டமைப்புகள், கழிப்பறைகள், ஆசிரியா்களின் திறனை மேம்படுத்தும் பயிற்சிகள், சிறப்பு விளையாட்டுப் பயிற்சிகள், ஸ்டெம் ஆய்வகங்கள் மற்றும் மொழி சாா்ந்த ஆய்வகங்கள்அமைக்கப்பட்டுள்ளன.
- சிட்டிஸ் சவால் போட்டியில் இந்திய அளவில் வென்ற 12 நகரங்களில் சென்னையும் ஒன்று. அதற்காக தேசிய நகர்ப்புற விவகாரங்கள் நிறுவனம் மற்றும் வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகார அமைச்சகம் ஆகியவை சார்பில் கூடுதலாக ரூ.36 கோடி மாநகராட்சிக்கு வழங்கப்பட்டுள்ளது
No comments:
Post a Comment