TODAY CURRENT AFFAIRS IN TAMIL 05.11.2023

TNPSC PAYILAGAM
By -
0



TODAY CURRENT AFFAIRS IN TAMIL 05.11.2023

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் சதம் விளாசி ஒருநாள் போட்டிகளில் சச்சின் டெண்டுல்கரின் சாதனையை விராட் கோலி சமன் செய்தார்:

உலகக் கோப்பையில் கொல்கத்தா ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெற்று வரும் இன்றையப் போட்டியில் இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள் விளையாடி வருகின்றன. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது. இந்தப் போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய அணியின் விராட் கோலி சதம் விளாசி அசத்தினார். ஒருநாள் போட்டிகளில் இது அவருடைய 49-வது சதமாகும். இதன்மூலம் ஒருநாள் போட்டிகளில் 49 சதங்கள் விளாசி முதல் இடத்தில் இருக்கும் இந்திய அணியின் முன்னாள் வீரர் டெண்டுல்கரின் சாதனையை அவர் சமன் செய்துள்ளார். சிறப்பாக விளையாடிய விராட் கோலி 119 பந்துகளில் சதம் விளாசினார். அதில் 10 பவுண்டரிகள் அடங்கும். 

சச்சின் டெண்டுல்கர் 452 போட்டிகளில் இந்த சாதனையை படைத்திருந்த நிலையில், தற்போது விராட் கோலி 277 போட்டிகளில் இந்த சாதனையைப் படைத்துள்ளார்.

எல்லை பாதுகாப்பு பணியில் தேனீக்கள்:

இந்திய எல்லை பாதுகாப்பு படை (பிஎஸ்எஃப்), மேற்கு வங்காளத்தில் உள்ள எல்லைப்புற பகுதியில் பாதுகாப்பை அதிகரிக்கும் பொருட்டு தேனிக்கூடுகளை அமைக்கவுள்ளனர். இந்தப் புதிய முயற்சியின் மூலமாக எல்லையைத் தாண்டி கால்நடை மற்றும் மற்ற பொருட்கள் கடத்தி வரப்படுவதைத் தடுக்க முடியும் என நம்பிக்கை தெரிவிக்கிறார்கள் எல்லை பாதுகாப்பு படையினர்.

KEY POINTS: எல்லை பாதுகாப்பு பணியில் தேனீக்கள்

நடப்போம் நலம் பெறுவோம்:

சென்னையில் தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினால் நடப்போம் நலம் பெறுவோம் திட்டமானது துவங்கி வைக்கப்பட்டது.

முதல்வர் கிராம சாலை திட்டம் :

பழுதான சாலையை புதுபிக்கவும், புதிய சாலைய அமைக்கவும் முதல்வர் கிராம சாலை திட்டமானது தொடங்கப்பட்ட முதல்வர் கிராம சாலை திட்டத்தின் இலக்கானது 2024-ம் ஆண்டாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

முதல்வர் கிராம சாலை திட்டமானது 2022-2023 பட்ஜெட் கூட்டத்தொடரில் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவிற்கு அரசுமுறைப் பயணம் மேற்கொண்டுள்ள பூடான் மன்னர்:

இந்தியாவிற்கு அரசுமுறைப் பயணம் மேற்கொண்டுள்ள பூடான் மன்னர் ஜிக்மே கேசர் நாம்கியால் வாங்சுக், புது தில்லி வந்தடைந்தார். அவரை இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் வரவேற்றார். பூடான் மன்னரின் இந்தியப் பயணம் இரு நாடுகளுக்கும் இடையே நெருங்கிய நட்புறவு மற்றும் ஒத்துழைப்பை வளர்க்கும் என்று இந்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது

முத்தமிழ்த்தேர்

தமிழக முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் பன்முக ஆற்றலை விளக்கும் முத்தமிழ்த்தேர் அலங்கார ஊர்தியானது துவங்கப்பட்டுள்ளது.

வட கிழக்கு பருவ மழை

தமிழகத்தில் அக்டோபர் 1 முதல் தற்போது வரை வழக்கமான மழையளவான 190 விட குறைவாக 120 மி.மீ. பெய்துள்ளது.

வழக்கத்தைவிட 40% மழையளவு குறைவாக பெய்துள்ளது.

UGC  குழுவின் தலைவர் :

தொழிற்கல்வி படிப்புகளுக்காக UGC அமைத்துள்ள குழுவின் தலைவராக ராஜ்நேரு செயல்படுகிறார்

கோஸ்டா செரீனா

மகாராஷ்டிராவின் மும்பையிலிருந்து இந்திய சந்தையின் முதல் சர்வதேச பயணிகள் கப்பலான கோஸ்டா செரீனாவினை மத்திய கப்பல் போக்குவரத்து துறை அமைச்சர் சர்பானந்தா சோனாவால் தொடங்கி வைத்துள்ளார்.

க்வாட் உச்சி மாநாடு (Quad Summit)

2024-ம் ஆண்டிற்கான தலைமை பொறுப்பினை இந்தியா ஏற்க உள்ள நிலையில் 2024-ம் ஆண்டிற்கான க்வாட் கூட்டமைப்பு (நாற்கர கூட்டமைப்பு) மாநாடானது இந்தியாவில் நடைபெற உள்ளது.

க்வாட் கூட்டமைப்பு – இந்தியா, ஆஸ்திரேலியா, ஜப்பான், ஆஸ்திரேலியா

LIST OF IMPORTANT DAYS AND DATES IN OCTOBER 2023 IN TAMIL :

SUMMITS AND CONFERENCES 2023 IN TAMIL:

  1. SUMMITS AND CONFERENCES JUNE 2023 IN TAMIL
  2. SUMMITS AND CONFERENCES JULY 2023 IN TAMIL
  3. SUMMITSAND CONFERENCES AUGUST 2023 IN TAMIL
  4. SUMMITSAND CONFERENCES SEPTEMBER 2023 IN TAMIL
  5. SUMMITS AND CONFERENCES - OCTOBER 2023 IN TAMIL

Post a Comment

0Comments

Post a Comment (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn more
Ok, Go it!