Thursday, November 16, 2023

பிற்காலப் பாண்டியப் பேரரசு-TNPSC HISTORY AND CULTURE OF INDIA STUDY MATERIALS IN TAMIL

 

பிற்காலப் பாண்டியப் பேரரசு
       பிற்காலப் பாண்டியப் பேரரசு

TNPSC HISTORY AND CULTURE OF INDIA STUDY MATERIALS IN TAMIL

SOUTH INDIAN HISTORY

பிற்காலப் பாண்டியப் பேரரசு


பிற்காலப் பாண்டியர்களின் எழுச்சி (1190 - 1310) 

அதிராஜேந்திரனின் (விஜயாலயனின் வழிவந்த கடைசி அரசர்) மறைவுக்குப் பின்னர் பாண்டிய நாட்டில் சோழ மண்டலாதிபதிகளின் ஆட்சி பலவீனமடைந்தது. அதன் விளைவாகப் பதிமூன்றாம் நூற்றாண்டில் பாண்டியர் மட்டுமே எழுச்சி பெற்ற தமிழ் அரச வம்சமாக விளங்கினர். 

மதுரை அவர்களின் தலைநகராகத் தொடர்ந்தது. அவ்வமயம் காயல் அவர்களின் முக்கியத் துறைமுகமாயிற்று

வெனிஸ் நாட்டைச் சேர்ந்த புகழ் பெற்ற பயணியான மார்க்கோபோலோ இரண்டு முறை (1288, 1293) காயலுக்கு வருகைதந்தார். இத்துறைமுக நகர் அராபிய, சீனக் கப்பல்களால் நிரம்பியிருந்தது என்றும் விறுவிறுப்பான வணிக நடவடிக்கைகளைக் கொண்டிருந்ததாகவும் அவர் நம்மிடம் கூறுகிறார்.

பாண்டிய அரசு "செல்வச் செழிப்பு மிக்க, உலகிலேயே மிக அற்புதமான பகுதியாகும்" என மார்க்கோ போலா புகழாரம் சூட்டுகிறார். இலங்கையோடு சேர்ந்து உலகத்தில் காணப்படும் பெரும்பாலான மாணிக்கக்கற்களையும் முத்துக்களையும் உற்பத்தி செய்கிறது என மேலும் கூறுகிறார். தன்னுடைய பயணக் குறிப்புகளில் சதி '(உடன்கட்டை ஏறுதல்) நிகழ்வுகளையும் அரசர்களின் பலதார மணத்தையும் பதிவு செய்துள்ளார்.

  • கி.பி.13ஆம் நூற்றாண்டில் பாண்டியர்கள் மெல்ல சோழரின் தலைமையிலிருந்து விடுபட்டு தங்களது தனியரசை நிறுவினர்.
  • இந்நிலையில் விக்கிரம பாண்டியனுக்கும். வீரபாண்டியனுக்கும் இடையில் வாரிசுரிமை போர் ஏற்பட்டது. சோழவேந்தன் மூன்றாம் குலோத்துங்கனின் ஆதரவோடு விக்கிரம பாண்டியன் ஆட்சியை பிடித்தார்.முதலாம் ஜடாவர்ம குலசேகர பாண்டியன் தமது தந்தை விக்கிரம பாண்டியனை அடுத்து ஆட்சிப் பொறுப்பேற்றார்.இவரை அடுத்து ஆட்சி செய்ய இவரது சகோதரன் மாறவர்மன் சுந்தரபாண்டியனுக்கு மகுடம் சூட்டினார்.

 சடையவர்மன் குலசேகர பாண்டியன்  கிபி 1190 முதல் 1216  வரை

  1. விக்கிரம பாண்டியனின் ஆட்சி காலம் பாண்டிய மறுமலர்ச்சி காலத்தின் தொடக்கம் என்று பேராசிரியர்  ஆரோக்கியசாமி கருதுகிறார்.  பாண்டியனின் மகன் என்று பலராலும் கருதப்படும் முதலாம் சடையவர்மன் குலசேகர பாண்டியனே,  இப் பேரரசைத் தோற்றுவித்தன.  
  2. குலசேகர பாண்டியன் ஏறத்தாள 1218 ஆம் ஆண்டு வரை பாண்டிய நாட்டை ஆண்டான்.  இவன்  தரணி முழு உடையான் என்றும் சேர நாட்டு இளவரசியைத்  தம் பட்டத்து  ராணியாக கொண்டான். கோதை ரவிவர்மன் இவனுக்கு மைத்துனரானான். 
  3. இவனுடைய மெய்க்கீர்த்திகள்  'பூவின் கிழத்தி',  'பூதல மடந்தை', ' பூதல வனிதை'  என்று தொடங்கின.  
  4. இவனது  பள்ளிக்கட்டில் ' மழவரையன்', ' காலிங்கராயன்',  'முனையதரையன்' என்ற பெயர்களால் அழைக்கப்பட்டான்.  
  5. சேர இளவரசன் ஆகிய கோதை ரவிவர்மன் சேத்தூரிலுள்ள  பெருமாள்  கோவிலை கட்டினான் இது 'சேரங்கராயன்  விண்ணகர்'  என்று அழைக்கப்படுகிறது.  
  6. இவன் ஆட்சியின்போது ' குணசேகர் நரசிங்க மண்டலம்'  ஒன்று  இருந்ததாக திருப்பரங்குன்றம் கல்வெட்டு தெரிவிக்கின்றது.
  7. மூன்றாம் குலோத்துங்கன் கொங்கு நாட்டை காட்டினான்.  கருவூரை அவன் கைப்பற்றினான்.  வெற்றிபெற்ற குலோத்துங்கன்  மதுரையில் மீண்டும் முடிசூட்டிக் கொள்ள விழைந்தான்.  இது கேள்விப்பட்ட குலசேகரன் நிலைமையுணர்ந்து,  இச்சோழனை பகைக்கத் தொடங்கினான். சோழனோ நன்றி மறந்தவன் என்று முடிவு செய்து அடக்க திட்டமிட்டான் இருதரப்பு படைகளும் யு மட்டியூர்,   கள்ளிக்கோட்டை  எனுமிடத்தில் மோதினர்.  பாண்டியனுக்கு  சிங்களர் உதவி  புரிந்தனர்.  தோல்வியை தழுவிய பாண்டியனோ,  மதுரையை விட்டு ஓடினான்.  குலோத்துங்கன் மதுரையில் முடிசூட்டிக் கொண்டான்.  கோபம் கொண்ட சோழன்  பல மண்டபங்களை  இடித்துப் பாழ்படுத்தினான். 'சோழ பாண்டியன்', ' திரிபுவன வீரத்தேவன்'  என்ற விருதுப் பெயர்கள் சூட்டிக்கொண்டான்.  பாண்டிய நாட்டை  சோழ மண்டலத்துடன் இணைத்துக் கொண்டான்.  சில ஆண்டுகள் கடந்து தாம் வென்ற நாட்டை  குணசேகரனுக்கே  தந்தான் என்று தெரிகிறது.  இவன் அந்தணர்க்குப்  பிரம்மதேயம் வழங்கியுள்ளான்.  
  8. இவன் தம் பெயரால் வெட்டப்பட்ட குளம் ஒன்றை  ஆழப்படுத்துவதற்கு ,  100 கிராமங்களை கொடையாக அளித்தான்.  கப்பலூர்ரைச் சேர்ந்த மானாபரணி மூவேந்த வேளான்  வகையிலிருந்து தியாகஞ்சிறிய  பேராறு ஒன்று வெட்டினான்.  
  9. இவனாட்சியின் போது நிலங்கள்  அளவீடு செயப்பட்டதது.  இவன் பயன்படுத்திய புது அளவைகள் 'களவழி நாடாள்வான்'   என்று அறியப்படுகின்றன அதிகாரிகளால் பயன்படுத்தப்பட்டுள்ளன.  
  10. நிலவரி ஒழுங்காக.  வசூலிக்கப்பட்டதாக தெரிகிறது. 
  11. இவன்  காலத்து அரசியல் தலைவர்களில்  களவழி நாடாள்வான் தலை சிறந்தவன்.  

 முதலாம் மாறவர்மன் சுந்தரபாண்டியன் கிபி 1216 முதல் கிபி 1239 வரை

  1. சோழரை வீழ்த்தி பாண்டிய பேரரசு நிறுவியவன்.  
  2. மூன்றாம் இராசராசனை  அடிபணியச் செய்தான்.  
  3. சோழனுக்கு நாடாள  நாடு வழங்கியமையால் சோணாடு  வழங்கியருளிய சுந்தர பாண்டிய தேவர்"  என புகழப்பட்டார்.  
  4. இவனது பட்டத்தரசி முழுதுடையாள் ஆவார்.
  5. மாறவர்மன் சுந்தரபாண்டியன் தம் அண்ணனின் ஆட்சியின்போது இளவரசனாக இருந்தான்.  கிபி 1716 ஆம் ஆண்டிலேயே அரச பதவி பெற்றான்.  இவர்கள் இருவரும் விக்கிரம  பாண்டியனை பெரிய  நாயனார் என்றும்,  அழக பெருமாள் என்ற தலைவனை மைத்துனன் என்றும் கருதுவதால்,  இவன்  குணசேகரனுக்குத்  தம்பி என்று கூறத் தோன்றுகிறது.  
  6. இவனுடைய சமகால சோழ மன்னன் மூன்றாம் இராசராசன்,  குலோத்துங்கனின் படம் வெற்றியா துவண்டு போன பாண்டியர் சோழரை பழிவாங்கத்  திட்டமிட்டனர்.  இந்நோக்குடன்  அவன் சோழநாட்டின் மீது படையெடுத்தான்  மூன்றாம் இராசராசனை வென்றான்.  இப்படையெடுப்பு மூன்றாம் குலோத்துங்கன் காலத்திலேயே நடந்ததாக தெரிகிறது.  உறையூரையும்  தஞ்சையையும் கைப்பற்றினான்.  இவற்றை நாசமாக்கினான்.  பல மாளிகைகளும்,  பட்டணங்களும் தீக்கிரையாயின.  சில பகுதிகளை பாண்டிய நாட்டுடன் இணைத்துக் கொண்டான்.  சோழன் பழையாறையில் தஞ்சம் புகுந்தான்.  வெற்றியின் பிறப்பால் உந்தப்பட்ட பாண்டியன் ' 'வீராபிஷேகம்'  பண்ணினான்.   சோணாட்டு  மன்னன் என்றும்   தம்மை முடிசூட்டிக் கொண்டான்.  பின் சிதம்பரத்தில் நடராசரை வாழ்த்தி வணங்கினான்.  தாம் கைப்பற்றிய சோணாட்டை  சமயக் கோடைகளாகப்  பலருக்கு அளித்தான்.  இப்படி சோழருக்கு வழங்கியதால்  வடபால் வளர்ந்து வந்த போசளரை எதிர்க்க வழி செய்தான்.
  7. மூன்றாம் இராசராசன் ஒழுங்காய் திரை செலுத்த வில்லை 1123 ஆம் ஆண்டு  தன்   பெரும்  சோணாடு  நோக்கி  ஏவினான்.  சோழன்  கொல்லப்பட்டான்.  சோழர் ஆட்சியில் இத்துடன் முடிவடைந்ததாக தெரிகிறது.  திருத்தியும், புதுக்கோட்டையும்  பாண்டியர் வசமாயின.  வெற்றிக்  களிப்பில் பாண்டியன்ச  வீராபிடேகமும் , விசயாபிடேகமும்  நடத்தினான்.  
  8. இவன் சோணாடு    வழங்கியருளிய ஸ்ரீ சுந்தர பாண்டிய தேவர்  என்றும்  சோணாடு கொண்டு முடிகொண்ட சோழபுரத்து  வீராபிடேகமும் விசயாபிடேகமும்  பண்ணி அருளிய   சுந்தரபாண்டிய தேவர்  என்று புகழப்படுகிறார்.  
  9. இப்பாண்டியன்   போசல அரசன்  நரசிம்மனுக்கு திரை  எழுதினான் என்று கத்திய கர்ணாமிர்தம்  என்ற கன்னட நூல் நிறுவுகின்றது.  
  10. கிபி 1236 ஆம் ஆண்டு  கல்வெட்டொன்று போசளர் படைத்தலைவனான 'மகாப்பிரதானி  போக தண்ட நாயகன்'  பாண்டிய நாட்டின்  கொள்ளையடிக்காமல் இருத்தற்பொருட்டு  அவனுக்கு காப்புரிமை அளிப்பதற்காக  இளையான்குடி வால் மக்களிடம் தனி  வரியொன்று  வசூலிக்கப்பட்டதாக கூறுகின்றது.  
  11. இப்பாண்டியனின்  மதுரை அரியணை 'மழவராயன்'  இன்று அழைக்கப்படுகிறது இவன் வரகுண  ஈசுவரம்  கோயிலில் " சுந்தரபாண்டியன்  சந்தி'  நடைபெற வகை செய்தான்.  இவன் வைணவத்  திருத்தலங்களுக்கும் மானியம் வழங்கியுள்ளார்.  சிவன் கோயில்களுக்கு  நிவந்தங்கள் அளித்துள்ளான்.  திருச்சி மாவட்டம்  பள்ளப்பட்டியையடுத்துள்ள  ரெங்கமலையின் மீது  சிவன் கோயில் ஒன்றை கட்டியுள்ளார்.
  12. இவ்வாட்சியின் போது பல அரசு அதிகாரிகள் நல்லாட்சிக்காக அயராது உழைத்துள்ளனர். சோழன் நின்றாடுவானான குருகுலத்தரையன், கண்டன் உதயன் செய்தான், காங்கேயன் திருக்கானப் பேருடைந்தான்,மழவச் சக்கரவர்த்தி ஆகியோர் அவ்அதிகாரிகளில் சிறப்புடையோர். இவர்களில் சிலர் திருத்தலங்களும் கற்றளிகளும் கண்டுள்ளனர். புலவர்களையும், ஆசான்களையும் இவர்கள் போற்றினர். மேலும் திருப்பத்தூர் கல்வெட்டொன்று வேறு 16 அதிகாரிகளை குறிக்கின்றது களவாயில் நாடாள்வானான கண்டன் ஆளுடையானும் ஒருவன்.
  13. பாண்டியன் பல விருதுப் பெயர்களைக் கொண்டிருந்தான்; ஞானசமுத்திரன், கலியுகராமன், அதிசய பாணியதேவர், சோணடு கொண்ட சோணடு வழங்கியருளியதேவர் என்பன சிலர். இவன் பெயரால் வழங்கப்பட்டதே 'சுந்தரபாண்டியன்சதுர்வேதி மங்கலம்'. விழாக்கள், இம்மன்னனின் பெயரால் நடைபெற்றுள்ளன. 'முடிவளங்கும் பெருமாள் சந்தி' இதற்கு எடுத்துக்காட்டு. அதன்படிபலநாணயங்களையும் வெளியிட்டார்.
  14. கோயில் திருப்பணிகள் பலவும் இவன் மேற்கொண்டான். மதுரை திருவாலவா உடையார் சுவாமி சன்னதி  ஒன்பது நிலை கிழக்கு கோபுரத்தை கட்டி முடிக்கும் பெரும்பணியை இவன் மேற்கொண்டான்.  
  15. மதுரை மேலமாசி வீதியில் உள்ள   'இம்மையில்  நன்மை தருவார் கோயில்'  இவனால் கட்டப்பட்டதாகும்.  
  16. சுந்தரபாண்டியன்  திருமதிலும்,  அம்மன் கோயிலில் உள்ள சுந்தரபாண்டிய மண்டபம் மதுரை கோயிலில் இவனால்   பணியப்பட்டவை.  திருவானைக்கோயில் ஜம்புகேஸ்வரர் கோயிலில் ஏழடுக்கு சுந்தரபாண்டியன் திரு கோபுரமும் இவன் அமைத்தது.  இக்கோயிலின் பழையமதில், ' திருநீற்று சுந்தரபாண்டியன்'  எனினும் பெயர் பெற்ற  வழங்குகிறது.  
  17. இவன் இல்லாளின் பெயரில் திருபுவன மாதேவி நல்லூர் என்ற ஊரையும் ஏற்படுத்தினார்.
  18. இவன் சிறந்த  போர் வீரன்,  இறைப்பற்று உடையோன்,  கலையுள்ளம் கொண்டோன்.  அரசியல் ஆண்மையும் நுண்மையும்  கொண்டவன்.  இவன் ஆட்சி காலம் மதுரையின் மீட்புக்காலம்;  மறுமலர்ச்சிகாலம்

