Monday, December 11, 2023

TODAY CURRENT AFFAIRS IN TAMIL 11.12.2023

 


TODAY CURRENT AFFAIRS IN TAMIL 11.12.2023


செல்வாக்குமிக்க பிரபலமான உலகத் தலைவர்களின் பட்டியல் 2023

செல்வாக்குமிக்க பிரபலமான உலகத் தலைவர்களின் பட்டியலில் பிரதமர் நரேந்திர மோடி தொடர்ந்து முதலிடத்தில் பிடித்து சாதனை படைத்துள்ளார். மார்னிங் கன்சல்ட் நடத்திய ஆய்வில் பங்கேற்றவர்களில் 76 சதவிதம் பேர் பிரதமர் நரேந்திர மோடி தலைமைப் பண்பு சிறப்பாக இருப்பதாக கருத்துத் தெரிவித்துள்ளனர். 

மத்தியப் பிரதேசத்தின் அடுத்த முதல்வராக மோகன் யாதவ் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்

மத்தியப் பிரதேசத்தின் அடுத்த முதல்வராக மோகன் யாதவ் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். 230 உறுப்பினா்களைக் கொண்ட மத்திய பிரதேச சட்டப் பேரவைக்கு கடந்த 17.11.2023-ஆம் தேதி ஒரே கட்டமாகத் தோ்தல் நடைபெற்றது. கடந்த 3-ஆம் தேதி தோ்தல் முடிவுகள் வெளியிடப்பட்டன. பாஜக 163 தொகுதிகளில் வெற்றி பெற்று, ஆட்சியைத் தக்கவைத்தது. காங்கிரஸுக்கு 66 இடங்களே கிடைத்தன.

சத்தீஸ்கரில் பழங்குடியின சமூகத்தைச் சோ்ந்த பாஜக தலைவா் விஷ்ணு தேவ் சாய், மாநிலத்தின் புதிய முதல்வராகத் தோ்வு செய்யப்பட்டுள்ளாா்:

சத்தீஸ்கா் பேரவைத் தோ்தலில் பாஜக வெற்றி பெற்றதைத் தொடா்ந்து, புதிய முதல்வா் யாா் என்ற கேள்வி சில நாள்களாக நீடித்து வந்தது. இந்தச் சூழலில், முதல்வா் பதவிக்கு விஷ்ணு தேவ் சாய் (59) தோ்வாகியிருக்கிறாா்

காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வந்த சத்தீஸ்கரில் மொத்தமுள்ள 90 தொகுதிகளுக்கு கடந்த மாதம் இரண்டு கட்டங்களாகத் தோ்தல் நடைபெற்றது. கடந்த 3-ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இதில் பாஜக 54 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியைக் கைப்பற்றியது. கடந்த தோ்தலில் 68 இடங்களில் வென்றிருந்த காங்கிரஸுக்கு இம்முறை 35 இடங்களே கிடைத்தன. கோண்ட்வானா கணதந்திரா கட்சிக்கு ஓரிடம் கிடைத்தது.

சட்டப்பிரிவு 370 நீக்கம் செல்லும்: உச்சநீதிமன்றம்:

ஜம்மு-காஷ்மீா் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டது தொடர்பான வழக்கின் விசாரணை முடிவடைந்த நிலையில், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான 5 நீதிபதிகள் அமர்வு தீர்ப்பு வழங்கியுள்ளது. அதில், சட்டப்பிரிவு 370 நீக்கியது செல்லும் என்று தலைமை நீதிபதி உள்பட 3 நீதிபதிகள் கூறியுள்ளனர்.

ஜம்மு காஷ்மீரில் அடுத்த ஆண்டு செப்டம்பர் மாதத்திற்குள் தேர்தலை நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும், ஜம்மு காஷ்மீருக்கு விரைவில் முழு மாநில அந்தஸ்து வழங்க வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் கூறியுள்ளது.

தீர்ப்பை வெளியிட்ட உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், “குடியரசுத் தலைவர் ஆட்சியின் போது மாநிலம் சார்பாக எடுக்கப்பட்ட மத்திய அரசின் முடிவை கேள்வி கேட்க முடியாது” என்றார்.

மேலும், "சட்டப்பிரிவு 370 என்பது போர் ஏற்பட்டால் பயன்படும் இடைக்கால விதி. அதன் வாசகத்தைப் பார்த்தால் அது ஒரு தற்காலிக ஏற்பாடு தான் என்பது தெளிவாகிறது" என்றார்.

"அரசியலமைப்பின் 370வது பிரிவை ரத்து செய்வதற்கான உத்தரவுகளை பிறப்பிக்கும் குடியரசுத் தலைவரின் அதிகாரம் மற்றும் லடாக்கை தனி யூனியன் பிரதேசமாக மாற்றும் முடிவு செல்லுபடியாகும் என்று உச்சநீதிமன்றம் கருதுகிறது" என்கிறார்.

தீர்ப்பின் முக்கிய அம்சங்கள்:

  • ஜம்மு காஷ்மீரை இந்தியாவுடன் ஒருங்கிணைக்கவே சட்டப்பிரிவு 370 இருந்தது. இந்தியாவில் இருந்து அதனை பிரிப்பதற்காக அல்ல.
  • சட்டப்பிரிவு 370ஐ ரத்து செய்வதற்கான அறிவிப்பை வெளியிடும் அதிகாரம் குடியரசுத் தலைவருக்கு உண்டு. இதற்காக அவர் சட்டப்பிரிவு 370(3)-ஐ பயன்படுத்தியதில் தவறு இல்லை.
  • சட்டப்பிரிவு 370(1)(d) - இன்படி அரசியலமைப்பின் அனைத்து விதிகளையும் ஜம்மு காஷ்மீருக்குப் பயன்படுத்தலாம்.
  • ஜம்மு காஷ்மீர்மீருக்கு அளிக்கப்பட்ட சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்ய மாநில அரசின் ஒப்புதலைப் பெறத் தேவையில்லை.
  • ஜம்மு காஷ்மீரை இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்க மத்திய அரசுக்கு உரிமை உள்ளது.
  • மாநிலம் தொடர்பாக மத்திய அரசு எடுக்கும் முடிவுகளை ரத்து செய்யக் கோர முடியாது.
  • 2024-ஆம் ஆண்டு செப்டம்பர் 30-ஆம் தேதிக்குள் இந்திய தேர்தல் ஆணையம் ஜம்மு காஷ்மீர் சட்டப்பேரவைக்குத் தேர்தல் நடத்த வேண்டும்.
  • ஜம்மு காஷ்மீர் மறுசீரமைப்பு தொடர்பான மத்திய அரசின் அறிக்கையின்படி, விரைவில் ஜம்மு காஷ்மீருக்கு மத்திய அரசு மாநில அந்தஸ்து அளிக்க வேண்டும்.

2019ஆம் ஆண்டில், மத்திய பாஜக அரசு 370வது பிரிவை ரத்து செய்து ஜம்மு காஷ்மீரை இரண்டு யூனியன் பிரதேசங்களாகப் பிரித்தது.இந்திய அரசியலமைப்பின் படி இந்த முடிவின் செல்லுபடியாகும் தன்மையை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

அதிசய கிரகணம் 

2௦23, இன்று (டிசம்பர் 11) ஓர் அதிசய, அற்புதமான ஒரு கிரகணம் உருவாக இருக்கிறது. இது ஒரு வானவியல் அற்புதமாகும். சூரியக் குடும்பத்தில் உள்ள அஸ்டிராய்டு வளையத்தின் சிறு கோள் ஒன்று, இரவு வானில் வலம் வரும் விண்மீன் தொகுதியில் அதன் தோளில் உள்ள, இப்போது வெடித்துக்கொண்டிருக்கும் விண்மீனான திருவாதிரை(Betelgeuse) விண்மீனை 15 நொடிகள் மறைத்து ஒரு கிரகண நிகழ்வை ஏற்படுத்தப்போகிறது என்பதுதான் அது. ஒரு சிறுகோள்- 319 லியோனா, டிசம்பர் 11 அன்று சிவப்பு விண்மீனான திருவாதிரையை கிரகணம் செய்யும் நிகழ்வு.

ஓரியன் விண்மீன் படலத்தில், அதன் தோள்பட்டை பகுதியில் உள்ள சிவப்பு ராட்சத விண்மீன் திருவாதிரைக்கு (Betelgeuse) எதிரில், அஸ்டிராய்டு வளையத்தின் சிறு கோள் வந்து முன்னால் கடந்து செல்லும். இது பூமியில் உள்ள நமது பார்வையில் இருந்து பார்ப்பதால் கிரகணம் மற்றும் மறைவு எனப்படும். இந்த நிகழ்வில் சுமார் 15 வினாடிகள் வரை, திருவாதிரை விண்மீனை நமது பார்வையில் இருந்து தடுக்கும். இந்த சிறுகோளின் பெயர் "319 லியோனா"(319 leona) என்று அழைக்கப்படுகிறது. சிறுகோள், 319 லியோனா, செவ்வாய் மற்றும் வியாழன் இடையே உள்ள முக்கிய சிறுகோள் பெல்ட்டில் மெதுவாக சுழலும் விண்வெளி பாறை ஆகும். தோராயமாக முட்டை வடிவில், 319 லியோனா, 80 x 55 கிலோமீட்டர் அளவைக் கொண்டுள்ளது.

பிரான்சில் திருவள்ளுவர் சிலை :

ஜூலை மாதம் பிரான்ஸ் பயணம் மேற்கொணடிருந்த பிரதமர் நரேந்திர மோடி, பாரீஸ் நகரில் இந்திய வம்சாவளியினரிடையே பேசுகையில், பிரான்சில் இந்தியா சார்பில் திருவள்ளுவர் சிலை நிறுவப்படும் என தெரிவித்தார். இந்த நிலையில், பிரான்சின் செர்ஜி நகரில், பார்க் பிரான்ஸ்வா மித்தேரான் என்ற இடத்தில் திருவள்ளுவரின் முழுதிருவுருவச் சிலை நிறுவப்பட்டுள்ளது. இந்த சிலையை புதுச்சேரி பொதுப்பணித் துறை அமைச்சர் லட்சுமி நாராயணன் திறந்து வைத்தார். திறப்பு விழாவில் பிரான்ஸ் நாட்டுக்கான இந்திய தூதரக அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

ஜூனியா் மகளிா் உலகக் கோப்பை ஹாக்கி போட்டியை இந்திய அணி 9-ஆம் இடம்:

ஜூனியா் மகளிா் உலகக் கோப்பை ஹாக்கி போட்டியை இந்திய அணி 9-ஆம் இடம் பிடித்து நிறைவு செய்தது. அந்த இடத்துக்கான மோதலில் இந்தியா பெனால்ட்டி ஷூட் அவுட் வாய்ப்பில் அமெரிக்காவை சாய்த்தது.

வெற்றியாளரை தீா்மானிக்க நடத்தப்பட்ட பெனால்ட்டி ஷூட் அவுட்டில் இந்தியா 3-2 கோல் கணக்கில் வென்றது. இந்தியாவுக்காக ருதுஜா ததோசா பிசல் (2), மும்தாஜ் கான் (1) ஆகியோா் கோலடிக்க, அமெரிக்க தரப்பில் ஒலிவியா பென்ட் கோல், கேட்டி டிக்சன் ஆகியோா் ஸ்கோா் செய்தனா்.

ஐசிசியின் புதிய விதிமுறை சோதனை:

இங்கிலாந்து மற்றும் மேற்கிந்தியத் தீவுகளுக்கு இடையேயான முதல் டி20 போட்டி முதல் ஐசிசியின் புதிய விதிமுறை சோதனை முயற்சியில் அமல்படுத்தப்படுகிறது. அண்மையில் ஐசிசி புதிய விதிமுறை ஒன்றை அறிமுகப்படுத்தியது. 

ஐசிசி புதிய விதிமுறை : அதன்படி ஒரு ஓவர் முடிந்து அடுத்த ஓவரை வீச பந்துவீச்சை மேற்கொள்ளும் அணி அடுத்த ஓவரின் முதல் பந்தை வீசுவதற்கு 60 விநாடிகளுக்கு மேல் எடுத்துக்கொள்ளக் கூடாது. அவ்வாறு 60 விநாடிகளுக்கு மேல் எடுத்துக் கொள்ளும் பட்சத்தில் களநடுவர்கள் இரண்டு முறை எச்சரிக்கை செய்வார்கள். ஒரு இன்னிங்ஸில் மூன்றாவது முறை 60 விநாடிகளுக்கு மேல் எடுத்துக் கொண்டால் பேட்டிங் செய்யும் அணிக்கு 5 ரன்கள் வழங்கப்படும் என ஐசிசி புதிய விதிமுறையை அறிவித்தது.


டிசம்பர் 11 - சர்வதேச மலை தினம்

நன்னீர், சுத்தமான ஆற்றல், உணவு மற்றும் பொழுதுபோக்கை வழங்குவதில் மலைகள் வகிக்கும் பங்கைப் பற்றி குழந்தைகளுக்கும் மக்களுக்கும் கற்பிப்பதற்காக ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 11 அன்று சர்வதேச மலை தினம் கொண்டாடப்படுகிறது. 

கருப்பொருள்:  "மலை சுற்றுச்சூழல் அமைப்புகளை மீட்டமைத்தல்" ஆகும்

டிசம்பர் 11 - யுனிசெஃப் தினம்

இது ஐக்கிய நாடுகள் சபையால் டிசம்பர் 11 அன்று அனுசரிக்கப்படுகிறது. UNICEF என்பது ஐக்கிய நாடுகளின் சர்வதேச குழந்தைகள் அவசர நிதியைக் குறிக்கிறது



நடப்பு விவகார வினாடிவினா - டிசம்பர், 2023/Current Affairs Quiz - December, 2023


விருதுகள் கௌரவங்கள் 2023 :
MONTH WISE TNPSC GK NOTES IN TAMIL 2023:

LIST OF IMPORTANT DAYS AND DATES IN OCTOBER 2023 IN TAMIL :

No comments:

Post a Comment

Featured Post

CURRENT AFFAIRS IN TAMIL NOVEMBER 2024 (14.11.2024)

காமன்வெல்த் ஆஃப் டொமினிகா தனது உயரிய தேசிய விருதான டொமினிகா விருதை பிரதமர் நரேந்திர மோடிக்கு வழங்குவதாக அறிவித்துள்ளது: