TODAY CURRENT AFFAIRS IN TAMIL 08.11.2023

TNPSC PAYILAGAM
By -
0



TODAY CURRENT AFFAIRS IN TAMIL 08.11.2023:

‘டால்பின் திட்டம்’:

மத்திய அரசின் வனவிலங்கு வாழ்விடங்களின் ஒருங்கிணைந்த மேம்பாடு திட்டத்தின் கீழ், தமிழ்நாடு அரசு டால்பின்களை பாதுகாக்கும் நோக்கில் டால்பின் திட்டத்தை செயல்படுத்த அரசாணை வெளியிட்டுள்ளது. 

மேலும் இந்த திட்டம் ரூ.8.13 கோடியில் செயல்படுத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் கடல்வாழ் உயிரினங்களில் 9-க்கும் மேற்பட்ட டால்பின் வகைகள் காணப்படுகின்றன. குறிப்பாக மன்னாா் வளைகுடா உயிா்க்கோள காப்பகத்தில் இவற்றின் முக்கிய வாழ்விடங்கள் உள்ளன. சுற்றுச்சூழலை சமநிலையில் வைத்திருப்பதில் டால்பின்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. 

KEY POINTS :டால்பின் திட்டம்’

2022-ல் மட்டும் உலகில் 75 லட்சம் பேருக்கு காசநோய் பாதிப்பு:

2022 ஆம் ஆண்டில் மட்டும் உலகளவில் 75 லட்சம் மக்கள் காசநோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவிக்கிறது. உலகில் 192 நாடுகளில் காசநோய் பாதிப்பு குறித்த தரவுகளின் அடிப்படையில் 1995 ஆம் ஆண்டு முதல் இதுவே அதிகம் என்றும் கூறியுள்ளது. உலக சுகாதார அமைப்பு வெளியிட்டுள்ள காசநோய் குறித்த அறிக்கையில் 2021ல் 1.03 கோடியாக இருந்த காசநோய் பாதிப்பு 2022ல் 1.06 கோடியாக அதிகரிக்கும் என்று மதிப்பிடப்பட்டது. ஆனால், 2022 ஆம் ஆண்டு ஏற்பட்டுள்ள அதிக பாதிப்பினால் காசநோய் கண்டறிதல், சிகிச்சைகளை மேம்படுத்த வேண்டியதன் அவசியம் ஏற்பட்டுள்ளதாகக் கூறியுள்ளது. 2020, 2021 ஆம் ஆண்டுகளில் புதிதாக காசநோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையில் 60 சதவீதத்தை இந்தியா, இந்தோனேசியா, பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகள் இணைந்து குறைத்துள்ளன. ஆனால் இந்த நாடுகளில் 2019 ஆம் ஆண்டைவிட 2022 ஆம் ஆண்டில் பாதிப்பு அதிகம்.

மகளிர் உரிமைத் தொகை ரூ.1,000 வழங்கும் திட்டத்தின் இரண்டாம் கட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்:

தமிழக அரசின் கலைஞா் மகளிா் உரிமைத் தொகை திட்டத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் காஞ்சிபுரத்தில் கடந்த செப். 15ஆம் தேதி தொடக்கிவைத்தார். மகளிா் உரிமைத் தொகைத் திட்டத்துக்காக ஒரு கோடியே 63 லட்சம் விண்ணப்பங்கள் பதிவு செய்யப்பட்ட நிலையில் ஒரு கோடியே 6 லட்சம் மகளிா் தோ்வு செய்யப்பட்டு அவர்களுக்கு மாதம் ரூ. 1,000 வங்கிக்கணக்கில் செலுத்தப்பட்டு வருகிறது.

அதன்படி, அக். 25 ஆம் தேதி வரை கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்திற்கு 11.85 லட்சம் பேர் மேல்முறையீடு செய்துள்ளதாகவும் அவர்களின் விண்ணப்பங்களை பரிசீலிக்கும் பணிகள் தொடங்கி நடைபெற்று வருவதாக தகவல் வெளியானது. இந்த நிலையில், மகளிர் உரிமைத் தொகை ரூ.1,000 வழங்கும் திட்டத்தின் இரண்டாம் கட்டத்தை 10.11.23 (நவ.10) முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னையில் தொடங்கி வைக்கிறார். வெள்ளிக்கிழமை (நவ.10) சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெறும் நிகழ்ச்சியில் மகளிர் உரிமைத் தொகை ரூ.1,000 வழங்கும் திட்டத்தின் இரண்டாம் கட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.

எலியின் மீது நடத்தப்பட்ட வயதைக் குறைக்கும் சோதனை:

வயதான எலியின் மீது நடத்தப்பட்ட வயதைக் குறைக்கும் சோதனை கிட்டத்திட்ட 70 சதவிகிதம் வெற்றி அடைந்துள்ளதாக ‘ஜிரோசயின்ஸ்’(புவி அறிவியல்) என்ற இதழில் ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ளனர். அந்த அறிக்கையில் தெரிவித்திருப்பது: “பன்றிகளின் ரத்தத்தில் உள்ள பிளாஸ்மாக்கள் மற்றும் நானோ துகள்களை எடுத்து வயதான எலிகளுக்கு செலுத்தப்பட்டு சோதனை மேற்கொள்ளப்பட்டது. ‘இ5’ எனப்படும் வயதைக் குறைக்கும் வயது எதிர்ப்பு சிகிச்சையானது கிட்டத்திட்ட 70 சதவிகிதம் வெற்றி அடைந்துள்ளது. எலியின் மரபணுவில் நம்ப முடியாத அளவிற்கு மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும், இதயம், கல்லீரல் போன்ற உடல் உறுப்புகளின் வயது பாதியாக குறைந்துள்ளது. இந்த சோதனை மனிதர்கள் மீது நடத்தப்பட்டால் 80 வயது முதியவரை 26 வயது இளைஞராக மாற்ற முடியும்.” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சத்தீஸ்கரில் 71% மிஸோரமில் 77% வாக்குப் பதிவு:

சத்தீஸ்கா்: சத்தீஸ்கரில் நக்ஸல் ஆதிக்கம் மிகுந்த பஸ்தா் பகுதியில் உள்ள 7 மாவட்டங்கள் மற்றும் இதர 4 மாவட்டங்களில் அடங்கிய 20 பேரவைத் தொகுதிகளுக்கு உட்பட்ட 5,304 வாக்குப் பதிவு மையங்களில் 07.11.23 முதல்கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது.முதல்கட்ட பேரவைத் தோ்தலில் 71 சதவீத வாக்குகள் பதிவாகின

மிஸோரம்: மிஸோரம் பேரவைக்கு 07.11.23 நடைபெற்ற ஒரே கட்டத் தோ்தலில் 77 சதவீத வாக்குகள் பதிவாகின. 2018-இல் 81.61 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தன. மொத்தமுள்ள 40 பேரவைத் தொகுதிகளுக்கு செவ்வாய்க்கிழமை 1,276 வாக்குப் பதிவு மையங்களில் அமைதியான முறையில் தோ்தல் நடைபெற்றது. 174 வேட்பாளா்கள் தோ்தல் களத்தில் உள்ளனா். இதில் 18 பெண் வேட்பாளா்களாவா்.

‘பெண் குழந்தைகளைக் காப்போம், பெண் குழந்தைகளுக்குக் கற்பிப்போம்’ :

இந்தியாவின் முன்னணி பொழுதுபோக்குத் தொலைக்காட்சி நிறுவனமான கலர்ஸ் மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்தின் ‘பெண் குழந்தைகளைக் காப்போம், பெண் குழந்தைகளுக்குக் கற்பிப்போம்’ என்ற முன்முயற்சியுடன் இணைந்து செயல்படுகிறது. பெண் குழந்தைகளைக் கைவிடும் பிரச்சினையை நிவர்த்தி செய்ய புதிய புனைக்கதை நிகழ்ச்சியான “டோரீ” என்ற இந்த நிகழ்ச்சியை கலர்ஸ் ஒளிபரப்புகிறது. பெண் குழந்தைகள் கைவிடப்படுவதன் சமூக தீமை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதை கலர்ஸ் நோக்கமாகக் கொண்டுள்ளது.

“செயற்கை மழை” :

இந்திய தொழில்நுட்பக் கழகம் (IIT) கான்பூரில் நச்சுக் காற்றில் அவதிப்படும் புது டெல்லி பகுதியில் வசிக்கும் மக்கள் மற்றும் அதன் அண்டைப் பகுதிகளுக்கு “செயற்கை மழை” மூலம் காற்று மாசு மற்றும் மாசுபடுத்திகள் அகற்றும் புத்தாக்க தீர்வை கண்டுள்ளது .உலகில் காற்று மாசுபாட்டில் முதலிடம் வகிக்கும் புது டெல்லி இந்த தீர்வு மூலம் காற்று மாசுபாடு குறைக்க உதவும் .

ஆஸ்திரேலியா இந்தியா கல்வி மற்றும் திறன் கவுன்சில் கூட்டம் 2023:

காந்திநகரில் உள்ள இந்தியத் தொழில்நுட்ப கழகத்தில் (IIT) ஆஸ்திரேலியா இந்தியா கல்வி மற்றும் திறன் கவுன்சில் கூட்டம் நடைபெறுகிறது.ஆஸ்திரேலிய இந்திய கல்வி கவுன்சில் (AIEC) அமைப்பு இரு நாடுகளுக்கும் இடையில் கல்வி, பயிற்சி மற்றும் ஆராய்ச்சி ஒத்துழைப்புக்காக 2011-ம் ஆண்டில் அமைக்கப்பட்டது . 

கல்வி மற்றும் திறன் மேம்பாட்டில் ஒத்துழைப்பை அதிகரிப்பதில் கவனம் செலுத்துவதற்காக இந்த மன்றத்தின் நோக்கம், இரு நாடுகளின் தேசிய முன்னுரிமைகளுக்கு ஏற்ப மேம்படுத்தப்பட்டது.கல்வி மற்றும் திறன் மேம்பாடு ஒரே நிறுவன மன்றத்தின் கீழ் கொண்டு வரப்படுவது இதுவே முதல் முறையாகும்.இரு நாடுகளிலும் கல்வி மற்றும் திறன்களின் எதிர்காலத்தை வடிவமைக்கும் நோக்கத்துடன் பரஸ்பரம் ஒப்புக்கொள்ளப்பட்ட முன்னுரிமைகள் குறித்து விவாதிக்க கல்வி மற்றும் திறன் வல்லுநர்களுக்கு இந்தக் கூட்டம் ஒரு தளத்தை வழங்கும். எதிர்காலத்துக்கு ஏற்ற திறன் மிக்க தொழிலாளர்களை உருவாக்குதல், கல்வியில் நிறுவன கூட்டுச் செயல்பாடுகளை வலுப்படுத்துதல், சர்வதேச மயமாக்கல் மூலம் ஆராய்ச்சிகளை மேம்படுத்துதல் ஆகிய மூன்று முக்கிய கருப்பொருள்களில் விவாதங்கள் நடைபெற உள்ளன .

“நீருக்காகப் பெண்கள், பெண்களுக்காக நீர் இயக்கம்” :

வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சகத்தின் தேசிய நகர்ப்புற வாழ்வாதார இயக்கமும் புத்துயிரூட்டல் மற்றும் நகர்ப்புற மாற்றத்திற்கான அடல் இயக்கம் எனப்படும் அம்ருத் திட்டமும் இணைந்து “நீருக்காகப் பெண்கள், பெண்களுக்காக நீர் இயக்கம்” என்ற முற்போக்கான முன்முயற்சியை அறிமுகப்படுத்துகின்றன. 

நீர் நிர்வாகத்தில் பெண்களை இணைப்பதற்கான தளத்தை வழங்குவதை இந்த இயக்கம் நோக்கமாகக் கொண்டுள்ளது. வீட்டு நீர் மேலாண்மையில் பெண்கள் முக்கியப் பங்கு வகிக்கிறார்கள். நீர் சுத்திகரிப்பு செயல்முறைகள் மற்றும் உள்கட்டமைப்பு பற்றிய தகவல்களை பெண்களுக்கு வழங்குவதன் மூலம், அவர்களின் திறனை மேம்படுத்துவதை வீட்டுவசதி அமைச்சகம் நோக்கமாகக் கொண்டுள்ளது. துறைகளில் உள்ளடக்கம் மற்றும் பன்முகத்தன்மையை ஊக்குவிப்பதன் மூலம் பாலின சமத்துவத்தின் பிரச்சினைகளை நிவர்த்தி செய்வதை இந்த முன்முயற்சி நோக்கமாகக் கொண்டுள்ளது.

‘நிலவு குடிச்ச சிம்மங்கள்’ (Lion that drank moonlight) :

‘நிலவு குடிச்ச சிம்மங்கள்’ (Lion that drank moonlight) என்ற சுயசரிதை புத்தகத்தை தற்போதைய இஸ்ரோ தலைவர் சோம்நாத் எழுதியுள்ளார் .

‘புராஜெக்ட் 15 பி’ திட்டத்தில் ‘சூரத்’ நான்காவது மற்றும் கடைசி கப்பல் :

முன்னணி ‘போர்க்கப்பல் திட்டமான ‘புராஜெக்ட் 15 பி’ திட்டத்தில் நான்கு அடுத்த தலைமுறை ஏவுகணை அழிப்பான் கப்பல்களில் ‘சூரத்’ நான்காவது மற்றும் கடைசி கப்பல் ஆகும். இந்த போர்க்கப்பலின் கட்டுமானம் உள்நாட்டு அதிநவீன போர்க்கப்பல் கட்டுமான தொழில்நுட்பத்துக்கு சான்றாக உள்ளது. இது தற்போது மும்பையில் உள்ள மசாகன் கப்பல் கட்டும் நிறுவனத்தில் கட்டுமானத்தில் உள்ளது மற்ற மூன்று கப்பல்கள்

  1. INS விசாகப்பட்டினம்
  2. INS மோர்முகவோ
  3. INS இம்பால்.
நாம் 200 நினைவேந்தல்”:

குடியுரிமை இழப்பு, தேயிலைத் தோட்டங்களில் கடுமையான வேலை நிலைமைகள் உள்ளிட்ட வரலாற்று அநீதிகளை அனுபவித்த இந்திய வம்சாவளித் தமிழர்களின் 200 ஆண்டு நினைவேந்தலில் இலங்கை தலைநகர் கொழும்பில் நடைபெற்ற “நாம் 200 நினைவேந்தல்” நிகழ்ச்சியில் இந்திய நிதியமைச்சர் கலந்து கொண்டார்.

இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் (FSSAI) மாநில உணவுப் பாதுகாப்புக் குறியீடு (SFSI) 2022-2023:

நுகர்வோர் அதிகாரமளிக்கும் முயற்சிகளில் தமிழ்நாடு முதலிடத்தை பிடித்துள்ளது, அதைத் தொடர்ந்து கேரளா மற்றும் மத்தியப் பிரதேசம் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன .இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் (FSSAI) மாநில உணவுப் பாதுகாப்புக் குறியீடு (SFSI) 2022-2023ஐ வெளியிட்டது .

இது உணவுப் பாதுகாப்பை உறுதி செய்வதில் இந்திய மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் செயல்திறனை மதிப்பிடுகிறது.உணவு பரிசோதனை உள்கட்டமைப்பு பிரிவில், குஜராத் மற்றும் கேரளா முதலிடத்திலும், ஆந்திரா கடைசி இடத்தில் உள்ளது . இணக்கப் பிரிவில் பஞ்சாப் மற்றும் இமாச்சலப் பிரதேசம் அதிக மதிப்பெண்களைப் பெற்றன மற்றும் ஜார்க்கண்ட் மிகக் குறைந்த மதிப்பெண்களைப் பெற்றது.

புவி  வாகையாளர் விருது

ஐக்கிய நாடுகளின் சுற்றுச்சூழல் மையம் (UNEP) புவி  வாகையாளர் விருதை வழங்குகிறது. உலகெங்கிலும் உள்ள 18 முதல் 30 வயதிற்குட்பட்ட ஏழு இளம் சுற்றுச்சூழல் ஆர்வலர்களுக்கு  சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதற்கான சிறந்த யோசனைகளுக்காக UNEP ஒவ்வொரு ஆண்டும் இந்த விருதை வழங்குகிறது. இம்முறை ஐக்கிய நாடுகளின் சுற்றுச்சூழல் மையம் (UNEP) பிளாஸ்டிக் மாசுபாட்டைச் சமாளிப்பதற்கான புதுமையான தீர்வுகள் மற்றும் சிறந்த நடவடிக்கைகளுக்காக 2023 ஆம் ஆண்டுக்கான புவி  வாகையாளர் அறிவித்தது.


LIST OF IMPORTANT DAYS AND DATES IN OCTOBER 2023 IN TAMIL :

SUMMITS AND CONFERENCES 2023 IN TAMIL:

  1. SUMMITS AND CONFERENCES JUNE 2023 IN TAMIL
  2. SUMMITS AND CONFERENCES JULY 2023 IN TAMIL
  3. SUMMITSAND CONFERENCES AUGUST 2023 IN TAMIL
  4. SUMMITSAND CONFERENCES SEPTEMBER 2023 IN TAMIL
  5. SUMMITS AND CONFERENCES - OCTOBER 2023 IN TAMIL

Post a Comment

0Comments

Post a Comment (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn more
Ok, Go it!