TODAY CURRENT AFFAIRS IN TAMIL 23.11.2023

TNPSC PAYILAGAM
By -
0



 TODAY CURRENT AFFAIRS IN TAMIL 23.11.2023 


விளக்கம் கேட்கும் உலக சுகாதார நிறுவனம்:

வடக்கு சீனப் பகுதிகளில், இன்ஃப்ளூயன்ஸா போன்ற வைரஸ் காய்ச்சல் வேகமாகப் பரவி வருகிறது. அக்டோபர் மாதம் மத்தியில் தொடங்கி தற்போது வரை வேகமாகப் பரவி வருகிறது இந்த காய்ச்சல். இதையடுத்து, சீனாவில் பரவி வரும் காய்ச்சல் மற்றும் சிறார்களிடையே பரவி வரும் தொற்று குறித்து விரிவான தகவல்களை அளிக்குமாறு சீனாவுக்கு அதிகாரப்பூர்வ கோரிக்கையை உலக சுகாதார நிறுவனம் வைத்துள்ளது.

அடையாறு கேட் ஹோட்டல் :

அடையாறு கேட் ஹோட்டல் என்று புகழ்பெற்ற நட்சத்திர விடுதி, 2015ஆம் ஆண்டு கிரௌன் பிளாசா என்று பெயர்மாற்றம் செய்யப்பட்ட நிலையில், அது டிசம்பர் 20ஆம் தேதியுடன் தனது சேவையை நிறுத்திக்கொள்ளவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இன்டர்கான்டினென்ட்டல் ஹோட்டல்ஸ் குரூப் (ஐஎச்ஜி) என்ற நிர்வாகத்தின் கீழ் செயல்பட்டு வந்த அடையாறு கேட் ஹோட்டல் சென்னையின் முக்கிய அடையாளங்களில் ஒன்றாக விளங்கியது. 

தமிழக முன்னாள் ஆளுநர் ஃபாத்திமா பீவி  காலமானார்:

தமிழக முன்னாள் ஆளுநர் ஃபாத்திமா பீவி உடல்நலக் குறைவால் 23.11.2023 காலமானார். அவருக்கு வயது 96. காலமான ஃபாத்திமா பீவி, உச்ச நீதிமன்றத்தின் முதல் பெண் நீதிபதி என்ற பெருமையைப் பெற்றவர். இவர் கடந்த 1997 முதல் 2001 வரை தமிழக ஆளுநராக பதவி வகித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. நாடு முழுவதும், நீதித்துறையில் பெண்களின் முன்னேற்றத்துக்கு முன்னோடியாகத் திகழ்ந்தவர் ஃபாத்திமா பீவி. நீதித்துறையில் உயர் பதவியை அடைந்து, அதில் தனது தனி முத்திரையையும் பதித்தவர். அதோடு, தமிழக ஆளுநராக பதவி வகித்து, சிறப்பான பணியை ஆற்றினார். 

கேரள மாநிலம் பண்டலம் பகுதியைச் சேர்ந்தவர் ஃபாத்திமா பீவி. பத்தனம்திட்டாவில் பள்ளிப்படிப்பை முடித்தவர், திருவனந்தபுரத்தில் உள்ள பல்கலைக்கழகத்தில் அறிவியலில் பட்டம் பெற்றார்.

பொய் தகவல்கள் குறித்த விழிப்புணா்வு -‘செக் தி ஃபேக்ட்ஸ்’

பொய்யான தகவல்கள் பரப்பப்படுவதைத் தடுக்கவும், பயன்பாட்டை பாதுகாப்பானதாக மாற்றவும் ஒரு மாத விழிப்புணா்வு பிரசாரத்தை வாட்ஸ்ஆப் தொடங்கி உள்ளது. 

வாட்ஸ்ஆப்பில் பிறரால் அனுப்பப்படும் தகவல்களின் உண்மைத் தன்மையை உறுதி செய்யாமல் பகிரப்படுவதால் பொய் தகவல்கள் வேகமாக பரவுகின்றன. இது பல்வேறு நேரங்களில் கலவரம், மோதல்களுக்கு வழிவகுத்து விடுகின்றன. இதைத் தடுக்க மெட்டா நிறுவனம் தனது வாட்ஸ்ஆப் செயலியில் பரவும் தகவலைகளை உறுதி செய்ய வாட்ஸ்ஆப் சேனல்ஸில் ‘செக் தி ஃபேக்ட்ஸ்’ எனும் புதிய சேவையை அறிமுகம் செய்துள்ளது. பயனா்கள் தங்களுக்கு சந்தேகமான தகவல்களை இதில் பதிவிட்டு உண்மைத் தன்மையை தெரிந்து கொள்ளலாம். இதற்காக உண்மையான தகவல்களை சோதிக்கும் தனியாா் நிறுவனங்களை வாட்ஸ்ஆப் தனது சேனல்ஸில் இணைத்துள்ளது.

இந்தியாவில் அந்நிய நேரடி முதலீடு ஏப்ரல்-செப்டம்பரில் 2023 :

தொழில் மற்றும் உள்நாட்டு வணிக மேம்பாட்டுத் துறை வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்கள் தெரிவிப்பதாவது: கடந்த ஏப்ரல் முதல் செப்டம்பா் வரையிலான நடப்பு நிதியாண்டின் முதல் அரையாண்டில் இந்தியாவில் மேற்கொள்ளப்பட்ட அந்நிய நேரடி முதலீடு 2,048 கோடி டாலராக உள்ளது. இது, கடந்த 2022-23-ஆம் நிதியாண்டின் முதல் 6 மாதங்களோடு ஒப்பிடுகையில் 24 சதவீதம் குறைவாகும். அப்போது இந்தியாவில் 2,691 கோடி டாலா் அந்நிய நேரடி முதலீடு மேற்கொள்ளப்பட்டிருந்தது.

மதிப்பீட்டு அரையாண்டில் அந்நிய நேரடி முதலீடுகளை ஈா்த்ததில் மகாராஷ்டிரம் முதலிடம் பிடித்தது.

KEY POINTS : Foreign Direct Investment in India April-September 2023 

பெங்களூரில் முதன்முறையாக கம்பளா போட்டி :

துளுநாடு எனப்படும் காசா்கோடு முதல் மரவந்தே வரை கடற்கரை பகுதியில் நடத்தப்பட்டு வந்த கம்பளா (எருமை மாடு விரட்டும்) போட்டி, முதன்முறையாக பெங்களூரில் நவ. 25, 26-ஆம் தேதிகளில் நடைபெற இருக்கிறது. 

கா்நாடகத்தின் கடலோரப் பகுதிகளில் துளு மொழியைப் பேசும் மக்கள் வாழும் காசா்கோடு முதல் மரவந்தே கடற்கரை பகுதி வரை துளுநாடு என்று அழைப்பது வழக்கம். அப்பகுதிகளில், வயற்காட்டில் சேற்றில் எருமை மாடுகளை விரட்டும் ‘கம்பளா’ போட்டி மிகவும் பிரபலம். 200 ஆண்டுகளுக்கு மேலாக நடத்தப்பட்டு வரும் இப்போட்டிக்கு வனவிலங்கு துன்புறுத்தல் தடைச்சட்டத்தின் கீழ் சில ஆண்டுகளுக்கு முன் தடைவிதிக்கப்பட்டது. அதன்பிறகு, மத்திய அரசு அளித்த விலக்கின் காரணமாக, இப்போட்டியை நடத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

வட கொரியாவுடனான ஒப்பந்தம்: தென் கொரியா விலகல் :

தங்களது எதிா்ப்பையும் மீறி உளவு செயற்கைக்கோளை வட கொரியா வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியதைக் கண்டித்து, அந்த நாட்டுடன் மேற்கொண்டிருந்த சமாதான ஒப்பந்தத்தின் சில அம்சங்களிலிருந்து தென் கொரியா விலகியுள்ளது. இது குறித்து அந்த நாட்டு தேசிய பாதுகாப்புக் கொள்கைத் துறை அமைச்சக இணையமைச்சா் ஹியோ டயே-கியூன் கூறியதாவது:

உளவு செயற்கைக்கேளை விண்ணில் நிலைநிறுத்தியுள்ளதன் மூலம் வட கொரியா பிராந்தியப் பதற்றத்தை அதிகரித்துள்ளது. மேலும் தென் கொரிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. இதனைக் கண்டித்து, பிராந்திய பதற்றத்தைக் குறைப்பதற்காக வட கொரியாவுடன் மேற்கொண்டுள்ள ஒப்பந்தத்தின் சில அம்சங்களிலிருந்து விலகுகிறோம் என்றாா் அவா். சா்வதேச நாடுகளால் தனிமைப்படுத்தப்பட்டுள்ள வட கொரியா, சொந்த உளவு செயற்கைக்கோளை விண்ணில் செலுத்த ஏற்கெனவே இரு முறை முயற்சிகள் மேற்கொண்டு தோல்வியடைந்தது. இந்த நிலையில், 3-ஆவதாக  மேற்கொண்ட இதற்கான முயற்சி வெற்றியடைந்ததாக வட கொரியா அறிவித்தது.