 இரண்டாம் மாறவர்மன் சுந்தரபாண்டியன்   கிபி  1238 முதல் 1251  வரை

  1. முதலாம் மாறவர்மன் சுந்தரபாண்டியனின் ஆட்சி   இறுதியின் போது  இரண்டாம் சடையவர்மன் குலசேகர பாண்டியன் இளவரசனாக இருந்தான்.  
  2. சுந்தரபாண்டியனின் கல்வெட்டு ஒன்று குலசேகரன் என்ற பெயர் கொண்ட  மைத்துனரைக் குறிக்கின்றது.  
  3. இவனுக்கு அடுத்து  அரியணை ஏறியவனே  இரண்டாம் மாறவர்மன் சுந்தரபாண்டியன்.  இரண்டாம் சடையவர்மன்  குலசேகரனும்,  இரண்டாம் மாறவர்மன் சுந்தர பாண்டியனும் சகோதரர்களாக இருக்கலாம்.  மூத்தவன் இறந்துவிடவே,  இவன் பதவிக்கு வந்தான் என்க.  இவனுடைய மதுரை அரியணை '  இரண்டாம் மழவராயன்', ' பல்லவராயன்'  என்னும் பெயர்களை கொண்டுள்ளன.  
  4. இம்மன்னனின் இல்லாள் உலகமுழுவதுடையால்.  இவன் மாறவர்மன் விக்கிரம  பாண்டியனுக்கு உடன் பிறந்தான்.  சோழ மன்னன் வீர சோமேசுவரன் இவனுக்கு மாமன் என்றும் தெரிகிறது.  
  5. போசலரி  செல்வாக்கு பாண்டிய நாட்டில் பெருகியுள்ளது.  திருமயத்தில்  வைணவருக்கும்,   சைவருக்கும் ஏற்பட்ட மோதலை போசளர் தீர்த்து வைத்தனர். 
  6. போசளர்  பிரேசிலில் சோமேஸ்வரன் பெயரில் ஓரூர் அமைக்கப்பட்டது.  மூன்றாம் ராஜேந்திரன் பாண்டிய நாட்டின் மீது படையெடுத்து,  பாண்டியனை திரை செலுத்த செய்தான்.  
  7. போசளர்  தலையீட்டினால் பாண்டியன் தலை தப்பிற்று.  வீர சோமேசுவரன்  தம் கல்வெட்டுக்களில் ' அது  இராஜேந்திரன் போரில் வென்றான்'  என்றும் ' பாண்டியன் குலக்காவலன்'  என்று கூறிக் கொண்டான்.  
  8. நாங்குநேரி கல்வெட்டு ' இரணசிங்க வீரன் தெரிந்த வில்லிகள்'  என்ற படைப்பிரிவை குறிக்கின்றது.   ஐயன்  மழவராயன் போன்ற அரசியல் அதிகாரிகள் இவன் ஆட்சியின் போது புகழடைந்தனர். ' வாழவல்ல பாண்டீஸ்வரர்'  கோயில் இவன் ஆட்சியின்போது கட்டப்பட்டதாகத் தெரிகிறது.

 முதலாம் சடையவர்மன் சுந்தரபாண்டியன்  கிபி 1251 முதல் கிபி 1768 வரை

  1. சடையவர்மன் சுந்தரபாண்டியன் சேரரையும், ஹொய்சளரையும்வென்றான்.  தெலுங்குச் சோழ நாடு,   மகதம்,  காகதீயம் முதலிய நாடுகளை வென்றதனால்,  "எம்மண்டலமும் கொண்டு அருளிய சுந்தர பாண்டிய தேவர்" என புகழப்பட்டார். 
  2. இரண்டாம் பாண்டியப் பேரரசின் பெரும் பேரரசன்  இவனே.  பாண்டிய பேரரசு அதன் பரப்பிலும்,  பெயரிலும் விரிவடைந்து உச்ச நிலையை அடைந்தது.  இவன் ' எம்மண்டலமும் கொண்டருளிய சுந்தரபாண்டிய  தேவர்' என்றும், ' எல்லாம் தலையானான  பெருமாள்'  என்றும் ' காஞ்சி புரவரதீஸ்வரன்'  என்றும் 'சேரனை  வென்ற பாண்டிய தேவன்'  என்றும், '  ஹேமாச்சாதானராஜக'  என்றும். ' மகா ராஜாதிராஜ ஸ்ரீ பரமேஸ்வரர்'  என்றும் ' மரகதப்  பிருதுவி பிரித்'   என்றும் 'கோயில் பொன் வேய்ந்த பெருமாள்'  என்றும் பல விருது பெயர்களால் அழைக்கப்பட்டார்.
  3. இப் பாண்டிய பேரரசு வடக்கே நெல்லூர் கடப்பா முதல் தெற்கே குமரி வரை பரவியிருந்தது.  சோழ,  சேர,  தொண்டை நாடுகள் இவனது நாட்டில் பகுதிகளாயின.  தொண்டை நாட்டு மன்னர்கள் இவனது பேயராண்மையை  தலைமேற் கொண்டு வாழ்நதனர்.  போசளர்  பலம்  குன்றிப் போயினர்.  
  4. கொங்கு நாடும்,  சிங்களம்,  கேரளா நாடுகள் வெற்றி கொள்ளப்பட்டன,  கேரளம்  கப்பம்(பிறை)  கட்டப் பணிக்கப்பட்டான். காஞ்சி பாண்டியன் இரண்டாம் தலைநகரமாயிற்று.
  5. இவனுடைய  ஓர் வெற்றிகளை ஸ்ரீரங்கம் கோயில்  திருப் பூண்டித்துறைக்  கல்வெட்டுக்கள்  விளம்புகின்றன.  நடுகற்களும் இவன் ஆட்சிக்கால வெற்றிகளை படம் பிடிக்கின்றன.  மேலும் திருவேந்திபுரம்,  சிதம்பரம்,  திருப்புட்குடி,  திருநெல்வேலி,  காஞ்சிபுரம்,  திருக்கோவிலின் கல்வெட்டுகளும்  இவன் சிறப்பைக்  குறிக்கின்றன.  
  6. மார்க்கோபோலோ என்ற வெனிஸ் நாட்டு பயணியின் குறிப்புகளும்,  அரேபிய நாட்டு வாஸாபின்  குறிப்புகளும் இக்காலத்தை படம் பிடிக்கின்றன.
  7. இச்சிற்றரசர்களையும்,  பேரரசர்களையும் திட்டமிட்டுப் போராடி வென்றான்.  முதன்முதலில் தம் தடைகளை சேரநாடு நோக்கி ஏவி, அந்நாட்டு  மன்னனை   வென்று,  அளித்து,   சேரனை திறை செலுத்தக்  கட்டளையிட்டான்.  இதனை அடிப்படையாகக்  கொண்டுடே,  ஜம்புகேஸ்வரர் கோயிலில் சேரனை வென்றான்; ' திருநாள்'  கொண்டாட செய்தான்.  திருநெல்வேலி கடுத்த  ஊர், ' இரவி வென்ற சதுர்வேதிமங்கலம்'  என்று அழைக்கப்பட்டது.
  8. சோழ மன்னன் மூன்றாம் ராஜேந்திரன் போர் வீரன்.  ஆனால் அவன் பாண்டியனுக்கு இணையன்று.  இவன் சோணட்டைத் தாக்கினன்  சோழன் திறை செலுத்தும் மன்னனாக மாற்றப்பட்டான்.   ஈச்சோழன்  மரணத்துக்குப் பின் சோழ நாடு பாண்டிய நாட்டுடன் இணைக்கப்பட்டது.
  9. பின் மகத நாட்டு வாணாதிராயர் வெற்றி கொல்லப்பட்டனர்.   அந்நாடு பாண்டியர் வசமாயிற்று.  தெலுங்குச் சோழர் இப்பாண்டியனிடம்  தோல்வியுற்றனர்.   சிற்றரசனாகிய கந்த கோபாலன் போரில் வெற்றி கொள்ளப்பட்டு,  கொல்லப்பட்டான்.    காஞ்சியும் கைப்பற்றப்பட்டது.  கொங்கு நாடும் முற்றுகையிடப்பட்டு,  பாண்டிய நாட்டுடன் இணைக்கப்பட்டது.  பின்  பாண்டியன்  காஞ்சியில் தன் தலைநகரை நிறுவினான்.
  10. இறுதியில் காகதீய மன்னன் கணபதியும்,  பாண்டியனிடம் தோல்வியுற்றான்.  இவ்வெற்றிகளிப்பால்  வெல்லுரில்  வீராபிஷேகம்  நடத்தினான்.  கிருஷ்ணா நதி வரை பரவிற்று.
  11. இவன் செய்த அறக்கொடைகள் ஏராளம்;  தில்லையம்பல பெருமான் அடிபணிந்து துலாபாரம் தானங்கள் செய்தான். சிதம்பர விஷ்ணு,  சிவன் கோயில்களுக்கு பல மானியங்களை வழங்கினான்.  அக்கோயிலின் மேலைக் கோபுரம்  சுந்தரபாண்டிய  கோபுரமென   அழைக்கப்படுகிறது.  மதுரை சுந்தரேஸ்வரர் கோயிலின் கீழைக் கோபுரம் இவனால்  கட்டப்பட்டது.  ஸ்ரீரங்கம் பெருமாள் கோயில் அழகுபடுத்தினான்;  விரிவுபடுத்தினான்;  தங்கத்தாலான நரசிம்ம உருவத்தை அளித்தான்.  நரசிம்மா உருவம் பொரித்த பொன்வேய்ந்த  கூரையையும் கட்டினான்.  அவ்வாலய  நடுப்பகுதியை பொன்னால் வேய்ந்தான்.  கருவறைத் திருமால் பொன் உருவத்துக்குத்  தம் பெயரை சூட்டி மகிழ்ந்தான்.  ஆலயத்தில்  தங்ககலன்கள் நிறைந்த உணவறையைும் கட்டினான்.  சித்திரை திருவிழா ' உலா'  நடத்த உத்தரவிட்டான்.  அக்கோவிலுக்கு அவன் செய்த தேவைகள் அளித்த கொடைகள் எண்ணிலடங்காதவை.  கோவிலொழுகு என்ற வைணவ நூல் இவற்றை  உறைப்பதுடன் கல்வெட்டுக்களும்  எடுத்துரைக்கின்றன.
  12. மேலும் தஞ்சையிலுள்ள  திருக்கோயிலில் சிவன் கோயில் திருப்பணி குறைவற நடைபெற்றது.  பல குடில்களில் இப்பாண்டியன் சந்தி  விழா படிமங்கள் எடுத்தான்.  
  13. நாட்டிய, நாடக, இசை மாதர்களை போற்றினான்.  அவர்களுக்கு பரிசில்கள்,  நில மானியங்கள், அரசு  அதிகார விருதுகள் பல வழங்கினான்.  கோயில்களில் நாட்டிய மண்டபங்கள் கட்டியதாகவும் தெரிகிறது.  இதற்கு  எடுத்துக்காட்டு அழகர்கோயிலில் அவனால் கட்டப்பட்ட  மண்டபமே ,திருவைகுண்ட  விஷ்ணு கோவிலின்   சுந்தரபாண்டிய கோபுரம் இவனால் எழுப்பப்பட்டது.
  14. மேலும் இவன்  அவனிவேந்தராமன்,  'இராஜ சூர்யா',  சித்திபதிரவி', ' இரண்டாவது  இராமன்'  போன்ற பிற விருது பெயர்களையும்  கொண்டிருந்தான்.

 சடையவர்மன் வீரபாண்டியன் (1218 முதல் 1763 வரை அல்லது  1253 முதல்  1274 வரை)

  1. இவன் கிபி 1853 ஆம் ஆண்டு முதல்  இணையாட்சி புரியும்  அரச  பகர ஆளுனராக நியமிக்கப்பட்டான்.  இவனுடைய கல்வெட்டுக்கள் கிபி 1274 வரையிலும்  கிடைத்துள்ளன.   சிலர் கருத்துப்படி இவன்  கிபி  1268ஆம் ஆண்டு வரை  நல்லாட்சி  செய்திருக்கலாம் என்று தோன்றுகிறது.  
  2. இவனுடைய கல்வெட்டுக்கள் பாண்டிய நாடு,  சேர நாடு,  தொண்டை நாடு,   கொங்கு நாட்டிலும் கிடைத்துள்ளன.   
  3. திரிகோணமலை   திரிகடகிரியில்  மீன்கொடி பொறித்து வைத்தான்.  
  4. தில்லையில்  வீரபாண்டியன் திருமண்டபம்  இவன் பெயரில் உள்ளது.  இவன் 'கொங்குகீழக்கொண்டு,  கொடுவடுகு கோடழிந்து' என்று புகழப்படுகிறான். ' தங்கையிருவரையும்,  காவியுங்கைக் கொண்டான் என்று கூறப்படுகிறது.  
  5. மேலும் கதந்தகோபாலயும்,  போசளணையும் வென்றதால் ' வல்லனை வென்றான்'  என்று அழைக்கப்படுகிறான்.  
  6. இவனுடைய இல்லாள் சொக்கத்தாண்டாளான  உலகம் முழுதுடையாள்  என்று தெரிகிறது. 
  7. இவன் காலத்து   நீதி வழுவா நெறிமுறையும்,  நிலக்குலத்தகை  முறையும்,  ஆட்சியில் ஆலோசனைக் கூட்டமும்,  புழகத்திற்கு   நாணயங்களும் இருந்தன என்று கருதப்படுகிறது.  

 மாறவர்மன் குலசேகர பாண்டியன் (கிபி 1263 முதல்  கிபி 1311 வரை)

  1. மாறவர்மன் குலசேகர பாண்டியன் 1274 ல்  சேரர் தம் கொல்லத்தை வென்றான்.  இதனால் கொல்லம் கொண்ட பாண்டியன் என பெயர் பெற்றான்.  
  2. மார்க்கோபோலோ, வாசப் ஆகியோர் குலசேகரன் ஆட்சியை சிறப்பித்துள்ளனர்.  இலங்கை மீதும் தொண்டை நாட்டின் மீதும் படையெடுத்தான்.  பாண்டியருள் இறுதி சிறப்பு பெறும் மன்னனாக விளங்கினார்.
  3. இவன் கிபி 1289 ஆம் ஆண்டு பாண்டிய நாட்டு முடியை சூடிக் கொண்டான்.  ஏறத்தாள 40 ஆண்டுகள் ஆட்சி புரிந்தான்.   வெளிநாட்டார் குறிப்புப்படி  பாண்டிய நாட்டில்  5 பாண்டிய ஆட்சி நடைபெற்று வந்ததாக தெரிகிறது.  
  4. இப்பஞ்ச பாண்டியர் ஆட்சியை வாசபும்,  இலங்கை குறிப்புகளும் அறிவிக்கின்றன.  கல்வெட்டுகளில் காணும்  பாண்டியர் மாறவர்மன் விக்கிரமன்,  மாறவர்மன் குலசேகரன்,  சடையவர்மன் சுந்தரன்,  சடையவர்மன் வீரபாண்டியன்,  மாறவர்மன் சீவல்லபன் என்போர்,  மாறவர்மன் குலசேகரன் இவர்களின் மூத்தவன்.
  5. மாறவர்மன் குலசேகரனின் கல்வெட்டுகள்  ' தேர்போல்'  என்று தொடங்குகிறது.    இம் மெய்க்கீர்த்தி  மூலம் இவன் சோழ நாடு,  கொங்குநாடு,  மலாடு(சேதி நாடு) ,   தொண்டை நாடு,  தெலுங்கு நாட்டுப் பகுதி மலைநாடு ஆகியவற்றின் திறை பெற்றான் என்று தெரிகிறது.  
  6. சேர்வைமட கல்வெட்டு  இவன் மலைநாடு,  சோணாடு,  இரு கொங்கு நாடுகள்,  ஈழம், தொண்டைமண்டலங்கள் வென்றான் என்று தெரிகிறது.  
  7. ஆரியச் சக்கரவர்த்தி படைத்தலைவன் ஈழத்தை தாக்கினான்;  புத்தரின்  பற்களை கவர்ந்து கொண்டான் என்றும் தெரிகிறது.  ஈழ மன்னன் பராக்கிரமபாகு புத்தரின் பற்களை இனிதின் பெற்றுக் கொண்டான்  என்றும் அறிகிறோம்.  இவன்  கொல்லத்தையும்  தாக்கி கைப்பற்றினான். இவன்  'சரவண பெல்குளம்'  என்ற  பகுதியையோ,  தெலுங்கு வீமனின்  நாட்டுக்கு உட்பட்ட 'குளம்'   என்ற பகுதியையோ கைப்பற்றி இருக்கலாம்.  இவ்வாறு 'குளத்திடத்  தெலுங்கு வீமன்'   என்ற மெய்க்கீர்த்தி இக்கருத்தினை விளக்குகிறது.  
  8. கேரளத்தின் கொல்லம் பகுதியை  கைப்பற்றியதால்,  இவன்'  கொல்லம் கொண்டான்'  என்று அழைக்கப்பட்டார்.
  9. இக்காலத்து பாண்டியன் ஒருவன் (கரூர்) என்ற இடத்தை தலைநகரமாகக் கொண்டு ஆட்சி செலுத்திய தாக தெரிகிறது.  இவளோ தம் பதினைந்தாம் ஆட்சியாண்டில் கண்ணன் ஊரில் தங்கியிருந்தார் என்று தெரிகிறது.  இவன் விக்கிரம பாண்டியனை நடு நாடு,  தொண்டைநாடு பகுதிகளுக்கு பிரதிநிதியாக நியமித்தார்.
  10. இவனுடைய திருநெல்வேலி கல்வெட்டு இவன் கேரளத்தையும்,  போசளரையும்,  சோழரையும்  வென்ற செய்தியை காட்டுகிறது.  
  11. இவனது திருவருள் பெற்ற ஒரு கல்வெட்டு உறையூரில் உள்ள ஒரு தலைநகரை  'உய்யக்கொண்டான் திருமலை'  என்று அழைக்கின்றது.  கைப்பற்றிய நாடுகளில் தம் தம்பியரை நியமித்தும் நல்லாட்சி  கண்டான்.  
  12. சீனாவுக்கும் தமிழகத்துக்கும் இடையே கலாசார உறவுகள் நிலவிவந்தன. கிபி 1280ஆம் ஆண்டு  ஜமாலுதீன் என்பவனை சீனாவுக்கு தூதனுப்பி நான்.  பாண்டியன் அனுப்பிய பொருட்களை பெற்ற சீனன். யாக்திங்பீ என்பவனை பாண்டிய நாட்டிற்கு தூதனுப்பினான்.  1282 ஆம் ஆண்டு  அவன் சீனாவுக்கு திரும்பினான்.  கிபி 1285இல்  மீண்டும் சீனாவுக்கு இரண்டாம் தூது  குழுவினை அனுப்பினான்.  விலை உயர்ந்த பொருட்களையும் பரிசாக பாண்டியன் அனுப்பிவைத்தான்.
  13. இவனுடைய ஆட்சி ஆண்டு கிபி 1310,  1311,  1312ல்  முடிந்ததாக அறிஞர்கள் கருதுகின்றனர்.  வரலாற்றாளர் கிபி 1310இல்  என்றும்,  பேராசிரியர் ராமன் கிபி 1311 முடிந்தது என்றும், ந. சேதுராமன்  கிபி 1312 முடிந்ததாகவும்  கருதுகின்றனர்.

 சடையவர்மன் வீரபாண்டியன் மற்றும் சடையவர்மன் சுந்தரபாண்டியன்

  1. இவர்கள் இருவரும் சகோதரர்கள்,  ஆனால் சுந்தரபாண்டியன் காமக்கிழத்திற்குப் பிறந்தவன் என்பர். 
  2. நாடாளும் பகை  காரணமாகச்  சுந்தரபாண்டியன் தமிழகத்தில் முகமதிய ஆட்சியை ஏற்படுத்த  கிபி 1310ல்  அலாவுதீன் கில்ஜியின் படைத்தலைவனான மாலிக்காபூரைப் படை எடுத்து வரச் செய்தான். இந்நிலையில் தமிழகத்தில் 50 ஆண்டுகள் முகமதிய ஆட்சி ஏற்பட்டது.  சிறப்பிழந்தபாண்டியர் தென்பாண்டி நாட்டில் 14 ஆம் நூற்றாண்டு வரை வாழ்ந்தனர்.  
  3. அவர்களுள் குட்டித் திருவாசகம் என போற்றப்படும் திருக்கருவை பதிற்றுப்பத்தந்தாதி இயற்றிய  அதிவீரராம பாண்டியன்,  நெல்வேலி மாறன்  சடையவர்மன் ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள்.
  4. மார்க்கோபோலோ,  பாண்டிய நாட்டில் செல்வச்செழிப்பிருந்தது  என்று கூறும்போது,  வாஸாப் பாண்டிய நாட்டில் அரசுரிமைப் போட்டி நிகழ்ந்தது என்றார்.  இப்போட்டியில் குலசேகரனின் இரு புதல்வர்கள் பங்கு கொண்டனர்.  விருப்பப்படி மாற்றான் தாய்க்கு பிறந்த வீரபாண்டியனுக்கு முடிசூட்டியதால்  கோபம் கொண்ட தம் மகன் சுந்தரபாண்டியன் கிபி 1310இல்  தந்தையை கொன்றான் என்று தெரிகிறது.  ஆனால் இவனுடைய கல்வெட்டுக்கள் கிபி 1312 வரை இருப்பதை சேதுராமன் காட்டுகிறார்.  ஆகவே சேதுராமன் கருத்துப்படி,  பாண்டிய நாட்டின் அரசுரிமைப் போட்டி ஏற்படவில்லை என்பதும்.  வாஸாப்  பாண்டிய நாட்டில் அரசுரிமைப் போர் ஏற்பட்டதாக தாம்  அறிவிக்கப்பட்டார் என்று கூறுகிறார்.
  5. மனம் குமுறிய சுந்தரபாண்டியன்  வீர பாண்டியனை எதிர்க்க துணிந்து முஸ்லிம்களின் உதவியை நாடியதாக தெரிகிறது.  மாலிக்காபூர் மதுரையை நோக்கி  படையெடுத்தான் என்றும் தெரிகிறது.  பாண்டிய நாட்டில் ஏற்பட்ட கழகத்தை பயன்படுத்தி சேரன் ரவிவர்மன் பாண்டிய நாட்டைத் தாக்கி காவிரிக்கரை வரை முன்னேறியதாக தெரிகிறது.  இவ்வாறு பாண்டியர் போட்டியிலும்,  அன்னியர் படையெடுப்பாலும்,  அல்லலுற்ற பாண்டிய பேரரசு சிதறுண்டு போயிற்று.  மதுரையில் டெல்லி சுல்தான்கள் ஆட்சி நிறுவப்பட்டது.

பாண்டிய பேரரசின் வீழ்ச்சி:

முதலாம் மாறவர்மன் குலசேகரரின் மகன்களான சுந்தர பாண்டியனுக்கும் வீர பாண்டியனுக்கும் ஏற்பட்ட அரசுரிமைப் போரில் பாண்டிய நாடு பிளவுபட்டது.

சுந்தர பாண்டியன் டெல்லியை ஆண்ட அலாவுதீன் கில்ஜியின் உதவியை நாடினார். அலாவுதீன் தமது தளபதி மாலிக்காபூர் என்பாரை அனுப்பி சுந்தரப் பாண்டியனுக்கு ஆட்சியை மீட்டுத்தந்தார்.

மதுரை சுல்தான்களின் எழுச்சியினால் முழுமையாக பாண்டியப் பேரரசு வீழ்ச்சியடைந்தது.


TNPSC KEY POINT NOTES IN TAMIL -PANDYAN EMPIRE COMPLETE FREE GUIDE

  1. PANDYAN EMPIRE-TNPSC HISTORY AND CULTURE OF INDIA STUDY MATERIALS IN TAMIL
  2. முதலாம் பாண்டியப் பேரரசு NOTES 
  3. பிற்காலப் பாண்டியப் பேரரசு NOTES 
  4. பாண்டியப் பேரரசு நிர்வாகம்
  5. பாண்டியப் பேரரசு இலக்கியும் -கலையும்
  6. PANDYAN EMPIRE -TNPSC HISTORY -வினா விடைகள் (6th to 12th புதிய சமச்சீர் புத்தகம்) GUIDE 

No comments:

Post a Comment

Featured Post

CURRENT AFFAIRS IN TAMIL NOVEMBER 2024 (14.11.2024)

காமன்வெல்த் ஆஃப் டொமினிகா தனது உயரிய தேசிய விருதான டொமினிகா விருதை பிரதமர் நரேந்திர மோடிக்கு வழங்குவதாக அறிவித்துள்ளது: