SITRU ILAKKIYAMGAL -TNPSC TAMIL ILLAKKIYAM NOTES
பகுதி – (ஆ) – இலக்கியம்
சிற்றிலக்கியங்கள்:
திருக்குற்றாலக்குறவஞ்சி
- ஆசிரியர் – திரிகூடராசப்பக் கவிராயர்
- குறவஞ்சி என்னும் இலக்கிய வகையைச் சார்ந்தது.
- இந்நூல் ஓசை நயம்மிக்க பாடல்கள் ஆகும்.
சங்க இலக்கியங்கள் வீரர்களை, அரசர்களை, வள்ளல்களை, தனிமனிதர்களைப் பாடின. சமய நூல்கள் கடவுளரைப் பாடின சிற்றிலக்கியங்கள் கடவுளரோடு மனிதர்களையும் பாடின. அவற்றுள் இயற்றமிழின் செழுமையையும் இசைத்தமிழின் இனிமையையும் நாடகத்தமிழின் எழிலினையும் ஒருங்கேகொண்டு முத்தமிழ்க் காவியமாகத் திகழ்வது குற்றாலக் குறவஞ்சி.
ஆசிரியர் குறிப்பு:
திரிகூடராசப்பர் அல்லது திரிகூடராசப்பக் கவிராயர் என்பவர் திருக்குற்றாலக் குறவஞ்சி என்ற இசை நாடகத்தின் ஆசிரியர் ஆவார்.
தோற்றம்
திரிகூடராசப்பர் தென்காசியை அடுத்துள்ள மேலகரம் என்னும் ஊரில் ஏறக்குறைய 18-ஆம் நூற்றாண்டில் பிறந்தவராவார்.
குலம்
இவர் சைவ வேளாளர் குலம் என்றும்; திருவாவடுதுறை ஆதீன மடத்தின் தலைவராக இலகியிருந்த மறைத்திரு சுப்பிரமணிய சுவாமிகளின் மரபு வழியினர் என்றும் செப்பேடுகள் மூலம் அறியப்படுகிறது
இளமை
இவர் தம் இளம் பருவத்திலேயே தமிழ்க்கல்வி பயின்று அதில் நன்கு தேர்ச்சி பெற்றார்; செய்யுள் இயற்றும் திறனும் கைவரப் பெற்றார்; அவற்றுள், மடக்கு திரிபு சிலேடை முதலிய சொல்லணிகளும், உவமை முதலிய பொருளணிகளும் சிறப்பப் பாடுதலில் வல்லுநர். விரைந்து பாடும் பேராற்றலும் கொண்டவர். திருக்குற்றாலத்தில் எழுந்தருளியிருக்கின்ற திருக்குற்றால நாதராகிய திரிகூடராசப் பெருமான் மீது பதினான்கு நூல்கள் பாடினார்
படைத்த நூல்கள்
- திருக்குற்றாலக் குறவஞ்சி
- திருக்குற்றாலத் தலபுராணம்
- திருக்குற்றால மாலை
- திருக்குற்றாலச் சிலேடை வெண்பா
- திருக்குற்றால யமக அந்தாதி
- திருக்குற்றால நாதர் உலா
- திருக்குற்றால ஊடல்
- திருக்குற்றாலப் பரம்பொருள் மாலை
- திருக்குற்றாலக் கோவை
- திருக்குற்றாலக் குழல்வாய்மொழி மாலை
- திருக்குற்றாலக் கோமளமாலை
- திருக்குற்றால வெண்பா அந்தாதி
- திருக்குற்றாலப் பிள்ளைத்தமிழ்
- திருக்குற்றால நன்னகர் வெண்பா
நூல் குறிப்பு:
- குறவஞ்சி என்பது ஒரு வகை நாடக (opera) இலக்கிய வடிவமாகும்.
- சிற்றிலக்கிய வகைகளின் ஒன்று.
- முதல் குறவஞ்சி நூல். இயற்றமிழ், இசைத்தமிழ் இரண்டும் கலந்தது.
- பல வகைப் பாக்களும், பாவினங்களும் கலந்த நூல்
- இனிய ஓசை நயமும் சிறந்த கற்பனையும் உடைய நூல்
- இது சிற்றிலக்கிய வகைகளில் ஒன்று. பாட்டுடைத் தலைவன் உலா வரக்கண்ட தலைவி, அத்தலைவன் மீது காதல்கொள்ள, குறவர் குலத்தைச் சேர்ந்த பெண்ணொருத்தி தலைவிக்குக் குறிகூறிப் பரிசில் பெறும் செய்திகளைக் கூறுவதால் குறவஞ்சி என்னும் பெயர் பெற்றது.
