Wednesday, November 15, 2023

முதலாம் பாண்டியப் பேரரசு-TNPSC HISTORY AND CULTURE OF INDIA STUDY MATERIALS IN TAMIL

முதலாம் பாண்டியப் பேரரசு
முதலாம் பாண்டியப் பேரரசு


TNPSC HISTORY AND CULTURE OF INDIA STUDY MATERIALS IN TAMIL

SOUTH INDIAN HISTORY

முதலாம் பாண்டியப் பேரரசு


முதலாம் பாண்டியப் பேரரசு (இடைக்காலப் பாண்டியர் எனவும் கூறுவர்) என்பது ஏறத்தாழ நான்கு நூற்றாண்டுகள் நிலவிய பாண்டியர்களின் முடி அரசாட்சியையும் ஆட்சிப்பரப்புகளைக் குறிக்கும். இதை களப்பிரர்களை அழித்த பாண்டிய வேந்தன் கடுங்கோன் தொடங்கி வைத்தான். மூன்றாம் இராசசிம்மன் என்னும் பாண்டிய வேந்தனோடு இப்பேரரசு முடிவுக்கு வந்தது.

  • தமிழை வளர்க்க தமிழ்ச் சங்கங்கள் அமைத்த பெருமைப் பெற்றவர்கள்.
  • தலைநகரம் - மதுரை,
  • அசோகரது கல்வெட்டுகளில் பாண்டியர் பற்றிய குறிப்புகளும் உள்ளன.
  • தமிழ்ச்சங்கங்களை நிறுவி ஆதரவு அளித்தவர்கள் என்று பாண்டிய அரசர்களை தமிழ் இலக்கியங்கள் போற்றுகின்றன.
  • தமிழகத்தை களப்பிரர்கள் கைப்பற்றியபோது பாண்டியர் ஆட்சியானது முடிவுக்கு வந்தது.

களப்பிரரின் மறைவுக்குப் பின் பாண்டியரின் மறு எழுச்சி ஏற்பட்டதாகத் தெரிகிறது. ஒருகாலத்தில் மலைவாழ் பழங்குடிகளாக இருந்த களப்பிரர்கள் விரைவிலேயே சமவெளியில் குடியேறினர். அவர்கள் புத்த, சமண சமயங்களை ஆதரித்தனர்.

களப்பிரரிடமிருந்து பாண்டியர் பகுதியைக் கடுங்கோன் மீட்டதாகச் செப்பேடுகள் மூலம் அறிய முடிகிறது. அவரைத் தொடர்ந்து இரு அரசர்கள் அடுத்தடுத்து ஆட்சி செய்துள்ளனர். 

அவர்களில் சேந்தன் என்பவர் போர் முறையில் சிறந்தவராக இருந்துள்ளார். சேரரை வென்றதால் அவர் வானவன் என்ற பட்டம் பெற்றார் எனச் செப்பேடுகள் கூறுகின்றன. 

அடுத்து வந்த தொடக்க காலப் பாண்டிய அரசர்களில் சிறந்தவரான அரிகேசரி மாறவர்மன் (624-674) 642இல் பதவி ஏற்றார் என்பதை வைகை ஆற்றுப்பகுதி கல்வெட்டுகள் கூறுகின்றன. இவர் முதலாம் மகேந்திரவர்மன், முதலாம் நரசிம்மவர்மன் ஆகியோருக்குச் சம காலத்தவர் ஆவார். அவர் தமது காலத்தைச் சேர்ந்த சேர, சோழ, பல்லவ சிங்கள அரசர்களை வெற்றி கொண்டதாக அக்கல்வெட்டுக் குறிப்புகளும் செப்பேடுகளும் கூறுகின்றன. சமணர்களைக் கழுவேற்றிய கூன் பாண்டியனே அரிகேசரி என்று அடையாளம் காணப்படுகிறார்.சைவத் துறவியான திருஞானசம்பந்தர் அரிகேசரியை சமண மதத்திலிருந்து சைவ மதத்துக்கு மாற்றினார்.

அரிகேசரியைத் தொடர்ந்து கோச்சடையான் இரணதீரனும் (700-730), அவருக்குப் பின் மாறவர்மன் இராஜசிம்மனும் (730-765) ஆட்சி செய்தனர். 

