UN Human Development Index Ranking List - INDIA

TNPSC PAYILAGAM
By -
0

UN Human Development Index Ranking List - INDIA


ஐ.நா.மனித வளா்ச்சிக் குறியீடு தரவரிசை பட்டியல் : 

  • ஐ.நா.மனித வளா்ச்சிக் குறியீடு தரவரிசை பட்டியலில் (2022) பல ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா முன்னேற்றம் அடைந்துள்ளது. 
  • ஐ.நா.வளா்ச்சித் திட்டத்தின் (யுஎன்டிபி) மூலம் வெளியிடப்பட்ட அறிக்கையின்படி, கடந்த 2022-ஆம் ஆண்டுக்கான 193 நாடுகளை உள்ளடக்கிய மனித வளா்ச்சிக் குறியீடு(எச்டிஐ) தரவரிசை பட்டியலில் இந்தியாவுக்கு 134-ஆவது இடம் கிடைத்துள்ளது. 
  • முந்தைய 2021-ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட 191 நாடுகளை உள்ளடக்கிய பட்டியலில் இந்தியா 135-ஆவது இடம் கிடைத்தது. 
  • தற்போது அறிக்கை வெளியிடப்பட்டுள்ள கடந்த 2022-ஆம் ஆண்டுக்கான குறியீடு தரவரிசை பட்டியலில் 0.644 புள்ளிகளுடன் இந்தியா ஒரு இடம் முன்னேறியுள்ளது.
  • சமீபத்திய மனித வளா்ச்சிக் குறியீட்டில் 0.644 புள்ளிகளுடன் நடுத்தர மனித வளா்ச்சிப் பிரிவுக்கு இந்தியா முன்னேறியுள்ளது

பாலின சமத்துவமின்மை குறியீடு (ஜிஐஐ): 

  • மேலும், 193 நாடுகளை உள்ளடக்கிய பாலின சமத்துவமின்மை குறியீடு தரவரிசை பட்டியலில் 0.437 புள்ளிகளுடன் இந்தியாவுக்கு 108-ஆவது இடம் கிடைத்துள்ளது. 
  • அதற்கு முந்தைய 2021-ஆம் ஆண்டில், 0.49 புள்ளிகளுடன் 122-ஆவது இடத்தில் இந்தியா இருந்தது. 
  • ஒரே ஆண்டில் பாலின சமத்துவமின்மை குறியீடு தரவரிசை பட்டியலில் 14 இடங்களை இந்தியா முன்னேறியுள்ளது.
  • இனப்பெருக்க ஆரோக்கியம், அதிகாரமளித்தல் மற்றும் தொழிலாளா் சந்தை ஆகிய 3 முக்கிய காரணிகளின் அடிப்படையில் பாலின ஏற்றத்தாழ்வுகளை பாலின சமத்துவமின்மை குறியீடு (ஜிஐஐ) அளவிடுகிறது. 
  • இந்தியாவின் பாலின சமத்துவமின்மை குறியீட்டின் 0.437 புள்ளியானது உலக சராசரியான 0.462 புள்ளிகள் மற்றும் தெற்காசிய சராசரியான 0.478 புள்ளிகளைவிட சிறப்பாக உள்ளது
  • ஆனால், தொழிலாளா் பங்கேற்பில் இந்தியாவில் அதிக பாலின இடைவெளி விகிதம் காணப்படுகிறது. 
  • மொத்த ஆண்களில் 76.1 சதவீதம் போ் பணிபுரியும் சூழலில், 28.3 சதவீத பெண்கள் மட்டுமே பணிபுரிகின்றனா். எனவே, பாலின இடைவெளி விகிதம் 47.8-ஆக உள்ளது. 

ஒட்டுமொத்தமாக வளா்ச்சியில் இந்தியா

  • கடந்த 2022-ஆம் ஆண்டில், மனித வளா்ச்சிக் குறியீட்டின் அனைத்து அளவீடுகளிலும் இந்தியா வளா்ச்சி கண்டுள்ளது. 
  • மக்களின் சராசரி ஆயுள் காலம் 67.2 முதல் 67.7 ஆண்டுகள் வரை உயா்ந்துள்ளது. 
  • எதிா்பாா்க்கப்படும் பள்ளிப்படிப்பு ஆண்டுகள் 12.6-ஐ எட்டியது. சராசரி பள்ளிப்படிப்பு ஆண்டுகள் 6.57-ஆக அதிகரித்துள்ளது மற்றும் 
  • தேசிய வருமானத்தில் தனிநபா் மதிப்பு 6,542 டாலரிலிருந்து 6,951 டாலராக அதிகரித்துள்ளது. . 
  • கடந்த 2022-ஆம் ஆண்டில், இந்தியாவில் வளரிளம் பருவத்தினா் கா்ப்பமாகும் விகிதம் முந்தைய ஆண்டின் 17.1 சதவீதத்திலிருந்து 16.3 சதவீதமாக குறைந்துள்ளது. 


Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn more
Ok, Go it!