- இது குறத்திப்பாட்டு என்றும் வழங்கப்படுகின்றது. பரிசில் பெற்றுவரும் சிங்கிக்கும் சிங்சனுக்கும் இடையிலான உரையாடல் சுவைமிக்கது.
- தமிழ்நாட்டின் தென்காசிக்கு அருகில் அமைந்திருக்கும் குற்றாலம் என்னும் ஊரின் சிறப்பைப் புகழ்ந்து, அங்குள்ள குற்றாலநாதரைப் போற்றிப் பாடப்பட்டது குற்றாலக் குறவஞ்சி.
- இந்நூல், திரிகூட ராசப்பக் கவிராயரின் 'கவிதைக் கிரீடம்' என்று போற்றப்பட்டது.
- மதுரை முத்துவிசயரங்க சொக்கலிங்கனார் விருப்பத்திற்கு இணங்கப் பாடி அரங்கேற்றப்பட்டது. முத்துவிஜயரங்க சொக்கநாத நாயக்கர் காலத்தில் குற்றாலநாதர் (சிவன்) முன்பு அரங்கேற்றப்பட்டது.
- திரிகூட ராசப்பக் கவிராயர் திருநெல்வேலியில் தோன்றியவர். குற்றாலநாதர் கோவிலில் பணிபுரியும் காலத்தில் சைவசமயக் கல்வியிலும் இலக்கிய இலக்கணங்களிலும் தேர்ச்சி பெற்றார்.'திருக்குற்றாலநாதர் கோவில் வித்துவான்' என்று சிறப்புப் பட்டப்பெயர் பெற்றவர் குற்றாலத்தின்மீது தலபுராணம், மாலை, சிலேடை, பிள்ளைத்தமிழ், யமக அந்தாதி முதலிய நூல்களையும் இயற்றியிருக்கின்றார்.
- குறவஞ்சி நாடகம், குறத்தி பாட்டு என்ற பெயரும் உண்டு.
- இது அகநூலாக இருப்பினும் தலைவன் தலைவியின் பெயர்களைக் கூறுகிறது.
- “கடவுள்மாட்டு மானிடப் பெண்கள் நயந்த பக்கம்” என்பதற்குச் சான்றாகத் திகழும் நூல்.
- கட்டினும் கழங்கினும் – என்பதன் அடிப்படையில் தோன்றியது.
- திரிகூடநாதர் பவனிவருதல் – வசந்தவல்லி பந்தாடுதல் – வசந்தவல்லி சிவனைக் கண்டு காதல் கொள்ளதல் – வசந்தவல்லியின் கால் துன்பம் – குறத்தி (சிங்கி) வருதல், மலைவளம் கூறுதல் – வசந்தவல்லிக்கு குறி சொல்லதல் – வசந்தவல்லியின் மகிழ்ச்சி – குறவன் (சிங்கன்) குறத்தியைத் தேடிவருதல் – இருவரும் சந்தித்தல் எனக் கதை செல்கிறது,
மேற்கோள்
“ஒடக் காண்பது பூம்புனல் வெள்ளம்
ஒடுங்கக் காண்பது யோகியர் உள்ளம்
வாடக் காண்பது மின்னார் மருங்கு
வருந்தக் காண்பது சூல்உளைச் சங்கு
போடக் காண்பது பூமியில் வித்து
புலம்பக் காண்பது கிண்கிணிக் கொத்து”
– எனக் குற்றாலத்தின் சிறப்புக் கூறப்படுகிறது.
“வானரங்கள் கனிகொடுத்த மந்தியொடு கொஞ்சம்
மந்திசிந்து கனிகளுக்கு வான்கவிகள் கெஞ்சும்”
– எனக் குற்றால மலைவளம் கூறப்படுகிறது.
“செங்கையில் வண்டு கலின்கலின் என்று செயம்செயம் என்றாட
இடை சங்கதம் என்று சிலம்புபுலம்பொட தண்டை கலந்தாட”
– என வசந்தவல்லி பந்தாடிய சிறப்புக் கூறப்படுகிறது.
“அஞ்சுதலைக்குள் ஆறுதலை வைத்தார் எனது மனத்தின்
அஞ்சுதலுக்கு ஓர் ஆறுதலை வையார்”
– எனச் சொல்லழகு கொண்டுள்ளது.
வானரங்கள் கனிகொடுத்து மந்தியொடு கொஞ்சும்
மந்திசிந்து கனிகளுக்கு வான்கவிகள் கெஞ்சும்
– குற்றாலக் குறவஞ்சி
No comments:
Post a Comment