TODAY CURRENT AFFAIRS IN TAMIL 16.11.2023
‘மிதிலி’ புயல் :
வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி படிப்படியாக வலுப்பெற்று மத்திய மேற்கு வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மையம் கொண்டது. தற்போது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுபெற்றுள்ளது. விசாகபட்டினத்தில் இருந்து 380 கி.மீ. தொலைவில் நிலை கொண்டுள்ளது. வடக்கு-வடகிழக்கு திசையில் நகர்ந்து நவம்பர் 18-ஆம் தேதி காலை வங்கதேசத்தின் மோங்லா - கேபுபரா இடையே சுமார் 55 கி.மீ. வேகத்தில் கரையைக் கடக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. மேலும், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமானது புயலாக வலுப்பெறும் பட்சத்தில், மாலத்தீவு நாடு பரிந்துரைத்த ‘மிதிலி’ என்ற பெயர் சூட்டப்படவுள்ளது.
இதற்கு முன்னதாக உருவான புயல்களுக்கு ஈரான் பரிந்துரைத்த ஹமூன், இந்தியா பரிந்துரைத்த தேஜஸ் ஆகிய பெயர்கள் வைக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
முகம் விருது 2023 :
இந்திய வனத்துறை அதிகாரியாக பணியாற்றி வரும் சுதாராமனுக்கு முகம் விருது 2023 வழங்கப்பட்டுள்ளது
ரயில் பயணங்களில் 95% போ் ஏசி வசதி இல்லாத பெட்டிகளில் பயணம்:
இந்திய ரயில்களில் கடந்த மாதம் வரையிலான நடப்பு நிதியாண்டில் பெரும்பான்மையாக 95.3 சதவீத பயணிகள் குளிா்சாதன (ஏசி) வசதி அல்லாத சாதாரண பெட்டிகளிலும், 4.7 சதவீதம் போ் மட்டுமே குளிரூட்டப்பட்ட (ஏசி) பெட்டிகளிலும் பயணித்துள்ளனா்.
இது தொடா்பாக இந்திய ரயில்வே வெளியிட்ட செய்திக்குறிப்பு: நடப்பு நிதியாண்டில் கடந்த மாதம் வரையிலான 7 மாதத்தில் மொத்தம் 390.2 கோடி பயணிகள் ரயில்களில் பயணித்துள்ளனா். இது கடந்த ஆண்டு எண்ணிக்கையைவிட 41.1 கோடி(11.7 சதவீதம்) கூடுதலாகும். இந்த 41.1 கோடி பயணிகளில் 38 கோடி பயணிகள் பொது மற்றும் படுக்கை வசதி கொண்ட ஏசி வசதி அல்லாத சாதாரண பெட்டிகளிலும், மற்ற 3 கோடி ஏசி பெட்டிகளிலும் பயணித்துள்ளனா். மொத்த 390.2 கோடி பயணிகளில் 95.3 சதவீதமான 372 கோடி பயணிகள் ஏசி வசதி அல்லாத சாதாரண பெட்டிகளிலும், மற்ற 4.7 சதவீதமான 18.2 கோடி பயணிகள் ஏசி பெட்டிகளிலும் பயணித்துள்ளனா்.
பஜாஜ் பைனான்ஸ் நிறுவனம் 2 திட்டங்களில் கடன் வழங்கத் தடை: ரிசர்வ் வங்கி
வங்கி சாரா நிதி நிறுவனமான 'பஜாஜ் பின்சர்வ்' பைனான்ஸ் நிறுவனம் வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு திட்டங்களின் கீழ் கடன் வழங்கி வருகிறது. இந்நிலையில், 'இ-காம்', 'இன்ஸ்டா இஎம்ஐ கார்டு' ஆகிய இரு திட்டங்களின் கீழ் கடன் வழங்க இந்திய ரிசர்வ் வங்கி தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. இது உடனடியாக அமலுக்கு வருவதாகவும் தெரிவித்துள்ளது.
இந்திய ரிசர்வ் வங்கியின் டிஜிட்டல் கடன் வழிகாட்டுதல்களின் தற்போதைய விதிகளை முறையாக கடைப்பிடிக்காததன் காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ரிசர்வ் வங்கி விளக்கம் கூறியுள்ளது.
இரண்டாவது மிகப்பெரிய கிரிக்கெட் மைதானம் :
மதுரை மாவட்டத்தில் கிரிக்கெட் மைதானம் ஒன்று கட்டப்பட்டு வருகிறது.
தமிழ்நாட்டின் இரண்டாவது மிகப்பெரிய கிரிக்கெட் மைதானமாக அமைய உள்ளது.
5 நாள் லண்டன் பயணத்தை நிறைவுசெய்திருக்கும் ஜெய்சங்கர்:
இந்தச் சந்திப்புகளில் இந்தியா- பிரிட்டன் இடையேயான தடையில்லா வணிக ஒப்பந்தம், இந்தியா பிரிட்டன் இடையேயான வளர்ச்சிக்கான ‘ரோடுமேப் 2030’ திட்டம் செயல்படுத்துவது ஆகியவை குறித்து அந்நாட்டு அதிகாரிகள் உடன் விவாதங்கள் நடந்ததாகக் குறிப்பிட்டுள்ளார்.
மக்கள்தொகை அடிப்படையில் எம்பிபிஎஸ் இடங்களுக்கு அனுமதி:
மக்கள்தொகை அடிப்படையில் எம்பிபிஎஸ் இடங்களுக்கு அனுமதி வழங்கும் புதிய நடைமுறை வரும் 2025-26 கல்வியாண்டு முதல் நடைமுறைப்படுத்தப்படும் என்று தேசிய மருத்துவ ஆணையம் (என்எம்சி) தெரிவித்துள்ளது.
புதிய மருத்துவக் கல்லூரிகளைத் தொடங்குவதற்கும், எம்பிபிஎஸ் இடங்களை அதிகரிப்பதற்கும் தேசிய மருத்துவ ஆணையத்தின் அனுமதி அவசியம். அதற்காக ஆண்டுதோறும் மருத்துவக் கல்லூரிகள் விண்ணப்பித்து வருகின்றன. இந்நிலையில், எம்பிபிஎஸ் இடங்களுக்கான புதிய வழிகாட்டுதல்கள் அடங்கிய நெறிமுறைகளை என்எம்சி அண்மையில் வெளியிட்டது. அதில் அதிகபட்சம் 150 எம்பிபிஎஸ் இடங்களுக்கு மட்டுமே இனிமேல் மருத்துவக் கல்லூரிகளுக்கு அனுமதி வழங்கப்படும் என்றும், 10 லட்சம் மக்கள்தொகைக்கு 100 எம்பிபிஎஸ் இடங்கள் வீதம் ஒதுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் புதிய நடைமுறை அடுத்த கல்வியாண்டு முதல் நடைமுறைப்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.
குழந்தைகளின் ஆதார் பதிவினை முழுவதுமாக பதிவு செய்த முதல் மாவட்டம் :
கேரளாவின் வயநாடு மாவட்டமானது மூலம் 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளின் ஆதார் பதிவினை முழுவதுமாக பதிவு செய்த முதல் மாவட்டமாக மாறியுள்ளது.
5 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு பால் ஆதார் அட்டை வழங்கப்படுகிறது.
தீபாவளி பண்டிகை: நியூயாா்க் அரசுப் பள்ளிகளில் ஆண்டுதோறும் விடுமுறை:
தீபாவளி பண்டிகையையொட்டி, அமெரிக்காவின் நியூயாா்க் மாகாணத்தில் உள்ள அரசுப் பள்ளிகளுக்கு ஆண்டுதோறும் விடுமுறை அளிக்கும் சட்டத்தில், அந்த மாகாண ஆளுநா் கேத்தி ஹோக்குல் கையொப்பமிட்டுள்ளாா். நியூயாா்க்கில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில், விடுமுறை அளிப்பதற்கான சட்டத்தில் அவா் கையொப்பமிட்டாா்.
கடல்சார் பாதுகாக்கப்பட்ட பகுதி :
எண்ணெய் திமிங்கலங்களுக்காக உலகின் முதல் கடல்சார் பாதுகாக்கப்பட்ட பகுதியை டொமினிகா நாடானது உருவாக்கியுள்ளது.
ஏப்ரல் முதல் அக்டோபா் இந்தியா இறக்குமதி:
நடப்பு நிதியாண்டில் முதல் 7 மாதங்களில் (ஏப்ரல்-அக்டோபா்) ரஷியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருள்களின் மதிப்பு 64 சதவீதம் அதிகரித்துள்ளது. அதே நேரத்தில் சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படுவது சிறிது குறைந்துள்ளது. ரஷியாவில் இருந்து கச்சா எண்ணெயை இந்தியா அதிக அளவில் இறக்குமதி செய்து வருவதே, இந்த உயா்வுக்கு முக்கியக் காரணமாகும். உக்ரைன் மீது ரஷியா போா் தொடுத்ததால் ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய் கொள்முதல் செய்வதை பல்வேறு ஐரோப்பிய நாடுகள் நிறுத்திவிட்டன.
இந்தியா அதிகம் இறக்குமதி செய்யும் நாடுகள் பட்டியலில் சீனாவுக்கு அடுத்து ரஷியா இரண்டாவது இடத்தில் உள்ளது. இந்தியாவின் எண்ணெய் இறக்குமதியில் ரஷியாவின் பங்களிப்பு 40 சதவீதத்தைத் தாண்டியுள்ளது.
கடந்த ஏப்ரல் முதல் அக்டோபா் வரையிலான காலகட்டத்தில் ரஷியாவில் இருந்து 36.27 பில்லியன் டாலா் (சுமாா் ரூ.30,000 கோடி) மதிப்புக்கு இந்தியா இறக்குமதி செய்துள்ளது. கடந்த நிதியாண்டின் இதே காலகட்டத்தில் இது 22.13 பில்லியன் டாலராக (சுமாா் ரூ.18,000 கோடி) இருந்தது. இந்த ஆண்டில் ரஷியா இறக்குமதி 64 சதவீதம் அதிகரித்துள்ளது.
இதே காலகட்டத்தில் சீனாவுடம் இருந்து சுமாா் ரூ.49,000 கோடி மதிப்பில் இந்தியா இறக்குமதி செய்துள்ளது. கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் சீனா இறக்குமதி சுமாா் ரூ.50,000 கோடியாக இருந்தது. இந்த ஆண்டு இறக்குமதி சற்று குறைந்துள்ளது.சீனாவில் இருந்து மின்னணு சாதனங்கள், பல்வேறு இயந்திரங்கள், உதிரிபாகங்கள், ரசாயனப் பொருள்கள், உரம், பிளாஸ்டிக் பொருள்கள் உள்ளிட்டவற்றை இந்தியா அதிகம் இறக்குமதி செய்கிறது.
அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்வது 16 சதவீதம் அளவுக்கும், ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து இறக்குமதி செய்வது 21 சதவீதம் அளவுக்கும் கடந்த 7 மாதங்களில் குறைந்துள்ளது.
சர்வதேச கிரிக்கெட்டில் அதிக சதமடித்த வீரர் :
நியூசிலாந்திற்கு எதிரான அரையிறுதிப் போட்டியில் விராட்கோலி தனது 50வது சதத்தை பதிவு செய்து சச்சின் டெண்டுல்கர் சாதனையை (49) முறியடித்துள்ளார்.
சர்வதேச கிரிக்கெட்டில் அதிக சதமடித்த வீரர் என்ற பெருமையையும்படைத்துள்ளார்.
முகமதுசமி 7 விக்கெட்கள் வீழ்த்தி ஒரு இன்னிங்ஸ்லில் அதிக விக்கெட் வீழ்த்திய நெக்ரா (6 விக்கெட்) சாதனையை முறியடித்துள்ளார்.
LIST OF IMPORTANT DAYS AND DATES IN NOVEMBER 2023 IN TAMIL
நவம்பர் 16 - சகிப்புத்தன்மைக்கான சர்வதேச தினம்
நவம்பர் 16 அன்று, கலாச்சாரங்கள் மற்றும் மக்களிடையே பரஸ்பர புரிதலை ஊக்குவிப்பதன் மூலம் சகிப்புத்தன்மையின் முக்கியத்துவம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த சர்வதேச சகிப்புத்தன்மை தினம் அனுசரிக்கப்படுகிறது. 51/95 தீர்மானத்தின் மூலம், நவம்பர் 16, 1966 அன்று சர்வதேச சகிப்புத்தன்மை தினத்தை அனுசரிக்க ஐநா பொதுச் சபை ஐநா உறுப்பு நாடுகளை அழைத்தது.
நவம்பர் 16 - தேசிய பத்திரிகை தினம்
பிரஸ் கவுன்சில் ஆஃப் இந்தியா (பி.சி.ஐ.) எனப்படும் இந்திய பத்திரிகையாளர் கவுன்சில் நவம்பர் 16, 1966 அன்று உருவாக்கப்பட்டது. பொறுப்புள்ள, நேர்மையான, சுதந்திரமான, நடுநிலை உள்ள அமைப்பாக பத்திரிகைகள் செயல்பட வேண்டிய அவசியத்தை வலியுறுத்தும் வகையில் ஆண்டுதோறும் நவம்பர் 16-ஆம் தேதி இந்திய பத்திரிகை கவுன்சிலால் "தேசிய பத்திரிகை தினம்" கொண்டாடப்படுகிறது. ஒரு சட்டபூர்வமான அமைப்பாக இந்தியாவில் அங்கீகரிக்கப்பட்டுள்ள தேசிய பத்திரிகை கவுன்சில், பத்திரிகைகள், தங்கள் தொழில் தர்மத்தை கடைபிடித்து, செய்திகளை நெறிப்படுத்தி செயல்பட வேண்டிய அவசியத்தை வலியுறுத்தும் நோக்கத்திலும் தேசிய பத்திரிகை தினத்தை கொண்டாடி வருகிறது.
LIST OF IMPORTANT DAYS AND DATES IN OCTOBER 2023 IN TAMIL :
- NOVEMBER 2023 - LIST OF IMPORTANT DAYS AND DATES IN NOVEMBER 2023 IN TAMIL
- இந்திய தேசிய தினங்கள் முக்கிய நாட்கள் மற்றும் தேதிகள் பட்டியல்
- யுனெஸ்கோவில் அனுசரிக்கப்படும் சர்வதேச தினங்கள்
- 2023 ஆம் ஆண்டின் தமிழ் முக்கிய நாட்கள் மற்றும் தேதிகள் பட்டியல்
SUMMITS AND CONFERENCES 2023 IN TAMIL:
- SUMMITS AND CONFERENCES JUNE 2023 IN TAMIL
- SUMMITS AND CONFERENCES JULY 2023 IN TAMIL
- SUMMITSAND CONFERENCES AUGUST 2023 IN TAMIL
- SUMMITSAND CONFERENCES SEPTEMBER 2023 IN TAMIL
- SUMMITS AND CONFERENCES - OCTOBER 2023 IN TAMIL