TODAY CURRENT AFFAIRS IN TAMIL 12.11.2023 :
டிஜிட்டல் விளம்பரக் கொள்கை 2023
டிஜிட்டல் விளம்பரக் கொள்கை 2023’-க்கு மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது. இது குறித்த மத்திய அரசின் செய்திக் குறிப்பு: சிபிசி (CBC) Central Bureau of Communication எனப்படும் மத்திய மக்கள் தொடர்பகத் துறைக்கு டிஜிட்டல் மீடியா பிரச்சாரங்களை மேற்கொள்ள ஏதுவாக ‘டிஜிட்டல் விளம்பரக் கொள்கை 2023-க்கு தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது.
KEY POINTS : Digital Advertisement Policy 2023
தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் ஒளிபரப்பு சேவைகள் (ஒழுங்குமுறை) மசோதா, 2023:
நவம்பர் 10, 2023 அன்று, தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம் வரைவு ஒளிபரப்பு சேவைகள் (ஒழுங்குமுறை) மசோதா, 2023 ஐ வெளியிட்டது, இது இந்தியாவின் ஒளிபரப்புத் துறையை நவீனமயமாக்குவதற்கும் ஒழுங்குபடுத்துவதற்கும் ஒரு குறிப்பிடத்தக்க படியைக் குறிக்கிறது. இந்த முன்மொழியப்பட்ட சட்டம், காலாவதியான சட்டங்கள், விதிகள் மற்றும் வழிகாட்டுதல்களை மாற்றியமைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது,
KEY POINTS : Broadcasting Services (Regulation) Bill 2023
பீக ஹவர் மின் கட்டணம்:
தமிழக அரசானது சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களுக்கு வழங்கப்படும் பீக் ஹவர் மின் கட்டணத்தை 25%லிருந்து 15%-ஆக குறைத்துள்ளது.
தொழில் நிறுவனங்களும் அளிக்கப்படும் சோலார் மின்சாரத்திற்கான நெட்வொர்க் கட்டணத்தையும் 50% குறைத்துள்ளது.
ஏர் இந்தியா:AI விர்ச்சுவல் ஏஜென்ட்
ஒரு நாளில் 6,000 கேள்விகளுக்கு நான்கு மொழியில் பதிலளிக்கும் வகையில் AI விர்ச்சுவல் ஏஜென்ட்டை ஏர் இந்தியா நிர்வாகம் பணி அமர்த்தியுள்ளது.
உலகின் முதல் AI விர்ச்சுவல் ஏஜென்ட்டான இதற்கு மகாராஜா என பெயரிடப்பட்டுள்ளது
குற்றவியல் நடைமுறைச்சட்டம்:
இந்திய தண்டனைச் சட்டம் (IPC) 1860-ஐ மாற்றம் செய்யும் பாரதிய நியாய சம்ஹிதா (PNS) மசோதா 2023-ம் குற்றவியல் நடைமுறைச்சட்டம் (CrPa) 1898-ஐ மாற்றம் செய்யும் பாரதிய நாகரிக் சுரக்ஷா சம்ஹித் (PNSS) மசோதா 2023-ம் மாநிலங்களவைத் தலைவரான ஜெகதீப் தன்கரிடம் அறிக்கையாக சமர்பிக்கப்பட்டுள்ளது.
தொழிலக உற்பத்தி:5.8%-மாக குறைந்து
2022 செப்டம்பரில் 10.3%மாக இருந்த இந்தியாவில் தொழிலக உற்பத்தி வளர்ச்சியானது 2023 செப்டம்பர் மாதத்தில் 5.8%-மாக குறைந்துள்ளதாக தேசிய புள்ளியில் ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கை தெரிவித்துள்ளது.
கின்னஸ் சாதனை:
தீபாவளி பண்டிகைக்காக 22 லட்சம் அகல் விளக்குகள் ஏற்றப்பட்டு உத்திரபிரதேச மாநிலம் அயோத்தியில் கின்னஸ் சாதனை சாதனையானது படைக்கப்பட்டுள்ளது.
உலக மக்கள் தொகை -800 கோடி :
2006-ல் 600 கோடியாக இருந்து உலக மக்கள் தொகை தற்போது 800 கோடியினை கடந்துள்ளது.
இதனை அமெரிக்க மக்கள்தொகை கணக்கெடுப்பு மையமானது வெளியிட்டுள்ள அறிக்கையில் வெளியிடப்பட்டுள்ளது.
மேலும் தற்போது மக்களிள் சராசரி வயது 32-ஆக உள்ளதாகவும், 2060-ல் சராசரி – 39ஆக உயரவும் வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிய ஹாஃப் மாரத்தான் பந்தயம்:
துபாயில் நடைபெற்ற ஆசிய ஹாஃப் மாரத்தான் பந்தயத்தில் சவான் பர்வால், கார்த்திக்குமார், அபிஷக் பால் ஆகியோரை கொண்ட இந்திய அணி தங்கப் பதக்கம் வென்றது.
மகளிர் பிரிவில் இந்தியா வெண்கலப் பதக்கம் வென்றுள்ளது.
தனிநபர் பிரிவில் பர்வால் வெண்கல பதக்கம் வென்றார்.
ஆப்கானிஸ்தான் அணி – சாதனை:
ஆப்கானிஸ்தான் அணியாது ஒரு உலக கோப்பை தொடரில் சுழற்பந்துவீச்சாளர்கள் கொண்டு 268.5 ஓவர்கள் பந்து வீசி சாதனை படைத்துள்ளது.
2011-ல் இந்திய அணி 251 ஓவர்கள் சுழற்பந்துவீச்சாளர்களை பயன்படுத்தி பந்து வீசியதே இருந்து வந்தது. தற்போது ஆப்கானிஸ்தான் அணி இதனை முறியடித்துள்ளது.
IMPORTANT DAYS AND DATES IN NOVEMBER 2023 IN TAMIL -நவம்பர் 12
நவம்பர் 12 - தீபாவளி
தீபாவளி, தீபங்களின் திருவிழாவானது ஆண்டுதோறும் அக்டோபர் அல்லது நவம்பர் மாதங்களில் கொண்டாடப்படும். இது பல்வேறு சமய நிகழ்வுகள், தெய்வங்கள் மற்றும் ஆளுமைகளுடன் இணைக்கப்பட்டுள்ளது.
ஆனால் 14 ஆண்டுகள் வனவாசத்திற்குப் பிறகு அயோத்தியில் ராமர் தனது ராஜ்யத்திற்கு திரும்பியதாக பிரபலமாக கொண்டாடப்படுகிறது. இது லட்சுமி, செழிப்பின் தெய்வம் மற்றும் ஞானத்தின் கடவுள் மற்றும் தடைகளை அகற்றும் விநாயகருடன் பரவலாக தொடர்புடையது.
நவம்பர் 12 - உலக நிமோனியா தினம் 2023 / WORLD PNEUMONIA DAY 2023
நிமோனியா மற்றும் அதன் தடுப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த நவம்பர் 12ஆம் தேதி உலக நிமோனியா தினம் அனுசரிக்கப்படுகிறது. இது உலகின் முன்னணி தொற்று நோயாகக் கருதப்படுகிறது, ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகள் அதிகம் பாதிக்கப்படுகின்றனர்.
உலக நிமோனியா தினம் 2023 இன் கருப்பொருள் "ஒவ்வொரு சுவாசமும்: நிமோனியாவை அதன் பாதையில் நிறுத்து". தீம் ஒவ்வொரு சுவாசத்தின் முக்கியத்துவத்தையும் எடுத்துக்காட்டுகிறது. மேலும் ஆரம்பக் கண்டறிதல், சிகிச்சை மற்றும் தடுப்பு மூலம் நிமோனியாவை நிறுத்துவதற்கான அவசரத்தை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.
LIST OF IMPORTANT DAYS AND DATES IN OCTOBER 2023 IN TAMIL :
- NOVEMBER 2023 - LIST OF IMPORTANT DAYS AND DATES IN NOVEMBER 2023 IN TAMIL
- இந்திய தேசிய தினங்கள் முக்கிய நாட்கள் மற்றும் தேதிகள் பட்டியல்
- யுனெஸ்கோவில் அனுசரிக்கப்படும் சர்வதேச தினங்கள்
- 2023 ஆம் ஆண்டின் தமிழ் முக்கிய நாட்கள் மற்றும் தேதிகள் பட்டியல்
- SUMMITS AND CONFERENCES JUNE 2023 IN TAMIL
- SUMMITS AND CONFERENCES JULY 2023 IN TAMIL
- SUMMITSAND CONFERENCES AUGUST 2023 IN TAMIL
- SUMMITSAND CONFERENCES SEPTEMBER 2023 IN TAMIL
- SUMMITS AND CONFERENCES - OCTOBER 2023 IN TAMIL