Tuesday, November 14, 2023

TODAY CURRENT AFFAIRS IN TAMIL 13.11.2023

TODAY CURRENT AFFAIRS IN TAMIL 13.11.2023 :

2025 ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை: 8 அணிகள் தகுதி:

உலகக் கோப்பை போட்டிக்கு ஈடாக சாம்பியன்ஸ் கோப்பை போட்டி நடத்தப்பட்டு வந்தது. இந்நிலையில் கடந்த 2017-ஆம் ஆண்டுக்கு பின் இப்போட்டி நடத்தப்படவில்லை. இந்நிலையில் 8 ஆண்டுகள் கழித்து மீண்டும் 2025-இல் பாகிஸ்தானில் இப்போட்டிகளை ஐசிசி நடத்த உள்ளது. இதில் மொத்தம் 8 அணிகள் மோதுகின்றன. உலகக் கோப்பையில் முதல் 7 இடங்களைப் பெறும் அணிகள் நேரடியாக தகுதி பெறும். மேலும் போட்டியை நடத்தும் நாடும் தகுதி பெறும். இந்நிலையில் நடப்பு உலகக் கோப்பையில் இந்தியா, தென்னாப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, நியூஸிலாந்து, ஆப்கானிஸ்தான், இங்கிலாந்து, பாகிஸ்தான் (போட்டியை நடத்தும் நாடு), வங்கதேசம் தகுதி பெற்றன.

உயா்கல்வி பயில அமெரிக்கா செல்லும் இந்தியா்களின் எண்ணிக்கை 35% உயா்வு:

மெரிக்காவுக்கு உயா்கல்வி பயில்வதற்காக செல்லும் இந்திய மாணவா்களின் எண்ணிக்கை 35 சதவீதம் உயா்ந்துள்ளது. இது தொடா்பான ஆய்வு தரவுகளை சென்னையில் உள்ள அமெரிக்க துணைத் தூதரக துணைத் தூதா் கிறிஸ்டோபா் டிபிள்யு ஹோட்ஜஸ் வெளியிட்டாா்.2021-2022-ஆம் கல்வியாண்டில் அமெரிக்காவில் உள்ள கல்வி நிறுவனங்களில் பயிலும் இந்திய மாணவா்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்து 99 ஆயிரத்து 182 ஆக இருந்த நிலையில், அது 2022-2023-ஆம் கல்வியாண்டில் 2 லட்சத்து 68 ஆயிரத்து 923-ஆக அதிகரித்துள்ளது. அதில் இளநிலை கல்வி பயில சென்ற மாணவா்களின் எண்ணிக்கை மட்டும் 16 சதவீதம் (31,954) உயா்ந்துள்ளது. சீன மாணவா்களுக்கு அடுத்ததாக (2.90 லட்சம்) அமெரிக்காவில் அதிகம் படிக்கும் வெளிநாட்டு மாணவா்கள் இந்தியா்கள்தான்.

வாக்காளர் சிறப்பு முகாம் தேதிகள் மாற்றியமைப்பு:

தமிழக அரசால், 18.11.2023 அன்று பணிநாளாக அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, இந்தியத் தேர்தல் ஆணையம் சிறப்பு முகாம் தேதிகளை 18.11.2023 (சனிக்கிழமை) மற்றும் 19.11.2023 (ஞாயிற்றுக்கிழமை)–க்கு பதிலாக, 25.11.2023 (சனிக்கிழமை) மற்றும் 26.11.2023 (ஞாயிற்றுக்கிழமை) ஆகிய தேதிகளாக மாற்றியமைத்து அறிவித்துள்ளது.

பிரிட்டனின் வெளியுறவுத் துறை அமைச்சராக முன்னாள் பிரதமர் டேவிட் கேமரூன் நியமனம்:

பிரிட்டனின் வெளியுறவுத் துறை அமைச்சராக முன்னாள் பிரதமர் டேவிட் கேமரூன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். 2010 முதல் 2016 வரை பிரிட்டிஷ் பிரதமராகப் பதவி வகித்தவர் கேமரூன். கேமரூனின் நியமனம் அரசியல் பார்வையாளர்களிடையே பெரும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது. நாடாளுமன்றத்தில் உறுப்பினராக இல்லாத ஒருவர் அமைச்சரவையில் இத்தகைய உயர் பதவியேற்பது மிகவும் அரிதானவொன்று


LIST OF IMPORTANT DAYS AND DATES IN NOVEMBER 2023 IN TAMIL 

நவம்பர் 13 - உலக கருணை தினம் 2023 / WORLD KINDNESS DAY 2023

ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 13ஆம் தேதி உலக கருணை தினம் அனுசரிக்கப்படுகிறது. இந்த நாளின் முக்கிய குறிக்கோள், ஒவ்வொருவரும் மிக முக்கியமான மற்றும் தனித்துவமான மனிதக் கொள்கைகளில் ஒன்றைப் பற்றி சிந்திக்கவும் பின்பற்றவும் அனுமதிக்க வேண்டும். இந்த நாள் மக்களை ஒன்றிணைக்கும் சிறிய கருணை செயல்களையும் ஊக்குவிக்கிறது.உலக கருணை தினம் 2023 தீம் "குழந்தை வளர்ச்சியில் கருணையின் முக்கியத்துவம்." குழந்தைகளின் வளர்ச்சி மற்றும் நல்வாழ்வில் கருணை வகிக்கும் குறிப்பிடத்தக்க பங்கை இந்த தீம் வலியுறுத்துகிறது.குழந்தைகளின் வளர்ச்சியில் கருணையின் தாக்கத்தைப் புரிந்துகொள்ள இது நம்மை ஊக்குவிக்கிறது, அவர்கள் செழிக்க ஒரு வளர்ப்பு மற்றும் பச்சாதாபமான சூழலை வளர்க்கிறது. கருணை என்பது ஒரு நல்லொழுக்கம் மட்டுமல்ல, இளைய தலைமுறையினருக்கு ஒரு சிறந்த உலகத்தை உருவாக்குவதற்கான அடிப்படை கட்டுமானத் தொகுதியாகும்.



LIST OF IMPORTANT DAYS AND DATES IN OCTOBER 2023 IN TAMIL :

SUMMITS AND CONFERENCES 2023 IN TAMIL:

  1. SUMMITS AND CONFERENCES JUNE 2023 IN TAMIL
  2. SUMMITS AND CONFERENCES JULY 2023 IN TAMIL
  3. SUMMITSAND CONFERENCES AUGUST 2023 IN TAMIL
  4. SUMMITSAND CONFERENCES SEPTEMBER 2023 IN TAMIL
  5. SUMMITS AND CONFERENCES - OCTOBER 2023 IN TAMIL

No comments:

Post a Comment

Featured Post

CURRENT AFFAIRS IN TAMIL NOVEMBER 2024 (14.11.2024)

காமன்வெல்த் ஆஃப் டொமினிகா தனது உயரிய தேசிய விருதான டொமினிகா விருதை பிரதமர் நரேந்திர மோடிக்கு வழங்குவதாக அறிவித்துள்ளது: