‘சுவிதா’ வலைதளம் :
- நாட்டின் 18-ஆவது மக்களவைத் தோ்தல் அறிவிக்கப்பட்டதில் இருந்து தோ்தல் பிரசாரத்துக்கு அனுமதி கோரி ‘சுவிதா’ வலைதளத்தில் இதுவரை 73,000-க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளதாக இந்திய தோ்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
- ‘சுவிதா’ வலைதளம் என்பது தோ்தல் பிரசார நடைமுறைகளுக்காக அரசியல் கட்சிகள் மற்றும் வேட்பாளர்களிடம் இருந்து அனுமதிகள் மற்றும் செயல்முறையை நெறிப்படுத்த இந்திய தோ்தல் ஆணையத்தால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள ஒரு தொழில்நுட்ப தீர்வாகும். வலைதளம் மூலம் அளிக்கப்படும் அனுமதி குறித்த தரவுகள், தோ்தல் செலவினங்களை ஆராய்வதற்கு மதிப்புமிக்க ஆதாரமாகவும் செயல்படுகிறது.
- "அதிகபட்சமாக தமிழ்நாட்டில் இருந்து 23,239 விண்ணப்பங்களும், அதைத் தொடர்ந்து மேற்கு வங்கம்(11,976), மத்தியப் பிரதேசம்(10,636) விண்ணப்பங்களும்,
- குறைந்தபட்ச விண்ணப்பங்கள் சண்டிகர் (17), லட்சத்தீவு (18) மற்றும் மணிப்பூர் (20) ஆகிய இடங்களில் இருந்து பெறப்பட்டுள்ளன," என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
- மக்களவைத் தோ்தல் குறித்து பரவும் தவறான தகவல்களைச் சரிபாா்க்க ‘மித் வொ்சஸ் ரியாலிட்டி ரெஜிஸ்டா்’ எனும் புதிய வலைதளத்தை இந்திய தோ்தல் ஆணையம் தொடங்கியது.
- மக்களவைத் தோ்தல் குறித்து தவறான தகவல்கள் பரவுவதைத் தடுப்பதற்காக புதிய வலைதளத்தை இந்திய தோ்தல் ஆணையம் அறிமுகப்படுத்தியுள்ளது.
- விவசாயிகள் மற்றும் கிராமப்புற மக்களைச் சென்றடையும் வகையில் காப்பீட்டு நிறுவனங்களுக்கு நன்கு உதவுவதை நோக்கமாகக் கொண்ட 'SARTHI' என்ற இணைய தளத்தினை மத்திய அரசு தொடங்கியுள்ளது.
- TNPSC KEY POINTS : 'SARTHI' இணைய தளம்
- சி-விஜில் செயலி மூலம் பொதுமக்கள் பணப்பட்டுவாடா உள்ளிட்ட தேர்தல் தொடர்பான புகார்களை அளிக்கலாம்.தேர்தல் நேரத்தில் ஏடிஎம்மில் பணம் நிரப்பும் வாகனங்கள், ஆம்புலன்ஸ் உள்ளிட்ட அனைத்து வாகனங்களும் சோதனைக்கு உள்படுத்தப்படும்.
- பயங்கரவாதம் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களுக்கு எதிரான இந்தியாவின் போருக்கு ஒரு முக்கிய நிரப்பியாக, மத்திய உள்துறை அமைச்சரும், கூட்டுறவு அமைச்சருமான திரு. . மெய்நிகர் நிகழ்வில், உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா ஜம்மு மற்றும் கொச்சியில் NIA இன் 2 புதிய கிளை அலுவலகங்களையும், ராய்ப்பூரில் ஒரு குடியிருப்பு வளாகத்தையும் -திறக்கிறார்.
- தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தின் (NCRB) புதிய குற்றவியல் சட்டங்களின் தொகுப்பான 'சங்கலன்' [NIA எனும்தேசிய புலனாய்வு அமைப்பு வடிவமைத்த தேசிய குற்ற ஆவண காப்பகத்திற்கான (Digital criminal case management system) மொபைல் செயலி-Sankalan ] என்ற மொபைல் செயலியையும் ஸ்ரீ ஷா அறிமுகப்படுத்தினார்.பழைய மற்றும் புதிய குற்றவியல் சட்டங்களுக்கு இடையே ஒரு பாலமாக புதிய குற்றவியல் சட்டங்கள் மூலம் செல்லவும் சங்கலன் செயலி வடிவமைக்கப்பட்டுள்ளது.
- சென்னையில் முதியோர்களுக்கு உதவும் ‘பந்தம்’ உட்பட, குற்றங்களைக் குறைக்கும் 3 செயலிகளை டிஜிபி சங்கர் ஜிவால் தொடங்கி வைத்தார்.
- காணாமல் போன வாகனங்களைக் கண்டுபிடிக்கவும், அந்த வாகனங்களை, குற்றச் செயல்களுக்குப் பயன்படுத்துவதைத் தடுக்கவும், ரூ.1.81 கோடி செலவில் ஒருங்கிணைந்த வாகன கண்காணிப்பு அமைப்பு ‘ஐவிஎம்எஸ்’ (IVMS - Integrated Vehicle Monitoring System) சென்னையில் தொடங்கப்பட்டுள்ளது.
- KEY POINTS : 1.பருந்து செயலி 2.பந்தம் செயலி 3.நிவாரணம் செயலி
- ஸ்டார் அப் தமிழா தொலைக்காட்சி நிகழ்ச்சியை தொழில் முனைவோரை ஊக்குவிக்க, தொழில்முனைவு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த தமிழக அமைச்சர் தா.மோ.அன்பரசன் தொடங்கி வைத்துள்ளார்.மேலும் www.starupthamizha.tv என்ற இணையதளத்தினை துவங்கி வைத்துள்ளார்.
- இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமானது (டிராய்) கைப்பேசிகளில் ஸ்பேம் மோசடி அழைப்புகளை தடுக்க தொந்தரவு செய்யாதீர் (Do Not Disturb App) என்ற செயலியை அறிமுகம் செய்துள்ளது.
- புதுச்சேரியில் ஆட்டோ சவாரிக்காக புதிய செயலியை போக்குவரத்துத்துறை அறிமுகப்படுத்தவுள்ளது. ஒழுங்கற்றக் கட்டண நிர்ணயத்தால் அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதாக எழும் புகார்களைக் குறைக்க இந்த முயற்சியை மேற்கொள்வதாகப் போக்குவரத்துத்துறை தெரிவித்துள்ளது.
- இந்த மொபைல் செயலியின் மூலம் ஒழுங்கான முறையில் கட்டணம் வசூலிக்கப்படுவதோடு ஆட்டோ ஓட்டுனர்களுக்குச் சமமான ஊதியம் கிடைக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த முயற்சி கேரளாவில் நடைமுறையில் உள்ள 'கேரளா சவாரி'யை ஒத்தது எனப் போக்குவரத்துத்துறை ஆணையர் எ.எஸ். சிவக்குமார் தெரிவித்துள்ளார்.
- சென்னையில் பயணிகளுக்கு சிரமமின்றி பயணம் செய்ய ‘சென்னை பஸ்’ என்ற மொபைல் செயலியை தமிழக அரசு அறிமுகப்படுத்தியுள்ளது இந்த செயலி மூலம் பயணிகள் தங்கள் வீட்டிலிருந்து 1 கி.மீ தூரத்தில் பேருந்து நிலையங்களின் இருப்பிடத்தை அறிந்து கொள்ளலாம்.
- மேலும் இது பேருந்து பாதை விவரங்கள், தற்போதைய இருப்பிடம் மற்றும் பேருந்து நிறுத்தத்திற்கு வரும் நேரம் ஆகியவற்றை வழங்குகிறது.
பொய் தகவல்கள் குறித்த விழிப்புணா்வு -‘செக் தி ஃபேக்ட்ஸ்’
- பொய்யான தகவல்கள் பரப்பப்படுவதைத் தடுக்கவும், பயன்பாட்டை பாதுகாப்பானதாக மாற்றவும் ஒரு மாத விழிப்புணா்வு பிரசாரத்தை வாட்ஸ்ஆப் தொடங்கி உள்ளது.
- வாட்ஸ்ஆப்பில் பிறரால் அனுப்பப்படும் தகவல்களின் உண்மைத் தன்மையை உறுதி செய்யாமல் பகிரப்படுவதால் பொய் தகவல்கள் வேகமாக பரவுகின்றன. இது பல்வேறு நேரங்களில் கலவரம், மோதல்களுக்கு வழிவகுத்து விடுகின்றன. இதைத் தடுக்க மெட்டா நிறுவனம் தனது வாட்ஸ்ஆப் செயலியில் பரவும் தகவலைகளை உறுதி செய்ய வாட்ஸ்ஆப் சேனல்ஸில் ‘செக் தி ஃபேக்ட்ஸ்’ எனும் புதிய சேவையை அறிமுகம் செய்துள்ளது. பயனா்கள் தங்களுக்கு சந்தேகமான தகவல்களை இதில் பதிவிட்டு உண்மைத் தன்மையை தெரிந்து கொள்ளலாம். இதற்காக உண்மையான தகவல்களை சோதிக்கும் தனியாா் நிறுவனங்களை வாட்ஸ்ஆப் தனது சேனல்ஸில் இணைத்துள்ளது.
டாஷ்போர்டு" போர்டல்:"Dashboard" portal
- மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சர் சமீபத்தில் மென்பொருள் பயன்பாட்டு "டாஷ்போர்டு" போர்ட்டலை அறிமுகப்படுத்தினார்.
- இது ஒரு செயற்கை நுண்ணறிவு (AI) உந்துதல் தொழில்நுட்ப டேஷ்போர்டு ஆகும், இது உறுப்பினர் சுயவிவரம் உட்பட பல்வேறு அளவுருக்கள் குறித்த பாராளுமன்ற கேள்விகளை பகுப்பாய்வு செய்கிறது.
- இது அமைச்சரவைக் குறிப்புகள், நாடாளுமன்றச் சட்டங்கள் மற்றும் அரசாங்கத்தின் வர்த்தமானி அறிவிப்புகளுக்கான டாஷ்போர்டாகவும் செயல்படுகிறது.
ஆப்ட்ரூட் (OptRoute) செயலி
- இடைத்தரகர் யாரும் இல்லாமல் ஓட்டுநரையும், நுகர்வோரையும் நேரடியாக இணைக்க சென்னை ஐஐடி-யின் ஆசிரியர்கள், மாணவர்கள், முன்னாள் மாணவர்கள் இணைந்து ஆப்ட்ரூட் (OptRoute) என்ற செயலியை வடிவமைத்துள்ளனர்.
- இச்செயலியானது நகரங்களுக்கிடையே சரக்குகளை எளிதாகவும், திறமையாகவும் கொண்டு செல்லும் வகையில் வடிவமைத்துள்ளனர்.
நந்த கெளரா யோஜனா போர்டல் :உத்திரகாண்ட் மாநிலத்தின் முதல்வரான புஷ்கர் சிங் தாமி பெண் குழந்தைகளுக்கான நந்த கெளரா யோஜனா போர்டல் (Nanda Gora Yojana Portal)-ஐ துவங்கி வைத்துள்ளார்.
பிஐஎஸ் கேர் ஆப் என்ற கைப்பேசி செயலி :நாட்டில் தங்கம் வாங்கும் மக்களுக்கு உதவும் வகையில் இந்திய தர நிர்ணய ஆணையமானது பிஐஎஸ் கேர் ஆப் என்ற கைப்பேசி செயலியை அறிமுகம் செய்திருக்கிறது. இதன் வழியாக, ஐஎஸ்ஐ மற்றும் ஹால் மார்க் தங்க நகைகள் மற்றும் வெள்ளி நகைகளை அடையாளம் காண உதவுகிறது.
TATO-App :தமிழ்நாட்டில் ஆட்டோ சவாரிக்காக தமிழக அரசானது TATO – App-னை உருவாக்கியுள்ளது.
நம்ம சாலை செயலி : தமிழகத்தில் சாலைகளில் ஏற்படும் பாதிப்புகளை மக்கள் நெடுஞ்சாலைத் துறைக்கு தெரிவிக்க நம்ம சாலை செயலியானது இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்துள்ளார்.
புதிய இ-பூமி போர்ட்டலை (New E-Bhoomi Portal): நிலம் வாங்கும் செயல்முறைகளை எளிதாக்கும் வகையில் ஹரியானா முதல்வர் மனோகர் லால் கட்டார் புதிய நிலம் வாங்குவதற்கான புதிய இ-பூமி போர்ட்டலை (New E-Bhoomi Portal) தொடங்கி வைத்துள்ளார்.
சந்தேஸ் செயலி (Sandes App)- Sandes App தேசிய தகவல் மையமானது பாதுகாப்பான முறையில் தகவல் தொடர்புகளை மேற்கொள்ள டெல்லி காவல் துறைக்காக 2020-ம் ஆண்டு உருவாக்கியுள்ளது.
ஸ்டாலின் செயலியை அரசு திட்டங்கள், தி.மு.க.வின் செயல்பாடுகளை அறிந்து கொள்ள உருவாக்கப்பட்டது.
நப்மித்ரா (Nabhmitra) செயலி :மீனவர்கள் மீன்கள் இருக்கும் இடத்தையும், வானிலை அறியவும், ஆபத்து நேரங்களில் உதவுதற்காக நப்மித்ரா (Nabhmitra) செயலியை ISRO உருவாக்கியுள்ளது.
உமாங் கைபேசி செயலி (UMANG app): வெளி நாடுகளில் உள்ள இந்திய மாணவர்கள், இந்தியர்கள், சுற்றுலா பயணிகளுக்கு இந்திய அரசின் சேவை கிடைக்க வடிவமைக்கப்பட்டது.
வேளாண் புள்ளிவிவரங்களுக்கான ஒருங்கிணைந்த போர்ட்டல் -Unified Portal for Agricultural Statistics (UPAg):
- நிதி ஆயோக்கின் உறுப்பினர் பேராசிரியர் ரமேஷ் சந்த், வேளாண் புள்ளிவிவரங்களுக்கான ஒருங்கிணைந்த போர்ட்டலை (யுபிஏஜி போர்ட்டல் - www.upag.gov.in) 15.09.23 அதிகாரப்பூர்வமாகத் தொடங்கி வைத்தார்.
- இது இந்தியாவின் விவசாயத் துறை எதிர்கொள்ளும் சிக்கலான நிர்வாக சவால்களை நிவர்த்தி செய்வதற்கான ஒரு அற்புதமான நடவடிக்கையாகும். வேளாண் துறையில் தரவு மேலாண்மையை நெறிப்படுத்தவும் மேம்படுத்தவும் வடிவமைக்கப்பட்ட இந்த புதுமையான தளம், மிகவும் திறமையான மற்றும் பதிலளிக்கக்கூடிய விவசாய கொள்கை கட்டமைப்பை நோக்கி ஒரு குறிப்பிடத்தக்க படியைக் குறிக்கிறது.
- யுபிஏஜி போர்ட்டலின் முக்கிய அம்சங்கள்
KHANAN PRAHARI MOBILE APP / சட்டவிரோத சுரங்கத்தை தடுக்க கானான் பிரஹாரி மொபைல்:
- அங்கீகரிக்கப்படாத நிலக்கரி சுரங்க நடவடிக்கைகளைப் புகாரளிப்பதற்காக "கானன் பிரஹாரி" என்ற ஒரு மொபைல் பயன்பாட்டையும், நிலக்கரி சுரங்க கண்காணிப்பு மற்றும் மேலாண்மை அமைப்பு (சி.எம்.எஸ்.எம்.எஸ்) என்ற ஒரு வலை பயன்பாட்டையும் மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.
- KHANAN PRAHARI MOBILE APP
ஸ்மார்ட் ரிங் (Smart Ring):
- சென்னை ஐஐடி முன்னாள் மாணவர்களால் உருவாக்கப்பட்ட மியூஸ் வியரபிள் ஸடார் அப் நிறுவனம் மோதிர வடிவ தொழில் நுட்ப ஸ்மார்ட் ரிங் ஒன்றை கண்டுபிடித்துள்ளது.இதன் மூலம் இரத்த அழுத்தம், இதயத்துடிப்பு, உடல் வெப்பநிலை ஆகியவற்றை கண்டறியலாம்.பணம் செலுத்தும் வசதியும் இதில் உள்ளது
ரிசர்வ் வங்கியின் UDGAM போர்ட்டல்:
- தகவல்களை மையப்படுத்துவதன் மூலமும், உள்ளுணர்வுத் தேடல் செயல்முறையை வழங்குவதன் மூலமும் உரிமை கோரப்படாத வைப்புத்தொகை பிரச்சினைக்கு ஒரு புதுமையான தீர்வை வழங்குகிறது.
- UDGAM (Unclaimed Deposits – Gateway to Access Information) போர்டல் எனப் பெயரிடப்பட்ட இந்த மையப்படுத்தப்பட்ட இணைய தளமானது, பல்வேறு வங்கிகளில் உள்ள உரிமை கோரப்படாத வைப்புத்தொகைகளைக் கண்டறியும் செயல்முறையை எளிதாக்க வடிவமைக்கப்பட்டுள்ளது.
- ரிசர்வ் வங்கியின் UDGAM போர்ட்டல், தனிநபர்கள் தங்களின் கோரப்படாத டெபாசிட்களை தடையின்றி கண்காணிக்க ஒரு பயனர் நட்பு கருவியாக செயல்படுகிறது, மேலும் பல வங்கிகளில் இருந்து தகவல்களை ஒரே அணுகக்கூடிய இடத்திற்கு ஒருங்கிணைக்கிறது.
ஃபிளட் வாட்ச் மொபைல் செயலி (Flood Watch):
- வெள்ள பாதிப்புகளை அறியவும், வெள்ள பாதிப்புகளால் பாதிக்கப்பட்ட பகுதிகளை கண்டறியவும் ஒன்றிய நதி நீர் ஆணையம் சார்பில் ஃபிளட் வாட்ச் மொபைல் செயலி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது
ஃபிஷர் ஃப்ரெண்ட் செயலி (Fisher Friend app):
- மத்திய அரசு, எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனம் இணைந்து உருவாக்கிய ஃபிஷர் ஃப்ரெண்ட் செயலி (Fisher Friend app) செயலியானது புதுச்சேரியில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.இச்செயலின் உதவியால் கடலின் தன்மையையும், வானிலை முன்னறிவிப்புகளையும் தெரிந்து கொள்ளலாம்.
- மத்திய உள்துறை அமைச்சகம் சார்பாக ’கவாச் 2023’ என்ற பெயரில் சைபர் செக்யூரிட்டி ஹாக்கத்தான் போட்டி மும்பையில் நடைபெற்றது. இதில் நாடு முழுவதும் இருந்து பல்வேறு கல்லூரிகளில் இருந்து 3,600 குழுக்களாக மாணவர்கள் கலந்துகொண்டனர். இதில் 100 குழுக்கள் இறுதிப்போட்டிக்கு முன்னேறின.
- பல்வேறு பிரிவுகளில் நடைபெற்ற இந்தப் போட்டியில், சென்னை பூந்தமல்லி அருகே உள்ள தனியார் பொறியியல் கல்லூரி சார்பாக கலந்துகொண்ட மாணவர்களின் கண்டுபிடிப்பான, ‘கவாச் 360’ என்ற மொபைல் ஆப் முதல் பரிசைப் பெற்றுள்ளது.
- சிசிடிவி உள்ள பகுதிகளில் ஏதேனும் விபத்து ஏற்பட்டால் இந்தச் செயலி மூலம், அது அருகில் இருக்கும் காவல் நிலையம் மற்றும் ஆம்புலன்ஸ் சேவைக்கு தகவல் தெரிவித்துவிடும். அதேபோல, சிக்னலில் உள்ள சிசிடிவி கேமராக்களைத் திருட்டு வாகனங்கள் கடந்துசென்றால் அதுகுறித்து காவல் துறைக்கு உடனடியாக தகவல் தெரிவிக்கும் வகையில் இந்தச் செயலியில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
- அரசு போட்டித் தோவுகளுக்கென்று அண்ணா நிா்வாகப் பணியாளா் கல்லூரி சாா்பில் 'நோக்கம்' செயலி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அண்ணா நிா்வாகப் பணியாளா் கல்லூரி சாா்பில் அரசுத் துறைகள், பொதுத் துறை நிறுவனங்களில் பணியாற்றுபவா்களுக்கு பல்வேறு பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்றன.
- இந்தப் பயிற்சிகளின் தன்மையை விரிவுபடுத்தும் நோக்கத்தில் 'எய்ம் டிஎன்' என்ற யூடியுப் சேனல் தொடங்கப்பட்டு அதில் காணொலிகள் பதிவேற்றம் செய்யப்பட்டு வருகின்றன. இதன்தொடா்ச்சியாக போட்டித் தோவுகளுக்கென்று 'செயலி' ஒன்றையும் இந்தக் கல்லூரி உருவாக்கியுள்ளது.
- ஆசிரியர்களுக்கென தனியாக ஒரு செயலியை பள்ளிக் கல்வித்துறை அறிமுகம் செய்துள்ளது.அந்த செயலிக்கு விடுப்பு நிர்வாக முறை(லீவ் மேனேஜ்மெண்ட் சிஸ்டம்) என பெயரிடப்பட்டுள்ளது.
- இந்த புதிய செயலியை ஆசிரியர்கள் தங்கள் செல்போன்களில் பதிவிறக்கம் செய்து கொண்டு அதன்மூலம் தங்களுக்கு தேவைப்படும் போது விடுப்புகளை செயலியில் பதிவு செய்ய வேண்டும்.
- ஜூலை 6-ல் கூட்டுறவு அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பனால் கூட்டுறவு நிறுவனங்களின் தயாரிப்புகளை சந்தைப்படுத்த COOP BAZAAR செயலி தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.
- இத்திட்டத்தின்படி முதற்கட்டமாக 64 பொருள்களை சந்தைபடுத்த உள்ளது.
- தமிழகத்தில் பொதுமக்களுக்கு தரமான உணவு வழங்கப்படுவதை உறுதி செய்யும் வகையில் உணவுப் பாதுகாப்புத் துறை பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
- உணவின் தரம் குறித்து நுகா்வோரின் புகாா்களை 94440 42322 என்ற வாட்ஆப் எண் மற்றும் மின்னஞ்சல் மூலமாகவும் பெறப்பட்டு, 72 மணி நேரத்துக்குள் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
- இதை மேம்படுத்தும் விதமாக தற்போது www.foodsafety.tn.gov.in எனும் இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது.
- இதுமட்டுமின்றி ‘தமிழ்நாடு புட் சேப்ட்டி கன்சியூமா் ஆப்’ எனும் கைப்பேசி செயலியும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்தச் செயலியில் புகாா் செய்பவா்கள் எழுத்துகளை படிக்க தெரிந்தவா்களாக இருந்தால் மட்டும் போதும். புகாா் விவரங்களை மிக எளிதாக தெரிந்தெடுக்கும் வகையில் எளிமையான வடிவில் அமைக்கப்பட்டுள்ளது.
- தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளிலும், மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்தும் வகையில் ‘ஸ்க்ரீன் ரீடா்’ வசதிகளுடனும் உருவாக்கப்பட்டுள்ளது.உணவுப் பாதுகாப்புத் துறையின் செயல்பாடுகளை TN CONSUMER செயலி மூலம் பொதுமக்கள் அறிந்து கொள்ள விதமாக தொடங்கப்பட்டுள்ளது.உணவு தரம் குறித்த புகார் அளிக்க தமிழக அரசால் TN Food Safety Consumer செயலி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
- ட்விட்டருக்குப் போட்டியாக ஃபேஸ்புக்கின் தாய் நிறுவனமான மெட்டா அறிமுகப்படுத்தியுள்ள த்ரெட்ஸ் சமூக ஊடகத்தில் முதல் 7 மணி நேரங்களில் ஒரு கோடி பயனர்கள் தங்களை இணைத்துக்கொண்டுள்ளதாக மெட்டா நிறுவனத்தின் தலைவர் மார்க் சக்கர்பெர்க் தெரிவித்துள்ளார்.
- வெளியே சென்று வீடு திரும்பும் வரை, பொதுமக்கள் பாதுகாப்பாக உணர 'காவலன் SOS' செயலி அறிமுகப்படுத்தப்பட்டது.
- தமிழ்நாடு காவல்துறை கட்டுப்பாட்டில் இந்த நவீன செயலியை அறிமுகம் செய்துள்ளது.
- அவசர காலத்திலோ, பாதுகாப்பற்ற சூழலிலோ இந்த காவலன் SOS செயலி பொதுமக்களுக்கு உற்ற தோழனாக தோள் கொடுக்கிறது.
- தொல்காப்பியத்தின் ஆங்கில மொழிபெயர்ப்பை 2021-ம் ஆண்டு செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் வெளியிட்டது.
- அதைத் தொடர்ந்து, தொல்காப்பியம் சார்ந்த செல்போன் செயலியை வடிவமைக்கும் முயற்சியில் செம்மொழி நிறுவனம் ஈடுபட்டு வந்தது.
- அதன் பலனாக சிஐசிடி தொல்காப்பியம் எழுத்து (PHONOLOGY & MORPHOLOGY MOBILE APPLICATION) என்றபெயரில், எழுத்து அதிகாரத்துக்கான துக்கான செயலியை கூகுள் ப்ளே ஸ்டோரில் செம்மொழி நிறுவனம் தற்போது வெளியிட்டுள்ளது. இந்த செயலியில் தொல்காப்பியப் பாடல்கள் இசையுடன் (முற்றோதல்) ஒலிக்கும்.
- உழவன் செயலி மூலம் விவசாயிகள் தங்களுக்கு தேவையான இடுபொருட்கள் முன்பதிவு, வேளாண் அறிவியல் நிலையத்தால் வழங்கப்படும் பயிற்சிகள் போன்றவற்றை அறிந்துகொள்ள முடியும்.
- இயற்கை விவசாயப் பொருட்களின் விற்பனை மற்றும் இயற்கை விவசாயிகளின் தொடா்பு பற்றியும் அறிந்துகொள்ளலாம்.கலைஞரின் வேளாண் வளா்ச்சித் திட்டங்கள் பற்றியும் அறியலாம்.
- வனத்துறையில் இலவச மரக்கன்றுகளை பெற பதிவு செய்து பயன் பெற முடியும்.
- குறுகியகால வானிலை முன்னறிவிப்பு மூலம் நீா் பாய்ச்சுதல் மற்றும் அறுவடை போன்ற முக்கிய முடிவுகளை எடுக்கலாம்.
- தகவல் தொழில்நுட்பம் வேகமாக வளா்ந்து வரும் நிலையில், அது தொடா்பான சைபா் குற்றங்களும் அதிகரித்து வருகின்றன. இதை தடுப்பதற்கு காவல்துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
- இதன் ஒரு பகுதியாக சென்னை பெருநகர காவல்துறை ‘சைபா் அலா்ட்’ என்ற செயலியை உருவாக்கியுள்ளது.
- இந்த செயலியில் சைபா் குற்றவாளிகள் ஏற்கெனவே பயன்படுத்திய கைப்பேசி எண்கள், வங்கிக் கணக்குகள், சமூக ஊடக கணக்குகள், மின்னஞ்சல் முகவரிகள், இணையதளங்கள் ஆகியவை பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. இந்த தகவல்கள், சென்னை பெருநகர காவல்துறை சைபா் குற்றப்பிரிவு பதிவு செய்த வழக்குகளில் இருந்து பெறப்பட்டுள்ளன. இதன் மூலம் புதிதாக பதியப்படும் ஒரு சைபா் குற்ற வழக்கிலிருந்து பெறப்படும் கைப்பேசிகள்,வங்கிக் கணக்குகள், மின்னஞ்சல்கள், சமூக ஊடக கணக்குகள் ஆகியவை செயலியில் உள்ளீடு செய்யும்போது, அந்த வழக்கில் தொடா்புடைய குற்றவாளி, வேறு எங்கும் சைபா் குற்றத்தில் ஈடுபட்டுள்ளாரா, அவா் மீது வேறு எங்கு வழக்குகள் உள்ளன என்பதை உடனடியாக கண்டறிய முடியும்.
- இணைய சேவை மையம் அளிக்கும் சான்றிதழ்கள், கல்விச் சான்றிதழ்கள், மதிப்பெண் பட்டியல்கள், உரிமங்கள், நிலப் பரிவா்த்தனை ஆவணங்கள் மற்றும் தரவுகளைப் பாதுகாக்க நம்பிக்கை இணையம் வழி செய்திடும். சான்றிதழ்களை சேதப்படுத்தாமல் பாதுகாக்க அரசாங்கத்துக்கு இந்த நம்பிக்கை இணையம் உதவி புரியும்.
- இதேபோன்று, பொது மக்களுக்கு உதவிடும் வகையில் இ-பெட்டகம் கைப்பேசி செயலி தொடங்கப்பட்டுள்ளது.
- இந்தச் செயலி மூலமாக இணைய சேவை மையங்கள் வழங்கும் சான்றிதழ்கள், கல்விச் சான்றிதழ்கள், மதிப்பெண் பட்டியல்கள் ஆகியவற்றை சேமித்து வைத்து பொது மக்களே பாதுகாப்பாகப் பகிரலாம். இந்தச் சேவையால், மக்கள் தங்களது டிஜிட்டல் ஆவணங்களை வேலை வாய்ப்பு, உயா்கல்வி நிறுவனங்கள், அரசு நிறுவனங்கள், வங்கிகள் மற்றும் பிற அலுவலா்களின் சரிபாா்ப்புக்காக பாதுகாப்பான மற்றும் காகிதமில்லாத முறையில் பகிர முடியும்.
- வேலைவாய்ப்பு, கல்வி சோ்க்கை, அரசு சேவைகளை அணுகுதல், வெளிநாடுகளுக்கு பயணம் செய்தல், பணிபுரிதல் போன்றவற்றுக்காக ஆவணங்களின் அசல் காகித நகல்களை நேரில் சென்று சமா்ப்பிப்பதற்கான தேவையை இது வெகுவாகக் குறைக்கும்.
- வேளாண் அடுக்ககம் (Agri Stack) திட்டமானது 01.04.2023 முதல் செயல்படுத்தப்படவுள்ளது. வேளாண் அடுக்ககம் உருவாக்குவதன் மூலம் நிலவிவரங்களுடன் இணைக்கப்பட்ட விவசாயிகள் விபரம், நிலஉடைமை வாரியாக புவியியல் குறியீடுசெய்தல் மற்றும் நிலஉடைமை வாரியாக சாகுபடிபயிர் விவரம் ஆகிய அடிப்படை விவரங்களை கொண்டு (Grower online Registration of Agricultural Input System) என்ற வலைதளம் உருவாக்கப்படவுள்ளது.
- குழந்தைகளுக்கான தடுப்பூசிகள் அனைத்தையும் டிஜிட்டல் முறையில் அமல்படுத்தும் யூ வின் செயலி பயன்பாட்டை மத்திய அரசு தமிழக முழுவதும் செயல்படுத்த வலியுறுத்தியுள்ளது.
- யூ வின் செயலி: குழந்தைகள் பிறந்தது முதல் குறிப்பிட்ட வயது வரை அவர்களுக்கு ஒவ்வொரு நிலையிலும் தடுப்பூச்சிகள் செலுத்தப்பட வேண்டி உள்ளது. மொத்தம் 11 வகையான தடுப்பூசிகள் பல்வேறு விதமான நோய்களுக்கும் செலுத்தப்படுகின்றன. தமிழகத்தில் மட்டும் ஆண்டுதோறும் 9.4 லட்சம் குழந்தைகளுக்கு தடுப்பூசிகள் செலுத்தப்படுகின்றன.
- புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் புதிய செயலியை சேலம் மாநகர காவல்துறை முன்னெடுப்புடன் சோனா தொழில்நுட்பக் கல்லூரி மாணவர்கள் உருவாக்கியுள்ளனர்.
- இந்த செயலியை சேலம் மாநகர காவல் ஆணையர் விஜயகுமாரி அறிமுகம் செய்து வைத்தார்.
- இந்த செயலி புலம்பெயர் தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது .இதற்கு புலம்பெய்ந்தோர் பாதுகாப்பு (மிக்கிரேன்ட் கேர்) என்று பெயரிடப்பட்டுள்ளது.
- இந்த செயலி புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் பாதுகாப்பை அவர்களின் முகவர்களுக்கும் காவல் துறைக்கும் தெரிவிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
- தமிழகத்தில் 6 லட்சத்துக்கும் மேற்பட்ட புலம்பெயர் தொழிலாளர்கள் வடமாநிலங்களிலிருந்து வந்து பிழைப்பிற்காக தமிழகத்தில் தங்கியுள்ளனர். சேலத்தில் 4000க்கும் மேற்பட்ட புலம்பெயர் தொழிலாளர்கள் உள்ளனர். இந்த செயலியில் புலம்பெயர் தொழிலாளர்கள் எந்த மாநிலத்தில் எந்த முகவரியில் வசித்து வந்தார்கள், தற்போது எங்கு இருந்துகொண்டு பணியாற்றி வருகிறார்கள் உள்ளிட்ட விவரங்கள் அனைத்தும் பதிவு செய்யப்பட்டுள்ளது.
