TODAY CURRENT AFFAIRS IN TAMIL 24.12.2023:

TNPSC PAYILAGAM
By -
0


  TODAY CURRENT AFFAIRS IN TAMIL 24.12.2023:


மேட்ரீட் மெட்ரோ :

ஸ்பெயின் நாட்டில் உள்ள மேட்ரீட் மெட்ரோ 1919-ம் ஆண்டு திறக்கப்பட்டது. மிகுந்த சிக்கலான காலக் கட்டத்தில் கட்டப்பட்ட இந்த மெட்ரோ 104 ஆண்டுகளைக் கடந்துள்ளது. முதல் உலகப் போர் மற்றும் ஸ்பானிஷ் காய்ச்சல் உருவான காலக் கட்டத்தில் இந்த மெட்ரோவுக்கான கட்டுமானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இரண்டு மூன்று ஆண்டுகளிலேயே கட்டி முடிக்கப்பட்ட இந்த ரயில் தொடர், பொறியியல் அதிசயம் என அப்போது புகழப்பட்டது.

தேசிய நெடுஞ்சாலைகள் மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாட்டு நிறுவனம் :

2021-22-ஆம் நிதியாண்டில் ரூ.14,953 கோடி மதிப்பிலான பணிகள் மேற்கொள்ளப்பட்ட நில், 2022-23-ஆம் நிதியாண்டில் அதன் மதிப்பு ரூ. 19,309 கோடியாக உயா்ந்துள்ளதாக தேசிய நெடுஞ்சாலைகள் மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாட்டு நிறுவனம் (என்எச்ஐடிசிஎல்) தெரிவித்தது. 

மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் மத்திய பொதுத்துறை நிறுவனமான என்எச்ஐடிசிஎல் அதன் வருடாந்திர நிதி முடிவுகளை வெளியிட்டது. 

அதில், ‘2021-22-ஆம் நிதியாண்டில் ரூ.14,953 கோடி மதிப்பிலான பணிகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில் 2022-23-ஆம் நிதியாண்டில் அதன் மதிப்பு ரூ.19,309 கோடியாக உயா்ந்துள்ளது. 2021-22-ஆம் நிதியாண்டில் ரூ.332.53 கோடியாக இருந்த வருவாய், 2022-23-இல் ரூ.474.22 கோடியாகவும், வரிக்கு பிந்தைய லாபம் (பிஏடி) 2021-22-இல் ரூ.113.29 கோடியிலிருந்து 2022-23-இல் ரூ.224.70 கோடியாக அதிகரித்துள்ளது’ என தெரிவிக்கப்பட்டது.

அந்நியச் செலாவணி கையிருப்பு :

ரிசா்வ் வங்கியின் புள்ளிவிவரங்கள் தெரிவிப்பதாவது:15/12/2023-ஆம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில் நாட்டின் அந்நியச் செலாவணி கையிருப்பு 911.2 கோடி டாலா் உயா்ந்து 61,597.1 கோடி டாலராக உள்ளது.டிச. 8-ஆம் தேதியுடன் நிறைவடைந்த முந்தைய வாரத்தில் அது 281.6 கோடி டாலா் உயா்ந்து 60,685.9 கோடி டாலராக இருந்தது.

அக்டோபா் 2021-இல் நாட்டின் அந்நியச் செலாவணி கையிருப்பு 64,500 கோடி டாலரை எட்டியது. உலகளாவிய பொருளாதாரச் சூழல்களால் ஏற்படும் அழுத்தங்களுக்கு இடையே ரூபாய் மதிப்பைப் பாதுகாப்பதற்காக அந்நியச் செலாவணி கையிருப்பை ரிசா்வ் வங்கி பயன்படுத்துவதால் அது குறைந்து வந்தது.

