TNPSC GK குறிப்புகள் தமிழ் MARCH– 2024

TNPSC PAYILAGAM
By -
0

 

"TNPSC GK குறிப்புகள் தமிழ் MARCH–2024"
"TNPSC GK குறிப்புகள் தமிழ் MARCH–2024"

Introduction

Welcome to our blog post on "TNPSC GK குறிப்புகள் தமிழ் MARCH–2024", specifically tailored for competitive exams. This post is designed to help aspirants of various competitive exams like Banking, SSC, Railways, Insurance, UPSC, TNPSC and State Exams stay updated with the latest happenings around the world.

  1. National Affairs
  2. State Affairs
  3. Global News
  4. International Relations
  5. Economic Trends
  6. Political News
  7. Environmental Issues
  8. Science and Technology
  9. Economy & Banking
  10. Health and Science
  11. Social Issues
  12. Sports News
  13. Entertainment News
  14. Monthly News Digest
  15. Daily News Update
  16. World Events
  17. National News
  18. Awards and Honors 

We hope this roundup of "TNPSC GK குறிப்புகள் தமிழ் MARCH–2024" helps you in your preparation for competitive exams. Remember, staying updated with current affairs is crucial for anyone preparing for competitive exams or simply wanting to stay informed about global events.

சர்வதேச புலிகள் கூட்டமைப்பு அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்

  • பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், 2023-24 முதல் 2027-28 வரையிலான ஐந்தாண்டு காலத்திற்கு ரூ.150 கோடி நிதி ஒதுக்கீடுடன் இந்தியாவில் தலைமையிடமாகக் கொண்ட சர்வதேச புலிகள் கூட்டமைப்பு அமைப்பதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.
  • KEY POINTS : International Big Cat Alliance (IBCA) -சர்வதேச புலிகள் கூட்டமைப்பு 

இந்தியாவின் முதல் ஏஐ ஆசிரியை ‘ஐரிஸ்’:
  • கேரளாவின் திருவனந்தபுரத்தில் உள்ள கேடிசிடி மேல்நிலைப்பள்ளி, 2021 நிதி ஆயோக் புத்தாக்க திட்டத்தின்கீழ் அடல் டிங்கரிங் சோதனை கூடத்தை பள்ளி வளாகத்தில் நிறுவியது. 
  • மேக்கர்லேப்ஸ் எஜுடெக் எனும் தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்துடன் இணைந்து செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத் திறனை பயன்படுத்தி ‘ஐரிஸ்’ என்ற பெயரில் மனித இயல்பு கொண்ட ரோபோ ஆசிரியரை இப்பள்ளி வடிவமைத்துள்ளது.
  • அச்சு அசலாக பெண் உருவில்காட்சியளிக்கும் ‘ஐரிஸ்’ ரோபோபன்மொழி புலமை கொண்டது. பல்வேறு பாடங்களிலிருந்து கேள்விகள் எழுப்பினாலும் சரளமாக பேசியபடி பதில் அளிக்கும். இதன் கீழ் பகுதியில் சக்கரங்கள் பொருத்தப்பட்டிருப்பதால் எளிதில் இடம்விட்டு இடம் நகர்ந்து செல்லும்.
புவிசார் குறியீடு:2024
  • மஜூலி முகமூடி : அஸ்ஸாமில் உள்ள மஜூலி அதன் முகமூடி தயாரித்தல் மற்றும் கையெழுத்துப் பிரதி ஓவியத்திற்காக ஆகியவற்றிற்கும் புவிசார் வழங்கப்பட்டுள்ளது
  • ஓடிசாவின் புகழ்பெற்ற கட்டாக் ரூபா தாரகாசிக்கு (வெள்ளிக் கசவுப் பூவேலைப் பாடுகள்) புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது.கசவுப் பூவேலைப்பாடுகள் ஆனது பாரம்பரியமாக சிறந்த கைவினைத் திறன் மற்றும் பாரம்பரிய நகைகளில் செழிப்பு மிக்க வடிவமைப்புகளைக் கொண்டது.தொல்லியல் சான்றுகள் ஆனது, மெசபடோமியாவில் கி.மு. 3500 ஆம் ஆண்டில் இந்த வேலைப்பாடுகள் நகைகளில் பயன்படுத்தப் பட்டதாகக் கூறுகின்றன.
  • வங்காளத்தின் பிரபலமான பாரம்பரியக் கைத்தறி துணியான பங்களார் மஸ்லின், புவிசார் வழங்கப்பட்டுள்ளது.பங்களார் (வங்காள) மஸ்லின் ரகத் துணியானது, வங்காளத்தின் பிரபலமான பாரம்பரியக் கைத்தறி கைவினைப் பொருட்ககளில் ஒன்றாகும்.இந்த சிறந்த வகை மஸ்லின் என்பது பருத்தியால் ஆனது.
  • ஆந்திரப் பிரதேசத்தின் நர்சாபூர் கொக்கிப்பின்னல் வேலைப்பாடுகள் கொண்ட சரிகைத் தயாரிப்புகள் புவிசார் வழங்கப்பட்டுள்ளது.ஆந்திரப் பிரதேசத்தின் மேற்கு கோதாவரிப் பகுதியில் உள்ள கொக்கிப் பின்னல் வேலைப் பாடுகள் கொண்ட சரிகைத் தயாரிப்புகளுக்குப் பெயர் பெற்ற நர்சாபூர், அதன் நுணுக்கமான கைவினைத் திறனுக்காக உலகளவில் புகழ் பெற்றுள்ளது.
  • குஜராத்தின் கட்ச் ரோகன் கைவினைப் பொருள்கள் ஆகியவற்றிற்கும் புவிசார் வழங்கப்பட்டுள்ளது.
  • மத்தியப் பிரதேசத்தின் ரத்லம் மாவட்டத்தில் உள்ள ரியாவான் கிராமத்தின் பெயரால் பெயரிடப்பட்ட ரத்லம் ரியாவான் லஹ்சுன் (பூண்டு) வகை மற்றும் 
  • குஜராத்தின் அம்பாஜி சலவைக் கல் (பளிங்கு) ஆகியவையும் புவிசார் குறியீட்டினைப் பெற்று உள்ளன.கடுமையான அழுத்தம் மற்றும் வெப்பம் காரணமாக பூமியின் கண்ட மேலோட்டின் கீழ் உள்ள சுண்ணாம்புக் கல் மீண்டும் படிகமாக்கப் படும் போது இந்தப் பளிங்குக் கல் உருவாகிறது.
  • திரிபுரா ரிசா ஜவுளி வகைகள், ஹைதராபாத் லாக் (அரக்கு) வளையல்கள், அசாமின் மஜூலி முகமூடி மற்றும் அசாம் மஜூலி கையெழுத்துப் பிரதி ஓவியம் ஆகியவை புவிசார் குறியீட்டினைப் பெற்ற மற்றத் தயாரிப்புகள் ஆகும்

ஆண்டர்சன் 700: 
  • தரம்சாலா டெஸ்ட் போட்டியில்  குல்தீப் யாதவை 30 ரன்களில் ஆட்டமிழக்கச் செய்தார் இங்கிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன். சர்வதேச டெஸ்ட் போட்டியில் ஆண்டர்சன் கைப்பற்றிய 700-வது விக்கெட் இதுவாகும்
  • இதன் மூலம் 700 விக்கெட்களை வீழ்த்திய முதல் வேகப்பந்து வீச்சாளர் என்ற சாதனையை படைத்துள்ளார் ஆண்டர்சன். 
  • அதிக விக்கெட்களை வீழ்த்தியவர்களின் பட்டியலில் இலங்கையின் முத்தையா முரளிதரன் (800) முதலிடத்தில் உள்ளார். மறைந்த ஆஸ்திரேலிய ஜாம்பவான் ஷேன் வார்ன் (708) 2-வது இடம் வகிக்கிறார்.

ரவிச்சந்திரன் அஸ்வின் சாதனை:
  • அறிமுக டெஸ்ட் போட்டியிலும் 100-வது டெஸ்ட் போட்டியிலும் 5 விக்கெட்கள் வீழ்த்திய முதல் வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார் இந்தியாவின் ரவிச்சந்திரன் அஸ்வின். கடந்த 2011-ம் ஆண்டு மேற்கு இந்தியத் தீவுகளுக்கு எதிரான டெஸ்டில் அறிமுக வீரராக 6 விக்கெட்களை வீழ்த்திய அவர், தற்போது தனது 100-வது டெஸ்ட் போட்டியில் 5 விக்கெட்களை சாய்த்துள்ளார்.
  • 36-வது முறையாக 5 விக்கெட்கள்: தரம்சாலா டெஸ்ட் போட்டியின் 2-வது இன்னிங்ஸில் அஸ்வின் 5 விக்கெட்கள் வீழ்த்தினார். டெஸ்ட் கிரிக்கெட்டில் அவர், 5 விக்கெட்கள் வீழ்த்துவது இது 36-வது முறையாகும். இதன் மூலம் இந்த வகை சாதனையில் 3-வது இடத்தை நியூஸிலாந்தின் ரிச்சர்ட்டு ஹெட்லியுடன் பகிர்ந்து கொண்டுள்ளார் அஸ்வின். அதேவேளையில் இந்திய வீரர்களில் அதிக முறை 5 விக்கெட்களை வீழ்த்திய வீரர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார். இதற்கு முன்னர் அனில் கும்ப்ளே 35 முறை 5 விக்கெட்களை வீழ்த்தியிருந்தார். முதலிடத்தில் இலங்கையின் முத்தையா முரளிதரன் (67 முறை), 2-வது இடத்தில் மறைந்த ஆஸ்திரேலிய ஜாம்பவான் ஷேன் வார்ன் (37 முறை) உள்ளனர்.

அருணாச்சலில் உலகின் மிக நீளமான இரு வழி சுரங்கப் பாதை: பிரதமர் மோடி திறந்து வைத்தார்:
  • அருணாச்சல பிரதேசத்தின் தவாங், மேற்கு காமெங் மாவட்டங்களை இணைக்கும் வகையில் சீன எல்லையை ஒட்டிய ‘சேலா பாஸ்' பகுதியில் சுரங்கப் பாதை அமைக்க கடந்த 2019 பிப்ரவரி 9-ம் தேதி பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்.
  • அங்கு 13,000 அடி உயரத்தில் மலையைக் குடைந்து உலகின் மிக உயரமான இருவழி சுரங்கப் பாதை அமைக்கப்பட்டு உள்ளது. இதில் ஒரு சுரங்கப் பாதையின் நீளம் 1,595 மீட்டர் ஆகும். மற்றொரு சுரங்கப் பாதையின் நீளம் 1,003 மீட்டர் ஆகும். இரு சுரங்கப் பாதைகளையும் இணைக்கும் வகையில் 1,200 மீட்டர் நீளமுடைய இணைப்பு சாலை, அவசர காலங்களில் வெளியேறுவதற்கான பாதைகளும் அமைக்கப்பட்டு உள்ளன.
  • எல்லை சாலைகள் அமைப்பு ரூ.825 கோடி செலவில் சுரங்கப் பாதையை கட்டி முடித்துள்ளது. ஒரு நாளில் சுரங்கப்பாதை வழியாக 3,000 கார்கள், 2,000 லாரிகள் கடந்து செல்ல முடியும். குறிப்பாக பிரம்மோஸ் உள்ளிட்ட ஏவுகணைகள், பீரங்கிகள், ராணுவ வாகனங்களை சீன எல்லைப் பகுதிக்கு எளிதாக கொண்டு செல்ல முடியும். அசாமின் தேஜ்பூர்- அருணாச்சல பிரதேசத்தின் தவாங் இடையிலான தொலைவு 10 கி.மீ. ஆகவும், பயண நேரம் ஒரு மணி வரையும் குறைந்திருக்கிறது. பனிப்பொழிவு காலங்களிலும் சீன எல்லைப் பகுதிக்கு ராணுவ வீரர்களால் தடையின்றி செல்ல முடியும்.
  • அருணாச்சல பிரதேச தலைநகர் இடா நகரில் நேற்று நடைபெற்ற விழாவின்போது சேலா சுரங்கப் பாதையை பிரதமர் நரேந்திர மோடி காணொலி வாயிலாக திறந்துவைத்தார்.
ராணுவ தளவாட இறக்குமதி

ராணுவ தளவாட இறக்குமதியில் இந்தியா தொடர்ந்து முதல் இடம்வகித்து வருவதாக ஸ்டாக்ஹோம் சர்வதேச அமைதி ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.

அந்த அமைப்பு வெளியிட்ட அறிக்கையின்படி, 
  1. உலகளாவிய ஆயுத இறக்குமதியில் இந்தியாவின் பங்கு 9.8% ஆக உள்ளது. 
  2. இந்தப் பட்டியலில் 2-ம் இடத்தில் சவூதி அரேபியா (8.4%), 
  3. கத்தார்(7.6%), 
  4. உக்ரைன் (4.9%), 
  5. பாகிஸ்தான் (4.3%), 
  6. ஜப்பான் (4.1%)
  7. எகிப்து (4%), 
  8. ஆஸ்திரேலியா(3.7%), 
  9. தென்கொரியா (3.1%), 
  10. சீனா (2.9%) உள்ளன.
இந்தியா அதிகபட்சமாக ரஷ்யாவிடமிருந்து 36% இறக்குமதி செய்கிறது. பிரான்ஸிடமிருந்து 33%,அமெரிக்காவிடமிருந்து 13%  இறக்குமதி செய்கிறது. 


TNPSC GK குறிப்புகள் தமிழ் MARCH– 2024


MONTH WISE TNPSC GK NOTES IN TAMIL 2024:

  1. TNPSC GK குறிப்புகள் தமிழ் JANUARY– 2024 
  2. TNPSC GK குறிப்புகள் தமிழ் FEBRUARY – 2024
  3. TNPSC GK குறிப்புகள் தமிழ் MARCH– 2024
  4. TNPSC GK குறிப்புகள் தமிழ் APRIL– 2024


Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn more
Ok, Go it!