- இளையோர் விளையாட்டுப் போட்டிக்காக மத்திய இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சகம் சிறப்பு கைபேசி செயலியை (மொபைல் ஆப்) அறிமுகப்படுத்தியுள்ளது.
- இதில் பங்கேற்கும் விளையாட்டு வீரர்கள், பயிற்சியாளர்கள், துணை ஊழியர்கள், விளையாட்டு வீரர்களின் பெற்றோர் மற்றும் அதிகாரிகள் விளையாட்டுப் போட்டி தொடர்பான அனைத்து தகவல்களையும் இந்தச் செயலி மூலம் எளிதில் பெற முடியும். கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டுகளுக்காக பிரத்யேக செயலி அறிமுகப்படுத்தப்படுவது இதுவே முதல் முறை ஆகும்.
- இந்தச் செயலி வீரர்களுக்கான ஒரு பிரத்யேக உள்நுழைவு அம்சத்தைக் கொண்டுள்ளது.மேலும், விளையாட்டுகளின் போது விளையாட்டு வீரர்கள் எழுப்பும் கேள்விகளுக்கு உடனடி பதில்களை வழங்குவதை உறுதி செய்வதற்காக, வாட்ஸ் அப் சாட்போட் (Whatsapp Chatbot) உருவாக்கப்பட்டுள்ளது. விளையாட்டு ரசிகர்களுக்கு, இந்தச் செயலி, போட்டி அட்டவணைகள், பதக்க எண்ணிக்கை, விளையாட்டு அரங்குகளின் முகவரி மற்றும் புகைப்படத் தொகுப்புகள் போன்ற தகவல்களை வழங்குகிறது.
- தமிழ்நாட்டில் உள்ள கோயில்கள் பற்றி பல்வேறு தகவல்களை அறிந்துகொள்ள திருக்கோயில் என்ற செயலியை இந்து அறநிலையத் துறை அமைச்சர் சேகர் பாபு அறிமுகப்படுத்திவைத்தார்.
- ‘திருக்கோயில்’ செயலி மூலம் கோயில்களின் தலபுராணம், தலவரலாறு, நடை திறந்திருக்கும் நேரம், பூஜைகள், பிராா்த்தனைகள், அதற்கான கட்டண விவரங்கள், முக்கிய திருவிழாக்கள், அனைத்து கோணங்களிலும் திருக்கோயில்களை கண்டுகளிக்கும் மெய்நிகா் காணொளி, திருவிழாக்களின் நேரலை, திருக்கோயில்களை சென்றடைவதற்கான கூகுல் வழிகாட்டி, பக்தா்களுக்கான சேவைகள் போன்றவற்றை அறிந்து கொள்ளலாம். அதேபோல, மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள் திருக்கோயில்களுக்கு செல்லும்போது மின்கல ஊா்தி, மற்றும் சாய்தளத்தில் சக்கர நாற்காலியில் அழைத்துச் செல்வதற்கும் தரப்பட்டுள்ள தொலைபேசி எண் சேவையையும் பெறலாம். இது தவிர செயலியின் மூலம் அன்னதானம், திருப்பணி போன்ற நன்கொடைகளையும் வழங்கலாம்.
- மஹாத்மா காந்தி ஊரக வேலை உறுதி திட்டத்தில், வருகை பதிவேடுகளில் நடக்கும் மோசடிகளை தடுக்க, 'என்.எம்.எம்.எஸ்-ஆப்' எனப்படும் 'மொபைல் போன்' செயலியை மத்திய அரசு அறிமுகப்படுத்தி உள்ளது.
- என்.எம்.எம்.எஸ்., எனப்படும், 'நேஷனல் மொபைல் மானிட்டரிங் சிஸ்டம்' என்ற செயலி வாயிலாக, மஹாத்மா காந்தி ஊரக வேலை உறுதி திட்ட பணியாளர்கள் தங்கள் வருகையை பதிவு செய்யும் வசதி அறிமுகமாகியுள்ளது. இதன்படி, என்.எம்.எம்.எஸ்., செயலியில், தினமும் காலை பணிக்கு வந்த பின்பும், மாலை பணி முடிந்து செல்லும்போதும், பணியிடப் பின்னணியுடன் படம் பிடித்து செயலியில் பதிவேற்றம் செய்வது கட்டாய மாக்கப்பட்டுள்ளது.
- குறைந்தது, 20 பேருக்கு மேல் வேலை செய்யும் பணியிடங்களில் இந்த செயலியை கட்டாயம் பயன்படுத்த வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது