TODAY CURRENT AFFAIRS IN TAMIL 29.11.2023

TNPSC PAYILAGAM
By -
0



 TODAY CURRENT AFFAIRS IN TAMIL 29.11.2023 


உத்தரகண்ட் 41 தொழிலாளா்கள் மீட்பு :

உத்தரகண்ட் சில்க்யாரா பகுதியில் கட்டப்பட்டு வந்த சுரங்கப் பாதையில் கடந்த நவ. 12-ஆம் தேதி திடீரென மண்சரிவு ஏற்பட்டது. சுரங்கப் பாதைக்குள் கட்டுமானப் பணியில் ஈடுபட்டிருந்த 41 தொழிலாளா்கள், கடுமையான இடிபாடுகளில் சிக்கிக் கொண்டனா். மீட்புப் பணி 17 நாளாகத் தொடர்ந்து வந்த நிலையில், இறுதி 10 முதல் 12 மீட்டா் மண் மற்றும் இடிபாடுகளை அகற்ற, ‘எலிவளை சுரங்க முறை’ - சுரங்கத் தொழில் பணியாளா்கள் குழு நேரடியாகத் துளையிட்டு குழாயைச் செலுத்தத் திட்டமிடப்பட்டது. “முடிவில் இந்த வெற்றி, இயந்திரங்களைத் தாண்டி மனித உழைப்புக்குக் கிடைத்த ஒன்று. நிபுணத்துவம் பெற்ற எலி-வளை சுரங்கத் தொழில் பணியாளர்களாலேயே 12 மீட்டர் தொலைவுக்கு இடிபாடுகள் அகற்றப்பட்டு மீட்பு நடந்துள்ளது” என கார்டியன் நாளிதழ் குறிப்பிட்டுள்ளது.

  • ஆர்னால்டு டிக்ஸ்: நாடு முழுவதும் பெரும் கவனம் பெற்ற மீட்புப் பணி 17 நாள்களாக நீடித்தது. இதில் முக்கிய அங்கம் வகித்தவர், ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த பேராசிரியர் ஆர்னால்டு டிக்ஸ்.சர்வதேச சுரங்கப்பணி மற்றும் நிலத்தடி கட்டுமானங்களின் கூட்டமைப்புத் தலைவராக உள்ளார், ஆர்னால்டு. உலகளவில் அறியப்படுகிற சுரங்கப்பணி வல்லுனரான இவர் சிக்கலான பணிகளை நடைமுறை சாத்தியங்களோடு நிறைவேற்றுவதில் கவனம் செலுத்தக் கூடியவர்.

JR One Kothri Manufacturing Plant:

தமிழ்நாட்டின் பெரம்பலூர் மாவட்டத்தில் தொடங்ப்பட்டுள்ள புதிய காலணி தொழிற்சாலையான JR One Kothri Manufacturing Plant-ஐ தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்துள்ளார்.

54வது சர்வதேச திரைப்பட திருவிழா, கோவா – விருதுகள்:

கோவாவில் நடைபெறும் 54வது சர்வதேச திரைப்பட திருவிழாவில் சிறந்த திரைப்படமாக எண்ட்னஸ் பார்டர் (Endless Borders) தேர்வு செய்யப்பட்டுள்ளது.

பெர்சிய மொழியை சார்ந்த இப்படத்திற்கு தங்க மயில் விருது வழங்கப்பட்டுள்ளது.

காலை உணவுத் திட்டம்-தனியார் நிறுவனத்த்துக்கு ஓராண்டுக்கு ஒப்பந்தம்:

தமிழ்நாட்டில் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் கடந்த ஆண்டு செப்டம்பர் 15 ஆம் தேதி தொடங்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன்படி தமிழ்நாட்டில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 1 முதல் 5 ஆம் வகுப்பு வரையுள்ள மாணவர்களுக்கு பள்ளிகளில் காலை உணவு வழங்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்திற்கு பரவலாக வரவேற்பும் கிடைத்தது. இந்நிலையில், பள்ளி மாணவர்களுக்கான முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தை தனியார் நிறுவனத்த்துக்கு ஓராண்டுக்கு ஒப்பந்த அடிப்படையில் வழங்க சென்னை மாநகராட்சி மாமன்றக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

களையெடுப்பு கொள்கை

ஆக்கிரமிப்பு இனங்களை களையெடுப்பதற்கான கொள்கையை வகுத்துள்ள முதல் மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது.

தெலங்கானாவில் முதன்முறையாக ஆண் வாக்காளர்களைவிட பெண் வாக்காளர்கள் அதிகம்:

தெலங்கானாவில் முதன்முறையாக ஆண் வாக்காளர்களைவிட பெண் வாக்காளர்கள் அதிகம் உள்ளனர். தெலங்கானா சட்டப்பேரவைக்கு 30.11.23 ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தல் பிரசாரங்கள் நேற்றுடன் ஓய்ந்த நிலையில் தேர்தலுக்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. தெலங்கானாவில் இறுதி வாக்காளர் பட்டியலின்படி பெண் வாக்காளர்கள் 1,63,01,705 பேர். ஆண் வாக்காளர்கள் 1,62,98,418 பேர். மூன்றாம் பாலினத்தவர் 2,676 பேர். இதையடுத்து முதல்முறையாக இந்த தேர்தலில் ஆண்களைவிட பெண் வாக்காளர்கள் அதிகம் உள்ளனர்.

‘விரைவு சிறப்பு நீதிமன்றங்கள்’:

பாலியல் வன்கொடுமை வழக்குகளில் விரைந்து தீா்ப்பு வழங்கும் சிறப்பு நீதிமன்றங்கள் திட்டத்தை 3 ஆண்டுகள் நீட்டிக்க பிரதமா் மோடி தலைமையில்  நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டதாகத் தெரியவந்துள்ளது. 

குற்றவியல் திருத்தச் சட்டம் 2018-இன் கீழ் 1,023 விரைவு சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்க மத்திய அரசு முடிவெடுத்தது. தில்லியில் நிா்பயா என்ற பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதையடுத்து, இதுபோன்ற வழக்குகளில் விரைவாக குற்றவாளிகளைத் தண்டிக்க அரசு இத்திட்டத்தை அறிமுகப்படுத்தியது. அதில் 389 சிறப்பு நீதிமன்றங்கள் போக்சோ வழக்குகளில் விரைவாக குற்றவாளிகளைத் தண்டிக்க 31 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் தொடங்கப்பட்டன. இத்திட்டம் நிகழாண்டு மாா்ச் 31-இல் நிறைவடைந்தது

இதையடுத்து முறையாக நிதி ஒதுக்கப்பட்டு மீண்டும் திட்டத்தை தொடர மத்திய சட்ட அமைச்சகம் முயற்சிகள் மேற்கொண்டது. இந்நிலையில் ‘விரைவு சிறப்பு நீதிமன்றங்கள்’ திட்டத்தை 3 ஆண்டுகள் நீட்டிப்பதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியது.

BAPASI:

கவிதா பதிப்பகத்தின் நிறுவனராக சேது சொக்கலிங்கம் தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் சங்கத்தின் (BAPASI) தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

  • BAPASI – Bookseller and Publisher Association of South India
இந்திய ரயில்வே துறை இணைய வாயிலாக ரூ.54 ஆயிரம் கோடி வருவாய்:

இந்திய ரயில்வே துறை இணைய வாயிலாக பயணச்சீட்டு பெரும் முறை மூலம் கடந்த நிதியாண்டில் ரூ.54 ஆயிரம் கோடி வருவாய் ஈட்டியுள்ளதாகத் தெரிவித்துள்ளது. 2020 - 2021ல் கரோனா பெருந்தொற்று காரணமாக வருவாயில் பெரும் சரிவைக் கண்ட இந்திய ரயில்வே இப்போது கடந்த ஆண்டுகளை விட அதிக வருவாயை ஈட்டியுள்ளது. முந்தைய ஆண்டைவிட இந்த ஆண்டு அதிக பயனாளர்கள் இணையவழிச் சேவையைப் பயன்படுத்தியிருப்பதாக ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. கடந்த 2014 - 2015 நிதியாண்டில் ரூ.20,621 கோடியாக இருந்த இணையவழி வருவாய் 2022 - 2023ல் ரூ.54,313 கோடியாக உயர்ந்துள்ளது.

சிறப்பு அந்தஸ்து

பீகார் மாநில அரசானது பீகாருக்கு சிறப்பு அந்தஸ்து கோரி தீர்மானமொன்றை நிறைவேற்றி இருக்கிறது.

சிறப்பு அந்தஸ்து என்பது கேட்கில் பார்முலா மூலம் கொண்டு வரப்பட்டு 1969-ல் 5வது நிதிகமிஷனால் உருவாக்கப்பட்டது.

இந்தியாவும் அமெரிக்காவும் இணைந்து புதிய செயற்கைக்கோளை விண்ணுக்கு அனுப்ப உள்ளதாகத் தகவல்:

இந்தியாவும் அமெரிக்காவும் இணைந்து புதிய செயற்கைக்கோளை விண்ணுக்கு அனுப்ப உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.இந்த செயற்கைக்கோளுக்கு நாசா-இஸ்ரோ சின்தடிக் அபெச்சர் ரேடார் (NASA-ISRO Synthetic Aperture Radar) எனப் பெயர் சூட்டியுள்ளனர். 2024ல் இந்த செயற்கைக் கோள் விண்ணில் ஏவப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த செயற்கைக்கோளுக்கான ஜிஎஸ்எல்வி விண்கலம் தற்போது இஸ்ரோவால் உருவாக்கப்பட்டு வருகிறது.இந்த செயற்கைக்கோள் மூலம் நிலநடுக்கம் போன்ற பேரிடர்களால் நிலத்தில் ஏற்படும் மாற்றங்கள், மலை மற்றும் துருவப்பகுதிகள், கடற்கரைப் பகுதிகள் தொடர்பான தகவல்கள் பெறப்படும்

 பரி ஜத்ரா (Bali Jatra) :

ஒடிசாவில்லுள்ள கட்டாக்கின் மகாநதிக் கரையில் ஆசியாவின் மிகப்பெரிய திறந்தவெளி வருடாந்திர வர்த்தக கண்காட்சியானது பரி ஜத்ரா (Bali Jatra) என்ற பெயரில் நடத்தப்படுகிறது.

Authentic – மெரியம் வெப்ஸ்டர் :

மெய்யான, நேர்மையான, உண்மையான என பொருள்படும் Authentic என்ற வார்த்தையை 2023-ஆம் ஆண்டிற்கான சிறந்த வார்த்தையாக மெரியம் வெப்ஸ்டர் அறிவித்துள்ளது.

இங்கிலாந்து – பன்றி காய்ச்சல் :

இங்கிலாந்து நாட்டில் A(H1N2)v வகை பன்றி காய்ச்சல் முதன் முறையாக கண்டறியப்பட்டது.

தேசிய ஹாக்கிசாம்பியன்ஷிப் போட்டி /National Hockey Championship Tournament

சென்னையில் நடைபெற்ற தேசிய ஹாக்கி சாம்பியன்ஷிப் போட்டியில் 4வது முறையாக பஞ்சாப் அணியானது முதலிடத்தை பிடித்துள்ளது.

அடுத்தடுத்த இடங்கள் முறைே ஹரியானா, தமிழ்நாடு போன்ற மாநிலங்கள் பிடித்துள்ளன

சர்வதேச யோகா போட்டி:

நேபாளத்தில் நடைபெற்ற சர்வதேச யோகா போட்டியில் அவிநாசி மாணவர்கள் சாம்பியன் பட்டத்தை பெற்று சாதனை படைத்துள்ளனர். கடந்த ஆகஸ்ட் மாதம் கோவாவில் நடைபெற்ற தேசிய அளவிலான யோகா போட்டியில், அவிநாசியை சேர்ந்த ஆர். தக்ஷனா (8), டி. பவிஷ்னா (10), டிம். சபரிஸ்(11) ஆகியோர் பங்கேற்று தமிழகம் சார்பில் சாம்பியன் பட்டத்தை பெற்றனர். இதையடு்த்து, இவர்கள் 3 பேரும், நேபாளத்தில் நவம்பர் 24-ஆம் தேதி நடைபெற்ற சர்வதேச யோகா போட்டியில் பங்கேற்று, இந்தியா சார்பில் சாம்பியன் பட்டத்தை வென்றனர்.


LIST OF IMPORTANT DAYS AND DATES IN NOVEMBER 2023 IN TAMIL 

நவம்பர் 29 - பாலஸ்தீன மக்களுடன் சர்வதேச ஒற்றுமை தினம்

ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 29 அன்று, பாலஸ்தீன மக்களுடனான சர்வதேச ஒற்றுமை தினம் அனுசரிக்கப்படுகிறது. 1977 இல் 32/40 பி தீர்மானம் நிறைவேற்றப்பட்டதன் மூலம், பொதுச் சபை இந்த நாளை பாலஸ்தீனிய மக்களுடனான சர்வதேச ஒற்றுமை தினமாக நியமித்தது.நவம்பர் 29, 1947 அன்று பாலஸ்தீனப் பிரிவினை குறித்த 181 (II) தீர்மானத்தை சட்டமன்றம் ஏற்றுக்கொண்டது.

நவம்பர் 29 - சர்வதேச ஜாகுவார் தினம்

ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 29ம் தேதி சர்வதேச ஜாகுவார் தினமாக கொண்டாடப்படுகிறது. வட அமெரிக்காவின் மிகப்பெரிய காட்டுப் பூனை, நிலையான வளர்ச்சியின் சின்னமாகவும், பல்லுயிர் பாதுகாப்பிற்கான குடை இனமாகவும், மத்திய மற்றும் தென் அமெரிக்காவின் வளமான கலாச்சார பாரம்பரியத்தின் ஒரு பகுதியாகவும் மதிக்கப்படுகிறது.


LIST OF IMPORTANT DAYS AND DATES IN OCTOBER 2023 IN TAMIL :

SUMMITS AND CONFERENCES 2023 IN TAMIL:

  1. SUMMITS AND CONFERENCES JUNE 2023 IN TAMIL
  2. SUMMITS AND CONFERENCES JULY 2023 IN TAMIL
  3. SUMMITSAND CONFERENCES AUGUST 2023 IN TAMIL
  4. SUMMITSAND CONFERENCES SEPTEMBER 2023 IN TAMIL
  5. SUMMITS AND CONFERENCES - OCTOBER 2023 IN TAMIL

Post a Comment

0Comments

Post a Comment (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn more
Ok, Go it!