அவர்களுக்குப் பின் ஜதில பராந்தக நெடுஞ்சடையன் (முதலாம் வரகுணன்) (765-815) ஆட்சிப்பொறுப்பை ஏற்றார். இவரே புகழ்பெற்ற வேள்விக்குடி நிலக்கொடை அளித்தவர் ஆவார். பாண்டிய அரச மரபில் மிகச் சிறந்தவரான இவர் பல்லவர்களையும் சேரர்களையும் வெற்றிகரமாக எதிர்கொண்டார். பாண்டிய அரசைத் தஞ்சாவூர், திருச்சிராப்பள்ளி, சேலம், கோயம்புத்தூர் ஆகிய பகுதிகளுக்கு விரிவுபடுத்தினார். பல விஷ்ணு கோவில்களைக் கட்டிய பெருமையும் இவருக்கு உண்டு. 

இவருக்கு அடுத்த அரசரான ஸ்ரீமாற ஸ்ரீவல்லபர் (815-862) இலங்கைக்குப் படையெடுத்து, அங்கு தன் அதிகாரத்தை நிலைநிறுத்தினார். எனினும் பல்லவ மன்னன் மூன்றாம் நந்திவர்மனிடம் (846-869) தோற்றார். அடுத்ததாக ஆட்சிக்கு வந்த இரண்டாம் வரகுணன் திருப்புறம்பியம் போரில் அபராஜித பல்லவனால் (885-903) தோற்கடிக்கப்பட்டார். இவருக்கு பின்னர் ஆட்சிக்கு வந்த பராந்தக வீரநாராயணன், இரண்டாம் இராஜசிம்மன் ஆகியோரால் முதலாம் பராந்தகனின் தலைமையில் தோன்றிய சோழரின் எழுச்சிக்கு ஈடுகொடுக்க முடியவில்லை. முதலாம் பராந்தகனிடம் தோற்ற இரண்டாம் இராஜசிம்மன் 920இல் நாட்டை விட்டே ஓடினார்.

செப்பேடுகளில் இருந்தும் சில கல்வெட்டுகளில் இருந்தும் வரலாற்றாய்வாளர்களின் கணிப்பின் படியும் பின்வருமாறு பாண்டியர்களின் ஆட்சிப் பட்டியல் அமைகிறது.


வேந்தன்ஆட்சி ஆண்டுகள்
கடுங்கோன்கி.பி. 575-600
அவனி சூளாமணிகி.பி. 600-625
செழியன் சேந்தன்கி.பி. 625-640
அரிகேசரிகி.பி. 640-670
ரணதீரன்கி.பி. 670-710
பராங்குசன்கி.பி. 710-765
பராந்தகன்கி.பி. 765-790
இரண்டாம் இராசசிம்மன்கி.பி. 790-792
வரகுணன்கி.பி. 792-835
சீவல்லபன்கி.பி. 835-862
வரகுண வர்மன்கி.பி. 862-880
பராந்தகப் பாண்டியன்கி.பி. 880-900
மூன்றாம் இராசசிம்மன்கி.பி. 900-945


மாறவர்மன் அரிகேசரி கிபி 640-670 வரை
  1. மாறவர்மன் அரிகேசரி,  தேவாரத்தில் திருஞான சம்பந்தர் போற்றும் நெல்வேலி வென்ற நெடுமாறன் இவன்தான் என்பர்.  
  2. இம்மன்னனின் பட்டத்தரசி மங்கையர்க்கரசி.  
  3. இவன் சம்பந்தரால்  சமணத்திலிருந்து சைவத்திற்கு மாறியவன். 
  4. இவன் காலத்தில் மதுரைக்கு வந்த யுவான்சுவாங்  பாண்டிய நாட்டின் முத்துக்களை பற்றியும்,  வணிகர்களை பற்றியும் கூறியுள்ளார். இவன் மங்கையர்க்கரசியாரின் கணவன்;  முதலில்  சமணணாயிருந்து பின்பு திருநாவுக்கரசரால்  சைவனாக மாறியவன்.  இவன்  சேரர்,   பரவர் என்ற குறுநில மன்னர்  சிலரை வென்றவன். 'நெல்வேலி வென்ற நெடுமாறன்'  இவனே.  இவன் ஆட்சியின் தொடக்கத்தில் யுவான்சுவாங் என்ற சீன யாத்திரிகன் பாண்டிய நாட்டை நேரில் கண்டான்.  அந்நாட்டின் முத்து உற்பத்தி பற்றி எழுதியுள்ளார்;  நாடு வளம் பெற்று செல்வத்தால் சிறந்தது என்று கூறியுள்ளான்.   இப்பாண்டியன் இரணிய கர்ப்ப தானமும்  துலாபார தானமும் செய்தவன் என்று வேள்விக்குடிச் செப்பேடுகள் கூறுகின்றன.
  5. இவன் மகன் கோச்சடையன் ரணதீரன்;  இவன் 'இரணரசிகன்'  என்ற சாளுக்கிய விக்கிரமாதித்தனை வென்ற காரணத்தால் தன்னை 'ரணதீரன்' என்று அழைத்துக் கொண்டான்.

 அரிகேசரி பராங்குச மாறவர்மன் (கிபி 710-765)

  1. அரிகேசரி பராங்குச மாறவர்மன்  இரண்டாம் நந்திவர்மன் காலத்தில் வாழ்ந்தவர்.  
  2. இவர் கொங்கு நாட்டின் மீது படையெடுத்து கொங்கு நாட்டை வென்றான். 
  3. திருமங்கையாழ்வார் இவன் காலத்தில் வாழ்ந்த சமகால புலவர்.  இவன் குறும்பு,  நெடுவயல்,  குறுமடை,  மன்னிக்  குறிச்சி.  திருமங்கை,  பூவாளூர்,  கொடும்பாளூர் முதலிய ஊர்களில்  பல்லவனோடு போரிட்டான்.  அக்காலம் திருமங்கையாழ்வார் காலம்.  
  4. கங்க அரசன் மகளான புசுந்தரியை மணந்தான்.  
  5. திருப்பாண்டிக்  கொடு முடிவில் உள்ள சிவபெருமான் கோவிலுக்கு பெரும்பொருள் கொடுத்தான் என்று வேள்விக்குடிச் செப்பேடுகள் தெரிவிக்கின்றன.  
  6. இவன் பாட்டினைப்போல் இரணிய கர்ப்பதானமும் துலாபாரமும் செய்தான். வேள்விக்குடி  செப்பேடு  இவனுடைய சிவபக்தியை போற்றுகின்றது.

 நெடுஞ்சடையன்  பராந்தகன் (கிபி 765-790)

  1. வேள்விக்குடிச்  செப்பேடுகளுக்கும்  விவரமா மங்கலர்  செப்பேடுகளுக்கும் . உரியவன் இவனே.  
  2. இவன் பல்லவனை பெண்ணாகடத்தில் தோற்கடித்தான்  
  3. ஆய்வேளையும்,   குறும்பனைம்யும் பேரூர்(கோயம்புத்தூருக்கு பக்கத்தில் உள்ள பேரூர்) பெருமாள் கோவில் எழுப்பித்தா.  இவன் காலத்தில்தான் கிபி 770 இல் ஆனைமலை நரசிம்ம ஸ்வாமி குகைக் கோவில்  குடைய பட்டது.

 முதலாம் வரகுணன்

  1. மிகச் சிறந்த போர்வீரன்.  இவன் தந்திவர்மன் (கிபி 795 முதல் 846 வரை)  காலத்தவன்.  
  2. இவன் பெண்ணாறு வரையில் பல்லவர் ஆட்சிக்கு உட்பட்டிருந்த நிலப் பகுதியைக் கைப்பற்றினான்.  
  3. இவன் சிறந்த சிவபக்தன் என்பது பட்டினத்தார் பாடலளும் திருக்கோவையார் செயல்களாலும் இனிது புலனாகும்.

 சீமாறன் சீவல்லபன் (கிபி 835 முதல் கிபி 862 வரை)

  1. சீமாறன் சீவல்லபன் இவனைப் பற்றி சின்னமனூர் செப்பேடு புகழ் பாடும் சிறப்பு உடையவன். 
  2. இவன் குடமூக்கில தன்னை எதிர்த்த கங்கர், சோழர்,  கலிங்கர் முதலியவர்களை வென்றான்.  
  3. தெள்ளாறெறிந்த  நந்திவர்மன்' காலத்தை சேர்ந்தவர். 
  4. இவன் ஈழ நாட்டின் மீது படையெடுத்து பல நகரங்களை கொள்ளையிட்டு புத்த விஹாரங்களில் இருந்த பொற்படிமங்களையும் பிற பொருள்களையும் கைப்பற்றி மீண்டான் என்று மகாவம்சம் என்னும் இலங்கை வரலாறு கூறுகின்றது. 
  5. இவன் பல்லவருடன் தெள்ளாறு, குடமூக்கு, இரிசிக்கரை என்னும் மூன்று இடங்களில் போரிட்டான்ச தெள்ளற்று போரில் மூன்றாம் நந்திவர்மன் வெற்றி கொண்டான் அதனால் தெள்ளறெறிந்த நந்திவர்மன்ட என்று அழைக்கப்பட்டான். 
  6. இரண்டாம் போர் குடமூக்கில் நடந்தது. இப்போரில் பாண்டியன் வெற்றி பெற்றான். மூன்றாம் போர் இரிசிக்கரையில் நடைபெற்றது. இப்போரில் நந்திவர்மன் மகனான நிருபதுங்கவர்மன் வெற்றி அடைந்தான்.

 இரண்டாம் வரகுணன் II  (கிபி 862-880) 

  1. இவன் தென்னிந்திய வரலாற்றில் சிறப்பிடம்  பெற்றவன்.  
  2. இவன்  நிருபதுங்கவர்மன் மகனான அபராசிதன் காலத்தில்  பல்லவனை எதிர்த்தான்.  
  3. பல்லவனுக்கு உதவியாக அவன் பாட்டனான கங்க அரசன்(பிருத்விபூதி)  கலந்து கொண்டான்.  விசயாலயன் மகனான ஆதித்த சோழன் பல்லவனுக்கு  உதவிபுரிந்தான்.   போர் குடமூக்கிற்கு 9 கல் தொலைவிலுள்ள திருப்புறம்பியம் என்னுமிடத்தில் கடுமையாக நடந்தது.  கங்க அரசன் கொல்லப்பட்டான்.  பாண்டியன் முற்றிலும்  முறியடிக்க பட்டான்.  ஆதித்த சோழன்  உதவியிரவிடில், பல்லவர் தோற்று இருப்பார்கள்.  பல்லவன் தனக்கு உதவி புரிந்த ஆதித்த  சோழனை பாராட்டி விருது  வழங்கினான்.
  4. வரகுணன் திருச்செந்தூர் முருகனிடம் மிக்க ஈடுபாடு உடையவன்.  இப்பெருமானுக்கு ஆண்டு முழுவதும் நாள் வழிபாடு நடத்துவதற்கு 1400 பொற்காசுகளைத் நிவந்தமாக அளித்தான்.  
  5. திருப்புறம்பியப் போரே ஆதித்தன் பேரரசன் ஆவதற்கு அடிப்படை கோலியது.  இப்போரினால் பாண்டியர் செல்வாக்கு ஒழிந்தது.  
  6. பல்லவர் படை வன்மையும் குன்றியது.  இவ்விரண்டையும் தனக்குத் துணையாகக் கொண்டு ஆதித்த சோழன் அப்பர் ஆதித்தனைக் கொன்று  காளத்தி வரை தனது ஆட்சியை நிறுவினான்.  பிற்கால சோழப் பேரரசின் அடிப்படை திருப்புறம்பியப் போர் என்பது மிகவும் பொருத்தமாகும்.

முடிவு:

ஸ்ரீமாறஸ்ரீவல்லபனின் வழித்தோன்றல்கள் பல்லவ, சோழர்களோடு பலமுறை போரிட நேரிட்டது.கி.பி.10 முதல் 11 ஆம் நூற்றாண்டு வரை பாண்டியர்கள் பலமுறை போரிட்டும் தமது பெருமையை நிலைநிறுத்த முடியவில்லை.அவர்களோடு நடந்த தொடர் போராட்டங்களில் பாண்டிய பேரரசு சிதறுண்டு போனது.

No comments:

Post a Comment

Featured Post

CURRENT AFFAIRS IN TAMIL NOVEMBER 2024 (14.11.2024)

காமன்வெல்த் ஆஃப் டொமினிகா தனது உயரிய தேசிய விருதான டொமினிகா விருதை பிரதமர் நரேந்திர மோடிக்கு வழங்குவதாக அறிவித்துள்ளது: