TODAY CURRENT AFFAIRS IN TAMIL 27.11.2023 :
ஆரோரா (Aurora) திட்டம் :
அமேசான் இந்தியா நிறுவனம் இந்தியாவில் கற்றல்திறன் குறைபாடு உள்ளவர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் ஆரோரா (Aurora) திட்டத்தைத் துவங்குயுள்ளது. வணிக உலகின் ஜாம்பவானாகத் திகழும் அமேசான் நிறுவனம் மும்பையில் உள்ள சோல் ஏஆர்சி (Sol ARC) எனும் இலாப நோக்கமற்ற நிறுவனத்துடன் இணைந்து இந்தத் திட்டத்தைச் செயல்படுத்தியுள்ளது. மும்பை, தில்லி, பெங்களூரு, சென்னை, ஹைதராபாத், ஆகிய இடங்களில் உள்ள விநியோக நிலையங்களில் கற்றல்திறன் குறைபாடு உள்ள இளம் வயதினருக்காக இந்தத் திட்டத்தை செயல்படுத்தியது.
புக்கர் விருது :
உலகப் புகழ் பெற்ற புனைவு இலக்கிய விருதான புக்கர் பரிசை ஐரிஷ் எழுத்தாளர் பால் லிஞ்ச் பெற்றார். பால் லிஞ்ச் எழுதிய ப்ராபெட் ஸாங் (Prophet Song - தீர்க்கதரிசியின் பாடல்) என்ற நாவலுக்காக இந்த விருது வழங்கப்பட்டது. சர்வாதிகாரம் மற்றும் போரில் சிக்கிக் குலைந்த அயர்லாந்தில் தன் குடும்பத்தைப் பாதுகாப்பதற்கான ஒரு பெண்ணின் போராட்டம் பற்றிய ஆன்மாவை உலுக்குகிற நாவல் இது என்று புக்கர் பரிசுக்கான தேர்வுக் குழுவினர் குறிப்பிட்டுள்ளனர். லண்டனில் நடந்த நிகழ்ச்சில் புக்கர் விருதுடன் பரிசுத் தொகையாக 50 ஆயிரம் பவுண்ட்களும் (இந்திய மதிப்பில் சுமார் ரூ. 52 லட்சம்) பால் லிஞ்சுக்கு வழங்கப்பட்டது.
புதிய புயலுக்கு ‘மைச்சாங்’ என்று பெயரிடப்பட்டுள்ளது:
வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வுப் பகுதி வலுப்பெறும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், புதிய புயலுக்கு ‘மைச்சாங்’ என்று பெயரிடப்பட்டுள்ளது. தெற்கு மற்றும் அதனை ஒட்டியுள்ள தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வுப் பகுதி தாழ்வு மண்டலமாக வலுப்பெறவுள்ளது. இது மேலும் வலுப்பெற்று புயலாக மாற வாய்ப்புள்ளதால், மியான்மர் நாடு பரிந்துரைத்த ‘மைச்சாங்’ என்ற பெயர் வைக்கப்படவுள்ளது.
வங்கக்கடலில் உருவானது காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி! இதற்கு முன்னதாக உருவான புயல்களுக்கு ஈரான் பரிந்துரைத்த ஹமூன், இந்தியா பரிந்துரைத்த தேஜஸ், மாலத்தீவு பரிந்துரைத்த மிதிலி ஆகிய பெயர்கள் வைக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
விசா இல்லாமல் மலேசியாவுக்கு பயணிக்கலாம்:
டிசம்பர் 1ஆம் தேதிமுதல் இந்தியா மற்றும் சீனாவைச் சேர்ந்தவர்கள் விசா இல்லாமல் மலேசியாவுக்கு பயணிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. மலேசியாவிற்குச் செல்லும் சுற்றுப்பயணிகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்காக புதிய நடைமுறை அறிமுகம் செய்வதாக மலேசிய பிரதமர் அன்வார் இப்ராஹிம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக மேலும் அவர் குறிப்பிட்டதாவது, சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கும் பொருட்டு, சீனா மற்றும் இந்தியாவையும் சேர்ந்தோர் இனி விசா இன்றி மலேசியாவுக்குள் நுழையலாம். இந்தியா, சீனாவைச் சேர்ந்தவர்கள் மலேசியாவில் விசா இன்றி 30 நாள்கள் வரை தங்கலாம். புதிய நடைமுறை அடுத்த மாதம் (டிச.1) ஒன்றாம் தேதிமுதல் நடைமுறைக்கு கொண்டுவரப்படும்.
மும்பை பயங்கரவாதத் தாக்குதலின் 15-ஆம் ஆண்டு நினைவு நாள்:
மும்பை பயங்கரவாதத் தாக்குதலின் 15-ஆம் ஆண்டு நினைவு நாள் 26.11.2023 அனுசரிக்கப்பட்ட நிலையில், உயிா் நீத்தவா்களுக்கு தலைவா்கள், பொதுமக்கள் அஞ்சலி செலுத்தி, அவா்களின் தியாகத்தை நினைவு கூா்ந்தனா்.
நாட்டின் வா்த்தக தலைநகரான மும்பையின் பல்வேறு இடங்களில் கடந்த 2008-ஆம் ஆண்டு, நவம்பா் 26-ஆம் தேதி ‘லஷ்கா்-ஏ-தொய்பா’ அமைப்பினா் பயங்கரவாதத் தாக்குதலை நடத்தினா். 3 நாள்கள் தொடா்ந்த இத்தாக்குதலில் 18 பாதுகாப்புப் படை வீரா்கள், வெளிநாட்டவா்கள் உள்பட 166 போ் கொல்லப்பட்டனா். கடல்வழியாக மும்பைக்குள் நுழைந்து இந்தக் கொடூரத் தாக்குதலில் ஈடுபட்ட 10 பயங்கரவாதிகளில் 9 போ் பாதுகாப்புப் படையினரால் சுட்டு வீழ்த்தப்பட்டனா். உயிரோடு கைது செய்யப்பட்ட பயங்கரவாதி அஜ்மல் கசாப், நீதி விசாரணை நடத்தப்பட்ட பிறகு 4 ஆண்டுகளுக்குப் பிறகு கடந்த 2012-இல் தில்லி திகாா் சிறையில் தூக்கிலிடப்பட்டாா்.
2022-23ஆம் நிதியாண்டில் இந்தியாவின் பால் உற்பத்தி :
2022-23ஆம் நிதியாண்டில் இந்தியாவின் பால் உற்பத்தி 4 சதவிகிதம் அதிகரித்து 23.058 கோடி டன்னாகவும், முட்டை உற்பத்தி 7 சதவிகிதம் அதிகரித்து 13,838 கோடி டன்னாகவும், இறைச்சி உற்பத்தி முந்தைய ஆண்டை விட 2022-23ல் 5 சதவிகிதம் அதிகரித்து 97.69 லட்சம் டன்னாக உள்ளது. குவஹாத்தியில் நடைபெற்ற தேசிய பால் தின நிகழ்ச்சியில் மத்திய மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை அமைச்சர் பர்ஷோத்தம் ரூபாலா இந்த புள்ளிவிவரங்களை வெளியிட்டார்.
- KEY POINTS : India's Milk Production in FY 2022-23
உலக காலநிலை நடவடிக்கை உச்சி மாநாடு :
உலக காலநிலை நடவடிக்கை மாநாட்டில் பங்கேற்பதற்காக இரண்டு நாள் அரசுமுறை பயணமாக வரும் 30 ஆம் தேதி ஐக்கிய அரபு அமீரகம் செல்கிறார் பிரதமர் நரேந்திர மோடி. இது குறித்து வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ஐக்கிய அரபு அமீரகத்தின் தலைமையின் கீழ், உலக காலநிலை மாற்றம் தொடர்பான ஐக்கிய நாடுகளின் கூட்டமைப்பின் 28 -ஆவது மாநாடு வரும் 28 -ஆம் தேதி முதல் டிசம்பர் 12 வரை துபையில் நடைபெறுகிறது. டிசம்பர் 1, 2 தேதிகளில் உலக காலநிலை நடவடிக்கை உச்சி மாநாடு நடைபெறுகிறது. இதில் பல்வேறு நாடுகளின் தலைவர்கள், சமூக அமைப்புகளின் பிரதிநிதிகள், அறிவியல் உள்ளிட்ட பல்வேறு தொழில்துறையினர் பங்கேற்கின்றனர்.
LIST OF IMPORTANT DAYS AND DATES IN NOVEMBER 2023 IN TAMIL
நவம்பர் 27 - உலக சுற்றுலா தினம்
ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 27 அன்று, சுற்றுலாவின் சமூக, கலாச்சார, அரசியல் மற்றும் பொருளாதார நன்மைகள் மற்றும் நீடித்த வளர்ச்சி இலக்குகளை அடைவதில் இந்தத் தொழில் ஆற்றும் பங்களிப்பைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த உலக சுற்றுலா தினத்தை உலகம் கடைப்பிடிக்கிறது.
LIST OF IMPORTANT DAYS AND DATES IN OCTOBER 2023 IN TAMIL :
- NOVEMBER 2023 - LIST OF IMPORTANT DAYS AND DATES IN NOVEMBER 2023 IN TAMIL
- இந்திய தேசிய தினங்கள் முக்கிய நாட்கள் மற்றும் தேதிகள் பட்டியல்
- யுனெஸ்கோவில் அனுசரிக்கப்படும் சர்வதேச தினங்கள்
- 2023 ஆம் ஆண்டின் தமிழ் முக்கிய நாட்கள் மற்றும் தேதிகள் பட்டியல்
SUMMITS AND CONFERENCES 2023 IN TAMIL:
- SUMMITS AND CONFERENCES JUNE 2023 IN TAMIL
- SUMMITS AND CONFERENCES JULY 2023 IN TAMIL
- SUMMITSAND CONFERENCES AUGUST 2023 IN TAMIL
- SUMMITSAND CONFERENCES SEPTEMBER 2023 IN TAMIL
- SUMMITS AND CONFERENCES - OCTOBER 2023 IN TAMIL
MONTH WISE TNPSC GK NOTES IN TAMIL 2023: