SITRU ILAKKIYAMGAL -TNPSC TAMIL ILLAKKIYAM NOTES:
பகுதி – (ஆ) – இலக்கியம்
சிற்றிலக்கியங்கள்:
நந்திக் கலம்பகம்
நந்திக் கலம்பகம் தமிழில் உருவான கலம்பக இலக்கியங்களில் ஒன்று. இது காஞ்சியைத் தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்த பல்லவ மன்னன் தெள்ளாறு எறிந்த மூன்றாம் நந்திவர்மன் குறித்துப் பாடப்பட்டது. இதுவே கலம்பக நூல்களில் காலத்தால் முற்பட்டு விளங்குவதாகும். மூன்றாம் நந்திவர்மனின் காலம் கி.பி.825-850 என்பதால் நந்திக் கலம்பகத்தின் காலம் கி.பி.9 ஆம் நூற்றாண்டு ஆகும். காஞ்சி, மல்லை (மாமல்ல புரம்), மயிலை( மயிலாப்பூர்) ஆகிய நகரங்கள் பற்றி இந்நூலில் சிறப்பாகப் போற்றப்பட்டுள்ளது. சிறந்த சொற்சுவை பொருட்சுவையோடு கற்பனை வளமும் நிறைந்த இந்நூலின் ஆசிரியர் யார் என்பது தெரியவில்லை.
நூல்கூறும் செய்திகள்
இந்நூலில் நந்தி வர்மனின் தெள்ளாறு வெற்றியைப் பற்றி மட்டும் 16 பாடல்களில் சிறப்பாகக் கூறப்பட்டுள்ளது.கொற்ற வாயில் முற்றம், வெறியலூர், வெள்ளாறு, தெள்ளாறு போன்ற பல்வேறு போர்க்களங்களைப் பற்றிக் கூறும் சிறந்த வரலாற்று நூலாகவும் இது திகழ்கிறது.சிவபெருமானை ஒரு பொழுதும் மறவாத சிந்தையினை உடையவன், வெற்றியுடன் எப்போதும் உறவு கொண்டிருப்பவன் நந்திவர்மன். அவனது ஊரில் குவளை மலர்களில் அமர்ந்து தேன் அருந்தும் வண்டுகளே, நீர்க்குமிழியை வெளிப்படுத்தும் ’சுழியில் விளையாடும் தும்பியே, இவ்வுலகில் மழை பெய்கின்ற குளிர் காலமும் வந்துவிட்டது. அவரும் வந்து விடுவேன் என்று குறித்துச் சொன்ன காலமும் வந்துவிட்டது. அவர் வறுமையைக் குறித்து அவர் மேல் கொண்ட கவலையோ பெரியது. ஆனால் இப்பழிச் சொல்லுக்கெல்லாம் ஆளான தலைவனோ இன்னும் வரவில்லை. கணவராகிய அவர் மேல் கொண்டுள்ள நம் உறவு வெறும் கதையாய் போனதே.
நூற்குறிப்பு
மூன்றாம் நந்திவர்மன் என்ற பல்லவ மன்னன் மீது பாடப்பட்ட கலம்பக நூல்.
ஆசிரியர் பெயரை இதுவரை அறியமுடியவில்லை
நந்திவர்மனின் மாற்றாந்தாய்க்குப் பிறந்த நால்வரில் ஒருவர் என்று சிலர் கூறுகின்றனர்.
காலம் 9ஆம் நூற்றாண்டு
கலம்பகம் என்ற சிற்றிலக்கிய வகையின் முதல் நூல்
வரலாற்றுக் குறிப்புகள் மிகுந்த கலம்பக நூல்
கச்சிநாடு, வடவேங்கட நாடு, தென்னாடு, சேனைநாடு, அங்கநாடு பற்றிய குறிப்புகள் உள்ளன.
கடம்பூர், குருக்கோட்டை, தெள்ளாறு, பழையாறு, தொண்டி, வெள்ளாறு, வெறியலூர் ஆகிய ஊர்களில் நடந்த போர்கள் பற்றி கூறுகிறது.
நந்திவர்மனின் தெள்ளாற்றுப்போர் பற்றி 16 பாடல்கள் சிறப்பிக்கின்றன.
இக்கலம்பகம் பிற கலம்பக அமைப்புகளில் இருந்து சில அமைப்புகளில் மாறுபடுகிறது.
கலம்பகங்கள் மதுரைக்கலம்பகம், திருவாமத்தூர்க்கலம்பகம் என ஊர் பெயரால் பெயர் பெறும். இது பாட்டுடைத் தலைவனின் பெயரால் நந்திக்கலம்பகம் எனப் பெயர் பெற்றது.
கலம்பகம் தெய்வத்தைப் பாடினால் 100 பாடலும், அரசைப் பாடினால் 90 பாடலும் இருக்கும். இது அரசனைப் பாடியிருந்தும் இதில் 100 பாடல்கள் இடம்பெற்றுள்ளன.
கலம்பகத்தில் 18 உறுப்புகள் இருக்கும். இதில் சில உறுப்புகள் குறைந்துள்ளன.
கலம்பகம் இலக்கியங்களுள் நந்திக் கலம்பகமே சிறப்புடையதாகும்.
அறம் வைத்துப் பாடப்பட்ட நூலாகக் கருதப்படும் நூல் நந்திக்கலம்பகம்.
பச்சை ஓலைப் பந்தலின் கீழ் இருந்து நந்திவர்மன் தமிழ்ச்சுவை மிக்க இப்பாடல்களைக் கேட்டுக் கொண்டிருந்தபோது அறம் வைத்து பாடப்பட்ட “வானுறு மதியை அடைந்தது உன் வதனம்” என்று நூறாவது பாடலைப் பாடியபோது பச்சை ஓலை தீப்பிடித்து எரிந்த மன்னன் மாண்டுபோனான் என்ற ஒரு கதை உள்ளது.
“நந்திக் கலம்பகத்தால் மாண்ட கதை நாடறியும்” – சோமேசர் முதுமொழி வெண்பா
“கலம்பகமே கொண்டு காயம் விட்ட தெள்ளாறை நந்தி” – தொண்டை மண்டல சதகம்
மேற்கோள்
மங்கையர்கண் புனல்பொழிய மழைபொழியும் காலம்
மாறவேல் சிலை குனிக்க மயில்குனிக்கும் காலம்
கொங்கைகளும் கொன்றைகளும் பொன் சொரியும் காலம்
கோகநக நகைமுல்லை முகைநகைக்கும் காலம்
அங்கு உயிரும் இங்க உடலும் ஆன மழைக்காலம்
அவர் ஒருவர் நாம் ஒருவர் ஆனக் கொடுங்காலம்
“கவலை பெரிது பழிகார் வந்திலார்
கணவர் உறவு கதையாய் முடிந்ததே”
“ஈட்டு புகழ் நந்தி பாண! எங்கையர்தம்
வீட்டிருந்து பாட விடிவுஅளவும் கேட்டிருந்தோம்
பேய்என்றாள் அன்னை; பிறர்நரி என்றார்; தோழி
நாய் என்றாள்; நீ என்றேன் நான்”.
12th Std Tamil New Book (Page no – 142)
ஈட்டுபுகழ் நந்தி பாணநீ! எங்கையர்தம்
வீட்டிருந்து பாட விடிவளவும் – காட்டிலழும்
பேயென்றாள் அன்னை, பிறர் நரியென்றார், தோழி
நாயென்றாள், நீ என்றேன் நான்!
No comments:
Post a Comment