Welcome to our blog post on Today's Current Affairs-12.03.2024 , specifically tailored for competitive exams. This post is designed to help aspirants of various competitive exams like Banking, SSC, Railways, Insurance, UPSC, TNPSC and State Exams stay updated with the latest happenings around the world.
அக்னி - 5 ஏவுகணை சோதனை வெற்றி : Agni - 5 Missile Tests Successful
- மத்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு(டிஆர்டிஓ) 10 ஆண்டு முயற்சிக்குப் பிறகு மேம்படுத்தப்பட்ட அக்னி - 5 ஏவுகணையை தயாரித்துள்ளது.
- திவ்யாஸ்திரம் என்ற திட்டத்தின் கீழ், மல்டிபில் இண்டிபென்டன்ட்லி டார்கெட்டபிள்ரீ-என்ட்ரி வெஹிகிள் (எம்ஐஆர்வி-Multiple Independently Targetable Re-Entry Vehicle ( MIRV) technology) தொழில்நுட்பத்தில் உள்நாட்டிலேயே இது தயாரிக்கப்பட்டுள்ளது.
- இந்த ஏவுகணை முதல் முறையாக 11.03.2024 பரிசோதிக்கப்பட்டது. இந்த சோதனை வெற்றி பெற்றதாக டிஆர்டிஓ அறிவித்துள்ளது.
- மிஷன் திவ்யாஸ்திரா என்ற பெயரிடப்பட்ட விமான சோதனை ஒடிசாவில் உள்ள டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம் தீவில் இருந்து மேற்கொள்ளப்பட்டது.
- தமிழில் சிறந்த மொழிபெயர்ப்பாளருக்கான சாகித்ய அகாடமி விருது, எழுத்தாளர் கண்ணையன் தட்சிணாமூர்த்திக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
- மமாங் தய் எழுதிய 'தி பிளாக் ஹில்'(THE BLACK HILL) என்ற நாவலை 'கருங்குன்றம்' என்ற தலைப்பில் தமிழில் மொழி பெயர்த்ததற்காக இந்த விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
- இந்திய மொழிகளில் வெளியாகியுள்ள சிறந்த இலக்கியப் படைப்புகளை பெருமைப்படுத்தும் விதமாக 1954 ம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் மிகச் சிறந்த நூல்களுக்கு சாகித்ய அகாடமி விருது மத்திய அரசு சார்பில் வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், 2024 ஆம் ஆண்டுக்கான சாகித்ய அகாடமி விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அங்கீகரிக்கப்பட்ட 24 மொழிகளில் சிறந்த இலக்கிய படைப்புகளுக்கான சாகித்ய அகாடமி விருதுகளை மத்திய அரசு அறிவித்துள்ளது.
- TNPSC GK சாகித்திய அகாதமி விருது பெற்ற தமிழ் நூல்கள் 2023-2024
நமோ ட்ரோன் தீதி யோஜனா' திட்டம்: Namo Drone Didi Yojana:
- மத்திய அரசு சார்பில் கடந்த2022-ம் ஆண்டு ‘நமோ ட்ரோன் தீதி யோஜனா' திட்டம் தொடங்கப்பட்டது. இந்த திட்டத்தின்படி 5 ஆண்டுகளில் ஒரு லட்சம் பெண்களுக்கு வேளாண் பணி சார்ந்த ட்ரோன்களை இயக்குவது தொடர்பாக பயிற்சி அளிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.
- ‘நமோ ட்ரோன் தீதி யோஜனா'(Namo Drone Didi Yojana) திட்டத்தின் ஒரு பகுதியாக டெல்லியில் நடைபெற்ற வலிமையான பெண்கள்-வளர்ச்சியடைந்த பாரதம் நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றார். அப்போது வேளாண் பணிகளுக்காக மகளிர் சுய உதவிக் குழுக்களைசேர்ந்த 1,000 பெண்களுக்கு ட்ரோன்களை அவர் வழங்கினார். இந்த ட்ரோன்கள் மூலம் வயல்களில் விதைகளை தூவ முடியும். பூச்சிக்கொல்லி, உரத்தை பயிர்கள் மீது தெளிக்க முடியும்.
இந்தியாவின் முதல் இயற்கை எரிவாயு பங்க் India's First Natural Gas Bunker
- பசுவின் சாணம் கொண்டு தயாரிக்கப்பட்ட இயற்கை எரிவாயு விற்கப்படும் இந்தியாவின் முதல் பங்க் குஜராத் மாநிலம் பனஸ்கந்தா மாவட்டத்தில் உள்ள தீசா தாரத் நெடுஞ்சாலையில் உள்ளது.
- பனஸ்கந்தா மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தின்கீழ் 4 ஏக்கர் பரப்பளவு கொண்ட பசுமை வாயு தொழிற்சாலை உள்ளது.
- இதில் நாள்தோறும் 40 ஆயிரம் கிலோ அளவிலான பசுஞ்சாணத்திலிருந்து 550 முதல் 600 கிலோ வரையிலான இயற்கை எரிவாயு உற்பத்தி செய்யப்படுகிறது. இது பனஸ்கந்தா மாவட்டம் தீசா தாரத் நெடுஞ்சாலையில் உள்ள 3000 கியூபிக் மீட்டர் சுற்றளவு கொண்ட பசுமை அழுத்தப்பட்ட இயற்கை எரிவாயு நிலையத்தில் தேக்கி வைக்கப்படுகிறது. இந்தியாவின் முதல் இயற்கை எரிவாயு பங்க் இதுவே.
சிஏஏ எனப்படும் குடியுரிமை திருத்தசட்டம் அமலுக்குவந்தது: Citizenship Amendment Act 2029
- சிஏஏ எனப்படும் குடியுரிமை திருத்தசட்டம் 12.03.2024 உடனடியாக அமலுக்குவந்தது. இதுதொடர்பான அறிவிப்பாணையை மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
- கடந்த 2019-ம் ஆண்டு டிசம்பரில் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் குடியுரிமை திருத்த சட்டம் (சிஏஏ) நிறைவேற்றப்பட்டது. பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய அண்டை நாடுகளில் மதரீதியாக துன்புறுத்தப்பட்டு 2014 டிசம்பர் 31-ம் தேதிக்கு முன்பு இந்தியாவில் அடைக்கலம் புகுந்த இந்துக்கள், சீக்கியர்கள், பவுத்த மதத்தினர், ஜெயின்மதத்தினர், பார்சிகள், கிறிஸ்தவர்களுக்கு குடியுரிமை வழங்க இந்த சட்டம் வழிவகுக்கிறது.
- நாட்டின் முதல் மாநிலமாக உத்தரகண்ட் சட்டப்பேரவையில் பொது சிவில் சட்ட (யுசிசி) மசோதா தாக்கல் செய்யப்பட்டது
- இந்தியக் குடியுரிமைச் சட்டம் 1955 / இந்தியக் குடியுரிமை (திருத்தச்) சட்டம் 2019 ( CAA )
- தேசிய மக்கள் தொகை பதிவேடு (National Population Register (NPR)
- தேசியக் குடியுரிமைப் பதிவேடு (National Register of Citizens - (NRC)
A) திவ்யாஸ்திரம்
- JANUARY 2024 -TNPSC CURRENT AFFAIRS IN TAMIL / ஜனவரி 2024
- FEBRUARY 2024 -TNPSC CURRENT AFFAIRS IN TAMIL / பிப்ரவரி2024
- MARCH 2024 -TNPSC CURRENT AFFAIRS IN TAMIL / மார்ச் 2024
MONTH WISE TNPSC GK NOTES IN TAMIL 2024:
- TNPSC GK குறிப்புகள் தமிழ் JANUARY– 2024
- TNPSC GK குறிப்புகள் தமிழ் FEBRUARY – 2024
- TNPSC GK குறிப்புகள் தமிழ் MARCH– 2024
விருதுகள் கௌரவங்கள் 2024 :
- JANUARY AWARDS HONOURS 2024 IN TAMIL / ஜனவரி விருதுகள் ( தமிழில்) 2024
- FEBRUARY AWARDS HONOURS 2024 IN TAMIL / பிப்ரவரி விருதுகள் ( தமிழில்) 2024
- MARCH AWARDS HONOURS 2024 IN TAMIL / மார்ச் விருதுகள் ( தமிழில்) 2024
CURRENT AFFAIRS QUESTION AND ANSWERS IN TAMIL | நடப்பு நிகழ்வுகள்:2024
- நடப்பு நிகழ்வுகள் கேள்வி மற்றும் பதில்கள் தமிழில்-ஜனவரி 2024
- நடப்பு நிகழ்வுகள் கேள்வி மற்றும் பதில்கள் தமிழில்-பிப்ரவரி 2024
- நடப்பு நிகழ்வுகள் கேள்வி மற்றும் பதில்கள் தமிழில் -மார்ச்-2024
முக்கியமான நாட்களின் பட்டியல் 2024
No comments:
Post a Comment