Saturday, November 18, 2023

TODAY CURRENT AFFAIRS IN TAMIL 18.11.2023



TODAY CURRENT AFFAIRS IN TAMIL 18.11.2023 


 இந்திய விமானப் படையின் ‘சூா்ய கிரண்’:

இந்தியா-ஆஸ்திரேலியா மோதும் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டத்துக்கு முன்னதாக இந்திய விமானப் படையின் ‘சூா்ய கிரண்’ குழு வான் சாகச நிகழ்ச்சியை நடத்த உள்ளது. அதற்கான ஒத்திகை அகமதாபாத் மைதானத்தில் நடைபெற்றது. 

உலக கோப்பை கிரிக்கெட் போட்டி கடந்த மாதம் 5-ஆம் தேதி தொடங்கியது. 10 அணிகள் கலந்து கொண்ட இந்தப் போட்டியில் நியூஸிலாந்து அணியை வீழ்த்தி இந்தியாவும், தென்னாப்பிரிக்கா அணியை வீழ்த்தி ஆஸ்திரேலியாவும் இறுதி ஆட்டத்துக்கு முன்னேறியது. குஜராத் மாநிலம், அகமதாபாத் நகரில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் 18.11.2023 பிற்பகல் 2 மணிக்கு இறுதி ஆட்டம் தொடங்கி நடைபெற உள்ளது.

சட்டப்பேரவை சிறப்புக் கூட்டத்தொடர்:

நவம்பர் 18-ல் ஆளுநர் திருப்பி மசோதாக்களை மீண்டும் தாக்கல் செய்வதற்காக தமிழக சட்டப்பேரவை சிறப்பு கூட்டத்தொடர் கூடுகிறது.தற்போது நடைபெறும் கூட்டத் தொடரில் மசோதாவினை நிறைவேற்றி அனுப்பும் பட்சத்தில் ஆளுநர் மசோதவை நிறுத்தி வைக்க முடியாது.

மெட்ரோ பயணச்சீட்டு:

மெட்ரோ ரயில் நிறுவனமானது போன் பே செயலி மூலம் மெட்ரோ பயணச்சீட்டு பெறும் வசதியை  துவங்கியுள்ளது.வாட்ஸ் அட், பேடிஎம் உள்ளிட்ட செயலிகள் மூலம் பயணச்சீட்டு பெறும் வசதி உள்ளது.

‘அனைத்து மாவட்டங்களுக்கும் 5ஜி’:

தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் 5ஜி சேவையை அறிமுகப்படுத்தியுள்ளதாக பாா்தி ஏா்டெல் தெரிவித்துள்ளது. இது குறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: தமிழகத்தின் பல்வேறு நகரங்களிலும் 5ஜி சேவையை நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. 

மாநிலத்தின் 38 மாவட்டங்களுக்கும் அந்த வகைச் சேவை விரிவுபடுத்தப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் நிறுவனத்துக்கு தற்போது 42 லட்சம் 5ஜி வாடிக்கையாளா்கள் உள்ளனா் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

4வது கப்பலான அம்னி-யை அறிமுகம் :

இந்திய கடற்படையானது தமிழ்நாடு காட்டுப்பள்ளியிலிருந்து நீர்மூழ்கி எதிர்ப்பு போர் ஷாலோ வாட்டர் கிராஃப்ட் (ASWSWC) திட்டத்தின் 4வது கப்பலான அம்னி-யை அறிமுகம் செய்துள்ளது.

எண்ணெய் பொருள்கள் ஏற்றுமதி அக்டோபரில் 36 சதவிகிதம் அதிகரிப்பு:

சோயாபீன் மற்றும் ராப்சீட் ஏற்றுமதியால் எண்ணெய் பொருள்கள் ஏற்றுமதி, கடந்த மாதம், 36 சதவிகிதம் அதிகரித்து, 2.9 லட்சம் டன்னாக உயர்ந்துள்ளது. சால்வென்ட் எக்ஸ்ட்ராக்டர்ஸ் அசோசியேஷன் ஆஃப் இந்தியா தரவுகளின்படி, அக்டோபர் மாதத்தில் எண்ணெய் பொருள்களின் ஏற்றுமதி 2,89,931 டன்னாக இருந்தது. அதே வேளையில் சோயாபீன் ஏற்றுமதி கடந்த மாதம் 40,196 டன்னிலிருந்து 87,060 டன்னாகவும், ரேப்சீட் ஏற்றுமதி 98,571 டன்னிலிருந்து 1,69,422 டன்னாகவும் அதிகரித்துள்ளது. 

மேம்பட்ட விலையாலும், ஆர்ஜென்டீனாவின் ஏற்றுமதி விநியோகங்களின் பற்றாக்குறை ஆகியவற்றால் இந்திய சோயாபீனுக்கான வெளிநாட்டு தேவை அதிகரித்து, நாம் பயனடைந்துள்ளோம் என்று சால்வென்ட் எக்ஸ்ட்ராக்டர்ஸ் அசோசியேஷன் ஆஃப் இந்தியா தெரிவித்துள்ளது.

தக்ஷின் – சிறப்பு மையம்:

உலகாளவிய தெற்கு நோக்கிய நாடுகளின் சிறப்பு மையமான தக்ஷின் (DAKSHIN) மையத்தை பிரதமர் மோடி துவங்கி வைத்தார்.தெற்கு நோக்கிய நாடுகள் அமைப்பில் இந்தியா, பாகிஸ்தான், இந்தோனேசியா, சீனா, பிரேசில் நாடுகள் இடம் பெற்றுள்ளன.

அரிவாள் செல் நோய்க்கான( Sickle Cell Disease )மரபணு சிகிச்சை

அரிவாள் உயிரணு நோய்க்கான உலகின் முதல் மரபணு சிகிச்சையான “ காஸ்கேவி” சமீபத்தில் பிரிட்டனில் அங்கீகரிக்கப்பட்டது.இது Vertex Pharmaceuticals (Europe) Ltd. மற்றும் CRISPR தெரபியூட்டிக்ஸ் ஆகியவற்றால் தயாரிக்கப்படுகிறது.

AI சாட்போட் Bard:

கூகுள் நிறுவனமானது மாணவர்கள் மேம்பட்ட ஆன்லைன் பாதுகாப்புடன் கற்றல் அனுபவத்தை மேற்கொள்ள உரையாடல் சார்ந்த செயற்கை நுண்ணறிவுக் கருவியான AI சாட்போட் Bard-ஐ  அறிமுகம் செய்துள்ளது.

கவ்ரோ டோமா 360:Kavro Doma 360

இது கான்பூரை தளமாகக் கொண்ட MKU லிமிடெட் நிறுவனத்தால் உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட உலக-1 ஸ்டம்ப் துப்பாக்கி பாதுகாப்பு பாலிஸ்டிக் ஹெல்மெட்  (World-1st Rifle Protection Ballistic Helmet) ஆகும்

இது AK-47 MSC, M80 NATO BALL மற்றும் M193 துப்பாக்கி தோட்டாக்கள் போன்ற அச்சுறுத்தல்களுக்கு எதிராக தலையின் அனைத்து 5 மண்டலங்களிலும்(முன், பின், இடது, வலது மற்றும் கிரீடம்) சீரான பாதுகாப்பை வழங்குகிறது.

ஹலோ நாரியல் (Hello Nariyal)– அமைப்பு மையம்:

தென்னை அறுவடை மற்றும் தாவர மேலாண்மை நடவடிக்கையை மேற்கொள்ள தென்னை வளர்ச்சி வாரியமானது ஹலோ நாரியல் அழைப்பு மையத்தினை உருவாக்கியுள்ளது.

புதிய தாவர இனங்கள்:

மேற்குத் தொடர்ச்சி மலையின் தெற்கு முனையில் உள்ள பசுமையான காடுகளில் இருந்து இரண்டு புதிய தாவர இனங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக இந்திய தாவரவியல் ஆய்வு (BSI) விஞ்ஞானிகள் குழு தெரிவித்துள்ளது.

புதிய இனங்கள்  Musseanda conferta  மற்றும்  Rungialongistachya  ஆகியவை கண்டுபிடிக்கப்பட்டன.

KEY POINTS : புதிய தாவர இனங்கள்:Musseanda conferta  மற்றும்  Rungialongistachya

தாவர சுகாதார மேலாண்மை மாநாடு / Conference on Plant Health Management :

தெலுங்கானா மாநிலம், ஹைதரபாத் நகரில் தாவர சுகாதார மேலாண்மை குறித்த மாநாடு நடைபெற்றது.

பாரத் ஆர்கானிக்ஸ்:

மத்திய கூட்டுறவு அமைச்சர் சமீபத்தில் தேசிய கூட்டுறவு ஆர்கானிக்ஸ் லிமிடெட் (NCOL) இன் 'பாரத் ஆர்கானிக்ஸ்' பிராண்டை அறிமுகப்படுத்தினார்.

'பாரத் ஆர்கானிக்ஸ்' பிராண்டின் கீழ் 6 பொருட்கள் துவரம் பருப்பு, சனா பருப்பு, சர்க்கரை, ராஜ்மா, பாஸ்மதி அரிசி மற்றும் சோனமசூரி அரிசி.

NCOL மூலம் ஆர்கானிக் பொருட்களை விற்பனை செய்வதன் மூலம் கிடைக்கும் லாபத்தில் 50% நேரடியாக (உறுப்பினர்) விவசாயிகளுக்கு மாற்றப்படும்.

22வது ஆசிய மாஸ்டர் தடகள போட்டி:

பிலிப்பைன்ஸில் நடைபெற்ற வயது முதிர்ந்தோருக்கான 22வது ஆசிய மாஸ்டர் தடகள போட்டியில் தமிழகத்தினைச் சேர்ந்த 86 வயதான கே.சுப்பிரமணியன் நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், மும்முறை தாண்டுதல், ஈட்டி எறிதல் ஆகிய போட்டிகளில் தங்கம் வென்றுள்ளார்.


LIST OF IMPORTANT DAYS AND DATES IN OCTOBER 2023 IN TAMIL :

SUMMITS AND CONFERENCES 2023 IN TAMIL:

  1. SUMMITS AND CONFERENCES JUNE 2023 IN TAMIL
  2. SUMMITS AND CONFERENCES JULY 2023 IN TAMIL
  3. SUMMITSAND CONFERENCES AUGUST 2023 IN TAMIL
  4. SUMMITSAND CONFERENCES SEPTEMBER 2023 IN TAMIL
  5. SUMMITS AND CONFERENCES - OCTOBER 2023 IN TAMIL

No comments:

Post a Comment

Featured Post

CURRENT AFFAIRS IN TAMIL NOVEMBER 2024 (14.11.2024)

காமன்வெல்த் ஆஃப் டொமினிகா தனது உயரிய தேசிய விருதான டொமினிகா விருதை பிரதமர் நரேந்திர மோடிக்கு வழங்குவதாக அறிவித்துள்ளது: