SITRU ILAKKIYAMGAL -TNPSC TAMIL ILLAKKIYAM NOTES:
பகுதி – (ஆ) – இலக்கியம்
சிற்றிலக்கியங்கள்:
தமிழ்விடு தூது
தமிழ்விடு தூது என்பது கலிவெண்பா வடிவில் எழுதப்பட்ட ஒரு தூது வகைத் தமிழ்ச் சிற்றிலக்கியம் ஆகும். இது மதுரையில் கோவில்கொண்டிருக்கும் சொக்கநாதர் மீது காதல்கொண்ட பெண் ஒருத்தி, தன் காதலை கூறிவருமாறு தமிழ் மொழியைத் தூதுவிடுவதாக அமைந்துள்ளது. இந்நூல் 268 கண்ணிகளைக் கொண்டுள்ளது. இந்த நூலை இயற்றிய ஆசிரியரின் பெயர் தெரியவில்லை.இதனை முதன் முதலில் 1930 இல் உ. வே. சாமிநாதையர் பதிப்பித்தார்.
தமிழின் பெருமையைப் பாடக் கவிஞர்கள் கையாளும் உத்திகள் பற்பல. கவிதை, அதற்கொரு கருவி. கிளி, அன்னம், விறலி, பணம், தந்தி என்று பல தூது வாயில்களைப்பற்றி அறிந்துள்ளோம். தமிழையே தூதுப் பொருளாக்கியுள்ளது 'தமிழ்விடு தூது'. தமிழின் இனிமை, இலக்கிய வளம், பாச்சிறப்பு, சுவை, அழகு, திறம், தகுதி ஆகியன இச்சிற்றிலக்கியத்தில் விரவியுள்ளன.
நூற்குறிப்பு
தமிழ்ச் சிற்றிலக்கிய வகைகளுள் “தூது” என்பதும் ஒன்று.
இது “வாயில் இலக்கியம்”, “சந்து இலக்கியம்” என்னும் வேறு பெயர்களாலும் அழைக்கப்படுகிறது.
“கலிவெண்பா”வால் இயற்றப்பட்டுள்ளது.
இந்நூல் 268 கண்ணிகளைக் கொண்டுள்ளது.
1930-ல் உ.வே.சா. தமிழ்விடு தூது நூலை முதன் முதலாக பதிப்பித்தார்.
இதன் ஆசிரியர் பெயர் என்று அறிய முடியவில்லை
மதுரையில் கோயில் கொண்டிருக்கும் சொக்கநாதர்மேல் காதல் கொண்ட ஒரு பெண் தமிழைத் தூது அனுப்பி மாலை வாங்குவதாகப் பாடப்பட்ட நூல்
தமிழ்விடு தூது என்ற பெயரில் இரண்டு நூல்கள் உள்ளன.1)ஆசிரியர் பெயர் தெரியா நூல்,2)அமிர்தம் பிள்ளை எழுதிய தமிழ்விடு தூது.ஆசிரியர் பெயர் தெரியா நூல் புகழ் பெற்றது.
இந்த நூலில் தூது பெறுவோர் கடவுள். அதாவது சோமசுந்தரக் கடவுள்.
தூது விடுவோர் ஒரு பெண்
தூது செல்லும் பொருள் தமிழ்மொழி.
அமைப்பு
இரண்டு இரண்டு பூக்களை வைத்து தொடுக்கப்படும் மாலை கண்ணி.
அதே போல் இரண்டு இரண்டு அடிகளை வைத்து தொடுக்கப்படும் செய்யுள் கண்ணி ஆகும்.
தமிழ் விடு தூது நூல் 268 கண்ணிகளைக் கொண்டுள்ளது.
நூல் கூறும் பொருள்கள்
தூது செல்லும் தமிழ் மொழியின் பெருமைகளைக் கூறுதல்.
பிற பொருட்களைத் தூதாக அனுப்பாமைக்குரிய காரணங்களைத் தலைவி தூதுப் பொருளிடம் கூறுதல்.
தூது பெறும் தலைவன் ஆகிய சோமசுந்தரக் கடவுளைப் புகழ்ந்து கூறுதல்.
தலைவி தன் துன்பம் கூறுதல்.
தலைவி தமிழிடம் தன் தூதுச் செய்தியைக் கூறித் தூது வேண்டுதல்,என்ற பகுதிகளைக் கொண்டு திகழ்கின்றது தமிழ்விடு தூது.
தமிழ் மொழியின் பெருமைகள்
எண், பெயர், முறை, பிறப்பு, உருவம், மாத்திரை, முதல்நிலை, இடைநிலை, ஈற்றுநிலை, போலி, பதம், புணர்ச்சி என்ற 12 பருவங்களை உடையது. அறம், பொருள், இன்பம் என்ற மூன்று பாலும் உடையது.
பிள்ளைத் தமிழ் நூலுக்குரிய பத்துப் பருவங்களை கொண்டது.
இயற்சொல், திரிசொல், திசைச்சொல், வடசொல் ஆகிய செய்யுள் ஈட்டச்சொற்கள் நான்கும்; பெயர், வினை, இடை, உரி ஆகிய செந்தமிழ்ச் சொற்கள் நான்கும்; அகத்திணைகள் ஏழும்; புறத்திணைகள் ஏழும்; எழுத்து, அசை, சீர், தளை, அடி, தொடை, பா, பாவினம் என்ற எட்டும்; அணிகள் முப்பத்தைந்தும் கொண்ட மிக்க அழகுடையதாய் உள்ளது.
செப்பல் பண், அகவல் பண், துள்ளல் பண், தூங்கல் பண் ஆகிய பண்கள் உள்ளன.
ஐந்து வகை இசைக் கருவிகள் வெளியிடும் 103 பண்கள் உள்ளன.
வீரம், அச்சம், இழிப்பு, வியப்பு, காமம், அவலம், நகை, நடுவுநிலை, உருத்திரம் ஆகிய ஒன்பது சுவைகளைப் பெற்றுள்ளது.
பெரும் காப்பிய இலக்கியத்திற்குரிய 18 வர்ணனைகளைக் கொண்டுள்ளது.
தமிழ்மொழி தன் எல்லையாக மேல் கடல், கீழ்க்கடல், குமரி ஆறு, திருவேங்கடம் ஆகியவற்றைக் கொண்டது போன்றவற்றோடு இன்னும் பலவும் தமிழ்மொழியின் சிறப்புகளாக இந்நூலில் கூறப்படுகின்றன.
மேற்கோள்
“அரியாசனம் உனக்கே யானால் உனக்கு
சரியாரும் உண்டோ தமிழே”
தித்திக்கும் தெள்ளமுதாய்த் தெள்ளமுதின் மேலான
முத்திக் கனியே என் முத்தமிழே – புத்திக்குள் உண்ணப்படும்
தேனே”
வயலின் வரப்பு- நால்வகைப் பாக்கள்
மடைகள்- பாவினம்
ஏர்கள் - மனம், புத்தி, சித்தம், அகங்காரம்
உழவர் - புலவர்
விதைகள்- வைதருப்பம், கெளடம், பாஞ்சாலம், மாகதம் என்ற செய்யுள் நெறிகள்
விளைபொருள்- அறம், பொருள், இன்பம்
களைகள்- போலிப்புலவர் கூட்டம்
களை எடுப்போர்- வில்லிபுத்தூரார், ஒட்டக்கூத்தர், அதிவீரராம பாண்டியர் எனத் தமிழ் உருவகப்படுத்தப்பட்டு உள்ளது.
No comments:
Post a Comment