TODAY CURRENT AFFAIRS IN TAMIL 14.11.2023 :

TNPSC PAYILAGAM
By -
0

 


TODAY CURRENT AFFAIRS IN TAMIL 14.11.2023 :

தெலங்கானா: தேர்தல் விளம்பரங்களை நீக்குமாறு தலைமை தேர்தல் அதிகாரி கடிதம்

விதிமுறைகளை மீறிய தேர்தல் விளம்பரங்களை நீக்குமாறு தலைமை தேர்தல் அதிகாரி கடிதம் எழுதியுள்ளார். ஊடக கண்காணிப்பு மற்றும் சான்றிதழ் வழங்கும் குழுவின் விதிமுறைகளை மீறியதால், அரசியல் கட்சிகள் தங்களின் சில விளம்பரங்களை நீக்குமாறு மாநிலத்தின் பிரதான கட்சிகளான பாரத ராஷ்டிர சமிதி, காங்கிரஸ் மற்றும் பாஜக ஆகியவற்றுக்கு தலைமை தேர்தல் அதிகாரி கடிதம் எழுதியுள்ளார்.

சென்னையில் கனமழை: கட்டணமில்லா எண் அறிவிப்பு:

சென்னையில் கனமழையால் ஏற்படும் குறைகள் மற்றும் பிரச்னைகளை தெரிவிக்க கட்டணமில்லா எண் அறிவிக்கப்பட்டுள்ளது. 1913 என்ற கட்டணமில்லா எண்ணை தொடர்பு கொண்டு புகார்களைத் தெரிவிக்கலாம் என்று சென்னை மக்களுக்கு மாநகராட்சி தெரிவித்துள்ளது. மேலும், 9445477205 என்ற எண்ணில் வாட்ஸ் ஆப் மூலம் தொடர்பு கொண்டு புகார்களை தெரிவிக்கலாம். 044-25619206, 25619207, 25619208 ஆகிய எண்களில் அழைத்து மக்கள் தங்கள் குறைகளை தெரிவிக்கலாம்.

இ-லியர்னிங் (e-learning)

தமிழ்நாடு அரசின் பள்ளிக்கல்வித்துறை இயக்குநரகம், பொது நூலகத் துறை, அண்ணா நூலகம் இணைந்து e-learning என்னும் திட்டத்தினை அறிமுகம் செய்துள்ளது.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வு (TNPSC), ஆசிரியர் தேர்வு வாரிய தேர்வு (TRB), மத்திய அரசுப் பணியாளர் தேர்வு (UPSC), வங்கி, ரயில்வே போன்ற பணிகளுக்கான போட்டி தேர்வுகளுக்கு மாதிரி வினாத்தாள்களை மாணவர்கள் இலவசமாக பயன்படுத்த அறிமுகம் செய்யப்பட்ட திட்டமாகும்

இணைய தள முகவரி – https://elms.annacentenarylibrary.org/

மைதேயி ஆயுதக் குழுக்களுக்கு மத்திய அரசு தடை:

உள்துறை அமைச்சகம் அறிவிப்பு: இந்நிலையில், மத்திய உள்துறை அமைச்சகம் திங்கள்கிழமை வெளியிட்டுள்ள அறிவிக்கையில், ‘மக்கள் விடுதலை ராணுவம், ஐக்கிய தேசிய விடுதலை முன்னணி, அதன் ஆயுதக் குழுவான மணிப்பூா் மக்கள் ராணுவம், மக்கள் காங்லேபாக் போராட்டக் கட்சி, அதன் ஆயுதக் குழுவான சிவப்பு ராணுவம், காங்லேபாக் இடதுசாரி கட்சி, அதன் ஆயுதக் குழுவான சிவப்பு ராணுவம், காங்லேய் கன்பா லுப், காங்லேபாக் சமூக ஐக்கிய கூட்டமைப்பு ஆகிய 9 மைதேயி சமூகங்களின் கிளா்ச்சிக் குழுக்களுக்கு சட்டவிரோத செயல்பாடுகள் தடுப்புச் சட்டத்தின் (உபா) கீழ் தடை விதிக்கப்படுகிறது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இதில் சில அமைப்புகளுக்குத் தடை விதிக்கப்பட்டது. தற்போது இந்த ஆயுத கிளா்ச்சிக் குழுக்களுக்கும் சோ்த்து 5 ஆண்டுகளுக்குத் தடை விதிக்கப்படுகிறது.

ஆப்ட்ரூட் (OptRoute) செயலி

இடைத்தரகர் யாரும் இல்லாமல் ஓட்டுநரையும், நுகர்வோரையும் நேரடியாக இணைக்க சென்னை ஐஐடி-யின் ஆசிரியர்கள், மாணவர்கள், முன்னாள் மாணவர்கள் இணைந்து ஆப்ட்ரூட் (OptRoute) என்ற செயலியை வடிவமைத்துள்ளனர்.

இச்செயலியானது நகரங்களுக்கிடையே சரக்குகளை எளிதாகவும், திறமையாகவும் கொண்டு செல்லும் வகையில் வடிவமைத்துள்ளனர்.

ஊரகப்பகுதி – நிதி ஒதுக்கீடு

தமிழகத்தின் ஊரகப்பகுதிகளுக்கு 15-வது மத்திய நிதி ஆணையம் வழியாக ரூ.836.97 கோடி நிதியானது ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

15வது நிதி ஆணைய தலைவராக ஸ்ரீ என்.கே சிங் செயல்படுகிறார்.

அரசமைப்பு சட்டம் 280-வது பிரிவின் படி ஒவ்வொரு 5 ஆண்டுக்கு ஒருமுறையும் நிதிக்குழுவானது அமைக்கப்படுகிறது.

இக்குழுவானது மத்திய, மாநில அரசுகளுக்கு இடையேயான நிதிப்பகிர்வு, மாநிலங்களுக்கு வழங்கப்பட வேண்டிய நிதியுதவிகள் குறித்த பரிந்துரையை மத்திய அரசுக்கு காட்டுகிறது.

கடன் ஒப்பந்தம் :

ஆசிய வளர்ச்சி வங்கியுடன் மத்திய அரசானது புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.

உயர்தர நகர்ப்புற உள்கட்டமைப்பை உருவாக்க ரூ.3,300 கோடி (400 மில்லியன் டாலர்) கடன்பெற இந்த ஒப்பந்தத்தை மத்திய அரசு மேற்கொண்டுள்ளது.

கங்கா தேவி

இமாச்சலபிரதேச மாநிலத்தின் மூத்த வாக்களாராக கருதப்படும் கங்கா தேவி (104) காலமானார்.

பழங்குடியினர் வளர்ச்சித் திட்டம்

நவம்பர் 15-ல் ஜார்க்கண்ட் மாநிலத்தில் பிர்சா முண்டா பிறந்த தினமான பழங்குடியினர் தினத்தினை முன்னிட்டு பழங்குடி சமூகத்தினரின் மேம்பாட்டுக்காக ரூ.24,000 கோடி அளவிலான பழங்குடியினர் வளரச்சித்திட்டமானது துவங்கப்பட உள்ளது.

ஐசிசி ஹால் ஆஃப் ஃபேமில் - முதல் இந்திய வீராங்கனை:

முன்னாள் இந்திய மகளிா் அணியின் கேப்டன் டயானா எடுல்ஜி, அதிரடி தொடக்க பேட்டா் வீரேந்திர சேவாக், இலங்கை ஜாம்பவான் அரவிந்த டி சில்வா உள்ளிட்டோா் ஐசிசி ஹால் ஆஃப் ஃபேமில் சோ்க்கப்பட்டுள்ளனா்.

முதல் இந்திய வீராங்கனை: இந்நிலையில், இந்திய முன்னாள் கேப்டனும், பௌலா், நிா்வாகி என்ற சிறப்புகளைப் பெற்றுள்ள டயானா எடுல்ஜி (67) ஹால் ஆஃப் ஃபேமில் சோ்க்கப்பட்டுள்ள முதல் இந்திய வீராங்கனை என்ற பெருமையைப் பெற்றுள்ளாா். 

வீரேந்திர சேவாக் (45) : அதிரடி பேட்டரான சேவாக், 1999 முதல் 2013 வரை 23 டெஸ்ட் சதங்களை விளாசியுள்ளாா். 104 டெஸ்ட்களில் 8586 ரன்களையும், 400 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளாா். 251 ஒருநாள் ஆட்டங்களில் 8273 ரன்களை விளாசி, 96 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளாா். மேலும் 2011 உலகக் கோப்பையை இந்தியா வெல்ல காரணமாக இருந்தாா். 19 டி20 ஆட்டங்களில் 394 ரன்களை விளாசி உள்ளாா். 

அரவிந்த டி சில்வா (58) : 1996 உலகக் கோப்பை வென்ற இலங்கை அணியில் இடம் பெற்றிருந்த அரவிந்த டி சில்வா, 1984-2000 காலகட்டத்தில் 20 டெஸ்ட் சதங்களையும், 11 ஒருநாள் சதங்களையும் விளாசியுள்ளாா். 1996 இறுதி ஆட்டத்தில் ஆஸி.க்கு எதிராக அரவிந்த டி சில்வா அடித்த 107 ரன்கள் கோப்பை வெல்ல உதவியது. 93 டெஸ்ட்களில் 6361ரன்களையும், 308 ஒருநாள் ஆட்டங்களில் 9284 ரன்களையும் விளாசியுள்ளாா்.

ஏடிபி டூர் ஃபைனல்ஸ் டென்னிஸ் போட்டி:

இத்தாலியின் டூர் நகரத்தில் நடைபெற்ற ஏடிபி டூர் ஃபைனல்ஸ் டென்னிஸ் போட்டியில் செர்பியாவின் ஜோகோவிச் சாம்பியன் பட்டத்தை வென்று உலகின் நம்பர் 1 வீரர் என்ற அந்தஸ்தை தக்க வைத்துக் கொண்டார்.

மேலும் 6 ஆண்டுகளாக நம்பர் 1 சாம்பியனாக நீடித்த பீட் சாம்பிராஸின் சாதனை முறியடித்துள்ளார்.

LIST OF IMPORTANT DAYS AND DATES IN NOVEMBER 2023 IN TAMIL 

நவம்பர் 14 - குழந்தைகள் தினம்

ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 14 ஆம் தேதி, இந்தியாவில் குழந்தைகள் தினம் கொண்டாடப்படுகிறது. இது பால் திவாஸ் என்றும் அழைக்கப்படுகிறது. இந்நாளில் குழந்தைகளின் உரிமைகள், பராமரிப்பு, கல்வி குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. இந்த நாள் இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் பிறந்த நாளைக் கொண்டாடுகிறது. கல்வி மற்றும் மாணவர்களுக்கு கலாமின் பங்களிப்பை அங்கீகரிப்பதே இந்த நாளின் நோக்கம்.

நவம்பர் 14 - ஜவஹர்லால் நேரு ஜெயந்தி

ஜவஹர்லால் நேரு நவம்பர் 14, 1889 அன்று உத்தரபிரதேச மாநிலம் அலகாபாத்தில் பிறந்தார், சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமரானார். இந்தியாவில், ஜவஹர்லால் நேருவின் பிறந்தநாளை நினைவுகூரும் வகையில் குழந்தைகள் தினம் அனுசரிக்கப்படுகிறது.

நவம்பர் 14 - உலக சர்க்கரை நோய் தினம்

நவம்பர் 14ஆம் தேதி உலக சர்க்கரை நோய் தினமாக அனுசரிக்கப்படுகிறது. இந்த நாளின் முதன்மை நோக்கம் நீரிழிவு நோயின் தாக்கம், அதன் தடுப்பு மற்றும் நீரிழிவு கல்வி பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதாகும்.

LIST OF IMPORTANT DAYS AND DATES IN OCTOBER 2023 IN TAMIL :

SUMMITS AND CONFERENCES 2023 IN TAMIL:

  1. SUMMITS AND CONFERENCES JUNE 2023 IN TAMIL
  2. SUMMITS AND CONFERENCES JULY 2023 IN TAMIL
  3. SUMMITSAND CONFERENCES AUGUST 2023 IN TAMIL
  4. SUMMITSAND CONFERENCES SEPTEMBER 2023 IN TAMIL
  5. SUMMITS AND CONFERENCES - OCTOBER 2023 IN TAMIL

Post a Comment

0Comments

Post a Comment (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn more
Ok, Go it!