செல்வாக்குமிக்க பிரபலமான உலகத் தலைவர்களின் பட்டியல் 2023
செல்வாக்குமிக்க பிரபலமான உலகத் தலைவர்களின் பட்டியலில் பிரதமர் நரேந்திர மோடி தொடர்ந்து முதலிடத்தில் பிடித்து சாதனை படைத்துள்ளார். மார்னிங் கன்சல்ட் நடத்திய ஆய்வில் பங்கேற்றவர்களில் 76 சதவிதம் பேர் பிரதமர் நரேந்திர மோடி தலைமைப் பண்பு சிறப்பாக இருப்பதாக கருத்துத் தெரிவித்துள்ளனர்.
கடந்த 9 ஆண்டுகளில் மார்னிங் கன்சல்ட் வெளியிட்ட கருத்துக்கணிப்பில் 75-80 சதவிகித வாக்குகளைப் பெற்று பிரதமர் மோடி தொடர்ந்து முதலிடத்தில் இருந்து வருகிறார். அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல கருத்துக்கணிப்பு நிறுவனமான 'மார்னிங் கன்சல்ட்', உலகம் முழுவதும் செல்வாக்குமிக்க தலைவர்கள் குறித்து அந்தந்த நாடுகளில் அவ்வப்போது கருத்துக் கணிப்பு நடத்து முடிவுகளை வெளியிட்டு வருகிறது. அதன்படி, 22 நாடுகளில் கருத்துக் கணிப்பு நடத்தி செல்வாக்குமிக்க உலகத் தலைவர்களின் தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது.
இதில், பிரதமர் நரேந்திர மோடி 76 சதவிகித வாக்குகளுடன் தொடர்ந்து முதலிடத்தில் இருந்து வருகிறார். 18 சதவிகிதம் பேர் அவரது தலமைமையை விரும்பவில்லை என்றும், 6 சதவிகிதம் பேர் எந்த கருத்தையும் தெரிவிக்கவில்லை. இதற்கு முந்தைய கருத்துக்கணிப்புகளிலும் பிரதமர் நரேந்திர மோடி உலக தரவரிசையில் முதலிடத்தில் இருந்தார்.
செல்வாக்குமிக்க பிரபலமான உலகத் தலைவர்களின் பட்டியல் 2023
- பிரதமர் நரேந்திர மோடி 76 சதவிகித வாக்குகளுடன் தொடர்ந்து முதலிடத்தில் இருந்து வருகிறார்
- மெக்சிகோ அதிபர் ஆண்ட்ரெஸ் மானுவல் லோபஸ் ஒபராடோர் 66 சதவிகித வாக்குகளுடன் இரண்டாவது இடத்திலும் மற்றும்
- சுவிட்சர்லாந்து அதிபர் அலைன் பெர்செட் 58 சதவிகித வாக்குகளுடன் மூன்றாவது இடத்திலும் உள்ளனர்.
- பிரேசில் அதிபர் லூயிஸ் இனாசியோ லூலா டா சில்வா 49 சதவிகித வாக்குகளும்,
- ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பானீஸ் 47 சதவிகிதம் வாக்குகளும்,
- இத்தால பிரதமர் ஜார்ஜியா மெலோனி 41 சதவிகித வாக்குகளும்,
- பெல்ஜியம் பிரதமர் அலெக்சாண்டர் டி குரோ 37 சதவிகித வாக்குகளுடன்
- அமெரிக்க அதிபர் ஜோ பிடனுக்கு 37 சதவிகித வாக்குகளுடன் 8-ஆவது இடத்திலும்,
- கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ 31 சதவிகித வாக்குகளும்,
- இந்திய வம்சாவளியான பிரிட்டிஷ் பிரதமர் ரிஷி சுனக் 25 சதவிகித வாக்குகளும்,
- பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மெக்ரான் 24 சதவிகித வாக்குகளுடன் அடுத்தடுத்த இடத்தை பிடித்தனர்.
No comments:
Post a Comment