N.PICHAMOORTHI -TNPSC TAMIL NOTES

TNPSC PAYILAGAM
By -
0



ந. பிச்சமூர்த்தி : 

புதுக் கவிதை:தொடர்பான செய்திகள் மேற்கோள்கள் , சிறப்புப் தொடர்கள் மற்றும் எழுதிய நூல்கள்:

ந. பிச்சமூர்த்தி : அண்மைய தமிழ் இலக்கிய முன்னோடிகளுள் ஒருவராகக் கருதப்படுபவர். தமிழ்ப் புதுக்கவிதையின் தந்தை என்று அழைக்கப்படுபவர் பிச்சமூர்த்தி. தத்துவார்த்தம் பிணைந்த கதை சொல்லும் பாணியினை தமிழுக்கு அறிமுகப்படுத்தியவர் பிச்சமூர்த்தி. சென்னை சட்டக் கல்லூரியில் வழக்கறிஞர் பட்டம் பெற்றுப் பணியாற்றிய பிச்சமூர்த்தி, இந்து அறநிலையத்துறை அதிகாரியாகவும் பணியாற்றியவர். நவ இந்தியா, சுதேசமித்திரன் ஆகிய இதழ்களில் பணியாற்றியுள்ளார். சுதந்திரச் சங்கு, தினமணி, மணிக்கொடி போன்ற இதழ்களில் தனது படைப்புகளை அளித்துள்ளார். இவரின் படைப்புகள் அனைத்தும் நாட்டுடமையாக்கப்பட்டுள்ளன.

ந பிச்சமூர்த்தி வாழ்க்கைக்குறிப்பு

  • இயற்பெயர் = ந. வேங்கட மகாலிங்கம்
  • புனைபெயர் = ந. பிச்சமூர்த்தி
  • ஊர்  = தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம்
  • தொழில் = 1924 – 1938 வரை வழக்கறிஞர், 1938 – 1954 வரை கோவில் நிருவாக     அலுவலர்.
  • எழுத்துப்பணி = கதைகள், மரபுக்கவிதைகள், புதுக்கவிதைகள், ஓரங்க நாடகங்கள்.
  • காலம் = 15.08.1900 – 04.12.1976
  • புதுக்கவிதையின் இரட்டையர்கள் = பிச்சமூர்த்தி, கு.ப.இராசகோபாலன்(கூறுயவர் = வல்லிக்கண்ணன்)

ந பிச்சமூர்த்தி சிறப்பு பெயர்கள்

  • சிறுகதையின் சாதனை
  • புதுக்கவிதையின் முன்னோடி
  • தமிழ் புதுக்கவிதை இயக்கத்தின் தோற்றுநர்
  • புதுக்கவிதையின் முதல்வர்
  • புதுக்கவிதை இயக்கத்தின் விடிவெள்ளி

புனைப் பெயர்

  • ரேவதி
  • பிச்சு
  • ந.பி

கும்பகோணத்தில் வாழ்ந்த நடேச தீட்சிதர் - காமாட்சியம்மாள் தம்பதியருக்கு நான்காவது குழந்தையாக 1900 ஆகத்து 15 இல் பிச்சமூர்த்தி பிறந்தார். அவருக்குப் பெற்றோர் இட்ட பெயர் வேங்கட மகாலிங்கம். நடேச தீட்சிதர் தமிழ், சமஸ்கிருதம், தெலுங்கு மற்றும் மராட்டி மொழிகளில் ஹரிகதா சொற்பொழிவு செய்யுமளவிற்குத் தேர்ச்சி பெற்றவர். சைவப் புராணப் பிரசங்கங்கள் செய்தவர்.

பிச்சமூர்த்தி கும்பகோணத்தில் தன் பள்ளிப் படிப்பையும் கல்லூரிப் படிப்பையும் முடித்தார். தத்துவத்தில் பட்டம் பெற்று, சென்னை சட்டக் கல்லூரியில் பட்டம் பெற்றார். 1925 முதல் 1938 வரை வழக்கறிஞராகப் பணிபுரிந்தார். 1939 முதல் 1959 வரை இந்து அறநிலையத்துறை அதிகாரியாகப் பணிபுரிந்தார்.

பிச்சமூர்த்தி, நவ இந்தியா பத்திரிகையில் சிறிது காலம் பணியில் இருந்தார். இவரின் எழுத்துக்கள் சுதேசமித்திரன், சுதந்திர சங்கு, தினமணி, மணிக்கொடி போன்ற பத்திரிகைகளில் வெளிவரத் தொடங்கின.

இந்தத் தத்துவ மரபில் வாழ்ந்து வந்த செழுமையின் உள்தூண்டல் அவரது படைப்பு மனோபாவத்தின் அடிநாதமாக இழையோடியது. "இலக்கியமும் நம்மைப் போல நம்மையறியாமலே - ஒருவேளை நம்மையும் மீறி - உந்தித் தள்ளும் சக்தி அல்லது எதுவோ..." என நம்பினார். இந்த நம்பிக்கையின் சோதனை முயற்சிகளாகவே பிச்சமூர்த்தியின் படைப்புகள் வெளிப்பட்டன.

படைப்புகள்

சிறுகதை


·        பதினெட்டாம்பெருக்கு (1944)

·        ஜம்பரும் வேஷ்டியும் (1947)

·        மோகினி (1951)

·        குடும்ப ரகசியம் (குறும்புதினம்) (1959)

·        பிச்சமூர்த்தியின் கதைகள் (1960)

·        மாங்காய் தலை (1961)

·        இரட்டை விளக்கு (1967)

·        காக்கைகளும் கிளிகளும் (சிறுவர் கதைகள்) (1977)

·        கஞ்சா மடம் (திசம்பர் 2022)

கவிதைத் தொகுப்புகள்


·        காட்டுவாத்து (ஆக.1962)

·        வழித்துணை (1964)

·        குயிலின் சுருதி (1970)

கட்டுரைத்தொகுதி


·        மனநிழல் (1977) (சிறுகதைகள் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது)

நாடகங்கள்

  • காளி (1946)

 பிச்சமூர்த்தி புதுக்கவிதை


·        கிளிக்குஞ்சு

·        பூக்காரி

·        வழித்துணை

·        கிளிக்கூண்டு

·        காட்டுவாத்து

·        காதல் (முதல் புதுக்கவிதை)

·        குயிலின் சுருதி

·        புதுக்குரல்கள்(தமிழின் முதல் புதுக்கவிதை தொகுதி)

·        காதல்(இவரின் முதல் கவிதை)

·        உயிர்மகள்(காவியம்)

·        ஆத்தூரான் மூட்டை

·        பெட்டிக்கடை நாரணன் (புகழ்பெற்ற புதுக்கவிதை)

சிறப்புகள்

  • ந.பிச்சமூர்த்தி இயற்பெயர் ந.வேங்கிட மகாலிங்கம்.
  • இவர் தஞ்சாவூர் மாவட்டத்தில் கும்பகோணத்தில் பிறந்தார்
  • இவரது காலம் 15.08.1900 – 04.12.1976
  • பழைமை மரபு மேலோங்கி இருக்கும்.
  • சிறுகதையின் சாதனை என்று இவரை மதிப்பிடுவர்.
  • “பதினெட்டாம் பெருக்கு” இவரது பங்களிப்பு
  • ந.பிச்சமூர்த்தியின் கவிதை நூல்கள் 20-ம் நூற்றாண்டின் தற்கால இலக்கிய துறைக்கு பல புதிய சிறப்புகளைச் சேர்த்திருக்கின்றன.
  • வசன கவிதை, புதுக்கவிதை வரலாற்றில் பாரதிக்கு அடுத்த முன்னோடி.
  • புதுக்கவிதையைத் இலகு கவிதை, கட்டற்ற கவிதை, விலங்குகள் இலாக் கவிதை, கட்டுக்குள் அடங்காக் கவிதை என்று பல்வேறு பெயர்களில் குறிப்பிடுகின்றன.
  • மணிக்கொடியின் முக்கியமான மூத்த எழுத்தாளர்களுள் ஒருவர்
  • தமிழ் இலக்கிய பரப்பின் குறிப்பிடத்தக்க ஆளுமையாகத் திகழ்ந்தன ந.பிச்சமூர்த்தி அவர்களின் படைப்புகள்.
  • இவர் 1924 – 1938 வரை வழக்குரைஞராக பணியாற்றினார். 1938 – 1954 வரை கோவில் நிருவாக அலுவலராக பணியாற்றினார்.
  • இவருடைய எழுத்துப்பணி கதைகள், மரபுக்கவிதைகள், புதுமைக்கவிதைகள், ஓரங்க நாடகங்கள்
  • “தமிழ்ப் புதுக்கவிதையின் தந்தை” என்று அழைக்கப்படுபவர்
  • “ஹனுமான், நவ இந்தியா” ஆகிய இதழ்களின் துணை ஆசிரியராக இருந்தார்.
  • இவரின் முதல் சிறுகதை “ஸயன்ஸூக்பலி” என்பதாகும்.
  • “பிக்ஷூ, ரேவதி” என்னும் புனைப்பெயரில் படைப்புகளை வெளியிட்டவர்.
  • தமிழ்ப் புதுக்கவிதையின் தந்தை என்று அழைக்கப்படுபவர் பிச்சமூர்த்தி.
  • தத்துவார்த்தம் பிணைந்த கதை சொல்லும் பாணியினை தமிழுக்கு அறிமுகப்படுத்தியவர் பிச்சமூர்த்தி.
  • பிச்சமூர்த்தி, ஸ்ரீராமானுஜர் என்னும் திரைப்படத்தில் ஆளவந்தார் வேடமேற்று நடித்திருக்கிறார்.
  • ந.பிச்சமூர்த்தியின் முதல் கவிதை = சயின்சிற்கு பலி (விஞ்ஞானத்திற்கு பலி).
  • ந. பிச்சமூர்த்தியின் முதல் புதுக்கவிதை = காதல்.
  • இவரின் புகழ்பெற்ற புதுக்கவிதை = பெட்டிக்கடை நாரணன்.

 

மேற்கோள்

வாழ்க்கைப்போர்
முண்டி மோதும் துணிவே இன்பம்
உயிரின் முயற்சியே வாழ்வின் மலர்ச்சி
ஜீவா! விழியை உயர்த்து
சூழ்வின் இருள் என்ன செய்யும்
கழகு பெற்ற வெற்றி நமக்கும் கூடும்


Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn more
Ok, Go it!