Wednesday, December 6, 2023

முத்தொள்ளாயிரம்-TNPSC TAMIL ILLAKKIYAM NOTES



SITRU ILAKKIYAMGAL -TNPSC TAMIL ILLAKKIYAM NOTES:

பகுதி – (ஆ) – இலக்கியம்

சிற்றிலக்கியங்கள்:

முத்தொள்ளாயிரம்:

முத்தொள்ளாயிரம் (மூன்று+தொள்ளாயிரம்) என்பது தமிழ் இலக்கியத்தில் தொகைநூல் வகையைச் சேர்ந்த நூலாகும். இந்நூலின் பாடல்களைப் பாடிய புலவர் யாரென்பது தெரியவில்லை. ஆயினும் இந்நூலின் கடவுள் வாழ்த்து, முக்கண்ணனான சிவபெருமான் பற்றியது. ஆதலால் இந்நூலின் ஆசிரியர் சைவ மதத்தைச் சேர்ந்தவர் என்பதை அறியலாம்.

முத்தொள்ளாயிரம் சேர, சோழ, பாண்டிய மன்னர்கள் மீது பாடப்பட்ட பாடல்கள் அடங்கிய நூல். ஒவ்வொரு மன்னரைப் பற்றியும் தொள்ளாயிரம் பாடல்கள் வீதம் 2,700 பாடல்கள் அடங்கிய தொகுப்பு எனக் கருதப்படுகின்றது. இந்நூல் முழுமையும் கிடைக்கவில்லை. ஆனாலும் முத்தொள்ளாயிரம் தொகுப்பில் மூவேந்தர்களைப் பற்றியும் ஒவ்வொருவருக்கும் முன்னூறு பாடல்களாக மொத்தம் தொள்ளாயிரம் பாடல்களே இருந்தன எனப் பேராசிரியர் எஸ். வையாபுரிப்பிள்ளை அவர்கள் 1943-ஆம் ஆண்டில் வசந்தம் என்ற இதழில் எழுதியுள்ளார். தொள்ளாயிரம் என்ற தொகையுடைய நூல்கள் வச்சத் தொள்ளாயிரம், அரும்பைத் தொள்ளாயிரம் என்பன போன்று பல இருந்தன என்றும், இதனால் தொள்ளாயிரம் செய்யுள்களில் நூலியற்றுவது பழைய மரபுகளுள் ஒன்று எனவும் அவர் கூறியுள்ளார்.தொள்ளாயிரம் என்ற சிற்றிலக்கிய வகை எண் செய்யுள் என்று பாட்டியல் நூல்கள் குறிப்பிடும். இந்த இலக்கிய வகைக்கு.

ஒரு நாட்டின் வளத்தைப் பாடுவதைப் புலவர்கள் கவிமரபாகக் கொண்டிருந்தனர். பிற்காலக் காப்பியங்களில் நாட்டுவளம் தவறாது இடம்பெற்றது. முத்தொள்ளாயிரம் சேரன், சோழன், பாண்டியன் ஆகியோருடைய நாடுகளின் வளங்களை நயமாக வெளிப்படுத்துகிறது.