கடந்த 8/12/2023-ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் அந்நியச் செலாவணி கையிருப்பின் முக்கிய அங்கமான அந்நிய நாணய சொத்துகள் 834.9 கோடி டாலா் உயா்ந்து 54,504.8 கோடி டாலராக உள்ளது.டாலா் அல்லாத யூரோ, பவுண்ட், யென் போன்ற பிற செலாவணிகளின் கையிருப்பில் ஏற்படும் ஏற்ற இறக்கங்கள் டாலா் மதிப்பில் கணக்கிடப்படுவது அந்நிய நாணய சொத்துகள் ஆகும்.மதிப்பீட்டு வாரத்தில் நாட்டின் தங்கம் கையிருப்பு 44.6 கோடி டாலா் அதிகரித்து 4,757.7 கோடி டாலராக உள்ளது.சிறப்பு வரைதல் உரிமைகள் (எஸ்டிஆா்) 13.5 கோடி டாலா் அதிகரித்து 1,832.3 கோடி டாலராக உள்ளது.சா்வதேச நிதியத்தில் நாட்டின் கையிருப்பு 18.1 கோடி டாலா் அதிகரித்து 502.3 கோடி டாலராக உள்ளது என்று ரிசா்வ் வங்கியின் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

அனல் மின் உற்பத்தி:2023

கடந்த ஏப்ரல் முதல் நவம்பா் வரையிலான நடப்பு நிதியாண்டின் முதல் 8 மாதங்களில் உள்நாட்டு நிலக்கரியைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்படும் அனல் மின் உற்பத்தி 77,910 கோடி யூனிட்டுகளாக உள்ளது.

இது, கடந்த 2022-23-ஆம் நிதியாண்டின் இதே காலகட்டத்தோடு ஒப்பிடுகையில் 8.38 சதவீதம் அதிகமாகும். அப்போது நாட்டின் உள்நாட்டு நிலக்கரி அனல் மின் உற்பத்தி 71,883 கோடி யூனிட்டாக இருந்தது.

மதிப்பீட்டு மாதங்களில் நாட்டின் ஒட்டுமொத்த மின் உற்பத்தி 7.71 சதவீதம் உயா்ந்துள்ளது.2022-23-ஆம் நிதியாண்டின் ஏப்ரல்-நவம்பா் காலகட்டத்தோடு ஒப்பிடுகையில், நடப்பு நிதியாண்டின் அதே காலகட்டத்தில் நிலக்கரி அடிப்படையிலான ஒட்டுமொத்த மின் உற்பத்தி 11.19 சதவீதம் அதிகரித்துள்ளது.

இந்திய மகளிரணி சாதனை:

ஆஸ்திரேலிய மகளிரணி இந்தியாவுக்கு சுற்றுப் பயணம் செய்து 1 டெஸ்ட், 3 ஒருநாள், 3 டி20 போட்டிகளில் விளையாடவிருக்கிறது. இதில் டெஸ்டில் இந்திய அணி அபார வெற்றி பெற்றுள்ளது. ஏற்கெனே இங்கிலாந்து மகளிா் அணிக்கு எதிராக நடைபெற்ற ஒரு டெஸ்ட் ஆட்டத்தில் அபார வெற்றி கண்டது இந்திய அணி. அதன் தொடா்ச்சியாக பலம் வாய்ந்து ஆஸி. மகளிா் அணியை மும்பையில் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது.

இதன் மூலம் ஆஸ்திரேலிய மகளிருக்கு எதிரான முதல் டெஸ்ட் தொடரினை வென்று இந்திய மகளிரணி சாதனை படைத்துள்ளது. இதற்கு முன்பு நடைபெற்ற 10 போட்டிகளில் ஆஸி. 4 வெற்றியும் 6 டிராவும் நடந்துள்ளது. இதுதான் இந்தியாவின் முதல் வெற்றி என்பது குறிப்பிடத்தக்கது.

இந்திய மல்யுத்த சம்மேளனத்தை இடைநீக்கம்:

மறு அறிவிப்பு வரும்வரை இந்திய மல்யுத்த சம்மேளனத்தை இடைநீக்கம் செய்வதாக மத்திய விளையாட்டு அமைச்சகம் தெரிவித்துள்ளது. 

புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட இந்திய மல்யுத்த சம்மேளன நிர்வாகிகள் மல்யுத்த வீரர்களுக்கான முறையான அறிவிப்புகளைக் கூட வழங்காமல் 15 வயதுக்குட்பட்டோர் மற்றும் 20 வயதுக்குட்பட்டோருக்கான போட்டிகளை ஏற்பாடு செய்வதாக வெளியிட்ட அவசர அறிவிப்பைத் தொடர்ந்து இந்த இடைநீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் புதிய தலைவராக பிரிஜ் பூஷண் சிங்கின் நெருங்கிய ஆதரவாளரான சஞ்சய் சிங் தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு ஏராளமான மல்யுத்த வீரர்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கு பதக்கம் வென்றுதந்த சாக்‌ஷி மாலிக் மல்யுத்தத்தில் இருந்தே விலகுவதாக கண்ணீர்மல்க அறிவித்தார். ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற மற்றொரு மல்யுத்த வீரரான பஜ்ரங் புனியா தனக்கு வழங்கப்பட்ட பத்மஸ்ரீ விருதை திருப்பியளிப்பதாக தெரிவித்தார்.

இருதரப்பு டி20 தொடர்களில் அடிக்கப்பட்ட அதிக சிக்ஸர்கள் :

இதுவரை நடைபெற்ற சர்வதேச டி20 போட்டிகளில் 97 சிக்ஸர்கள் மட்டுமே அடிக்கப்பட்டிருந்தது. ஆனால் மேற்கிந்தியத் தீவுகள்- இங்கிலாந்து இணைந்து 120 சிக்ஸர்களை அடித்து சாதனை படைத்துள்ளார்கள். அதிலும் மே.இ.தீவுகள் அணி 64 சிக்ஸர்களும், இங்கிலாந்து 56 சிக்ஸர்களும் அடித்துள்ளார்கள்.

இருதரப்பு டி20 தொடர்களில் அடிக்கப்பட்ட அதிக சிக்ஸர்கள் விவரம்: 

  1. மே.இ.தீவுகள்- இங்கிலாந்து - 120 (2023) 
  2. பல்கேரியா- செர்பியா - 97 (2022) 
  3. மே.இ.தீவுகள்- இங்கிலாந்து- 96 (2022) 
  4. நியூசிலாந்து - இங்கிலாந்து - 94 (2019) 
  5. பஹ்ரைன் - குவைத் - 91 (2022)

முக்கியமான நாட்கள் மற்றும் தேதிகளின்

டிசம்பர் 24 - தேசிய நுகர்வோர் உரிமைகள் தினம்

தேசிய நுகர்வோர் உரிமைகள் தினம் ஆண்டுதோறும் டிசம்பர் 24 அன்று நாடு முழுவதும் ஒரு குறிப்பிட்ட கருப்பொருளுடன் அனுசரிக்கப்படுகிறது. 1986 ஆம் ஆண்டின் நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம் இந்த நாளில் ஜனாதிபதியின் ஒப்புதலைப் பெற்றது. 

நாட்டில் நுகர்வோர் இயக்கத்தில் இது ஒரு வரலாற்று மைல்கல்லாக கருதப்படுகிறது. இந்த நாள் நுகர்வோர் உரிமைகள் மற்றும் பொறுப்புகள் பற்றிய விழிப்புணர்வை வழங்குகிறது.


நடப்பு விவகார வினாடிவினா - டிசம்பர், 2023/Current Affairs Quiz - December, 2023

விருதுகள் கௌரவங்கள் 2023 :

MONTH WISE TNPSC GK NOTES IN TAMIL 2023:

LIST OF IMPORTANT DAYS AND DATES IN OCTOBER 2023 IN TAMIL :

Post a Comment

0Comments

Post a Comment (0)