TODAY CURRENT AFFAIRS IN TAMIL 19.12.2023:
தபால் அலுவலக மசோதா 2023 நாடாளுமன்றத்தில் நிறைவேற்றம்:
125 ஆண்டுகள் பழைமையான இந்திய தபால் அலுவலக சட்டத்துக்குப் பதிலாக புதிய சட்டத்தைக் கொண்டுவரும் வகையில், தபால் அலுவலக மசோதாவை மத்திய அரசு கொண்டு வந்தது.
இந்த மசோதாவின்படி நாட்டின் பாதுகாப்பு, வெளிநாடுகள் உடனான நட்புறவு, அவசரநிலை, பொதுமக்கள் பாதுகாப்பு, சட்ட மீறல் ஆகியவற்றைக் கருத்தில்கொண்டு, தபால் அலுவலகம் மூலம் அனுப்பப்படும் கடிதம், பொருள் உள்ளிட்டவற்றை இடைமறிக்க, திறந்து பாா்க்க அல்லது நிறுத்திவைக்க எந்தவொரு அதிகாரிக்கும் மத்திய அரசு அதிகாரம் வழங்கலாம்.
கடந்த டிச.4-ஆம் தேதி இந்த மசோதா மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டது
உ.பி.யில் 57 சைபர் கிரைம் காவல் நிலையங்கள் திறக்க அமைச்சரவை ஒப்புதல்:
உத்தரப் பிரதேசத்தில் 57 சைபர் கிரைம் காவல் நிலையங்களைத் திறக்க அமைச்சரவை செவ்வாய்க்கிழமை ஒப்புதல் அளித்துள்ளது. இதுதொடர்பாக முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டதாக நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் சுரேஷ் கன்னா தெரிவித்தார்.
காசியாபாத், ரேபரேலி, சீதாப்பூர், ஹர்தோய், கான்பூர், தேஹாத், எட்டாவா, பாக்பத், பாரபங்கி, மைன்புரி மற்றும் ராம்பூர் உள்ளிட்ட மாநிலத்தில் 57 மாவட்டங்களில் சைபர் கிரைம் காவல் நிலையங்களை நிறுவ அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது
ஆஸ்கருக்குத் தேர்வானது ஃபேஸ் ஆஃப் தி ஃபேஸ்லெஸ்:
வின்.சி இயக்கத்தில் மலையாளத்தில் வெளியான ‘ஃபேஸ் ஆஃப் தி ஃபேஸ்லெஸ்’ திரைப்படம் விமர்சகர்களிடையே வரவேற்பைப் பெற்றது. நடிகை வின்சி அலோசியஸ் நாயகியாக நடித்திருந்தார். இந்நிலையில், இப்படம் சிறந்த பாடல் பிரிவில் 2024 ஆஸ்கர் விருதுக்கான தகுதிச் சுற்றுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
ஓராண்டில் 10 கோடி பேர் பயணம்செய்த முதல் இந்திய விமான நிறுவனம்:
ஓராண்டில் 10 கோடி பேர் பயணம்செய்த முதல் இந்திய விமான நிறுவனம் என்ற பெருமையை இண்டிகோ பெற்றுள்ளது. கடந்த 2022 ஆம் ஆண்டில் இண்டிகோ விமானத்தில் 7.8 கோடி பேர் பயணித்துள்ளனர். இதையடுத்து புதிய மைல்கல்லாக இண்டிகோ விமானம், நடப்பாண்டில் இதுவரை 10 கோடி பேரை ஏற்றிச் சென்று புதிய சாதனை படைத்துள்ளது. பயணிகளின் எண்ணிக்கை கடந்த ஆண்டைவிட 22% அதிகம்.
2023-ல் 125 பில்லியன் டாலர்களுடன் உலக அளவில் பணம் அனுப்பும் பட்டியலில் இந்தியா முதலிடத்தில் உள்ளது: உலக வங்கி அறிக்கை
முதல் ஐந்து நாடுகள்:
- இந்தியா (125 பில்லியன் டாலர்கள்)
- மெக்சிகோ (67 பில்லியன் டாலர்கள்),
- சீனா (50 பில்லியன் டாலர்கள்),
- பிலிப்பைன்ஸ் (40 பில்லியன் டாலர்கள்)
- எகிப்து (24 பில்லியன் டாலர்கள்)
NHAI ஆனது NHAI ERS (Emergency Response System) மொபைல் அப்ளிகேஷனை வெளியிட்டது:
Computer Aided Dispatch System உடன் இணைந்து, NHAI ஆனது NHAI ERS (Emergency Response System) மொபைல் அப்ளிகேஷனை வெளியிட்டது. ஒருங்கிணைந்த தளமாகச் செயல்படும் இந்தப் பயன்பாடு, ஆன்-ரோடு யூனிட்டுகளுக்கு அனுப்புதல் தொடர்பான தகவல்களைச் சீராக அனுப்ப உதவுகிறது.
மொபைல் தொழில்நுட்பத்தை மேம்படுத்துதல், NHAI நோக்கமானது அவசரகால சூழ்நிலைகளின் போது தகவல் தொடர்பு மற்றும் ஒருங்கிணைப்பை மேம்படுத்துதல், இறுதியில் அவசரகால பதிலளிப்பு குழுக்களின் செயல்திறனை மேம்படுத்துகிறது.
உலகின் மிகப்பெரிய தியான மையம்:
உலகின் மிகப்பெரிய தியான மையமான ஸ்வர்வேத மகாமந்திர் என்ற பெயரில் வாரணாசியின் உமராஹா பகுதியில் தொடங்கப்பட்டுள்ளது.
ஏழு மாடிகளுடன் ஒரே நேரத்தில் 20,000 பேர் அமர்ந்து தியானம் செய்யுமாறு கட்டப்பட்டுள்ளது.
பாசினி / Bhashini AI Translates
வாரணாசி நடைபெறும் காசி-தமிழ் சங்க நிகழ்ச்சியில் பிரதமர் மோடியின் உரையாடலை மொழிபெயர்க்க பாசினி என்னும் இந்திய மொழி AI கருவி பயன்படுத்தப்பட்டது.
அஸ்ட்ரா சக்தி-2023 பயிற்சி
சூர்யலங்கா விமானப்படை தளத்தில் நடைபெற்ற அஸ்ட்ரா சக்தி-2023 பயிற்சியில் சமர் (SAMAR) வான் பாதுகாப்பு ஏவுகணை கருவிகள் வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டதாக இந்திய விமானப்படை (IAF) அறிவித்துள்ளது.
2022-ல் உணவு கலப்படம் தொடர்பான வழக்கு:
தேசிய குற்ற ஆவணக் காப்பகமானது வெளியிட்டுள்ள 2022-ல் உணவு கலப்படம் தொடர்பான வழக்கு அறிக்கையில் ஹைதராபாத் முதலிடம் பிடித்துள்ளது.
துபையில் ஐபிஎல் 2024-ஆம் ஆண்டுக்கான மினி ஏலம் 19.12.2023 தொடங்கி நடைபெற்று வருகின்றன. சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், குஜராத் டைட்டன்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத், பஞ்சாப் கிங்ஸ், தில்லி கேபிடல்ஸ், லக்னெள சூப்பர் ஜெயிண்ட்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு ஆகிய 10 அணிகளும் இந்த மினி ஏலத்தில் பங்கேற்றுள்ளனர்.
மொத்தம் 77 இடங்களுக்கு 333 வீரர்கள் ஏலத்தில் தங்களின் பெயர்களை கொடுத்துள்ளனர். அதில், 214 இந்திய வீரர்கள், 119 வெளிநாட்டு வீரர்கள் ஆவர்.
ஆஸ்திரேலியா கேப்டன் பாட் கம்மின்ஸ் ரூ.20.5 கோடிக்கு சன் ரைசர்ஸ் ஹதராபாத் அணி ஏலமெடுத்தது.
இந்நிலையில் மிட்செல் ஸ்டார்க் கம்மின்ஸை விட அதிக விலைக்கு ஏலம் எடுக்கப்பட்டுள்ளார். ரூ.24.75 கோடிக்கு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி ஏலத்தில் எடுத்தது.
இதுவரை ஐபிஎல்-இல் அதிக தொகைக்கு ஏலம் எடுக்கப்பட்டவர்கள்:
- மிட்செல் ஸ்டார்க்- ரூ. 24.75 கோடி
- பாட் கம்மின்ஸ் ரூ.20.5 கோடி
- சாம் கரண் ரூ.17.5 கோடி
- கேமரூன் கிரீன் ரூ.17.50
கோவாவின் விடுதலை நாள் ஆண்டுதோறும் டிசம்பர் 19 அன்று கொண்டாடப்படுகிறது. இந்த தேதியில் 1961 இல், கோவா இராணுவ நடவடிக்கை மற்றும் விரிவாக்கப்பட்ட சுதந்திர இயக்கத்திற்குப் பிறகு போர்த்துகீசிய ஆதிக்கத்திலிருந்து விடுவிக்கப்பட்டது.
போர்ச்சுகீசிய ஆட்சியில் இருந்து கோவா விடுதலை பெற உதவிய இந்திய ஆயுதப்படைகளின் நினைவாக இந்த நாள் கொண்டாடப்படுகிறது.
நடப்பு விவகார வினாடிவினா - டிசம்பர், 2023/Current Affairs Quiz - December, 2023
விருதுகள் கௌரவங்கள் 2023 :
LIST OF IMPORTANT DAYS AND DATES IN OCTOBER 2023 IN TAMIL :
- இந்திய தேசிய தினங்கள் முக்கிய நாட்கள் மற்றும் தேதிகள் பட்டியல்
- யுனெஸ்கோவில் அனுசரிக்கப்படும் சர்வதேச தினங்கள்
- 2023 ஆம் ஆண்டின் தமிழ் முக்கிய நாட்கள் மற்றும் தேதிகள் பட்டியல்
SUMMITS AND CONFERENCES 2023 IN TAMIL:
No comments:
Post a Comment