TODAY CURRENT AFFAIRS IN TAMIL 01.01.24:
எக்ஸ்போசாட்’ (எக்ஸ்-ரே போலாரிமீட்டா் சாட்டிலைட்)
- 2024ம் ஆண்டின் முதல் செயற்கைக்கோளான எக்ஸ்போ சாட் செயற்கைக்கோள் பிஎஸ்எல்வி சி 58 ராக்கெட் மூலம், ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தின் முதலாவது ஏவுதளத்தில் இருந்து 01.01.24 வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது
- விண்வெளியில் உள்ள கருந்துளை, நியூட்ரான் நட்சத்திரங்களின் செயல்பாட்டை ஆய்வு செய்வதற்காக இஸ்ரோ சாா்பில் ‘எக்ஸ்போசாட்’ (எக்ஸ்-ரே போலாரிமீட்டா் சாட்டிலைட்) எனும் அதிநவீன செயற்கைக்கோளை இஸ்ரோ வடிவமைத்துள்ளது.
- அந்தச் செயற்கைக்கோள் மொத்தம் 469 கிலோ எடை கொண்டது. ஐந்து ஆண்டுகள் ஆயுட்காலம் கொண்ட எக்ஸ்போசாட், பூமியில் இருந்து சுமாா் 650 கி.மீ. தொலைவில் நிலைநிறுத்தப்பட்டு ஆய்வு நடவடிக்கைகளை முன்னெடுக்க உள்ளது.
- இதற்காக ‘எக்ஸ்பெக்ட்’ (எக்ஸ்ரே ஸ்பெக்ட்ரோகிராபி), ‘போலிக்ஸ்’ (எக்ஸ்ரே போலாரிமீட்டா்) ஆகிய 2 சாதனங்கள் அதில் பொருத்தப்பட்டுள்ளன.
- இவை விண்வெளியில் வியாபித்துள்ள ஊடுகதிா்களின் (எக்ஸ்-ரே) துருவ அளவு மற்றும் கோணத்தை அளவிடுதல், நியூட்ரான் நட்சத்திரத்தில் இருந்து வெளிப்படும் கதிரியக்கம், கருந்துளை வாயுக்களின் திரள் (நெபுலா) உள்பட பல்வேறு அம்சங்களை ஆராயும்.
- இதைத் தவிர, பிஎஸ்எல்வி ராக்கெட்டின் நான்காம் நிலையான பிஎஸ் 4 பகுதியில் 10 ஆய்வுக் கருவிகள் இணைத்து அனுப்பப்பட உள்ளன. இவை செயற்கைக்கோள் நிலைநிறுத்தப்பட்ட பின்பு புவி தாழ்வட்டப் பாதைக்கு வந்து ஆய்வுகளை மேற்கொள்ளும். ஏற்கெனவே விண்வெளியில் நட்சத்திரங்களின் செயல்பாட்டை ஆராய்வதற்காக இஸ்ரோ அனுப்பிய அஸ்ட்ரோசாட் செயற்கைக்கோளின் தொடா்ச்சியாக இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.
கின்னஸ் சாதனை :
- குஜராத்தில் ஒரே நேரத்தில் சுமார் 4 ஆயிரம் பேர் சூரிய நமஸ்காரம் செய்து கின்னஸ் புத்தகத்தில் சாதனை படைத்துள்ளனர்.
- ஆங்கிலப் புத்தாண்டையொட்டி குஜராத்தின் மோதராவில் 51 வெவ்வேறு ஊர்களில், 108 இடங்களில் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் ஒரே நேரத்தில் சூரிய நமஸ்காரம் செய்துள்ளனர்.
சைபா் ஸ்வச்தா கேந்திரா:
- ‘எண்ம இந்தியா’ முன்னெடுப்பின் ஒரு பகுதியாக பொது மக்களுடைய எண்ம சாதனங்களின் இணைய பாதுகாப்புக்கு ‘சைபா் ஸ்வச்தா கேந்திரா’ என்ற வலைதளத்தை மத்திய அரசு அறிமுகப்படுத்தியிருக்கிறது.
- நாட்டில் பாதுகாப்பான இணைய (சைபா்) சுற்றுச்சூழலை உருவாக்க கொண்டு வரப்பட்ட தேசிய சைபா் பாதுகாப்பு கொள்கையின் அடிப்படையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்த வலைதளத்தை மத்திய மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின்கீழ் இந்திய கணினி அவசரநிலை உதவிக் குழு (சொ்ட்-இன்) அமைப்பு நிா்வகிக்கிறது.
- இணையத்தில் மனித செயல்பாடுகளைப் பின்பற்றி, அதேபோன்று தானியங்கி பணிகளை கணினி உள்ளிட்ட எண்ம சாதனங்களில் மேற்கொள்வதற்கு நிரல்கள் வடிவமைக்கப்பட்ட மென்பொருள் அமைப்பு ‘பாட்’ எனப்படுகிறது. இணையவெளியில் ‘பாட்’ அபாயத்தைக் கண்டறிந்து தடுக்கும் வகையில், அதற்கு எதிரான பாதுகாப்பு அமைப்புகளை பயனா்களுக்கு அறிவித்து, பாதுகாப்பான இந்திய சைபா் தளத்தை உருவாக்க இந்த வலைதளம் உறுதிப்பூண்டுள்ளது.
மத்திய அரசு தரச்சான்று:
- திருக்கோயில்களின் பிரசாதம் மற்றும் அன்னதான உணவுகள் சுத்தமாகவும், சுகாதாரமாகவும் தயாரிப்பதை உறுதிப்படுத்தி மத்திய அரசு சாா்பில் 523 கோயில்களுக்கு இதுவரையில் தரச்சான்று வழங்கப்பட்டுள்ளது.
ஜப்பானின் சக்திவாய்ந்த நிலநடுக்கம் :
- ஜப்பானின் மேற்குப் பகுதியில் 01.01.2024 பகல் 12 மணிக்கு மேல் ரிக்டர் அளவில் 3.5 முதல் 7.6 வரை அடுத்தடுத்து 10-க்கும் அதிக முறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக ஜப்பான் நிலநடுக்கவியல் மையம் தெரிவித்துள்ளது.
- ஜப்பான் தலைநகர் டோக்கியோ உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட நகரங்களில் இண்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. ஹோன்ஷு அருகே 13 கிலோ மீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதால் இஷிகாவா, நிகாடா, டோயாமா மற்றும் யமகட்டா பகுதியில் உள்ள கடலில் 5 மீட்டர் உயரத்துக்கு அலைகள் எழும் என்று சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சுனாமி எச்சரிக்கையை தொடர்ந்து, கடலோரப் பகுதிகளில் உள்ள மக்கள் வேகமாக வெளியேற அந்நாட்டு அரசு அறிவுறுத்தியுள்ளது.
ஜனவரி 1 - உலகளாவிய குடும்ப தினம் 2024 / GLOBAL FAMILY DAY 2024
உலகளாவிய குடும்ப தினம் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 1 அன்று கொண்டாடப்படுகிறது.
குடும்பங்கள் என்ற எண்ணத்தின் மூலம் நாடுகள் மற்றும் கலாச்சாரங்களில் ஒற்றுமை, சமூகம் மற்றும் சகோதரத்துவ உணர்வை இந்த நாள் உருவாக்குகிறது
1997 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் பொதுச் சபையால் இந்த நாள் கொண்டாடப்பட்டது.
இந்த உலகளாவிய குடும்ப தினம் 1999 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபை மற்றும் உறுப்பு நாடுகளால் கொண்டாடப்பட்டது.
2024 ஆம் ஆண்டிற்கான இந்த நாளின் கருப்பொருள் 'குடும்பங்கள் ஒன்றாக: ஒளிமயமான எதிர்காலத்திற்கான பின்னடைவை உருவாக்குதல்' என்பதாகும்.
TODAY CURRENT AFFAIRS IN TAMIL 2023
TODAY CURRENT AFFAIRS 2023 IN TAMIL |
TNPSC CURRENT AFFAIRS DECEMBER 2023 |
விருதுகள் கௌரவங்கள் 2023 :
LIST OF IMPORTANT DAYS AND DATES IN OCTOBER 2023 IN TAMIL :
- இந்திய தேசிய தினங்கள் முக்கிய நாட்கள் மற்றும் தேதிகள் பட்டியல்
- யுனெஸ்கோவில் அனுசரிக்கப்படும் சர்வதேச தினங்கள்
- 2023 ஆம் ஆண்டின் தமிழ் முக்கிய நாட்கள் மற்றும் தேதிகள் பட்டியல்
SUMMITS AND CONFERENCES 2023 IN TAMIL: