தேசிய குடிமக்கள் பதிவேடு (NRC)
தேசியக் குடிமக்கள் பதிவேடு (NRC - National Register of Citizens) என்பது உண்மையான இந்தியக் குடிமக்கள் யார் என்பதை முடிவு செய்வதற்கான இந்தியக் குடிமக்களின் பட்டியல் ஆகும். இந்தப் பட்டியலில் இடம் பெறாதவர்கள் சட்டவிரோத குடியேறிகளாக கருதப்படுவார்கள்.
1951 ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி நாடெங்கிலும் 1951-ல் முதலாவது பட்டியல் தயாரிக்கப்பட்டது.
இந்திய விடுதலைக்குப் பிறகும் (1948), வங்கதேசப்போரின் போதும் (1971), வங்கதேசத்தில் இருந்து இந்தியாவுக்குள் சட்டவிரோதமாகக் குடியேறி அஸ்ஸாமில் லட்சக்கணக்கானோர் வசித்து வந்தனர்.
வங்கதேசத்திலிருந்தும், பாகிஸ்தானிலிருந்தும் சட்டவிரோதமாக இந்தியாவில் நுழைந்து வாழ்பவர்களை அடையாளம் காண்பதற்காக மேற்கொள்ளப்படும் இந்த நடவடிக்கை நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் மேற்கொள்ளப்படுகிறது.
1951-ஆம் ஆண்டும் தயாரிக்கப்பட்ட தேசிய குடிமக்கள் பதிவேட்டை புதுப்பிக்கும் பணி உச்சநீதிமன்ற உத்தரவுப்படி கடந்த 2013-ஆம் ஆண்டு தொடங்கியது.
அதன்படி, 1971-ஆம் ஆண்டு மார்ச் 24-ஆம் தேதிக்கு முன் இந்தியாவில் குடியேறியவர்களை மட்டும் தேசிய குடிமக்கள் பதிவேட்டில் சேர்ப்பதற்கு முடிவு செய்யப்பட்டது. அதன்படி, கடந்த 1971-ஆம் ஆண்டு மார்ச் 24-ஆம் தேதிக்கு முன் இந்தியாவில் வசித்ததற்கான ஆதாரத்தைச் சமர்ப்பிக்க வேண்டும்.
தேசிய குடிமக்கள் பதிவேட்டில் (என்ஆர்சி) இந்தியக் குடிமக்களைப் பற்றிய விவரங்கள் இடம்பெற்றிருக்கும், இந்தியக் குடியுரிமை பெற வேண்டுமெனில், தொடர்புடைய துறை அதிகாரிகளிடம் குடியுரிமைக்கான ஆதாரத்தை அளிக்க வேண்டும்.
தேசியக் குடியுரிமைப் பதிவேடு (National Register of Citizens - (NRC) இந்தியக் குடியுரிமைச் சட்டம் 1955, தேசியக் குடியுரிமை (திருத்தச்) சட்டம், 2003 மற்றும் 2019 இந்தியக் குடியுரிமை திருத்தச் சட்டத்தின்படியும் தேசியக் குடியுரிமைப் பதிவேட்டை இந்தியா முழுமைக்கும் பராமரிக்க இந்திய அரசு டிசமபர் 2019-இல் முடிவு செய்தது.
அசாம் தேசிய குடிமக்கள் பதிவேடு
1951-ஆம் ஆண்டின் மக்கட்தொகை கணக்கெடுப்பை அடிப்படையாகக் கொண்டு அசாம் தேசிய குடிமக்கள் பதிவேடு பராமரிக்கப்பட்டது. இருப்பினும் 1951க்கு பின்னர் அசாமில் தேசிய மக்கள் தொகை பதிவேடு பராமரிக்கப்படவில்லை.
இதனால் அசாமில் குடியேறிய வெளிநாட்டு கள்ளக் குடியேறிகளை அடையாளம் கண்டறிந்து வெளியேற்றுவதற்கு 2005-இல் இந்திய உச்ச நீதிமன்றத்தின் அறிவுறுத்தலின் படி, இந்திய அரசு 2005-ஆம் ஆண்டு முதல் அசாம் மாநிலத்தில் மட்டும் தேசியக் குடியுரிமைப் பதிவேட்டை தொடர்ந்து பராமரிக்க முடிவு செய்தது.
2013-இல் இந்திய உச்ச நீதிமன்றம் இவ்விஷயத்தில் தலையிட்டு, அசாமில் தேசியக் குடியுரிமைப் பதிவேட்டை பராமரிப்பை மேற்பார்வையிடவும், கண்காணிக்கவும் ஒரு குழுவை நியமித்தது. இறுதியா அசாம் தேசிய குடிமக்கள் பதிவேடு 31 ஆகஸ்டு 2019-இல் வெளியிடப்பட்டது. அசாமில் வாழ்ந்த 33 மில்லியன் (3.30 கோடி) மக்களில் 1.9 மில்லியன் (19 இலட்சம்) மக்கள் அசாம் குடிமக்கள் பதிவேட்டில் இடம் பெறவில்லை.
D - வாக்காளர்
D - வாக்காளர் என்பது 'சந்தேகத்திற்குரிய வாக்காளர்' அல்லது 'ஐயமுள்ள வாக்காளர்' என்று பொருள். சரியான குடிமக்கள் சான்றிதழ் இல்லாததால் அரசாங்கம் இவர்களுடைய வாக்குரிமையைப் பறித்து 'D - வாக்காளர்' என்று இவர்களை வகைப்படுத்தியுள்ளது. NRC கணக்கெடுப்பின் போது சுமார் 48 லட்சம் மக்கள் 'D அடையாள அட்டையைப் பெற்றுள்ளனர்.
வெளிநாட்டினராக அறிவிக்கப்பட்டவர்கள்
வெளிநாட்டினருக்கான சட்டத்தின் கீழ் சிறப்புத் தீர்ப்பாயங்களினால் 'D- வாக்காளர்கள்' விசாரிக்கப்படுகிறார்கள்.
இவர்கள் குடிமக்கள் உரிமை கோரிக்கையை அந்தத் தீர்ப்பாயங்களில் நிரூபிக்கத் தவறினால், அவர்கள் 'வெளிநாட்டவராக' அறிவிக்கப்படுவார்கள்.
அவ்வாறு அறிவிக்கப்பட்டவர்கள் நாட்டில் உள்ள 6 தடுப்புக் காவல் முகாம்களில் ஏதாவது ஒன்றிற்கு அனுப்பப்படுவார்கள். இந்த தடுப்புக் காவல் முகாம்கள் குற்றவாளிகளுக்காகவும் நாடு கடத்தப்பட்டவர்களுக்காகவும் சிறைச் சாலைகளுக்குள்ளே அமைந்திருக்கும்.
2017 ஆம் ஆண்டு டிசம்பர் 31 ஆம் தேதியின்படி 91,206 நபர்கள் வெளிநாட்டினராக அறிவிக்கப்பட்டுள்ளனர்.
குடியுரிமை
அஸ்ஸாம் ஒப்பந்தத்திற்கு பின்பு 1966 ஆம் ஆண்டு ஜனவரி 1க்கு முன்பு வங்காள தேசத்திலிருந்து வந்த இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்களுக்கு இந்தியக் குடியுரிமை வழங்குவதற்காக குடியுரிமைச் சட்டம் 1955 திருத்தப்பட்டது.
1966 ஆம் ஆண்டு ஜனவரி 1 முதல் 1971 ஆம் ஆண்டு மார்ச் 25 வரையிலான இடைப்பட்ட காலத்தில் வங்காள தேசத்திலிருந்து இந்தியாவிற்கு வந்தவர்கள், இந்தியக் குடியுரிமையைப் பெற மாநிலத்தில் தங்களைப் பதிவு செய்து, 10 ஆண்டுகள் அங்கு தங்கியிருக்க வேண்டும்.
1971 ஆம் ஆண்டு மார்ச் 25க்குப் பிறகு வந்தவர்கள் நாடுகடத்தப்படுவார்கள்.
தேசியக் குடிமக்கள் பதிவேடு - இறுதி வரைவு
2018 ஆம் ஆண்டு ஜூலை 30-ம் தேதி அஸ்ஸாம் மாநில அரசானது இறுதி தேசியக் குடிமக்கள் பதிவேட்டின் வரைவை வெளியிட்டது.
இந்த வரைவின்படி, 3.29 கோடி மக்களுள் 2.9 கோடி மக்கள் தேசியக் குடிமக்கள் பதிவேட்டில் இணைப்பதற்கு தகுதியுடையவர்கள் என்று கண்டறியப்பட்டுள்ளது.
இந்தப் பதிவேட்டில் சேர்க்கப்படாத 07 லட்சம் மக்கள் 'சட்ட விரோத குடியேறிகளாக' அறிவிக்கப்பட்டுள்ளனர்.
உண்மையான இந்தியக் குடிமக்களின் பெயர்களை இணைப்பதற்காக 1971 ஆம் ஆண்டு மார்ச் 24 ஆம் தேதியை குறிப்பு தினமாகக் கொண்டு, 1951 ஆம் ஆண்டிற்குப் பிறகு தேசியக் குடிமக்கள் பதிவேடு திருத்தம் செய்யப்பட்ட முதலாவது மாநிலம் அஸ்ஸாம் ஆகும்.
முதலாவது தேசியக் குடிமக்கள் பதிவேடானது 2018 ஆண்டின் தொடக்கத்தில் டிசம்பர் 31 மற்றும் ஜனவரி 1க்கு இடைப்பட்ட நள்ளிரவில் 9 கோடி மக்களின் பெயர்களுடன் வெளியிடப்பட்டது.
No comments:
Post a Comment