நூற்குறிப்பு:
  1. சங்க இலக்கியத்திற்குப் பின்னர் தோன்றிய நூல்.
  2. தனிப்பாடல்களின் தொகுதி, வெண்பாக்களால் ஆனது.
  3. ஆசிரியர் பெயர் தெரியவில்லை. இவர் ஐந்தாம் நூற்றாண்டைச் சேர்ந்தவராகக் கருதப்படுகிறார்.
  4. அகமும், புறமும் இணைந்த நூல்; எனினும் அகப்பொருளுக்கே முதன்மை தருகிறது.
  5. சிலப்பதிகாரத்திற்கு முன்பே மூவேந்தர்களையும் பாடிய நூல்.
  6. சேரநாட்டை அச்சமில்லாத நாடாகவும், சேரநாட்டை ஏர்க்களச் சிறப்பும் போர்க்களச் சிறப்பும் உடைய நாடாகவும், பாண்டிய நாட்டை முத்துரை நாடாகவும் காட்டுகிறது.
  7. மூன்று + தொள்ளாயிரம் என்று பிரித்து ஒவ்வொரு மன்னர்களும் 900 பாடல்கள் வீதம் மொத்தம் (900 x 3 = 2700) பாடல்கள் கொண்ட நூலாக இருந்திருக்க வேண்டும் என்பர்.
  8. மூன்று + தொள்ளாயிரம் என்பதற்கு மூன்று மன்னர்களின் மீது;  ஆளுக்கு 300 பாடல் வீதம் பாடப்பட்ட தொள்ளாயிரம் பாடல்களை உடையது என்றும் பொருள் கூறுகின்றனர்.
  9. புறத்திரட்டு என்ற புறநூல் தொகுப்பின் மூலம் 108 பாடல்கள் கிடைத்தன.
  10. உரைகளின் மூலம் 22 பாடல்கள் கிடைத்தன
  11. கிடைத்துள்ள முத்தெள்ளாயிரப் பாடல்களில் பாண்டியனுக்கு 61, சோழனுக்கு 46, சேரனுக்கு 23 பாடல்கள் கிடைத்துள்ளன.
  12. இதன் புறப்பாடல்கள் சங்க இலக்கியம் போல் இயல்பு நவிற்சியாகக் கூறாமால் உயர்வு நவிற்சியாகவே கூறுகிறது.
  13. சங்க இலக்கியத்தில் ஆண்பால் கைக்கிளைப் பாடல்கள் சில உள்ளன;  பெண்பால் கைக்கிளைப் பாடல் கிடையாது.
  14. முத்தொள்ளாயிரத்தில் பெண்பாற் கைக்கிளைப் பாடல்கள் பல உள்ளன.
  15. சங்க இலக்கியத் தலைவி தன் காதலைத் தன் தோழியிடமே வெளிப்படையாக கூறத் தயங்குவாள்.
  16. முத்தொள்ளாயிரத்த் தலைவி தன் காதல் துன்பத்தைப் பலர் முன்பு கூறுகின்றாள்.
  17. மன்னனைக் கண்டால் தன் மகள் அவனைக் காதலிப்பாள் என்று கதவடைக்கும் தாயும் முத்தொள்ளாயிரத்தில் உண்டு.
  18. சங்க இலக்கிய அகமரபில் பெயர் சுட்டும் மரபு இல்லை. முத்தொள்ளாயிரத்தில் மன்னன் என்ற தகுதியையும் சேரன், சோழன், பாண்டியன் என குலம் கட்டப்படுகின்றன. எனினும் தனிப்பட்ட ஒரு மன்னனின் பெயரைச் சுட்டவில்லை.
  19. சங்க இலக்தியத்திற்குப் பின்பும், அறநூல்களுக்கு முன்பும் முத்தொள்ளாயிரம் தோன்றியிருக்க வேண்டும்.
  20. தொள்ளாயிரம் என்பது இலக்கிய வகைபோலும்.
  21. 11ஆம் நூற்றாண்டில் வச்சத் தொள்ளாயிரம் தோன்றியது.
  22. 12ஆம் நூற்றாண்டில் அரும்பைத் தொள்ளாயிரம் என்ற நூல் தோன்றியது.

மேற்கோள்:

சேரன் பற்றியது:

பல்யானை மன்னீர்! படுதிறை தந்துஉய்மின்
மல்லல் நெடுமதில் வாங்குவில் பூட்டுமின்
வாள் இதழ் வாடாத வானோரும் வானவன்
வில்எழுதி வாழ்வார் விசும்பு

அள்ளல் பழனத்து அரக்காம்பல் வாயவிழ 
வெள்ளம்தீப் பட்ட(து) எனவெரீஇப்பு ள்ளினம்தம்
கைச்சிறகால் பார்ப்பொடுக்கும் கவ்வை உடைத்தரோ
நச்சிலைவேல் கோக்கோதை நாடு.* 


சோழன் பற்றியது:

சேர்ந்த புறவின் நிறைதன் திருமேனி
ஈர்ந்திட்டு உயர்துலைதான் ஏறினான் – நேர்ந்த
கொடை வீரமோ மெய்ந்நிறை குறையா வன்கண்
படைவீரமோ சென்னி மாண்பு 

காவல் உழவர் களத்துஅகத்துப் போர் ஏறி 
நாவலோஓ என்றிசைக்கும் நாளோதை - காவலன்தன் 
கொல்யானை மேலிருந்து கூற்றிசைத்தால் போலுமே 
நல்யானைக் கோக்கிள்ளி நாடு. 


பாண்டியன் பற்றியது:

மருப்புஊசி யாக மறம்கனல்வேல் மன்னர்
உருத்தகு மார்பு ஓலையாக – திருத்தக்க
வையகம் எல்லாம் எமது என்று எழுதுமே
மொய்இலைவேல் மாறன் களிறு 

நந்தின் இளஞ்சினையும் புன்னைக் குவிமொட்டும் 
பந்தர் இளங்கமுகின் பாளையும்-சிந்தித் 
திகழ்முத்தம் போல்தோன்றும் செம்மற்றே தென்னன் 
நகைமுத்த வெண்குடையான் நாடு.

No comments:

Post a Comment

Featured Post

CURRENT AFFAIRS IN TAMIL NOVEMBER 2024 (14.11.2024)

காமன்வெல்த் ஆஃப் டொமினிகா தனது உயரிய தேசிய விருதான டொமினிகா விருதை பிரதமர் நரேந்திர மோடிக்கு வழங்குவதாக அறிவித்துள்ளது: