TODAY CURRENT AFFAIRS IN TAMIL 05.12.2023
தபால் அலுவலக மசோதா:
தபால் அலுவலக மசோதா மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டது. 125 ஆண்டுகள் பழைமையான இந்திய தபால் அலுவலக சட்டத்துக்குப் பதிலாக புதிய சட்டத்தைக் கொண்டுவரும் வகையில், மாநிலங்களவையில் தபால் அலுவலக மசோதாவை மத்திய அரசு தாக்கல் செய்தது. இந்த மசோதாவின்படி நாட்டின் பாதுகாப்பு, வெளிநாடுகள் உடனான நட்புறவு, அவசரநிலை, பொதுமக்கள் பாதுகாப்பு, சட்ட மீறல் ஆகியவற்றைக் கருத்தில்கொண்டு, தபால் அலுவலகம் மூலம் அனுப்பப்படும் கடிதம், பொருள் உள்ளிட்டவற்றை இடைமறிக்க, திறந்து பாா்க்க அல்லது நிறுத்திவைக்க எந்தவொரு அதிகாரிக்கும் மத்திய அரசு அதிகாரம் வழங்கலாம்.
சத்ரபதி சிவாஜியின் உருவச் சிலை:
மகாராஷ்டிரம் சிந்துதுா்க் மாவட்டத்தில் உள்ள ராஜ்கோட் கோட்டையில் மன்னா் சத்ரபதி சிவாஜியின் உருவச் சிலையை பிரதமா் மோடி திறந்து வைத்தாா். சத்ரபதி சிவாஜியின் அரச முத்திரையை அடிப்படையாகக் கொண்டு கடந்த ஆண்டு இந்திய கடற்படைக்கு புதிய கொடியை பிரதமா் மோடி அறிமுகப்படுத்தியது குறிப்பிடத்தக்கது.
2030-எச்.ஐ.வி எய்ட்ஸ் இல்லாத தமிழ்நாடு :
2030-எச்.ஐ.வி எய்ட்ஸ் இல்லாத சூழ்நிலையை உருவாக்க உறுதியளிக்க வேண்டும் என்று உலக எய்ட்ஸ் விழிப்புணர்வு தினத்தை முன்னிட்டு தமிழக முதல்வர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.இந்த ஆண்டு உலக எய்ட்ஸ் தினத்தின்
கருப்பொருள் "எச்.ஐ.வி மற்றும் எய்ட்ஸ் பரவுவதைக் குறைக்க நடவடிக்கை எடுக்க சமூகங்களுடன் இணைந்து பணியாற்றுதல்"
எச்.ஐ.வி-யால் பாதிக்கப்பட்ட பெற்றோரிடமிருந்து அவர்களின் பிறக்காத குழந்தைகளுக்கு நோய் பரவுவதைத் தடுக்க அனைத்து கர்ப்பிணிப் பெண்களுக்கும் புதிய எச்.ஐ.வி தொற்றுக்கான சிறப்பு மருத்துவ சிகிச்சைகள் மற்றும் பரிசோதனை சேவைகள் நடத்தப்பட்டுள்ளன.பாதிக்கப்படக்கூடிய குழந்தைகளின் நலனுக்காக தனி அறக்கட்டளை உருவாக்கப்பட்டுள்ளது.
எச்.ஐ.வி மற்றும் எய்ட்ஸ் தடுப்பு மற்றும் ' கட்டுப்பாட்டு திட்டங்களை செயல்படுத்தியதன் காரணமாக TN இல் HIV தொற்று விகிதம் இப்போது 0.17 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. இது தேசிய சராசரியான 0.22 சதவீதத்தை விடக் குறைவு.
சாலை விபத்தில் காயமடைபவா்களுக்கு கட்டணமில்லா சிகிச்சை திட்டம்:
உலகிலேயே இந்தியாவில்தான் சாலை விபத்துகளால் ஏற்படும் உயிரிழப்புகள் அதிகமாக உள்ளன. இந்த உயிரிழப்புகளைக் குறைக்கும் வகையில், சாலை விபத்தில் சிக்கி காயமடைபவா்களுக்கு கட்டணமில்லா மருத்துவ சிகிச்சை அளிக்கும் வகையில், மோட்டாா் வாகன சட்டம் 2019-இல் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதை சில மாநிலங்கள் நடைமுறைப்படுத்தியுள்ள நிலையில், தற்போது நாடு முழுவதும் முழுமையான அளவில் நடைமுறைப்படுத்த மத்திய அமைச்சகம் முடிவு செய்துள்ளது. அடுத்த 3 அல்லது 4 மாதங்களில் கட்டணமில்லா சிகிச்சை திட்டம் நாடு முழுவதும் நடைமுறைப்படுத்தப்பட்டுவிடும்.
சாலைப் போக்குவரத்து கல்வி நிறுவனம் சாா்பில் தில்லியில் நடத்தப்பட்ட நிகழ்ச்சியில் பங்கேற்ற மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சா் அனுராக் ஜெயின் இந்தத் தகவலைத் தெரிவித்தாா்.
மிஷன் நேச்சர்' திட்டம்:
தமிழகத்தில் நடப்பு கல்வியாண்டில் 6,029 அரசு பள்ளிகளில் 'மிஷன் நேச்சர்' திட்டம் செயல்படுத்தப்படும்.கடந்த கல்வியாண்டில் (2022-23) 'மிஷன் நேச்சர்' திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு செயல்படுத்தப்பட்டது.
இதில் மாணவர்கள் பள்ளிகள், வீடுகள் மற்றும் காய்கறி தோட்டங்கள், மழைநீர் சேகரிப்பு அமைப்பு, கழிவு மேலாண்மை, பிளாஸ்டிக் ஒழிப்பு, விழிப்புணர்வு பேரணிகள் மற்றும் வீடியோவில் வெளியிடுதல் போன்ற சமூக சூழல்களை மேம்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.
மிஷன் இயற்கை திட்டம் : இளைய தலைமுறையினர் தங்கள் மாநிலத்தின் பல்லுயிர், சுற்றுச்சூழல் மற்றும் இயற்கை வளங்கள் குறித்து தேவையான விழிப்புடன் இருக்க வேண்டியது அவசியமாகியுள்ளது.அதற்காக, மிஷன் இயற்கை திட்டம் பள்ளிகளில் உள்ள சுற்றுசூழல் மன்றங்கள் வாயிலாக செயல்படுத்தப்படுவதால், மாணவர்களின் அறிவு மற்றும் திறன்களை மேம்படுத்துவதோடு சுற்றுச்சூழல் மன்ற நடவடிக்கைகளை வலுப்படுத்த உதவும்.
டிசம்பர் 5 - சர்வதேச தன்னார்வ தினம்
சர்வதேச தன்னார்வ தினம் (IVD) ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 5 அன்று கொண்டாடப்படுகிறது. இந்த நாள் தன்னார்வத் தொண்டர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு அவர்களின் முயற்சிகளைக் கொண்டாட ஒரு வாய்ப்பை வழங்குகிறது, மேலும் அவர்களின் சமூகங்களிடையே அவர்களின் பணியை மேம்படுத்துகிறது.
டிசம்பர் 5 - உலக மண் தினம்
மண்ணின் முக்கியத்துவம், ஆரோக்கியமான சுற்றுச்சூழல் அமைப்புகள் மற்றும் மனித நல்வாழ்வு பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த உலக மண் தினம் டிசம்பர் 5 அன்று அனுசரிக்கப்படுகிறது.
LIST OF IMPORTANT DAYS AND DATES IN OCTOBER 2023 IN TAMIL :
- இந்திய தேசிய தினங்கள் முக்கிய நாட்கள் மற்றும் தேதிகள் பட்டியல்
- யுனெஸ்கோவில் அனுசரிக்கப்படும் சர்வதேச தினங்கள்
- 2023 ஆம் ஆண்டின் தமிழ் முக்கிய நாட்கள் மற்றும் தேதிகள் பட்டியல்
SUMMITS AND CONFERENCES 2023 IN TAMIL:
No comments:
Post a Comment