பகுதி – (ஆ) – இலக்கியம்
சீறாப்புராணம்
தமிழில் எழுதப்பட்ட தலைச்சிறந்த இசுலாமிய இலக்கியம் சீறாப் புராணம் ஆகும். இந்நூல் இறைதூதர் நபிகள் நாயகத்தின் வாழ்க்கை வரலாற்றை மையமாகக் கொண்டு தமிழ்மரபுகளைப் பின்பற்றி எழுதப்பட்ட ஒரு காவியம். இதனை இயற்றியவர் 17-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த உமறுப் புலவர் ஆவார். அதே காலத்தில் வாழ்ந்த வள்ளல் சீதக்காதி , அபுல்காசிம் ஆகியோரின் ஆதரவை உமறுப் புலவர் பெற்றார். வள்ளல் சீதக்காதியின் பெருமையைச் "செத்தும் கொடுத்தான் சீதக்காதி" என்ற சொற்றொடர் விளக்கும்.
இதன் ஆசிரியரான உமறுப்புலவர், இந்நூலை முழுவதும் முடிப்பதற்கு முன்பே இயற்கை எய்திய காரணத்தால், இதன் தொடர்ச்சியாக சின்னசீறா என்னும் நூலினை பனி அகமது மரைக்காயர் படைத்துள்ளார்.
இரண்டு பாகங்களில் அமைந்துள்ளது. முதற்பாகத்தில் 45 படலங்களும், இரண்டாவது பாகத்தில் 47 படலங்களும் என நூல் முழுவதும் 92 (45+47) படலங்கள் இடம்பெற்றுள்ளன. இந்நூலில் 5027 பாடல்கள் அமைந்துள்ளன.
ஆசிரியர் குறிப்பு :
- சீறாப் புராணத்தை உமறுப் புலவர் (கி.பி.1642-1703) என்பவர் இயற்றினார்.
- உமறுப் புலவர் பிறந்த ஊர் கீழக்கரை என்றும், நாகலாபுரம் என்றும் இரு வேறு கருத்துகள் உண்டு.
- தந்தை = செய்குமுகமது அலியார் என்னும் சேகு முதலியார்
- உமறுப் புலவரின் ஆசான் கடிகை முத்துப் புலவர் ஆவார்.
- உமறுப் புலவர் மார்க்க மேதை செய்கு சதக்கத்துல்லா அப்பாவிடம் காப்பியம் இயற்றக் கருப்பொருள் பெற்றார்.
- வடநாட்டுப் புலவர் வாலை வாருதியை எட்டையபுரம் அவைக்களத்தில் தன் புலமையால் வென்றார்.
- செய்கு அப்துல் காதிர் மரைக்காயர் என்ற வள்ளல் சீதக்காதியின் வேண்டுகோளின் வண்ணமே உமறுப்புலவர் சீறாப்புராணத்தை எழுதினார்.
- நூல் முடிவுறும் முன்னரே சீதக்காதி மறைந்தார்.
- பின் அபுல் காசிம் என்ற வள்ளலின் உதவியால் சீறாப்புராணம் நிறைவு பெற்றது.
- உமறுப்புலவர் முதுமொழிமாலை என்ற என்பது பாக்களால் ஆன நூலையும் படைத்துள்ளார்.
சீறாப்புராணம் நூல் பெயர்க் காரணம்
- சீறாப் புராணம் = சீறாவைக் கூறும் புராணம்.
- சீறத் என்பது சீறத்துன்னபி என்ற அரபுத் தொடரின் சுருக்கம் ஆகும்.
- இதற்கு நபிகள் நாயகத்தின் வரலாறு என்று பொருள்.
- சீறா என்பது சீறத் என்னும் அரபுச் சொல்லின் தமிழ் வடிவம்.
- புராணம் என்பது பழமையான வரலாறு எனப் பொருள்படும்.
- திருநபி அவர்களின் வரலாற்றைக் கூறும் புராணம் என்பது இதன் பொருள்.
சீறாப்புராணம் நூல் குறிப்பு
- இந்நூலில் 3 காண்டங்களும், 92 படலங்களும் உள்ளன.
- பாவகை = விருத்தப்பா
- காண்டங்கள் = 3
- விலாத்துக் காண்டம் (பிறப்பியல் காண்டம்) = 24 படலங்கள்
- நுபுவ்வத்துக் காண்டம் (செம்பொருள் காண்டம்) = 21 படலங்கள்
- இசிறத்துக்காண்டம்(ஹிஜிறத்துக் காண்டம்-செலவியல் காண்டம்) = 47 படலங்கள்
- இந்நூல் 2 பாகங்களாக அமைந்துள்ளது.
- முதல் பாகத்தில் 2 காண்டங்களும், 45 படலங்கமும் உள்ளன
- இரண்டாவது பாகத்தில் ஒரு காண்டமும் 47 படலங்களும் அமைந்துள்ளது.
- இந்நூலில் உள்ள மொத்த பாடல்கள் = 5027 பாடல்கள்
- நூலின் முதல் படலம் = கடவுள் வாழ்த்துப் படலம்
- நூலின் இறுதி படலம் = உறனிக் கூட்டத்தார் படலம்
விலாத்துக் காண்டம்
- சீறாப் புராணத்தின் முதல் காண்டம் விலாதத்துக் காண்டம் ஆகும்.
- விலாதத் என்ற அரபுச் சொல்லுக்குப் பிறப்பு என்பது பொருள்.
- இதில் நபிகள் நாயகத்தின் பிறப்பும், இளமையும், தொழில் முயற்சியும் முதலில் கூறப்படுகின்றன.
- பின்னர், கதீஜா நாயகியாரின் உறவு, அவர்கள் திருமணம், பாத்திமா பிறப்பு ஆகிய செய்திகள் கூறப்படுகின்றன.
- இது இருபத்து நான்கு படலங்களைக் கொண்டு உள்ளது.
நுபுவத்துக் காண்டம்
- இது இரண்டாவது காண்டம்.
- நுபுவ்வத் என்ற அரபுச் சொல்லின் பொருள் தீர்க்க தரிசனம் என்பதாகும்.
- இது நபிகள் நாயகம் நபித்துவம் என்னும் நபிப் பட்டம் பெற்றதைப் பாடுகிறது.
- மேலும் தீமைகள் செய்து வந்த குறைசிகள் எனும் குலத்தவரின் கொடுமைகளும் இக்காண்டத்தில் கூறப்பட்டுள்ளன.
- முஸ்லீம்களின் பொறுமையைப் பற்றியும், இசுலாம் உறுதி பெற்றது பற்றியும் இக்காண்டம் தெரிவிக்கிறது.
- இதில் இருபத்தொரு படலங்கள் உள்ளன.
ஹிஜ்ரத்துக் காண்டம்
- இது மூன்றாவது காண்டம். ஹிஜ்ரத் என்ற அரபுச் சொல்லுக்கு இடம் பெயர்தல் என்பது பொருள்.
- இசுலாமிய அறநெறிகளை வளர்க்க மக்காவை விட்டு மதீனா நகர் சென்றார். அங்கு இசுலாமிய அறநெறி வளர்த்த வரலாறும் இக்காண்டத்தில் விவரிக்கப்படுகிறது.
- ஆனால் நபிகள் நாயகத்தின் வாழ்க்கை வரலாறு முடிவுபெறவில்லை.
- உறனிக் கூட்டத்தார் படலத்துடன் முடிகிறது.
- நபிகள் நாயகத்தின் ஐம்பத்தேழாவது வயதுவரை நடந்த நிகழ்ச்சிகளோடு சீறாப் புராணம் நிறைவு அடைகிறது.
- இது நாற்பத்தேழு படலங்களால் ஆனது.
இஸ்லாமிய இரட்டை காப்பியங்கள்
- உமறுப் புலவர் அக்காலத்தில் வாழ்ந்த படிக்காசுப் புலவர். நமசிவாயப் புலவர், கந்தசாமிப் புலவர் ஆகியோரின் நெருங்கிய நண்பர்.
- இவரை ஆதரித்த வள்ளல்கள் இருவர். ஒருவர் சீதக்காதி, இன்னொருவர் பரங்கிப் பேட்டை அபுல்காசிம் மரைக்காயர்
- இஸ்லாமிய இரட்டை காப்பியங்கள் எனப்படுபவை = சீறாப்புராணமும், சின்ன சீறாவும்
சீறாப்புராணம் குறிப்புகள்
- தமிழில் எழுதப்பட்ட தலைச்சிறந்த இலக்கியம் சீறாப் புராணம் ஆகும்.
- இந்நூல் இறைதூதர் நபிகள் நாயகத்தின் வாழ்க்கை வரலாற்றை மையமாகக் கொண்டு தமிழ்மரபுகளைப் பின்பற்றி எழுதப்பட்ட ஒரு காவியம்.
- இதனை இயற்றியவர் 18-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த உமறுப் புலவர் ஆவார். அதே காலத்தில் வாழ்ந்த வள்ளல் சீதக்காதி , அபுல்காசிம் ஆகியோரின் ஆதரவை உமறுப் புலவர் பெற்றார்.
- வள்ளல் சீதக்காதியின் பெருமையைச் “செத்தும் கொடுத்தான் சீதக்காதி” என்ற சொற்றொடர் விளக்கும்.
- இதன் ஆசிரியரான உமறுப்புலவர், இந்நூலை முழுவதும் முடிப்பதற்கு முன்பே இயற்கை எய்திய காரணத்தால், இதன் தொடர்ச்சியாக சின்னசீறா என்னும் நூலினை பனி அகமது மரைக்காயர் படைத்துள்ளார்.
- இசுலாமியக் காப்பியமாக முதலில் தோன்றியது கி.பி. 1648இல் எழுதப்பட்ட கனகாபிசேக மாலை என்னும் நூல் ஆகும்.
- இந்த நூலை 1842ல் அப்துல் காதிர் நெய்னா லெப்பை ஆலிம் முதலில் பதிப்பித்தது வெளியிட்டார். இந்நூலுக்கு செய்கு தம்பி பாவலர் விரிவான உரை எழுதினார்.
சின்ன சீறா
- இந்நூல் விருதப்பாவால் ஆனது
- சீறாப்புராணம், நபிகள் நாயகத்தின் ஐம்பத்தேழு வயதுவரை உள்ள வரலாற்றைத் தெரிவிக்கிறது. சீறாப் புராணம் முடிந்த இடத்திலிருந்து நபிகள் நாயகத்தின் இறப்பு வரையிலான 63 வயது வரையுள்ள வரலாற்றைச் சின்ன சீறா தெரிவிக்கிறது.
- உமறுப் புலவர் இயற்றிய சீறாப்புராணம் முழுமை பெறவில்லை. இக்குறையை நிறைவு செய்ய ஏறத்தாழ 30 ஆண்டுகளுக்குப் பிறகு தோன்றியதே சின்ன சீறா.
- இது பனீ அகமது மரைக்காயர் என்பவரால் பாடப்பெற்றது.
- இதைச் சீறாப் புராணத்தின் தொடர்ச்சியாக 30 படலங்களில் 1823 பாடல்களில் பாடி முடித்துள்ளார். சின்ன சீறாவில் உள்ள பாடல்கள் விருத்தப் பாவில் அமைந்துள்ளன.
- இந்நூல் நபிகள் நாயகத்தின் கடைசி ஆறு ஆண்டுகள் நிகழ்ந்த நிகழ்ச்சிகளைப் பாடுகிறது.
- நபிகள் நாயகம் ஒன்பது பிற நாட்டு மன்னர்களோடு கொண்ட கடிதத் தொடர்பைப் பற்றியும், அவர்களை இசுலாத்தில் சேர அழைத்ததைப் பற்றியும் சின்ன சீறாவில் காணலாம்.
No comments:
Post a Comment