SITRU ILAKKIYAMGAL -TNPSC TAMIL ILLAKKIYAM NOTES:
பகுதி – (ஆ) – இலக்கியம்
சிற்றிலக்கியங்கள்:
கலிங்கத்துப்பரணி:
கலிங்கத்துப்பரணி தொண்ணூற்றாறு வகைச் சிற்றிலக்கியங்களுள் ஒன்றான பரணி வகையைச் சார்ந்த நூல். தமிழில் முதல்முதலில் எழுந்த பரணி இந்நூலே ஆகும். இது முதலாம் குலோத்துங்க சோழன், அவருடைய படைத்தலைவர் கருணாகரத் தொண்டைமான் ஆகியோரின் கலிங்கப்போர் வெற்றியைப் பேசுகிறது. இந்நூலைத் தென்தமிழ்த் தெய்வப்பரணி என்று ஒட்டக்கூத்தர் புகழ்ந்துள்ளார். கலிங்கத்துப் பரணி கலித்தாழிசையால் பாடப்பெற்றது; 599 தாழிசைகள் கொண்டது.
போர்முனையில் ஆயிரம் யானைகளைக் கொன்று வெற்றிகொண்ட வீரரைப் புகழ்ந்து பாடும் இலக்கியம் பரணி ஆகும்.
ஆசிரியர் குறிப்பு:
- கலிங்கத்துப்பரணி இயற்றியவர் சயங்கொண்டார்
- இவர் திருவாரூர் மாவட்டத்திலுள்ள தீபங்குடி என்னும் ஊரினர்.
- இவர் முதலாம் குலோத்துங்கச் சோழனின் அரசவை புலவராகத் திகழ்ந்தவர்.
- பரணிக்கோர் சயங்கொண்டார் எனப் பலபட்டைச் சொக்கநாதப் புலவர் பாராட்டியுள்ளார்.
- இசையாயிரம் ,உலாமடல் ஆகிய நூல்களையும் இயற்றியுள்ளார்.
- இவரது காலம் கி.பி. பன்னிரண்டாம் நூற்றாண்டு
நூல் குறிப்பு:
- ஆயிரக்கணக்கான யானைகளைப் போரில் கொன்ற வீரனைப் புகழ்ந்து பாடும் இலக்கியத்திற்கு பரணி என்பது பெயர்.
- இது தொன்ணூற்றாறு வகை சிற்றிலக்கியங்களுள் ஒன்று.
- பரணி இலக்கியங்களுள் தமிழில் தோன்றிய முதல் நூல் கலிங்கத்துப்பரணி.
- குலிங்க மன்னன் ஆனந்தபத்மன் மீது முதல் குலோத்துங்கச் சோழன் போர் தொடுத்து வெற்றிப் பெற்றான்.
- அவ்வெற்றியைப் பாராட்டி எழுந்த இந்நூல் தோல்வியுற்ற கலிங்கநாட்டின் பெயரால் அமைந்து உள்ளது.
- இந்நூலில் ஐந்நூற்றுத் தொண்ணூற்றொன்பது தாழிசைகள் 599 உள்ளன.
- சயங்கொண்டாரின் சமகாலப் புலவரான ஒட்டக்கூத்தர் இந்நூலைத் தென்தமிழ்த் தெய்வப்பரணி எனப் புகழ்ந்துள்ளார்.
- முதல் குலோத்துங்கனின் (1078 – 1118) கலிங்க வெற்றியைப் பாடும் நூல்
- வடங்கர் குலவேந்தன் அனந்தவர்மன் (அனந்தபத்மன்) கலிங்கத்தை ஆண்ட மன்னன்.இவன் திறை செலுத்தாததால் குலோத்துங்கன் படையெடுத்தான்.
- சோழர் படைக்குத் தலைமை தாங்கிச் சென்றவன் கருணாகரத் தொண்டைமான்.
- இப்பதின்மூன்றில் கடவுள் வாழ்த்து, கடைதிறப்பு, இராசபாரம்பரியம், அவதாரம் என்ற நான்கு பகுதி தவிர மற்ற ஒன்பது பகுதியும் போர் வருணனைகளே ஆகும்.
- “பரணிக்கோர் ஜெயங்கொண்டார்” என பலட்டடை சொக்கநாதப்புலவர் பாராட்டுகிறார்.
- இந்நூலைத் “தென்தமிழ்த் தெய்வப்பரணி” என்று ஒட்டக்கூத்தர் பாராட்டியுள்ளார்.
- குலோத்துங்கள் இதன் ஒவ்வொரு பாடலுக்கும் ஒரு தங்கத் தேங்காயை பரிசாக அளித்தான்.
- ஆணை ஆயிரம் அமரிடை வென்ற மான வனுக்க வருப்பது பரணி-– பன்னிரு பாட்டியல் நூற்பா
- தோற்றோரின் நாட்டின் பெயரால் பாடுவது – பரணி
பரணி இலக்கியங்கள்:
1. தக்கயாகப் பரணி
2. இரணியன் வதைப் பரணி
3. புhசவதைப் பரணி
4. மோகவதைப் பரணி
5. வங்கத்துப் பரணி
6. திராவிடத்துப் பரணி
7. சீனத்துப் பரணி
8. திருச்செந்தூர் பரணி (சூரன் வதைப் பரணி)
கலிங்கத்துப்பரணி 13 பகுதிகளைக் கொண்டது:
1. கடவுள் வாழ்த்து குலோத்தங்கன் நீடூழி வாழ இறைவனை வாழ்த்தி வணங்கும் பகுதி
2. கடை திறப்பு ஊடல் நீங்கி கதவுகளைத் திறக்கப் பெண்களை வேண்டும் பகுதி
3. காடு பாடியது பாலை நில வெப்பக் கொடுமையைப் பாடிய பகுதி
4. கோயில் பாடியது பாலை நிலத்தில் அமைந்திருக்கும் காளிதேவியின் கோயிலைப் பாடிய பகுதி
5. தேவியைப் பாடியது காளிதேவியின் தோற்றத்தை அடி முதல் முடி வரை வருணிக்கும் பகுதி
6. பேய்களை பாடியது பேய்களைப் பற்றிய வருணனைப் பகுதி
7. இந்திரசாலம் ஒரு முதிய பேய் தேவி முன் இந்திரசால வித்தைகளைச் செய்த காட்டும் பகுதி
8. இராச பாரம்பரியம் குலோத்துங்கனின் குல முன்னோர்கள் பற்றிக் கூறும் பகுதி
9. பேய்முறைப்பாடு பசிக்கொடுமை தாங்காமல் பேய்கள் தேவியிடம் முறையிடும் பகுதி
10. அவதாரம் குலோத்துங்கன் அவதரித்த சிறப்பைக் கூறும் பகுதி
11. காளிக்குக் கூளி கூறியது கலிங்கப்போரை நேரில் பார்த்து வந்த கூளி, அப்போர் பற்றிக் காளிதேவிக்குக் கூறிய பகுதி
12. போர் பாடியது கலிங்கப்போர் பற்றிக் கூறும் பகுதி
13. களம் பாடியது கலிங்கப்போரை எடுத்துரைத்த பேய் போர்களத்தை நேரில் சென்று காணும்படி காளிதேவியை வேண்டியது.
மேற்கோள்
தீயின் வாயின்நீர் பெறினும் உண்பதோர்
சிந்தை கூட வாய்வெந்த உலர்ந்து, செந்
நாயின் வாயின்நீர் தன்னை நீரெனா
நவ்வி நாவினால் நக்கி விக்குமா
நாயின் வாய்நீரை நீர் என மான் நக்கும் எனப் பாலை நிலத்துக் கொடுமையை கூறுகிறது.
“காடுஇதனைக் கடத்தும் எனக் கருமுகிலும்
வெண்மதியும் கடக்க அப்பால்
ஒடிஇளைத்து உடல்வியர்த்த வியர்வுஅன்றோ
உருபுனலும் பனியும் அம்மா”
என்பது பாலை நிலத்து வழியாகக் கடந்து சென்ற கருமுகிலும் நிலவும் வெப்பம் தாங்காது ஓட முகிலிலிருந்த வடியும் வேர்வை மழையாகவும், நிலவின் வேர்வை பனியாகவும் பொழிகிறது என்று பாலையின் கொடுமையைக் கூறுகிறது.
“பொருதடக்கை வாள்எங்கே மணிமார்பெங்கே
போர்முகத்தில் எவர்வரினும் புறங்கொடாத”
பருவயிரத்தோள் எங்கே எங்கே என்று
பயிரவியைக் கேட்பாளைக் காண்மின்காண்மின்”
– இது போர்களக் காட்சியைப் பாடுகிறது
விருந்தினர்க்கு உணவிடுவோரின் முகமலர்ச்சியை உவமையாக்கப்பட்டுள்ளது
“விருந்தினரும் வறியவரும் நெருங்கி யுண்ண
மேன்மேலும் முகமலரும் மேலோர் போல”
No comments:
Post a Comment