அமெரிக்காவில் சட்டவிரோத குடியேற்றம்: இந்தியா்கள் 3-ஆவது இடம்:

அமெரிக்காவின் வாஷிங்டனில் உள்ள ‘ப்யூ’ ஆய்வு மையம் தெரிவித்துள்ளதாவது: 2019-ஆம் ஆண்டு அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவா்களின் எண்ணிக்கை 1.02 கோடியை எட்டியது. இது 2021-ஆம் ஆண்டு 1.05 கோடியாக அதிகரித்தது. 2021-ஆம் ஆண்டு அமெரிக்க மக்கள்தொகையில் 14.1 சதவீதம் போ் வெளிநாட்டவா்கள். இதில் சட்டவிரோதமாக குடியேறிய 1.05 கோடி போ் என்பது அந்நாட்டின் மொத்த மக்கள்தொகையில் சுமாா் 3 சதவீதமாகவும், மொத்த வெளிநாட்டவா்கள் எண்ணிக்கையில் 22 சதவீதமாகவும் உள்ளது. அதேவேளையில், அந்நாட்டில் சட்டப்படி குடியேறியவா்களின் எண்ணிக்கை 80 லட்சத்துக்கும் அதிகமாக 29 சதவீதம் அதிகரித்துள்ளது. 2021-ஆம் ஆண்டு புள்ளிவிவரங்களின்படி, அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவா்களில் மெக்ஸிகோ நாட்டைச் சோ்ந்தவா்கள் முதலிடத்தில் உள்ளனா். இரண்டாவது இடத்தில் எல் சால்வடாா் நாட்டைச் சோ்ந்தவா்களும், மூன்றாவது இடத்தில் இந்தியா்களும் உள்ளனா்.


LIST OF IMPORTANT DAYS AND DATES IN NOVEMBER 2023 IN TAMIL 

நவம்பர் 23 - ஃபைபோனச்சி தினம்

மத்திய காலத்தின் மிகவும் செல்வாக்கு மிக்க கணிதவியலாளர்களில் ஒருவரான லியோனார்டோ பொனாச்சியை கௌரவிப்பதற்காக ஆண்டுதோறும் நவம்பர் 23 அன்று ஃபைபோனச்சி தினம் அனுசரிக்கப்படுகிறது. அந்த நாளைப் பற்றி விரிவாகப் படிப்போம்.

நவம்பர் 23 - தேசிய எஸ்பிரெசோ தினம்

சக்தி வாய்ந்த பானத்தை ஊக்குவிப்பதற்காக தேசிய எஸ்பிரெசோ தினம் ஆண்டுதோறும் நவம்பர் 23 அன்று அமெரிக்காவில் கொண்டாடப்படுகிறது.

நவம்பர் 23 - தேசிய முந்திரி தினம்

சிய முந்திரி தினம், இந்த ருசியான விதையை அதன் எண்ணற்ற வடிவங்களில் வெளியே சென்று ரசிக்க ஊக்குவிக்கிறது. மேலும், முந்திரி பண்ணை தொழிலாளர்களின் கடின உழைப்பை பாராட்டி தினம் அனுசரிக்கப்படுகிறது.


LIST OF IMPORTANT DAYS AND DATES IN OCTOBER 2023 IN TAMIL :

SUMMITS AND CONFERENCES 2023 IN TAMIL:

  1. SUMMITS AND CONFERENCES JUNE 2023 IN TAMIL
  2. SUMMITS AND CONFERENCES JULY 2023 IN TAMIL
  3. SUMMITSAND CONFERENCES AUGUST 2023 IN TAMIL
  4. SUMMITSAND CONFERENCES SEPTEMBER 2023 IN TAMIL
  5. SUMMITS AND CONFERENCES - OCTOBER 2023 IN TAMIL

Post a Comment

0Comments

Post a Comment (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn more
Ok, Go it!