Monday, November 13, 2023

டிஜிட்டல் விளம்பரக் கொள்கை 2023



டிஜிட்டல் விளம்பரக் கொள்கை 2023

டிஜிட்டல் விளம்பரக் கொள்கை 2023’-க்கு மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது. 

இது குறித்த மத்திய அரசின் செய்திக் குறிப்பு: சிபிசி (CBC) Central Bureau of Communication எனப்படும் மத்திய மக்கள் தொடர்பகத் துறைக்கு டிஜிட்டல் மீடியா பிரச்சாரங்களை மேற்கொள்ள ஏதுவாக ‘டிஜிட்டல் விளம்பரக் கொள்கை 2023-க்கு தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது. டிஜிட்டல்மயமாக்கலுக்கு ஏற்ப மத்திய அரசின் பல்வேறு திட்டங்கள் மற்றும் கொள்கைகள் குறித்து தகவல்களைப் பரப்புவதற்கும் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கும் ‘சிபிசி’-யின் பணியில் இந்தக் கொள்கை ஒரு முக்கிய தருணத்தைக் குறிக்கிறது.

சமீபத்திய ஆண்டுகளில், பார்வையாளர்கள் ஊடகங்களைப் பயன்படுத்தும் விதம் டிஜிட்டல் இடத்தை நோக்கிய மாற்றத்தைக் கண்டுள்ளது. மத்திய அரசின் டிஜிட்டல் இந்தியா திட்டம் நாட்டில் இப்போது இணையம், சமூக மற்றும் டிஜிட்டல் ஊடக தளங்களுடன் இணைக்கப்பட்டு மிகப் பெரிய வளர்ச்சிக்கு வழிவகுத்துள்ளது. மார்ச் 2023 நிலவரப்படி தொலைத்தொடர்பு சந்தாதாரர்களின் எண்ணிக்கை 1172 மில்லியனுக்கும் அதிகமாக உள்ளது.

கொள்கையின் முக்கிய விதிகள்:

ஓடிடி-Over-the-Top (OTT)  மற்றும் வீடியோ ஆன் டிமாண்ட் (Video on Demand -VOD) ஸ்பேஸில் ஏஜென்சிகள் மற்றும் அமைப்புகளை இணைக்க சிபிசி-க்கு இந்த கொள்கை உதவும். 

சிபிசி இப்போது முதல் முறையாக அதன் பொது சேவை பிரச்சார செய்திகளை மொபைல் பயன்பாடுகள் மூலமும் வழிநடத்த முடியும். 

சமூக ஊடகத் தளங்கள் பொது உரையாடல்களின் பிரபலமான சேனல்களில் ஒன்றாக மாறியுள்ள நிலையில், இந்தத் தளங்களில் அரசு வாடிக்கையாளர்களுக்கு சிபிசி விளம்பரங்களை வைக்கும் செயல்முறையை இந்தக் கொள்கை மேலும் ஒழுங்குபடுத்துகிறது. 

பல்வேறு தளங்கள் மூலம் அதன் பரவலை மேம்படுத்த டிஜிட்டல் மீடியா ஏஜென்சிகளை ஒருங்கிணைக்க சிபிசிக்கு இந்தக் கொள்கை அதிகாரம் அளிக்கிறது.

இந்தக் கொள்கை டிஜிட்டல் தளத்தின் மாறும் தன்மையை அங்கீகரித்து, முறையாக அமைக்கப்பட்ட குழுவின் ஒப்புதலுடன் டிஜிட்டல் இடத்தில் புதிய மற்றும் புதுமையான தகவல்தொடர்பு தளங்களை இணைக்க சிபிசிக்கு அதிகாரம் அளிக்கிறது. 

சிபிசியின் டிஜிட்டல் விளம்பரக் கொள்கை - 2023, கண்டுபிடிப்புக்கான போட்டி ஏலத்தை அறிமுகப்படுத்துகிறது, வெளிப்படைத்தன்மை மற்றும் செயல்திறனை உறுதி செய்கிறது. இந்த செயல்முறையின் மூலம் கண்டறியப்படும் கட்டணங்கள் மூன்று ஆண்டுகளுக்கு செல்லுபடியாகும் மற்றும் அனைத்து தகுதியான நிறுவனங்களுக்கும் பொருந்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Featured Post

CURRENT AFFAIRS IN TAMIL NOVEMBER 2024 (14.11.2024)

காமன்வெல்த் ஆஃப் டொமினிகா தனது உயரிய தேசிய விருதான டொமினிகா விருதை பிரதமர் நரேந்திர மோடிக்கு வழங்குவதாக அறிவித்துள்ளது: