TODAY CURRENT AFFAIRS IN TAMIL 04.11.2023 :
‘தேர்தல் கல்வியறிவு’:
தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி ஆணையம் (NCERT) நகர்ப்புற வாக்காளர்கள் செயலில் ஈடுபட்டு பொறுப்புள்ள குடிமக்களாக மாறுவதற்காக பாடப்புத்தகங்களில் ‘தேர்தல் கல்வியறிவு’ உள்ளடக்கத்தை அறிமுகப்படுத்த உள்ளது. 2019 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் வாக்காளர்களில் கணிசமான பகுதியினர் வாக்களிப்பதைத் தவிர்த்துள்ளதால், இளம் நகர்ப்புற வாக்காளர்களை ஈடுபடுத்துவதில் கவனம் செலுத்தப்படுகிறது.தேர்தல்களில் வாக்கு சதவித்ததை உயர்த்தும் வகையில் தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வரும் பல்வேறு நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக இது உள்ளது .கடந்த 2019 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் மொத்தம் 91 கோடி வாக்காளர்களில் 29.7 கோடி மக்கள் வாக்களிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது .
உலக உணவு இந்தியா கண்காட்சி 2023 :
புதுதில்லி பிரகதி மைதானத்தில் உள்ள பாரத் மண்டபத்தில் இரண்டாவது ‘உலக உணவு இந்தியா 2023′ என்ற மாபெரும் உணவு கண்காட்சித் திருவிழாவைப் பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று (03-11-2023) தொடங்கி வைத்தார். சுய உதவிக் குழுக்களை வலுப்படுத்தும் நோக்கில் ஒரு லட்சத்துக்கும் அதிகமான சுய உதவிக் குழு உறுப்பினர்களுக்கு ஆரம்பகட்ட மூலதன உதவிகளையும் அவர் வழங்கினார். விழாவில் அமைக்கப்பட்ட கண்காட்சியைப் பிரதமர் மோடி பார்வையிட்டார். இந்தியாவை ‘உலகின் உணவுக் கூடை” என்று காட்டுவதையும், 2023 ஆம் ஆண்டை சர்வதேச சிறுதானிய ஆண்டாகக் கொண்டாடுவதையும் இந்த நிகழ்ச்சி முக்கிய நோக்கமாகக் கொண்டுள்ளது.
- KEY POINTS : உலக உணவு இந்தியா கண்காட்சி 2023
இந்திய நன்கொடையாளர் பட்டியல் 2023:
ஹுருன் இந்தியா நிறுவனம் 2022 - 2023 நிதியாண்டில் அதிக நன்கொடை அளித்தவர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. இந்தியாவில் தனி நபராகவும் குடும்பமாகவும் 119 பேர் ரூ.5 கோடிக்கும் மேல் பல்வேறு உதவிகளுக்காக நன்கொடைகளை வழங்கியுள்ளனர். இதில், ரூ.2042 கோடியை அளித்து நாட்டில் அதிக நன்கொடை அளித்தவர் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார் ஹெச்சிஎல் நிறுவனர் ஷிவ் நாடார். நிதியாண்டு கணக்கிற்கு நாள் ஒன்றுக்கு சராசரியாக ரூ.5.6 கோடியை நன்கொடையாக அளித்திருக்கிறார்.
- KEY POINTS : இந்திய நன்கொடையாளர் பட்டியல் 2023:
ஆந்திர மாநிலத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு:
ஆந்திர மாநிலத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான அமைச்சரவையில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த சாதிவாரி மக்கள்தொகைக் கணக்கெடுப்பு, மக்களின் பொருளாதாரம், சமூகம், கல்வி, வாழ்வாதாரம் ஆகிய முதன்மையான தரவுகளைச் சேகரிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளதாக மாநில தகவல் மற்றும் மக்கள் தொடர்புத் துறை அமைச்சர் ஸ்ரீனிவாச வேணுகோபால கிருஷ்ணா தெரிவித்துள்ளார்.
சாணக்யா பாதுகாப்பு உரையாடல்-2023:
புதுடெல்லியில் உள்ள மானெக் ஷா மையத்தில் நடைபெற்ற சாணக்யா பாதுகாப்பு உரையாடல்-2023 நிகழ்ச்சியில் குடியரசு துணைத்தலைவர் ஜக்தீப் தன்கர் உரையாற்றினார். அப்போது அவர், உலகளாவிய பாதுகாப்பு மற்றும் அமைதிக்கான சமகாலச் சவால்களை பகுப்பாய்வு செய்வதற்கான இந்தச் சிந்தனை மன்றத்தின் கருத்தாக்கத்துக்காக ராணுவத்தைப் பாராட்டுகிறேன். தெற்காசியா மற்றும் இந்தோ-பசிபிக்கில் உள்ள பாதுகாப்பு சிக்கல்கள் குறித்த ஆழமான பகுப்பாய்வுகளுக்கு இது மிகவும் பொருத்தமான தளம்.
- KEY POINTS : சாணக்கிய பாதுகாப்பு உரையாடல் 2023
கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை:
கோயம்புத்தூர், நீலகிரி, திருநெல்வேலி, தென்காசி மற்றும் தேனி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிகக் கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்துள்ளது.
கேரள ஜோதி விருது 2023:
2021-ம் ஆண்டிலிருந்து கேரள அரசால் வழங்கப்படும் கேரளாவின் உயரிய குடிமை விருதான கேரள ஜோதி விருதுக்கு எழுத்தாளர் டி.பத்மநாபன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
தேர்தல் நிதிப் பத்திரங்கள் :
பாரத ஸ்டேட் வங்கி கிளைகளில் தேர்தல் நிதிப் பத்திரங்களை பெற்று அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை அளிக்க வேண்டுமென தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
02 ஆகஸ்ட் 2018-ல் தேர்தல் நிதிப்பத்திரமானது கொண்டு வரப்பட்டது.
பஞ்சாப் நேஷனல், ஃபெடரல் வங்கிகளுக்கு ரூ.1 கோடி அபராதம்:
வங்கிகளில் வாடிக்கையாளா்களுக்கு வழங்கும் சேவைகள் மற்றும் வட்டி விகிதங்களில் விதிமுறைகளை மீறி செயல்பட்டதற்காக அரசு வங்கியான பஞ்சாப் நேஷனல் வங்கிக்கு ரூ.72 லட்சம் அபராதமும், வாடிக்கையாளா் விவரம் அறிதல் (கெஒய்சி)- 2016 வழிகாட்டி விதிமுறைகளை மீறியதற்காக தனியாா் வங்கியான ஃபெடரல் வங்கிக்கு ரூ.30 லட்சம் அபராதத்தை ரிசா்வ் வங்கி விதித்தது.
இதேபோல் கெஒய்சி வழிகாட்டி விதிமுறைகளை மீறியதற்காக மொ்சிடிஸ்-பென்ஸ் நிதிச் சேவைகள் நிறுவனத்துக்கு ரூ.10 லட்சமும், மிக முக்கியமான வங்கிகள் அல்லாத நிதி நிறுவன விதிமுறைகள் -2016 மீறியதற்காக கோட்டயம் கொசமட்டம் ஃபைனான்ஸ் நிறுவனத்துக்கு ரூ.13.38 லட்சம் அபராதத்தையும் ரிசா்வ் வங்கி விதித்தது.
ஆபரேஷன் சேஷா:
சிவப்பு மணல் உள்ளிட்ட மரங்களின் சட்டவிரோதமான வர்த்தககத்தை தடுப்பதற்காக தொடங்கப்பட்ட திட்டமான ஆபரேஷன் சேஷாவின் (Operation Sesha) 4வது கட்டத்தினை மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் துவங்கி வைத்துள்ளார்.
2015-ஆம் ஆண்டு இத்திட்டம் கொண்டு வரப்பட்டது.
இத்தாலியில் இந்தியா-சுமாா் ரூ.52,400 கோடி அந்நிய முதலீடு
இத்தாலியில் உள்ள சுமாா் 750 நிறுவனங்கள், இந்தியாவில் சுமாா் ரூ.52,400 கோடி அந்நிய முதலீடு செய்துள்ளதாக மத்திய வெளியுறவுத் துறை அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் தெரிவித்துள்ளாா். அமைச்சா் ஜெய்சங்கா் 2 நாள் பயணமாக இத்தாலி சென்றாா். அந்நாட்டுத் தலைநகா் ரோமில், இத்தாலி நாடாளுமன்ற மேலவையின் வெளியுறவு விவகாரங்கள் மற்றும் பாதுகாப்பு ஆணையக் கூட்டம் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் அமைச்சா் ஜெய்சங்கா் கலந்துகொண்டு பேசியதாவது: ஐரோப்பிய யூனியனில் இந்தியாவின் 4-ஆவது பெரிய வா்த்தக கூட்டாளியாக இத்தாலி உள்ளது. இத்தாலியில் உள்ள சுமாா் 750 நிறுவனங்கள், இந்தியாவில் 6.3 பில்லியன் டாலா்களுக்கும் (சுமாா் ரூ.52,400 கோடி) அதிகமாக அந்நிய முதலீடு செய்துள்ளன.
புலம்பெயா்வு ஒப்பந்தம் கையொப்பம்:இந்தியா, இத்தாலி மாணவா்களும் பணியாளா்களும் தடையின்றி இருநாடுகளுக்குப் பயணிக்க புலம்பெயா்வு ஒப்பந்தம், கலாசார பரிமாற்றத் திட்டம் ஆகியவை கையொப்பமாகின என்று தெரிவித்தாா். இத்தாலியில் 1.80 லட்சம் இந்தியா்கள் உள்ளனா் என்பது குறிப்பிடத்தக்கது.
டெல்லியில் காற்றின் தரம்:
AQI 400 ஐ மீறுவதால் டெல்லியில் காற்றின் தரம் 'கடுமையான' வகைக்கு சரிந்ததால், கிரேடட் ரெஸ்பான்ஸ் ஆக்ஷன் பிளான் (GRAP) 3வது கட்டம் இயக்கப்பட்டது.
- KEY POINTS : காற்றுத் தரக் குறியீடு (AQI)
இந்திய உற்பத்தி கண்காட்சி:
கர்நாடகாவின் பெங்களூருவில் நடைபெற்ற மூன்று நாள் இந்திய உற்பத்தி கண்காட்சியை பாதுகாப்பு அமைச்சர் திறந்து வைத்தார். விண்வெளி மற்றும் பாதுகாப்பு பொறியியல், ரோபாட்டிக்ஸ் மற்றும் ஆளில்லா வான்கலம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் தங்கள் தொழில்நுட்பங்கள், உபகரணங்கள் மற்றும் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டைக் காண்பிப்பதற்கான ஒரு மதிப்புமிக்க தளமாக இந்தியா உற்பத்தி கண்காட்சி செயல்படுகிறது. இந்த நிகழ்ச்சி சிறந்த தொழில்நுட்பங்கள் மற்றும் நடைமுறைகளை ஒன்றிணைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. அதே நேரத்தில் பங்கேற்பாளர்களிடையே வணிக மற்றும் அறிவு பகிர்வுக்கான வாய்ப்புகளை வழங்குகிறது.
உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் அதிக விக்கெட் எடுத்த இந்தியர்:
முகமது சமி உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் தன்னுடைய 45வது விக்கெட்டினை வீழ்த்தி ஜாகிர்கான் சாதனையை முறியடித்துள்ளார்
மேலும் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் அதிக விக்கெட் எடுத்த இந்தியர் என்ற சாதனையை புரிந்துள்ளார்.
LIST OF IMPORTANT DAYS AND DATES IN OCTOBER 2023 IN TAMIL :
- LIST OF IMPORTANT DAYS AND DATES IN OCTOBER 2023 IN TAMIL
- இந்திய தேசிய தினங்கள் முக்கிய நாட்கள் மற்றும் தேதிகள் பட்டியல்
- யுனெஸ்கோவில் அனுசரிக்கப்படும் சர்வதேச தினங்கள்
- 2023 ஆம் ஆண்டின் தமிழ் முக்கிய நாட்கள் மற்றும் தேதிகள் பட்டியல்
- SUMMITS AND CONFERENCES JUNE 2023 IN TAMIL
- SUMMITS AND CONFERENCES JULY 2023 IN TAMIL
- SUMMITSAND CONFERENCES AUGUST 2023 IN TAMIL
- SUMMITSAND CONFERENCES SEPTEMBER 2023 IN TAMIL
- SUMMITS AND CONFERENCES - OCTOBER 2023 IN TAMIL
No comments:
Post a Comment