TODAY CURRENT AFFAIRS IN TAMIL 24.11.2023
‘சென்னை பஸ்’ என்ற மொபைல் செயலி:
சென்னையில் பயணிகளுக்கு சிரமமின்றி பயணம் செய்ய ‘சென்னை பஸ்’ என்ற மொபைல் செயலியை தமிழக அரசு அறிமுகப்படுத்தியுள்ளது இந்த செயலி மூலம் பயணிகள் தங்கள் வீட்டிலிருந்து 1 கி.மீ தூரத்தில் பேருந்து நிலையங்களின் இருப்பிடத்தை அறிந்து கொள்ளலாம். மேலும் இது பேருந்து பாதை விவரங்கள், தற்போதைய இருப்பிடம் மற்றும் பேருந்து நிறுத்தத்திற்கு வரும் நேரம் ஆகியவற்றை வழங்குகிறது.
சிட்டிஸ் திட்டம் Cities Project
சிட்டிஸ் திட்டதின் கீழ் சென்னை மாநகராட்சியில் 28 பள்ளிகள் மேம்படுத்தப்பட்ட நிலையில் ரூ. 36 கோடி செலவில் 11 பள்ளிகளை நவீன வசதிகளுடன் மேம்படுத்தப்பட உள்ளது.
KEY POINTS : CITIIS SCHEME / ‘சிட்டிஸ்’ திட்டம்
தமிழ்நாட்டின் கருவுறுதல் விகிதம்:
தமிழ்நாட்டின் கருவுறுதல் விகிதம் 2.1 சதவீதத்திலிருந்து 1.4 சதவீதமாகக் குறைந்துள்ளது மேலும் மாநில மக்கள்தொகை கட்டுப்பாட்டில் உள்ளது. 2023 ஆம் ஆண்டில் இந்தியப் பெண்களின் கருவுறுதல் விகிதம் ஒரு பெண்ணுக்கு 2.139 குழந்தைகளாகும். இது 2022 ஆம் ஆண்டை விட 0.93% குறைவாகும். 2023 ஆம் ஆண்டில் இந்தியாவின் பிறப்பு விகிதம் 1,000 பேருக்கு 16.949 பிறப்புகள் ஆகும். இது 2022 இல் இருந்து 1.25% குறைந்துள்ளது.இந்தியாவில் உள்ள ஐந்து மாநிலங்கள் 2.1 என்ற கருவுறுதலின் மாற்று நிலைக்கு மேல் உள்ளன. அவை : பீகார், மேகாலயா, உத்தரபிரதேசம், ஜார்கண்ட், மணிப்பூர்.
உலகின் முதல் முப்பரிமாண அச்சிடப்பட்ட கோயில்:
தெலங்கானா மாநிலம் சித்திபேட் மாவட்டம் புருகுப்பள்ளியில் உலகின் முதல் முப்பரிமாண அச்சிடப்பட்ட கோயில் கட்டப்பட்டுள்ளது. மூன்று மாத முப்பரிமாண அச்சு செயல்முறை மூலம் அடையப்பட்ட இந்த புதுமையான கட்டுமானம் ஒரு குறிப்பிடத்தக்க தொழில்நுட்ப சாதனையை குறிக்கிறது.
புனித மீரா பாய்
உத்தரப் பிரதேச மாநிலம் மதுராவில், துறவி மீராபாயின் 525-வது பிறந்த நாளைக் கொண்டாடும் வகையில், ‘சாந்த் மீராபாய் ஜன்மோத்சவ்’ நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக உத்தரப் பிரதேசத்துக்குச் சென்ற பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, மதுராவிலுள்ள ஸ்ரீகிருஷ்ண ஜென்ம பூமியில் சுவாமி தரிசனம் செய்தார்.
உபி. சென்றுள்ள பிரதமர் அங்கு மதுராவில் புனித மீராபாய் 525 வது பிறந்த நாளையொட்டி நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்று மீராபாய் நினைவு தபால்தலை, நாணயத்தை வெளியிட்டார்
புனித மீரா பாய் 16 ஆம் நூற்றாண்டின் புகழ்பெற்ற இந்து ஆன்மீகக் கவிஞர்களில் ஒருவர் மற்றும் கிருஷ்ணரின் சிறந்த பக்தர்.
மீரா பாய் 1498 CE இல் ராஜஸ்தானின் பாலி மாவட்டத்தில் உள்ள குட்கியில் ஒரு அரச குடும்பத்தில் பிறந்தார் . அவளுடைய சிறுவயது பெயர் யசோதா.
பக்தமல், மீரா பாயின் வாழ்க்கை வரலாற்றை விவரிக்கும் கவிதைத் தொகுப்பு -குரு நாபா தாஸ் ஜி 1585 CE இல் பிரஜா மொழியில் எழுதப்பட்டது .
Sea Guardian -3:
சீனாவும் பாகிஸ்தானும் வடக்கு அரபிக் கடலில் Sea Guardian -3 .மூன்றாவது இருதரப்பு கடற்படை பயிற்சியின் நடத்தி வருகின்றன. சீனாவின் மக்கள் விடுதலை இராணுவம் (PLA) கடற்படை டைப் -093 சாங் வகுப்பு டீசல்-மின்சார நீர்மூழ்கிக் கப்பலை இந்த பயிற்சிக்காக அனுப்பியுள்ளது.
நுழைவு இசைவு (விசா) :
பிரிட்டனில் நுழைவு இசைவு பெறும் நாடுகளின் பட்டியிலில் இந்தியா, நைஜீரியா, ஜிம்பாப்வே ஆகிய நாடுகள் முதல் மூன்று இடங்களை பிடித்துள்ளன.
கல்வி உதவித் தொகையுடன் கூடிய உயர்கல்வி நுழைவு இசைவு பெறுபவர்களில் இந்தியர்கள் 27% பங்கு வகிக்கின்றன.
சுற்றுலா நுழைவு இசைவு பெறும் நாடுகள் வரிசையில் இந்தியா (27%), சீனா (19%) துர்கிஷ் (6%) போன்ற நாடுகள் முதல் மூன்று இடங்களை பிடித்துள்ளன.
தன்னைச் சார்ந்த குடும்ப உறுப்பினர்களை பிரிட்டனுக்கு அழைத்து வரும் நாட்டினர் எண்ணிக்கையில் நைஜிரியா (60,506 நுழைவு இசைவு) முதலிடமும், இந்தியா (43,445 நுழைவு இசைவு) இரண்டாம் இடமும் பிடித்துள்ளன.
தென்கிழக்கு ஆசிய நாடுகளின் 10-வது கூட்டமைப்பு (ASEAN) பாதுகாப்பு அமைச்சர்கள் கூட்டம் (ADMM-Plus):
தென்கிழக்கு ஆசிய நாடுகளின் 10-வது கூட்டமைப்பு (ASEAN) பாதுகாப்பு அமைச்சர்கள் கூட்டம் (ADMM-Plus) கலந்து கொள்வதற்காக பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் ஜகார்த்தாவுக்கு செல்கிறார் மேலும் பிராந்திய மற்றும் சர்வதேச பாதுகாப்பு பிரச்சினைகள் குறித்த மன்றத்தில் உரையாற்ற உள்ளார். 1992 ஆம் ஆண்டில் ஆசியான் அமைப்பின் பேச்சுவார்த்தை சார்ந்த பங்குதாரர் நாடாக இந்தியா ஆனது. 2010 ஆம் ஆண்டு அக்டோபர் 12 ஆம் தேதி, வியட்நாமின் ஹனோய் நகரில் முதல் தென்கிழக்கு ஆசிய நாடுகளின் கூட்டமைப்பு பாதுகாப்பு அமைச்சர்கள் கூட்டம் நடைபெற்றது. 2017 முதல் தென்கிழக்கு ஆசிய நாடுகளின் கூட்டமைப்பு நாடுகளுக்கு இடையிலான ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்காக தென்கிழக்கு ஆசிய நாடுகளின் கூட்டமைப்பு பாதுகாப்பு அமைச்சர்கள் ஆண்டுதோறும் சந்தித்து வருகின்றனர்.
புதிய வகை தவளை இனம் Music Frog
அருணாச்சலப்பிரதேச மாநிலத்தில் நிதிரானா நோவா டிஹிங் இனத்தை சேர்ந்த புதிய மியூசிக் தவளை இனமாது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதற்குநோவா டிஹிங் நதியின் பெயர் இடப்பட்டுள்ளது.
ஆண் தவளைகள் 1.8-2.3 அங்குல நீளம் கொண்டவையாகவும் பெண் தவளைகள் 2.4-2.6 அங்குல நீளம் கொண்டவையாகவும் உள்ளன.
நகைச்சுவைக்காக 51 வது சர்வதேச எம்மி விருது:
நகைச்சுவைக்காக 51 வது சர்வதேச எம்மி விருதை வீர் தாஸ் வென்றார் மேலும் இந்திய தயாரிப்பாளர் ஏக்தா கபூருக்கு நியூயார்க்கில் சர்வதேச இயக்குநரக விருது வழங்கப்பட்டது.
கேம்பிரிட்ஜ் அகராதி 2023ஆம் ஆண்டின் சிறந்த வார்த்தை:
கேம்பிரிட்ஜ் அகராதியின் சார்பில் 2023ஆம் ஆண்டின் சிறந்த வார்த்தையாக hallucinate என்ற வார்த்தை தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
உலக பாரம்பரிய வாரம் 2023 :
ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 19 முதல் 25 வரை உலக பாரம்பரிய வாரம் 2023 ஐ உலகம் ஒன்றாகக் அனுசரிக்கிறது. இது கலாச்சார மற்றும் வரலாற்று பொக்கிஷங்களைப் பாதுகாப்பதை ஊக்குவிப்பதற்காக அர்ப்பணிக்கப்பட்ட உலகளாவிய திருவிழாவாகும். 1945 ஆம் ஆண்டில் இருந்து தொடங்கப்பட்ட உலக பாரம்பரிய வாரம் இரண்டு உலகப் போர்களுக்குப் பிறகு அறிவுசார் மற்றும் தார்மீக ஒற்றுமையை வளர்ப்பதற்காக தொடங்கப்பட்டது.
குரு தேக் பகதூர் தியாக தினம்:
குரு தேக் பகதூர் தியாக தினம் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 24 அன்று அனுசரிக்கப்படுகிறது. சிகிஹிசத்தை நிறுவிய பத்து குருக்களில் 9 வது குரு ஆவார் .அவர் 1621 இல் பஞ்சாபில் உள்ள அம்ரிஸ்தாரில் பிறந்தார். அவர் ஹிந்த் கி சதர் அல்லது இந்தியாவின் கேடயம் என்றும் அழைக்கப்படுகிறார் .
சீக்கிய மதத்தின் மைய நூலான ஸ்ரீ குரு கிரந்த் சாஹிப்பில் 115 பாடல்களை இயற்றினார் .
விசா இல்லாமல் நுழைய 6 நாடுகளுக்கு சீனா அனுமதி:
சீனா ஐந்து ஐரோப்பிய நாடுகளுக்கும் மலேசியாவிற்கும் விசா இல்லாமல் நாட்டிற்குள் நுழைய அனுமதியளித்துள்ளது. வரும் டிசம்பர் 1ஆம் தேதியிலிருந்து பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, நெதர்லாண்டு, ஸ்பெயின், மலேசியா ஆகிய நாட்டு மக்கள் விசா இல்லாமல் சீனாவிற்குள் நுழைய அனுமதிக்கப்படுவர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சீனாவிற்குள் 15 நாள்கள் விசா இல்லாமல் தங்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தச் சோதனை முயற்சி ஒரு வருடத்திற்கு செயல்படுத்தப்படவுள்ளது. சீன மற்றும் வெளிநாட்டு பணியாளர்கள் பரிமாற்றத்தில் வளர்ச்சி மற்றும் வெளி உலகிற்கான உயர் மட்டத் திறப்பை ஏற்படுத்துவதே இந்த முயற்சியின் நோக்கமாகும்
311 (2) (c) பிரிவின் கீழ், 4 அரசு ஊழியர்களை பணிநீக்கம் :
311 (2) (c) பிரிவின் கீழ், மாநிலத்தின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருந்ததற்காக 4 அரசு ஊழியர்களை ஜம்மு & காஷ்மீர் அரசு சமீபத்தில் பணிநீக்கம் செய்துள்ளது.
சட்டப்பிரிவு 311(2) - முன்மொழியப்பட்ட நடவடிக்கைக்கு எதிரான காரணத்தைக் காட்ட அவர்களுக்கு நியாயமான வாய்ப்பு வழங்கப்படாவிட்டால், ஒரு அரசு ஊழியரை பணிநீக்கம் செய்யவோ, தரமிறக்கவோ அல்லது பதவியில் குறைக்கவோ முடியாது என்று கூறுகிறது.
சட்டப்பிரிவு 311(2)(c) - மாநிலத்தின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, குடியரசுத் தலைவர்/ஆளுநர் திருப்தி அடைந்தால், ஊழியர்களின் நடத்தை குறித்து விசாரணைக்கு உத்தரவிடாமல் அல்லது அவர்களின் நிலைப்பாட்டை விளக்க அவர்களுக்கு வாய்ப்பளிக்காமல் பணிநீக்கம் செய்ய இது அரசாங்கத்தை அனுமதிக்கிறது
ஆசிய பாரா வில்வித்தை சாம்பியன்ஷிப்
தாய்லாந்தில் நடைபெற்ற ஆசிய பாரா வில்வித்தை சாம்பியன்ஷிப் போட்டியில் 9 பதக்கங்களுடன் இந்தியா முதலிடம் பிடித்துள்ளது.
ஜூலியஸ் பேர் மகளிர் ஸ்பீடு செஸ் சாம்பியன்ஷிப்
சென்னையில் நடைபெறும் ஜூலியஸ் பேர் மகளிர் ஸ்பீடு செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் சீனாவின் ஹுயிஃபானி முதல் இடமும் இந்திய கிராண்ட் மாஸ்டரான டி.ஹரிகா இரண்டாவது இடம் பிடித்துள்ளனர்.
LIST OF IMPORTANT DAYS AND DATES IN NOVEMBER 2023 IN TAMIL
நவம்பர் 24 - நன்றி செலுத்தும் நாள் (நவம்பர் மாதம் நான்காவது வியாழன்)
இது நவம்பர் நான்காவது வியாழன் அன்று அனுசரிக்கப்படுகிறது, இந்த ஆண்டு நவம்பர் 24 அன்று கொண்டாடப்படுகிறது. இது அமெரிக்காவில் ஒரு தேசிய விடுமுறை. கடந்த ஆண்டின் வருடாந்திர அறுவடை மற்றும் பிற ஆசீர்வாதங்களைக் கொண்டாட மக்கள் நன்றி தெரிவிக்கும் வாழ்த்துக்களைப் பகிர்ந்து கொள்கிறார்கள்.
நவம்பர் 24 - லச்சித் திவாஸ்
லச்சித் திவாஸ் அஹோம் ஜெனரல் லச்சித் போர்புகானின் பிறந்த நாளாகக் கொண்டாடப்படுகிறது. சாரைகாட் போரில் அசாமிய இராணுவத்தின் வெற்றியை இந்த நாள் கொண்டாடுகிறது.
LIST OF IMPORTANT DAYS AND DATES IN OCTOBER 2023 IN TAMIL :
- NOVEMBER 2023 - LIST OF IMPORTANT DAYS AND DATES IN NOVEMBER 2023 IN TAMIL
- இந்திய தேசிய தினங்கள் முக்கிய நாட்கள் மற்றும் தேதிகள் பட்டியல்
- யுனெஸ்கோவில் அனுசரிக்கப்படும் சர்வதேச தினங்கள்
- 2023 ஆம் ஆண்டின் தமிழ் முக்கிய நாட்கள் மற்றும் தேதிகள் பட்டியல்
SUMMITS AND CONFERENCES 2023 IN TAMIL:
- SUMMITS AND CONFERENCES JUNE 2023 IN TAMIL
- SUMMITS AND CONFERENCES JULY 2023 IN TAMIL
- SUMMITSAND CONFERENCES AUGUST 2023 IN TAMIL
- SUMMITSAND CONFERENCES SEPTEMBER 2023 IN TAMIL
- SUMMITS AND CONFERENCES - OCTOBER 2023 IN TAMIL