பாண்டியப் பேரரசு நிர்வாகம் (6th to 12th புதிய சமச்சீர் புத்தகம்) வினா விடைகள் GUIDE
- பிற்கால பாண்டியர்களின் தலை நகரம் மற்றும் துறைமுகம் - மதுரை மற்றும் காயல்.
- வெனிஸ் நாட்டைச் சேர்ந்த பயணி மார்க்கோ போலோ காயலுக்கு வருகை தந்த ஆண்டு- 1288,1293.
- பாண்டிய அரசு "செல்வச் செழிப்புமிக்க, உலகிலேயே மிக அற்புதமான பகுதி என்று புகழாரம் சூட்டியவர் – மார்க்கோ போலோ.
- காயல் துறைமுக நகர் அரேபிய, சீனக் கப்பல்கள் நிரம்பியிருந்தது. சதி உடன்கட்டையேறுதல் - வழக்கம் இருந்தது தனது பயண குறிப்புகளில் பதிவு செய்தவர் - மார்க்கோ போலோ.
- இலங்கையோடு சேர்ந்து உலகத்தில் காணப்படும் பெரும்பாலான மாணிக்க கற்களையும் முத்துக்களையும் உற்பத்தி செய்வது - காயல் துறைமுகம்.
- ஒட்டுமொத்த தமிழகத்தையும் தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்த பாண்டிய அரசர் - சடைய வர்மன் ஜடாவர்மன் சுந்தரபாண்டியன்.
- இரண்டாம் பாண்டியப் பேரரசின் புகழ்பெற்ற அரசர்- சடையவர்மன் சுந்தரபாண்டியன்.
- சடைய வர்மன் சுந்தரபாண்டியன் ஆட்சி -ஆந்திர மாநிலம் நெல்லூர் வரை பரவி இருந்தது,
- சுந்தரபாண்டியனின் மேலாதிக்கத்தை ஏற்றுக் கொண்டு அவருக்கு கப்பம் கட்ட சம்மதித்தவர்- சேர அரசர்,
- கண்ணனூர் என்ற இடத்தில் நடைபெற்ற போரில் சுந்தரபாண்டியன் - வீர சோமேசுவரரை. தோற்கடித்தார்.
- சுந்தரபாண்டியனின் ஆட்சியின்போது அவருடன் இரண்டு பேர் கூட்டு அரசர்களாக ஆட்சி செய்தவர்கள் - விக்கிரம பாண்டியன் , வீரபாண்டியன்.
- மாறவர்மன் குலசேகரன் ஆட்சி புரிந்த ஆண்டுகள் - 40 ஆண்டுகள்.
- மாறவர்மன் குலசேகர பாண்டியனின் மகன்கள்- விக்கிரம பாண்டியன், சுந்தரபாண்டியன்.
- மாறவர்மன் குலசேகரன் யாரை கூட்டு அரசனாக நியமித்தார் – வீரபாண்டியன்.
- சுந்தர பாண்டியனுக்கு அடைக்கலம் கொடுத்த டெல்லி சுல்தான் - அலாவுதீன் கில்ஜி.
- யாருடைய படையெடுப்புக்குப் பின்னர் மதுரை, டெல்லி சுல்தானுக்கு கட்டுப்பட்ட ஒரு முஸ்லிம் அரசு உருவாக்கப்பட்டது – மாலிக்கபூர்.
- மதுரை பொதுமக்களால் எவ்வாறு அழைக்கப்பட்டது- கூடல்.
- பாண்டிய மன்னர்கள் பாரம்பரியமாக எவ்வாறு மதிக்கப்பட்டனர்- கூடல்கோன், கூடல் காவலன்.
- பாண்டியர்கள் குதிரைகளை எங்கிருந்து இறக்குமதி செய்தனர்- அரேபியா.
- பாண்டிய மன்னர்கள் - மனு சாஸ்திரத்தின் படி ஆட்சி செய்தனர்.
- பாண்டிய மன்னர்கள் உருவாக்கிய பிராமணர் குடியிருப்புககள் - மங்களம் (அ) சதுர்வேதிமங்கலம்.
- நிலத்தின் உண்மையான உடைமையாளர்கள் - பூமி புத்திரர் (அ) வேளாளர்.
- சமூக மக்கள் ஒன்றிணைந்த மன்றம் - சித்திர மேழி பெரிய நாட்டார் .
- பாண்டியர்கள் ஆட்சியில் அரசு செயலகம் - எழுத்து மண்டபம்.
- பாண்டிய நாட்டின் நிர்வாகம் வரிசை- மண்டலம் - வளநாடு - நாடு – கூற்றம்.
- நாடுகளை நிர்வகித்தவர்கள்- நாட்டார்.
- 800 ஆம் ஆண்டை சேர்ந்த மானூர் கல்வெட்டு எதன் தொடர்பான செய்திகளைக் கொண்டுள்ளது - கிராம நிர்வாகம்.
- மானூர் கல்வெட்டு - திருநெல்வேலி மாவட்டம்.
- பாண்டிய அரசர்கள் - வேத நடைமுறைகளுக்கு ஆதரவு நல்கினர்.
- பாண்டிய அரசர்கள் செய்த அஸ்வமேதயாகம்: ஹிரண்ய கர்ப்பம், வாஜ்பேய வேள்வி .
- பாண்டிய மன்னர்கள் சைவம், வைணவம் இரண்டையும் சமமாகவே கருதினர்.
- பாண்டியர்கள் தமிழ், சமஸ்கிருதம் ஆகியவற்றை ஆதரித்து வளர்த்தனர்.
- அசோகர் தன் கல்வெட்டுகளில் யாரை தென்னிந்தியாவின் ஆட்சியாளர்களாக குறிப்பிடுகிறார் - சோழர் , சேரர் ,பாண்டியர் ,சத்திய புத்திர்.
- பாண்டியர்களின் தொடக்ககால தலைநகரமாகவும் துறைமுகமாகவும் இருந்தது- கொற்கை.
- பாண்டியர்களின் தொடக்க கால கல்வெட்டுக்களில் மதுரை- மடிரை .
- தமிழ் செவ்விலக்கியங்கள் மதுரையை - கூடல்.
- பாண்டி நாட்டை சேர்ந்த புலிமான் கோம்பை என்ற கிராமத்தில் கண்டெடுக்கப்பட்ட கல்வெட்டில் குறிப்பிடப் பெற்றுள்ள சொல் - கூடல்.
- கூடல் பாண்டியரின் தலைநகரமாக குறிப்பிடும் நூல்கள் - பத்துப்பாட்டு, பட்டினப்பாலை,மதுரைக்காஞ்சி.
- கூடல் - எட்டுத்தொகை நூல்களிலும் இச்சொல் காணப்படுகிறது
- பொ.ஆ.மு. 3 ஆம் நூற்றாண்டு முதல் பொ.ஆ. 3 நூற்றாண்டு வரை - சங்ககாலப் பாண்டியர் வரலாறு.
- பிற்கால பாண்டியர் குறித்த செய்திகளை வழங்கும் இலக்கியங்கள்- மதுரை தல வரலாறு, பாண்டிய கோவை, மதுரை திருப்பணி மாலை.
- நெடுஞ்சடையான் - வேள்விக்குடி மானியம்.
- எந்த பயணிகள் எழுதியுள்ள வரலாற்றுக்குறிப்புகள் அக்காலகட்ட அரசியல் , சமூக , பண்பாட்டு வளர்ச்சியை குறித்து உதவுகின்றன-மார்கோபோலோ, வாசஃப், இபன்பதூதா.
- மணிமேகலையை இயற்றிய சீத்தலை சாத்தனார் – மதுரை.
- பாண்டியரின் ஆட்சி பகுதி -பாண்டி மண்டலம், தென் மண்டலம் ,பாண்டியநாடு.
46.பாண்டியர்களின் ஆட்சி எல்லைகள்:1. வட எல்லை - புதுக்கோட்டை வழியாக ஓடும் வெள்ளாறு.2. தென் எல்லை -இந்தியப் பெருங்கடல்.3. மேற்கு எல்லை -மேற்கு தொடர்ச்சி மலைகள்.4. கிழக்கு எல்லை -வங்காள விரிகுடா.47.படைத்தளபதிகளின் பட்டங்கள்:1. பள்ளி- வேலன்2. பராந்தகன் பள்ளி வேலன்3. பராந்தகன் ஆதித்தன்4. தென்னவன் தமிழ்வேள்48.எந்த நூலில் சங்கம் என்ற சொல் கலைக்கழகம் என்ற பொருளில் இடம் பெற்றுள்ளது:1. இறையனார் அகப்பொருள்2. திருவிளையாடல் புராணம்3. பெரியபுராணம்
பாண்டியப் பேரரசு-வினா விடைகள் (6th to 12th புதிய சமச்சீர் புத்தகம்) GUIDE-TNPSC HISTORY NOTES
By -
November 16, 2023
0
Tags: