தமிழ்நாடு மாநில துறைமுக மேம்பாட்டுக் கொள்கை 2023 :
தொழில் வளர்ச்சிக்கு மிகச் சிறந்த துறைமுக உட்கட்டமைப்பு அவசியத்திற்காகவும் கடல்சார் வணிகத்தில் தனியார் துறைகளின் முதலீட்டினை ஈர்க்கும் வகையிலும் தமிழ்நாடு மாநில துறைமுக மேம்பாட்டுக் கொள்கை 2023-யை தமிழக அரசு உருவாக்கியுள்ளது.
தமிழ்நாட்டின் கடற்கரையானது 1,076 கி.மீ. நீளத்தையும் 4 பெரிய துறைமுகங்களையும், 17 சிறிய துறைமுகங்களையும் கொண்டுள்ளது.
டாக்டர் பனிகாந்தா ககாதி விருது திட்டத்தின் கீழ் :இலவச ஸ்கூட்டர் :
டாக்டர் பனிகாந்தா ககாதி விருது திட்டத்தின் கீழ் அஸ்ஸாமிய அரசு அந்த மாநிலத்தில் 12-ம் வகுப்பு தேர்வில் அதிக மதிப்பெண்ணோடு தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு ஸ்கூட்டர் இலவசமாக வழங்கவுள்ளது.
அதன்படி, 35,775 மாணவ மாணவியருக்கு நவம்பர் 30 அன்று ஸ்கூட்டர் வழங்கப்படவுள்ளது. 75 சதவீதத்திற்கு அதிகமான மதிப்பெண் பெற்ற 5,566 மாணவர்களுக்கும் 60 சதவீதத்திற்கு அதிகமான மதிப்பெண் பெற்ற 30,209 மாணவியருக்கும் இந்த விருது வழங்கப்படவுள்ளது.
நூல் வெளியீடு :
விடுதலை போராட்டத்தில் தமிழ்நாட்டின் பங்களிப்பு குறித்த சிறப்பு மலர்களை தமிழக முதல்வர் வெளியிட மேற்கு வங்க முன்னாள் ஆளுநரான கோபாலகிருஷ்ண காந்தி பெற்றுக் கொண்டார்.
இப்புத்தக தயாரிப்பிற்காக லயோலா கல்லூரி முன்னாள் தலைவர் பெர்னாட்டி சாமி தலைமையில் குழு ஏற்படுத்தப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
அஞ்சலை அம்மாள் சிலையை திறந்து வைத்தார் முதல்வர்:
சுதந்திர போராட்ட தியாகியும் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினருமான அஞ்சலை அம்மாளுக்கு சிலை நிறுவப்படும் என்று தமிழக சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், கடலூர் காந்தி பூங்காவில் அமைக்கப்பட்ட அஞ்சலை அம்மாளின் திருவுருவ சிலையை முதல்வர் ஸ்டாலின் இன்று காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்.
நீலக்கொடி கடற்கரை திட்டம் :
தமிழகத்தில் நீலக்கொடி கடற்கரை திட்டத்தின் கொள்கைகளின்படி செங்கல்பட்டில் உள்ள கோவளம் கடற்கரை தேர்வு செய்யப்பட்டுள்ளது. நீலக் கொடி திட்டம் சுற்றுச்சூழல் கல்விக்கான அறக்கட்டளை (FEE) ஆகும் . இது டென்மார்க்கில் தலைமையகத்தைக் கொண்ட ஒரு அரசு சாரா அமைப்பால் நடத்தப்படுகிறது.
மாநிலங்கள் உருவான தினம் :
நவம்பர் 1-ல் ஆந்திரா, மத்தியபிரதேசம், கர்நாடகம், கேரளம், லட்சத்தீவு, பஞ்சாப், ஹரியானா, சத்திஸ்கர் உருவான தினமானது கொண்டாடப்பட்டது.
ஆந்திரா, மத்தியபிரதேசம், கர்நாடகம், கேரளம், லட்சத்தீவுகள் 1956 நவம்பர் 1-ல் உருவாக்கப்பட்டன.
பஞ்சாப், ஹரியானா மாநிலங்கள் 1966 நவம்பர் 1-ல் உருவாக்கப்பட்டன.
மத்திய பிரதேசத்திலிருந்து சத்திஸ்கர் மாநிலம் 2006 நவம்பர் 1-ல் உருவாக்கப்பட்டன.
ஆளுநருக்கு எதிராக உச்சநீதிமன்றம்-மனு தாக்கல் :
கேரள சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட 8 மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் தாமதம் செய்து வருவதாகக் கூறி கேரள ஆளுநர் ஆரிப் முகமது கானுக்கு எதிராக அம்மாநில அரசு உச்ச நீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்துள்ளது.
இதேபோல மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிப்பதில் காலவரையற்ற தாமதம் செய்வதாகக் கூறி தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி, பஞ்சாப் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் ஆகியோரைத் தொடர்ந்து தற்போது மூன்றாவதாக கேரள ஆளுநர் ஆரிப் முகமது கானுக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டுள்ளது.
சாங் தியோ :
இந்தியரான சாங் தியோ உலக சுகாதார நிறுவனத்தின் (WHO) காசநோய்க்கான தொழில் நுட்ப ஆலோசனை குழு உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார்.
17 ஏப்ரல் 1948-ல் World Health Origination (WHO) அமைப்பானது உருவாக்கப்பட்டது.
இந்தியா புக் ஆஃப் ரெக்காா்ட்ஸ், ஆசியா புக் ஆப் ரெக்காா்ட்ஸ் ஆகிய 2 சாதனை புத்தகங்களில் சிறுவா்கள்:
ஈரோட்டைச் சோ்ந்த 7 சிறுவா்கள், 5 நாள்களில் 197 கி.மீ. தொலைவுக்கு குதிரை சவாரி செய்து சாதனை புத்தகங்களில் இடம்பிடித்தனா். இளைய தலைமுறையினரின் உடல் ஆரோக்கியம் மற்றும் தன்னம்பிக்கை மேம்பாடு என்ற தலைப்பில் ஈரோட்டைச் சோ்ந்த தனியாா் அமைப்பு 14 வயதுக்குள்பட்ட சிறுவா்களுக்கான குதிரை சவாரி நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தது. இந்நிகழ்ச்சி கோவை மாவட்டம், பொள்ளாச்சி கோபாலபுரத்தில் உள்ள கேரள மாநில எல்லையில் கடந்த மாதம் 27 -ஆம் தேதி காலை தொடங்கியது.
இதில், ஈரோட்டைச் சோ்ந்த நிலா (8), அத்விக் (9), வெண்பா (11), பவ்யாஸ்ரீ (13), ஆதித்ய கிருஷ்ணன் (12), மிருத்லா (9), ஷா்வன்(12) ஆகிய 7 போ் தனித்தனி குதிரைகளில் சவாரியைத் தொடங்கினா்.
கோபாலபுரத்தில் இருந்து தொடங்கிய குதிரை சவாரி நெகமம், பல்லடம், அவிநாசி :, விஜயமங்கலம் வழியாக ஈரோடு நசியனூா் சாலை செம்மாம்பாளையத்தில் செவ்வாய்க்கிழமை நிறைவடைந்தது.
மொத்தம் 197 கி.மீ. தொலைவுக்கு குதிரை சவாரி செய்து இந்தியா புக் ஆஃப் ரெக்காா்ட்ஸ், ஆசியா புக் ஆப் ரெக்காா்ட்ஸ் ஆகிய 2 சாதனை புத்தகங்களில் சிறுவா்கள் இடம்பிடித்தனா்.
சென்னையில் வாகனங்களுக்கு புதிய வேக கட்டுப்பாடு :
சென்னையில் வாகனங்களுக்கு புதிய வேக கட்டுப்பாடு நவம்பா் 4-ஆம் தேதி முதல் அமல்படுத்தப்படும் என பெருநகர காவல் துறை தெரிவித்துள்ளது. இருசக்கர வாகனங்கள் 50 கி.மீ. வேகத்திலும், காா்கள் 60 கி.மீ. வேகத்திலும் செல்லலாம். இந்த வேகக்கட்டுப்பாட்டை மீறும் வாகன ஓட்டிகளுக்கு ரூ.1,000 அபராதம் விதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதைக் கருத்தில் கொண்டு 30 நவீன ‘ஸ்பீடு ரேடாா் கன்’ கருவிகள் நகரின் பல்வேறு இடங்களில் பொருத்தப்பட்டன.
கடந்த ஜூன் மாதம் 19-ஆம் தேதி அறிவிப்பின்படி, சென்னையில் காலை 7 மணி முதல் இரவு 10 மணி வரையில் 40 கி.மீ. வேகத்தைத் தாண்டியும், இரவு 10 மணி முதல் காலை 7 மணி வரை 50 கி.மீ. வேகத்தைத் தாண்டியும் வாகனங்களை ஓட்டிச் சென்றால் வழக்குப் பதியப்படும் என்று சென்னை காவல் துறை தெரிவித்தது.
தென்கிழக்காசிய பிராந்திய அமைப்பு-இயக்குநராக :WHO SEARO
பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனாவின் மகள் சைமா வசேத், உலக சுகாதார அமைப்பின் தென்கிழக்கு ஆசிய பிராந்தியத்திற்கான அடுத்த பிராந்திய இயக்குநராக சமீபத்தில் பரிந்துரைக்கப்பட்டார்.
ஜனவரி 22-27 தேதிகளில் சுவிட்சர்லாந்தின் ஜெனீவாவில் நடைபெறவுள்ள WHO நிர்வாகக் குழுவின் 154வது அமர்வின் போது இந்த நியமனம் சமர்ப்பிக்கப்படும் .
தென்கிழக்கு ஆசிய பிராந்தியத்திற்கான WHO பிராந்தியக் குழு (SEARO) உறுப்பு நாடுகள்:
பங்களாதேஷ், பூட்டான், DPR (வடக்கு) கொரியா, இந்தியா, இந்தோனேஷியா, மாலத்தீவுகள், நேபாளம், இலங்கை, தாய்லாந்து மற்றும் திமோர்-லெஸ்டே, மியான்மர்.
நாட்டில் புழக்கத்தில் இருந்த 97 சதவீதத்துக்கும் அதிகமான ரூ.2,000 நோட்டுகள் வங்கிகளுக்குத் திரும்பியுள்ளன:
‘நாட்டில் புழக்கத்தில் இருந்த 97 சதவீதத்துக்கும் அதிகமான ரூ.2,000 நோட்டுகள் வங்கிகளுக்குத் திரும்பியுள்ளன. தற்போது, ரூ. 10,000 கோடி மதிப்பிலான 2000 ரூபாய் நோட்டுகள் மட்டும் பொதுமக்களிடம் உள்ளன’ என்று ரிசா்வ் வங்கி (ஆா்பிஐ) தெரிவித்தது.
செலாவணி மேலாண்மை நடவடிக்கையின்கீழ், ரூ.2,000 நோட்டுகளை புழக்கத்தில் இருந்து திரும்பப் பெறுவதாக ரிசா்வ் வங்கி கடந்த மே மாதம் 19-ஆம் தேதி அறிவித்தது. மக்கள் தங்களிடம் உள்ள இந்த நோட்டுகளை மாற்றிக்கொள்ள செப்டம்பா் 30-ஆம் தேதி வரை அவகாசம் அளிக்கப்பட்டது. இந்த அவகாசம் பின்னா் அக்டோபா் 7 வரை நீட்டிக்கப்பட்டது. இந்தக் கால நீட்டிப்பு குறித்து அறிவிப்பு வெளியிட்ட ரிசா்வ் வங்கி, ‘அக்டோபா் 7-ஆம் தேதிக்குப் பிறகும் இந்த நோட்டுகள் சட்டப்படி செல்லத்தக்க நோட்டுகளாக தொடரும்
முதல் செயற்கை நுண்ணறிவு பாதுகாப்பு உச்சி மாநாடு 2023 :
இங்கிலாந்தின் பக்கிங்ஹாம்ஷயர் பகுதியில் உள்ள பிளெட்ச்லி பூங்காவில் 2023 ஆம் ஆண்டுக்கான முதல் செயற்கை நுண்ணறிவு பாதுகாப்பு உச்சி மாநாடு நடைபெற்றது. இந்த உச்சி மாநாட்டில் உலகத் தலைவர்கள், செயற்கை நுண்ணறிவு நிபுணர்கள் மற்றும் தொழில் பிரதிநிதிகள் பங்கேற்று, மேம்பட்ட செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பங்களின் பாதுகாப்பைச் சுற்றியுள்ள வளர்ந்து வரும் பிரச்சினைகள் மற்றும் இந்த பிரச்சினைகளை சரி செய்ய சர்வதேச ஒத்துழைப்பு தேவை குறித்து விவாதித்தனர்.
37வது தேசிய தேசிய விளையாட்டு போட்டி :
கோவாவில் நடைபெறும் 37வது தேசிய விளையாட்டு போட்டியில் ஆடவருக்கான கம்பு ஊன்றித் தாண்டுதல் பிரிவில் மத்திய பிரதேசத்தில் தேவ் மீனா தங்கப் பதக்கம் வென்றுள்ளார்
ஆசிய துப்பாக்கி சுடுதல் போட்டி – தென்கொரியா :
தென்கொரியா நடைபெறும் ஆசிய துப்பாக்கி சுடுதல் போட்டியின் 50மீ ரைஃபிள் 3 பொசிஷன் ஆடவர் தனிநபர் பிரிவில் இந்திய வீரரான ஐஸ்வரி பிரதாப் சிங் தோமர் தங்க பதக்கம் வென்றுள்ளார்.
50மீ ரைஃபிள் 3 பொசிஷன் ஆடவர் அணிகள் பிரிவில் ஐஸ்வரி பிரதாப் சிங் தோமர், ஸ்வப்னில் குசேல், அகில் ஷியோரன் ஆகியோர் வெண்கலப் பதக்கம் வென்றுள்ளனர்.
No comments:
Post a Comment