TODAY CURRENT AFFAIRS IN TAMIL 22.11.2023

TNPSC PAYILAGAM
By -
0

 TODAY CURRENT AFFAIRS IN TAMIL 22.11.2023 :


காலணி, தோல் பொருள்கள் உற்பத்தியில் நாட்டிலேயே முதலிடத்தில் தமிழ்நாடு :

நாட்டிலேயே காலணி மற்றும் தோல் பொருள்கள் உற்பத்தியில் தமிழ்நாடு முதலிடத்தில் இருந்து வருவதாக தொழில் மற்றும் முதலீட்டுத் துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா தெரிவித்துள்ளார். இதுகுறித்து அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா தெரிவித்துள்ளதாவது: தமிழ்நாடு காலணி மற்றும் தோல் பொருள்கள் கொள்கை 2022 வெளியிடப்பட்டதில் இருந்து ரூ.2,250 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி, ரூ.1000 கோடி அளவில் தயாராகி வருகின்றன. கூடுதலாக தோல் மற்றும் தோல் அல்லாத காலணி ஏற்றுமதியில் 48 சதவிகிதம் என்ற பெரும் பங்கைக் கொண்டு நாட்டிலேயே, தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளது.

உலக நுண்ணுயிர் எதிர்ப்பு விழிப்புணர்வு வாரம் :

நவம்பர் 18 முதல் 24 வரை நடைபெற்ற உலக நுண்ணுயிர் எதிர்ப்பு விழிப்புணர்வு வாரத்தின் கருப்பொருள் “நாம் அனைவரும் இணைந்து நுண்ணுயிர் எதிர்ப்பு நோயைத் தடுப்போம்” என்பதாகும். அனைத்து துறைகளும் நுண்ணுயிர் எதிர்ப்பு மருந்துகளை சிறப்புடன் பயன்படுத்தவும், ஒன்றாக இணைந்து செயல்படவும், நுண்ணுயிர் எதிர்ப்பு மருந்துகள் குறித்த விழிப்புணர்வை மேம்படுத்தும் தடுப்பு நடவடிக்கைகளை வலுப்படுத்தவும் இது ஊக்குவிக்கிறது.

உலக பாரம்பரிய நீர்ப்பாசன கட்டமைப்புக்கான சர்வதேச விருது :

150 ஆண்டுகள் பழமையான ஸ்ரீவைகுண்டம் அணைக்கு (தூத்துக்குடி) உலக பாரம்பரிய நீர்ப்பாசன கட்டமைப்புக்கான சர்வதேச விருது வழங்கப்படுகிறது.

இவ்விருதானது சர்வதேச நீர்பாசனம் மற்றும் வடிகால் ஆணையம் சார்பில் வழங்கப்படுகிறது

இந்திரா காந்தி பரிசு 2023:

2022 ஆம் ஆண்டிற்கான அமைதிக்கான இந்திரா காந்தி பரிசு இந்திய மருத்துவ சங்கம் (IMA) மற்றும் இந்திய பயிற்சி பெற்ற செவிலியர்கள் சங்கத்திற்கு வழங்கப்பட்டது. இந்த விருது இந்தியாவில் கோவிட் -19 வீரர்களின் இடைவிடாத முயற்சிகளுக்களுக்காக வழங்கப்பட்டது . இந்த பரிசு 25 லட்ச ரூபாய் ரொக்கப் பரிசைக் கொண்டுள்ளது. அமைதிக்கான இந்திரா காந்தி பரிசு முதன்முதலில் 1986 ஆம் ஆண்டில் வழங்கப்பட்டது.

முதாய புற்றுநோய் பரிசோதனை திட்டம் :

தமிழக சுகாதாரத்துறை சார்பில் ஏற்படுத்தப்பட்ட சமுதாய புற்றுநோய் பரிசோதனை திட்டமானது ராணிப்பேட்டை, திருப்பத்தூர், ஈரோடு, கன்னியாகுமாரி மாவட்டங்களில் சோதனை செய்யப்பபட உள்ளது

இத்திட்டத்தின் 30 வயதிற்கு மேற்பட்ட பெண்களுக்கு மார்பக புற்றுநோய் மற்றும் கர்ப்பப்பை புற்றுநோய் கண்டறியப்பட உள்ளது.

பாட புத்தகங்களில் ‘பாரதம்’ பெயா் மாற்ற என்சிஇஆா்டி குழு பரிந்துரை :

‘பள்ளி சமூக அறிவியல் பாடத் திட்டத்தில் ராமாயணம், மகாபாரதம் இதிகாசங்கள் சோ்க்கப்பட வேண்டும்’ என்று தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக் கவுன்சிலின் (என்சிஇஆா்டி) உயா்நிலைக் குழு பரிந்துரை செய்துள்ளது. மேலும், ‘வகுப்பறை சுவா்களில் அரசியலமைப்பு சட்டத்தின் முன்னுரை எழுதப்பட வேண்டும்’ என்றும் அக் குழு பரிந்துரைத்துள்ளது. 

பள்ளி பாடப் புத்தகங்களில் நாட்டின் பெயா் இந்தியா என்பதை ‘பாரதம்’ என பெயா் மாற்றம் செய்யவும், பண்டைய வரலாறு என்பதற்குப் பதிலாக ‘பாரம்பரிய வரலாறு’ என அறிமுகம் செய்யவும், 3 முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான பாட புத்தகங்களில் ஹிந்து அரசா்களின் வெற்றிகளை இடம்பெறச் செய்யவும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

தேசிய கல்விக் கொள்கை 2020-இன் அடிப்படையில் அனைத்து வகுப்புகளுக்கான பள்ளி பாடத் திட்டங்களையும் என்சிஇஆா்டி புதுப்பித்து வருகிறது. இதற்கென, அந்தந்த பாட நிபுணா்களைக் கொண்ட குழுக்களை என்சிஇஆா்டி அமைத்துள்ளது. அவ்வாறு புதுப்பிக்கப்பட்ட பாடங்களுடன் கூடிய புதிய பாட புத்தகங்கள் அடுத்த கல்வியாண்டு முதல் நடைமுறைக்கு வரும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

234×77 திட்டம் :

தமிழ்நாட்டிலுள்ள அனைத்து பள்ளிகளிலும் உட்கட்டமைப்பை மேம்படுத்த 234×77 திட்டம் செயல்படுத்தப்பட உள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

கேரள மாநிலத்தின் மகளிர் கிரிக்கெட் அணியின் தூதராக நடிகை கீர்த்தி சுரேஷ் :

கேரள மாநிலத்தின் மகளிர் கிரிக்கெட் அணியின் தூதராக நடிகை கீர்த்தி சுரேஷ் நியமிக்கப்பட்டுள்ளார். திருவனந்தபுரத்தில் நடைபெற்ற கேரள கிரிக்கெட் சங்கம்(கேசிஏ) நிகழ்வில், மகளிர் அணிக்கான விளம்பர தூதராக கீர்த்தி சுரேஷ் பொறுப்பேற்றுக் கொண்டார்.

உலகளாவிய வர்த்தக மாநாட்டின் மேற்குவங்க விளம்பர தூதராக :

இந்திய கிரிக்கெட் அணி கேப்டனும், வீரருமான சவுரவங் கங்கூலியை உலகளாவிய வர்த்தக மாநாட்டின் மேற்குவங்க விளம்பர தூதராக மேற்கு வங்க முதல்வர் மம்தாபாரன்ஜி நியமனம் செய்துள்ளார்.

மியான்மருக்கு அத்தியாவசியமற்ற பயணங்களைத் தவிர்க்குமாறு  இந்தியா கேட்டுக்கொள்கிறது :

மியான்மரில் உருவாகி வரும் பாதுகாப்பு சூழ்நிலையை கருத்தில் கொண்டு, மியான்மருக்கு அத்தியாவசியமற்ற பயணங்களைத் தவிர்க்குமாறு இந்தியா தனது நாட்டு மக்களுக்கு அறிவுரை வழங்கியுள்ளது.

மியான்மரில் ஏற்கனவே வசிப்பவர்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கவும், வன்முறையால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு செல்வதை தவிர்க்கவும் அறிவுறுத்தப்படுவதாக வெளியுறவு அமைச்சகம் தனது ஆலோசனையில் தெரிவித்துள்ளது.

மாநிலங்களுக்கு இடையேயான சாலைப் பயணமும் தவிர்க்கப்பட வேண்டும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

உலகளாவிய மீன்வள மாநாடு 2023

குஜராத்தின் அகமதாபாத்தில் உள்ள ஹெபத்பூரில்  நடைபெற்ற உலக மீன்வள மாநாட்டில் 'கோல்' வகை மீனை குஜராத் அரசின் மாநில மீனாக அறிவித்தார் அம்மாநில முதல்வர் பூபேந்திர படேல். 

பல்வேறு உள்நாட்டு மற்றும் உலகளாவிய மீன்வளத்துறை உற்பத்தியாளர்கள் இடையே ஒருங்கிணைப்பை ஏற்படுத்துவது, கூட்டு முயற்சிகளை வளர்ப்பது மற்றும் இந்திய மீன்வளத் துறையை மேம்படுத்துதல் ஆகிய நோக்கங்களுடன், இரண்டு நாள் உலகளாவிய மீன்வள மாநாடு 2023 குஜராத்தின் அகமதாபாத்தில் 21.11.2023 நடைபெற்றது.

கடலோரக் காவல் படை – புதிய தளபதி :

இந்திய கடலோரக் காவல் படையின் கிழக்கு பிராந்திய புதிய தளபதியாக டோனி மைக்கேல் பொறுப்பேற்றுள்ளார்.

ராணுவ உளவு செயற்கைகோளான மலிங்யாங்-1:

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலானது தடை விதித்துள்ள போதிலும் வட கொரியா தன்னுடைய ராணுவ உளவு செயற்கைகோளான மலிங்யாங்-1ஐ விண்ணில் செலுத்தி நிலை நிறுத்தியுள்ளது.

சர்வதேச இலக்கிய விருதான தஹான் பரிசைப் பெற்ற முதல் பெண்மணி :

மொஹாலியைச் சேர்ந்த தீப்தி பாபுதா, பஞ்சாபி மொழியில் புனைகதை புத்தகங்களுக்கான மிகப்பெரிய சர்வதேச இலக்கிய விருதான தஹான் பரிசைப் பெற்ற முதல் பெண்மணி ஆனார். கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியாவில் உள்ள சர்ரேயில் பஞ்சாபி இலக்கியத்திற்கான தஹான் பரிசை வென்றார் தீப்தி பாபுதா. 

பாபுதா தனது சிறுகதைத் தொகுப்பான 'புக் இயோன் சா லைண்டி ஹை' ('பசி இப்படித்தான் சுவாசிக்கிறது')க்காக இந்த விருதைப் பெற்றுள்ளார். கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியாவில் உள்ள சர்ரேயில் உள்ள நார்த்வியூ கோல்ஃப் மற்றும் கன்ட்ரி கிளப்பில் நடைபெற்ற விழாவில் அவருக்கு $25,000 CAD ரொக்க விருதும் கோப்பையும் வழங்கப்பட்டது.

பங்கஜ் அத்வானி 26வது முறையாக உலக பில்லியர்ட்ஸ் சாம்பியன்ஷிப்பை வென்றார்

ஐபிஎஸ்எஃப் உலக பில்லியர்ட்ஸ் சாம்பியன்ஷிப் பட்டத்தை இந்திய வீரர் பங்கஜ் அத்வானி  26வது முறையாக வென்று அசத்தினார் .

இறுதிப் போட்டியில் சகநாட்டவரான சவுரவ் கோத்தாரியை தோற்கடித்தார்.



LIST OF IMPORTANT DAYS AND DATES IN OCTOBER 2023 IN TAMIL :

SUMMITS AND CONFERENCES 2023 IN TAMIL:

  1. SUMMITS AND CONFERENCES JUNE 2023 IN TAMIL
  2. SUMMITS AND CONFERENCES JULY 2023 IN TAMIL
  3. SUMMITSAND CONFERENCES AUGUST 2023 IN TAMIL
  4. SUMMITSAND CONFERENCES SEPTEMBER 2023 IN TAMIL
  5. SUMMITS AND CONFERENCES - OCTOBER 2023 IN TAMIL

Post a Comment

0Comments

Post a Comment (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn more
Ok, Go it!