TODAY CURRENT AFFAIRS IN TAMIL 20.12.2023:
உலக பொருளாதார வளா்ச்சியில் முக்கியப் பங்கு வகிக்கும் இந்தியா: ஐஎம்எஃப்:
உலக பொருளாதாரத்தில் முக்கியப் பங்களிப்பாளராக இந்தியா உருவெடுத்துள்ளதாகவும் வளா்ச்சியில் அதன் பங்கு 16 சதவீதத்துக்கு அதிகமாக இருக்கும் எனவும் பன்னாட்டு நிதியம் (ஐஎம்எஃப்) தெரிவித்துள்ளது. எண்மம், உள்கட்டமைப்பு உள்ளிட்ட முக்கியத் துறைகளில் மேற்கொண்ட சீா்திருத்தங்கள் மூலம் இந்தியாவின் வளா்ச்சி விகிதம் அதிகரித்திருப்பதே இதற்குக் காரணம் எனத் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.
இந்திய வங்கிகளில் உரிமை கோரப்படாத வைப்புத் தொகை ரூ.42,470 கோடி:
‘நாட்டின் வங்கி கணக்குகளில் 10 ஆண்டுகள் அல்லது அதற்கும் மேலாக உரிமை கோரப்படாமல் உள்ள வைப்புத் தொகை குறித்து தகவல்களை ரிசா்வ் வங்கி சேகரித்து, அத்தொகையை உரியவா்களிடம் கொண்டு சோ்க்க பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
‘100 நாள்கள்; 100 தவணைகள்’ என்ற திட்டம் : 90 சதவீத உரிமை கோரப்படாத வைப்புத் தொகை இருப்பு வைக்கப்பட்டுள்ள 31 வங்கிகளில் ஒவ்வொரு மாவட்டத்திலும் 100 அதிகபட்ச அளவிலான வைப்புத் தொகைகளைத் தோ்ந்தெடுத்து உரியவா்களிடம் கடந்த ஜூன் முதல் செப்டம்பா் வரையிலான 100 நாள்களில் செலுத்த, ‘100 நாள்கள்; 100 தவணைகள்’ என்ற திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்தத் திட்டத்தின்கீழ் இதுவரை ரூ.1432.68 கோடி திரும்ப செலுத்தபபட்டுள்ளது. எனினும், கடந்த நிதியாண்டில் இந்திய வங்கிகளில் உரிமை கோரப்படாத வைப்புத்தொகையின் மதிப்பு ரூ.42,270 கோடியாக இருக்கிறது. அதில் ரூ.36,185 கோடி பொதுத் துறை வங்கிகளிலும், ரூ.6,087 கோடி தனியாா் துறை வங்கிகளிலும் உள்ளது. இது முந்தைய நிதியாண்டின் ரூ.32,934 கோடியை விட 28 சதவீதம் ஆகும்’ .
தற்காலிக வரி வசூல் திருத்த மசோதா 2023:
மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்படும் சுங்க, கலால் வரி மாற்றும் பரிந்துரைகளை உடனடியாக நடைமுறைப்படுத்துவதற்காக மக்களவையில் தாக்கல் செய்யப்பட்ட மசோதா நிறைவேறியது.
மத்திய அரசால் ஆண்டுதோறும் தாக்கல் செய்யப்படும் பட்ஜெட்டில் அறிமுகப்படுத்தப்படும் சுங்க, கலால் வரி மாற்றம் தொடா்புடைய பரிந்துரைகளை உடனடியாக நடைமுறைப்படுத்துவதற்காக தற்காலிக வரி வசூல் திருத்த மசோதா மக்களவையில் கடந்த 13.12.2023-ஆம் தேதி தாக்கல் செய்யப்பட்டது.
‘தற்காலிக வரி வசூல் சட்டம் (1931) அடிப்படையிலான பழைய நடைமுறையின்படி, சுங்க மற்றும் கலால் வரிகளில் கொண்டுவரப்படுகிற மாற்றங்கள் ஏப்ரல் 1-ஆம் தேதி 2024. அல்லது மத்திய அரசால் அறிவிக்கப்படும் தேதிமுதல் நடைமுறைக்கு வருகிறது.
புதிய மசோதாவின்படி, சுங்க மற்றும் கலால் வரி விகிதங்களின் பெரும்பாலான மாற்றங்கள் பட்ஜெட் நாளான பிப்ரவரி 1-ஆம் தேதியன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வரும் வகையில் விதிகளில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. இந்தக் குறிப்பிட்ட சட்டத்தை செயல்படுத்துவதன் மூலம், நிதி மசோதா நிறைவேற்றப்படும் வரையில் தற்காலிகமாக எந்தவிதமான ஊக நடவடிக்கைகளும் நடைபெறாமல் இருப்பதை உறுதி செய்ய முடியும்’
அகழாய்வுக்கு மருங்கூா் கிராமம் தோ்வு
கடலூா் மாவட்டம், விருத்தாசலம் வட்டத்திலுள்ள மருங்கூா் கிராமம் அகழாய்வு நடத்த தமிழக அரசால் தோ்வு செய்யப்பட்டது.
அண்ணாமலைப் பல்கலைக்கழக வரலாற்றுத் துறை பேராசிரியா் ஜெ.ஆா்.சிவராமகிருஷ்ணன் தலைமையில் அந்தப் பகுதியில் களஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதில் வழுவழுப்பான கருப்பு நிற மூடிகள், தாங்கிகள், விளக்கின் உடைந்த பாகம், சிதைந்த இரும்பு குறுவாள், ஈட்டி, வெண்கல கிண்ண சிதைவுகள் உள்ளிட்டவை சேகரிக்கப்பட்டன. முதுமக்கள் தாழியிலிருந்து எடுக்கப்பட்ட கருப்பு - சிவப்பு நிற கிண்ணத்தின் உடைந்த பாகத்தின் விளிம்புப் பகுதியில் எழுத்து பொறிப்புகள் இருப்பதும் கண்டறியப்பட்டது.
2023ஆம் ஆண்டிற்கான அ.முத்துலிங்கம் விருது :
கோவை விஜயா வாசகர் வட்டம் சார்பில் சிறந்த மொழிபெயர்ப்புக்காக அ.முத்துலிங்கம் விருதானது வழங்கப்பட்டு வருகிறது.
2023ஆம் ஆண்டிற்கான அ.முத்துலிங்கம் விருதானது பேராசிரியர் ச.தில்லை நாயகத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.
இவர் மு.கருணாநிதி எழுதிய பொன்னர் – சங்கர் நூலினையும், அ.கா.பெருமாள் எழுதிய தென் குமரியின் சரித்திரம் நூலினையும், ஏ.கே.செட்டியார் எழுதிய அடிச்சுவட்டில் நூலினையும் மொழிபெயர்த்துள்ளார்.
95 செ.மீ மழை :
தூத்துக்குடி மாவட்டத்தின் ஆண்டு சராசரி மழையளவே 70 செமீ தான். ஆனால், மாவட்டத்தின் காயல்பட்டினம் பகுதியில் ஒரே நாளில் 95 செ.மீ மழை பெய்துள்ளது
2023ஆம் ஆண்டின் சிறந்த வங்கி:
பெடரல் வங்கியானது 2023ஆம் ஆண்டின் சிறந்த வங்கியாக பேங்கர் இதழால் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
கோவா உள்நாட்டு உற்பத்தி
கடந்த 20 ஆண்டுகளில் கோவாவின் மொத்த மாநில உள்நாட்டு உற்பத்தி உற்பத்தியானது (GSDP) 33% வளர்ச்சியும், தனிநபர் வருமானம் 30%மும் உயர்ந்துள்ளது
GSDP – Gross State Domestic Product
5 ஆண்டுகளில் யுபிஐ பரிவர்த்தனை 147 சதவீதம் உயர்வு:
2017-18-ம் நிதியாண்டில் 2,071 கோடியாக இருந்த மின்னணு பணப்பரிவர்த்தனையின் மொத்த ஆண்டு வளர்ச்சி விகிதம் 45 சதவீதம் அதிகரித்து 2022-23-ம் நிதியாண்டில் 13,462 கோடியாக அதிகரித்துள்ளது. நடப்பு 2023-24ம் நிதியாண்டில், டிச.11 வரை மின்னணு பணப்பரிவர்த்தனையின் எண்ணிக்கை 11,660 கோடியை எட்டியுள்ளது.
இந்தியாவின் செல்வந்த பெண்மணி 2023:
முகேஷ் அம்பானி, கௌதம் அதானியை விட கடந்த ஆண்டு தனது நிகர சொத்து மதிப்பை அதிக அளவில் உயர்த்தியவர் சாவித்ரி ஜிண்டால் என ப்ளூம்பெர்க் தெரிவித்துள்ளது.
இந்தியர்களில் ஐந்தாவது பணக்காரராகவும், இந்திய பெண்களில் முதல் பணக்காரராகவும் இருக்கக்கூடியவர் சாவித்ரி ஜிண்டால். ஹரியாணாவைச் சேர்ந்த மறைந்த தொழிலதிபர் ஓ.பி. ஜிண்டாலின் மனைவி. ஓ.பி. ஜிண்டால் குழுமத்துக்கு சொந்தமாக JSW Steel, Jindal Steel & Power, JSW Engery, JSW Saw, Jindal Stainless, JSW Holdings உள்ளிட்ட நிறுவனங்கள் உள்ளன. ஓ.பி. ஜிண்டால் குழுமம் கடந்த ஆண்டில் தனது நிகர சொத்து மதிப்பில் சுமார் ரூ.80 ஆயிரம் கோடியை (9.6 பில்லியன் டாலர்) உயர்த்தி உள்ளது. இதன்மூலம், அதன் சொத்து மதிப்பு ரூ.2 லட்சம் கோடிக்கும் மேலாக உயர்ந்துள்ளது.
- KEY NOTES : இந்தியாவின் செல்வந்த பெண்மணி 2023
நகர காவல்துறையின் ‘ஆக்டோபஸ்’ மென்பொருளில் ஐ.எஸ் ஆதரவாளர்கள் 200 பேர் உட்பட ஆயிரம் பேரின் விவரங்கள் பதிவேற்றம் செய்து கண்காணிக்கப்பட்டு வருகிறது என கோவை காவல்துறை தெரிவித்துள்ளது.
"இந்த மென்பொருள் மூலம் மிக முக்கிய நபர்கள், முக்கிய நபர்களின் புகைப்படங்கள், அவர்களது குடியிருப்பு விவரங்கள், ஓய்வு பெற்ற உயர் அதிகாரிகள், அவர்களது விவரங்கள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. இது அவர்களின் பாதுகாப்பை உறுதிபடுத்துவதற்கான நடவடிக்கையாகும்.
அதேபோல், தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பான ஐஎஸ்ஐஎஸ் அமைப்பின் அனுதாபிகள் என சந்தேகிக்கப்படும் 200 பேரின் சுயவிவரங்கள் சேகரிக்கப்பட்டு இதில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன.
அமெரிக்க அதிபர் தேர்தலில் மீண்டும் போட்டியிட டொனால்டு டிரம்ப் தகுதியற்றவர் என்று கொலராடோ மாகாண நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது:
கடந்த 2021-ஆம் ஆண்டு நடைபெற்ற அமெரிக்க அதிபர் தேர்தலில் தோல்வி அடைந்த டிரம்ப், தோல்வியை ஏற்க மறுத்தார். அவரது ஆதரவாளர்களும் தோல்வியை ஏற்க மறுத்து வெள்ளை மாளிகைக்குள் நுழைந்து போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்தில் டிரம்புக்கு தொடர்பு இருப்பதாக குற்றம்சாட்டப்பட்டு அமெரிக்காவின் பல்வேறு மாகாணங்களில் உள்ள நீதிமன்றத்தில் அவருக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டது.
இந்த நிலையில், கொலராடோ நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு ஒன்றில், அமெரிக்க அதிபர் தேர்தலில் மீண்டும் போட்டியிட டிரம்புக்கு தகுதியில்லை என்று தீர்ப்பு வழங்கியுள்ளது. மேலும், குடியரசு கட்சியின் வேட்பாளரை தேர்ந்தெடுக்கும் தேர்தலின் வாக்குச் சீட்டில் டிரம்பின் பெயர் இடம் பெறக்கூடாது என்றும், அவ்வாறு இடம்பெற்றால் அவருக்கு அளிக்கும் வாக்கு செல்லாது என்றும் தெரிவித்துள்ளது.
சர்வதேச ஹாக்கி சம்மேளனத்தின் சிறந்த வீரர் விருது 2023:
சர்வதேச ஹாக்கி சம்மேளனம் (எஃப்ஐஎச்) சார்பில் ஆண்டுதோறும் சிறந்த வீரர், வீராங்கனை, கோல்கீப்பர் உள்ளிட்ட விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. தேசிய ஹாக்கி சங்கங்கள், ஹாக்கிஅணி கேப்டன், பயிற்சியாளர்கள், ரசிகர்கள், ஊடகவியலாளர்கள், மற்றும் நிபுணர் குழுவின் வாக்குகள் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு இந்த விருதுகளை சர்வதேச ஹாக்கி சம்மேளனம் வழங்கி வருகிறது.
இந்நிலையில் இந்த விருது வழங்கும் விழா சுவிட்சர்லாந்தின் லாசான் நகரில் நடைபெற்றது. இதில் 114 வாக்குகளைப் பெற்ற இந்திய அணியின் வீரர்ஹர்திக் சிங் சிறந்த வீரர் விருதைப்பெற்றார். டோக்கியோ ஒலிம்பிக்கில் இந்திய அணி வெண்கலப் பதக்கம் வென்றதில் ஹர்திக் சிங் முக்கிய பங்கு வகித்திருந்தார். சிறந்த கோல்கீப்பருக்கான விருதை இந்திய வீராங்கனை சவிதா பூனியா வென்றுள்ளார். இதே விருதை 2021, 2022-ம் ஆண்டுகளிலும் சவிதா வென்றிருந்தார்.
டிசம்பர் 20 - சர்வதேச மனித ஒற்றுமை தினம்
வேற்றுமையில் ஒற்றுமையின் முக்கியத்துவத்தை எடுத்துரைக்கும் வகையில் ஆண்டுதோறும் டிசம்பர் 20ஆம் தேதி சர்வதேச மனித ஒற்றுமை தினம் அனுசரிக்கப்படுகிறது. இந்த நாள் வறுமை, பசி மற்றும் நோய்களை எதிர்த்துப் போராடுவதில் மக்கள் ஒன்றிணைந்து செயல்படுவதை நினைவூட்டுகிறது.
'சமூக நீதியின் அடிப்படை கொள்கைகளுக்கு ஏற்ப செலவுகள் மற்றும் சுமைகளை நியாயமான முறையில் வழங்கும் வகையில் நிர்வகிக்கப்படவேண்டும். பாதிக்கப்படுபவர்கள் அல்லது குறைந்தபட்ச பயன் அடைபவர்கள், அதிக பயன் அடைபவர்களிடமிருந்து உதவி பெற தகுதியானவர்கள்' என ஐ.நா. பிரகடனத்தில் கூறப்பட்டுள்ளது.
அதன்பின்னர், 2022 டிசம்பர் 20 அன்று, ஐ.நா பொது சபை உலகளாவிய வறுமையை எதிர்கொள்ள உதவும் ஒரு உலக ஒற்றுமை நிதியத்தை அறிமுகப்படுத்தியது. அதன் நோக்கம் வறுமையை ஒழிப்பது மற்றும் வளரும் நாடுகளின் மக்கள் தொகையில் ஏழ்மையான பிரிவுகளில் மனித மற்றும் சமூக வளர்ச்சியை மேம்படுத்துவதாகும். இது பிப்ரவரி 2003ல் ஐ.நா. வளர்ச்சித் திட்ட அறக்கட்டளை நிதியில் சேர்க்கப்பட்டது. உலக ஒற்றுமை நிதியத்தை உருவாக்கிய தினத்தை நினைவுகூரும் வகையில், டிசம்பர் 20 ஆம் தேதியை சர்வதேச மனித ஒற்றுமை தினமாக ஐ.நா. அதிகாரபூர்வமாக அறிவித்தது. இந்த அறிவிப்பு 2005ல் வெளியிடப்பட்டது.
நடப்பு விவகார வினாடிவினா - டிசம்பர், 2023/Current Affairs Quiz - December, 2023
விருதுகள் கௌரவங்கள் 2023 :
LIST OF IMPORTANT DAYS AND DATES IN OCTOBER 2023 IN TAMIL :
- இந்திய தேசிய தினங்கள் முக்கிய நாட்கள் மற்றும் தேதிகள் பட்டியல்
- யுனெஸ்கோவில் அனுசரிக்கப்படும் சர்வதேச தினங்கள்
- 2023 ஆம் ஆண்டின் தமிழ் முக்கிய நாட்கள் மற்றும் தேதிகள் பட்டியல்
SUMMITS AND CONFERENCES 2023 IN TAMIL:
No comments:
Post a Comment