Monday, December 25, 2023

இந்தியக் குடியுரிமைச் சட்டம் 1955 / இந்தியக் குடியுரிமை (திருத்தச்) சட்டம் 2019

இந்தியக் குடியுரிமைச் சட்டம் 1955 / இந்தியக் குடியுரிமை (திருத்தச்) சட்டம் 2019 ( CAA )


இந்தியக் குடியுரிமைச் சட்டம் 1955:

  • இந்தியாவின் குடிமகனாக இருக்க ஒரு நபரின் ஒப்புதல் அடிப்படையின்படி பிரிவு 5 முதல் 11 (பாகம் II) இந்திய அரசியலமைப்பின் கீழ் நிர்வகிக்கப்படுகிறது. 
  • இந்த விவகாரம் தொடர்பான குடியுரிமைச் சட்டம் 1955ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்டு, குடியுரிமை (திருத்தம்) சட்டம் 1986 திருத்தப்பட்டது, குடியுரிமை (திருத்தம்) சட்டம் 1992, குடியுரிமை (திருத்தம்) சட்டம் 2003, குடியுரிமை (திருத்தம்) சட்டம், 2005 மற்றும் குடியுரிமை (திருத்தம்) சட்டம், 2015. இந்திய அரசியலமைப்பின் கீழ் 9 வது பிரிவின்படி, எந்தவொரு நாட்டிலும் தானாகவே சொந்தமாக குடியுரிமை பெற்று வைத்திருக்கும் ஒரு நபர் இந்திய குடிமகன் அல்ல.
  • இந்தியக் குடியுரிமைச் சட்டம் தேசத்தில் உள்ள மக்களின் பிறப்புரிமை மூலம் குடியுரிமைக்குப் (ஜஸ் சொலி) பதிலியாக இரத்தத்தின் மூலம் குடியுரிமை (ஜஸ் சங்குனிஸ்) என்ற முறை பெரும்பாலும் பின்பற்றப்படுகிறது.


குடியுரிமை பதிவுசெய்தல்

  1. இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஒருவர் குடியுரிமை விண்ணப்பம் செய்வதற்கு முன் ஏழு ஆண்டுகளுக்கு இந்தியாவில் சாதாரணமாக வசித்து வரவேண்டும் (பிரிவு 5 (1) (அ)).
  2. இந்தியாவின் குடிமகனாகத் திருமணம் செய்து கொண்ட ஒரு நபர், பதிவு செய்ய விண்ணப்பிக்கும் முன் ஏழு ஆண்டுகளுக்கு இந்தியாவில் சாதாரணமாக வசிப்பவர்.
  3. இந்தியாவின் குடிமக்களாகப் பதிவுசெய்யப்பட்ட முழு வயது மற்றும் தகுதி கொண்ட ஒரு நபராகவும் மேலும் அவர் பெற்றோர்கள் இந்திய குடிமக்களாக பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும்.


இந்தியக் குடியுரிமை (திருத்தச்) சட்டம் (Citizenship (Amendment) Act 2019):

  • 2019 இந்தியக் குடியுரிமை (திருத்தச்) சட்டம் (Citizenship (Amendment) Act 2019), பாகிஸ்தான், வங்காளதேசம், ஆப்கானித்தான் ஆகிய நாடுகளில் இருந்து டிசம்பர் 2014 ஆம் ஆண்டுக்கு முன்னர் இந்தியாவிற்குள் புலம்பெயர்ந்து குடியேறிய மதச்சிறுபான்மையோரான இந்துக்கள், சீக்கியர்கள், சமணர்கள், பௌத்தர்கள், பார்சிகள் மற்றும் கிறித்தவர்கள் ஆகியோருக்கு இந்தியக் குடியுரிமை வழங்குவதற்கு வழிவகை செய்யும் 1955 இந்தியக் குடியுரிமைச் சட்டத்தில் சட்டத் திருத்த மசோதா, இந்திய நாடாளுமன்றத்தின் மக்களவையில், இந்தியாவின் உள்துறை அமைச்சர் அமித் ஷாவால் 09 டிசம்பர் 2019 அன்று பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது.
  • மேலே குறிப்பிடப்பட்ட நாடுகளிலிருந்து இந்தியாவிற்குள் குடியேறிய இசுலாமியர்களுக்கு இத்தகுதி இச்சட்டத்தில் தரப்படவில்லை.இந்தியச் சட்டத்தின்படி குடியுரிமை பெறுவதற்குத் தேவையான ஒரு காரணியாக சமயம் வெளிப்படையாகக் குறிப்பிடப்பட்டது முதன்முறையாக இச்சட்டத்திருத்தத்தில்தான்.
  • மக்களவையில் இச்சட்டத் திருத்தத்திற்கு ஆதராவாக 311 உறுப்பினர்களும், எதிராக 80 உறுப்பினர்களும் வாக்களித்ததால் இச்சட்ட திருத்த மசோதா நிறைவேறியது.
  • மாநிலங்களவையில் இச்சட்டத் திருத்த மசோதா 10 டிசம்பர் 2019 அன்று அறிமுகப்படுத்தப்பட்ட போது, மசோதாவிற்கு ஆதரவாக 125 உறுப்பினர்களும், எதிராக 105 உறுப்பினர்களும் வாக்களித்ததால் சட்ட திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டது.
  • இச்சட்டத்திருத்த மசோதாவிற்கு இந்தியக் குடியரசுத் தலைவர் 12 டிசம்பர் 2019 அன்று ஒப்புதல் அளித்ததால், இது சட்டமாக உடனடியாக நடைமுறைக்கு வந்தது


குடியுரிமை சட்டத்திருத்தத்தின் முக்கிய அம்சங்கள்

  1. பாகிஸ்தான், வங்காளதேசம், ஆப்கானித்தான் நாடுகளிலிருந்து இந்தியாவில் குடியேறிய இசுலாமியர் அல்லாத இந்துக்கள், சீக்கியர்கள், சமணர்கள், பௌத்தர்கள், பார்சிகள் மற்றும் கிறித்தவர்களுக்கு இந்தியக் குடியுரிமை வழங்குவதற்கு வழிவகை செய்கிறது.
  2. தற்போது தொடர்ந்து 5 ஆண்டுகள் இடையீடுயின்றி இந்தியாவில் வாழ்ந்தவர்களுக்கு மட்டும் இந்தியக் குடியுரிமை வழங்கப்படுகிறது.
  3. தற்போதைய குடியுரிமை சட்டத் திருத்தத்தில் 5 ஆண்டுகள் இந்தியாவில் தொடர்ந்து வாழும் இசுலாமியர் அல்லாதவர்களுக்கு இந்தியக் குடியுரிமை வழங்க வகை செய்கிறது.
  4. இந்த சட்ட திருத்த மசோதா, 1955 இந்தியக் குடியுரிமைச் சட்டத்தில் சில சட்டத் திருத்தங்கள் மேற்கொள்ள வகை செய்கிறது.
  5. உள்நாட்டு நுழைவுச் சீட்டு மூலம் பாதுகாக்கப்பட்டு வரும் அருணாசலப் பிரதேசம், நாகாலாந்து, மிசோரம் ஆகிய மாநிலங்களுக்கு இச்சட்டத் திருத்தத்தில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
  6. இந்த குடியுரிமை சட்ட திருத்தம் ஜனவரி 10,2020 அன்று அமலுக்கு வந்தது என்று இந்திய அரசு அரசாணை வெளியிட்டது.


பின்னணி

  1. இந்தியாவில் குடியுரிமையானது 1955 ஆம் ஆண்டு குடியுரிமைச் சட்டத்தால் கட்டுப்படுத்தப் படுகின்றது.
  2. இந்தக் குடியுரிமைச் சட்டமானது இதுவரை 1986, 1992, 2003, 2005 மற்றும் 2016 போன்ற ஆண்டுகளில் திருத்தப் பட்டுள்ளன.
  3. இச்சட்டமானது பிறப்பின் மூலம், மரபு வழியின் மூலம், பதிவு செய்தல் மூலம், இயல்புரிமை மூலம் மற்றும் மற்ற பகுதிகளை இந்தியாவுடன் இணைப்பதன் மூலம் ஆகிய ஐந்து முறைகளின் வாயிலாக இந்தியாவில் குடியுரிமையைப் பெறலாம் என்று குறிப்பிடுகின்றது.
  4. இருப்பினும், சட்ட விரோதமாகக் குடியேறியவர்கள் இந்தியக் குடிமக்களாக மாற முடியாது.
  5. தற்பொழுது திருத்தப்பட்ட இந்தச் சட்டமானது சட்ட விரோதமாக குடியேறுபவர்களை வரையறுக்கின்றது.

No comments:

Post a Comment

Featured Post

CURRENT AFFAIRS IN TAMIL NOVEMBER 2024 (13.11.2024)

முதல் அனைத்து பெண்கள் சிஐஎஸ்எஃப் படைப்பிரிவு மத்திய அரசு அனுமதி : ஆயிரத்துக்கும் மேற்பட்ட காவலா்களுடன் நாட்டின் முதல் அனைத்து பெண்கள் மத்திய...