TODAY CURRENT AFFAIRS IN TAMIL 15.11.2023 :

TNPSC PAYILAGAM
By -
0



TODAY CURRENT AFFAIRS IN TAMIL 15.11.2023 :


கூா்நோக்கு இல்லங்கள், சிறப்பு இல்லங்கள், பாதுகாப்பு இல்லங்களின் செயல்பாடுகள் மற்றும் நிா்வாகத் திறன்களை மேம்படுத்த- ஒரு நபா் குழு அறிக்கை:

தமிழகத்திலுள்ள கூா்நோக்கு இல்லங்கள், சிறப்பு இல்லங்கள், பாதுகாப்பு இல்லங்களின் செயல்பாடுகள் மற்றும் நிா்வாகத் திறன்களை மேம்படுத்த தமிழ்நாடு அரசால் ஒரு நபா் குழு கடந்த ஏப்ரல் மாதம் அமைக்கப்பட்டது. உயா் நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி கே.சந்துரு தலைமையிலான, இந்தக் குழு தனது பணிகளை கடந்த மே 2-இல் தொடங்கியது. அவா் மாநிலத்தில் உள்ள கூா்நோக்கு இல்லங்கள், சிறப்பு இல்லங்கள் மற்றும் பாதுகாப்பு இல்லங்களில் நேரடியாக ஆய்வு மேற்கொண்டாா். இதைத் தொடா்ந்து, 500 பக்கங்கள் கொண்ட முழுமையான அறிக்கையைத் தயாரித்த கே.சந்துரு, அதனை தலைமைச் செயலகத்தில் முதல்வா் மு.க.ஸ்டாலினிடம் வழங்கினாா்

KEY POINTS :ஒரு நபா் குழு அறிக்கை:

ஆப்பிள் இந்தியா வருவாய் 48% உயா்வு:

கடந்த 2022-23-ஆம் நிதியாண்டில் நிறுவனத்தின் வருவாய் ரூ.49,322 கோடியாக இருந்தது. இது முந்தைய 2021-22-ஆம் நிதியாண்டோடு ஒப்பிடுகையில் 48 சதவீதம் அதிகமாகும். அப்போது நிறுவனத்தின் வருவாய் ரூ.33,381 கோடியாக இருந்தது. 2021-22-ஆம் நிதியாண்டில் ரூ.1,263 கோடியாக இருந்த நிறுவனத்தின் லாபம் கடந்த நிதியாண்டில் 77 சதவீதம் அதிகரித்து ரூ.2,230 கோடியாக உள்ளது என்று அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்மார்ட் சிட்டி தரவரிசை (Smart City Ranking):

ஸ்மார்ட் சிட்டி தரவரிசை (Smart City Ranking) பட்டியலில் மதுரை 8வது இடத்தினை பிடித்துள்ளது.

முதல் மூன்று இடங்கள் முறையே சூரத் (குஜராத்), ஆக்ரா (உத்திரப்பிரதேசம்), அகமதாபாத் (குஜராத்) ஆகியன பிடித்துள்ளன.

KEY POINTS : ஸ்மார்ட் சிட்டி தரவரிசை (Smart City Ranking):

சங்கரய்யா (1922-2023)

தமிழக அரசின் தகைசால் தமிழர் விருது பெற்ற சுதந்திரப் போராட்ட தியாகி சங்கரய்யா (102) வயதில் காலமானார்.

1967, 1977, 1980 போன்ற ஆண்டுகளில் மதுரை கிழக்கு தொகுதியில் எம்.எல்.ஏ-வாக  பதவி வகித்துள்ளார்.

சம்பூர்ன் குறியீடு அறிமுகம்

இந்திய MSME துறையின் செயல்திறன் பற்றிய நிகழ்நேர தகவலை வழங்கும் சம்பூரன் குறியீட்டை இந்திய சிறு தொழில்கள் மேம்பாட்டு வங்கி (SIDBI) மற்றும் ஜோக்காட்டா (Jocata) இணைந்து அறிமுகம் செய்துள்ளன.

நாய்க்கடியைப் பொருத்து மாநில அரசாங்கம் இழப்பீடு வழங்க வேண்டும்: உயர்நீதிமன்றம் உத்தரவு:

நாய்க்கடியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நாய்க்கடியின் அளவைப் பொருத்து இழப்பீடு வழங்க வேண்டியது மாநில அரசின் பொறுப்பு என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பஞ்சாப் மற்றும் ஹரியாணா உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில், யாரையேனும் நாய் கடித்தால், பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்குவதற்கு மாநில அரசாங்கமே முதன்மைப் பொறுப்பாகும் என்றும், குறைந்தபட்ச இழப்பீடாக ஒரு பல் குறிக்கு ரூ.10,000 இழப்பீடு வழங்கவேண்டும் என தெரிவித்துள்ளது. 

மேலும் அந்த தீர்ப்பில், "ஒருவேளை நாய் கடித்ததால் தோலில் இருந்து சதையை அகற்றும் அளவுக்கு காயம் ஏற்பட்டிருந்தால், ​​0.2 செ.மீ காயத்திற்கு குறைந்தபட்சம் 20,000 ரூபாய் இழப்பீடு வழங்கவேண்டும்" என்று நீதிமன்றம் தீர்ப்பளித்தது. நாய்க் கடி சம்பவங்கள் தொடர்பான மனுக்கள் மீதான விசாரணையின் போது இந்த தீர்ப்பினை வழங்கியது.

மூன்றாவது பல்மருத்துவக் கல்லூரி:

நவம்பர் 15-ல் தமிழகழ்தின் மூன்றாவது பல்மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையானது புதுக்கோட்டையில் திறக்கப்பட உள்ளது.

முதல் இரு பல்மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவமனை முறையே சென்னையிலும், சிதம்பரத்திலும் செயல்பட்டு வருகிறது.

சான் பிரான்சிஸ்கோவில் அபெக் மாநாடு:

2011-க்குப் பிறகு முதன்முதலாக அபெக் - ஆசிய – பசிபிக் பொருளாதார கூட்டுறவு அமைப்பின் மாநாட்டை இந்த ஆண்டு அமெரிக்கா நடத்துகிறது. பசிபிக் பிராந்தியத்தில் வணிகம் மற்றும் பொருளாதார வளர்ச்சி பற்றி விவாதிப்பதற்காக இந்த அமைப்பில் உறுப்பினர்களாகவுள்ள 21 நாடுகளின் தலைவர்கள் இந்த வாரத்தில் சான் பிரான்சிஸ்கோ நகரில் கூடுகின்றனர்.

(APEC) - ஆசிய – பசிபிக் பொருளாதார கூட்டுறவு பசிபிக் பெருங்கடலைச் சுற்றியுள்ள நாடுகளிடையே வணிகம், முதலீடுகள், பொருளாதார வளர்ச்சி போன்றவற்றை மேம்படுத்துவதற்கான அமைப்புதான் - அபெக் (APEC) - ஆசிய – பசிபிக் பொருளாதார கூட்டுறவு. 1989-ல் 12 உறுப்பு நாடுகளுடன் தொடங்கப்பட்ட இந்த அமைப்பில் தற்போது ஆஸ்திரேலியா, புரூனை, கனடா, சிலே, சீனா, ஹாங்காங், இந்தோனேசியா, ஜப்பான், தென் கொரியா, மலேசியா, மெக்சிகோ, நியுசிலாந்து, பப்புவா நியு கினியா, பெரு, பிலிப்பின்ஸ், ரஷியா, சிங்கப்பூர், சீன தைபே, தாய்லாந்து, அமெரிக்கா மற்றும் வியத்நாம் என 21 நாடுகள் அங்கம் வகிக்கின்றன. உலக மக்கள்தொகையில் சுமார் 40 சதவிகிதமும் உலக வணிகத்தில் ஏறத்தாழ சரிபாதியும் இந்த நாடுகளில்தான் இருக்கின்றனர்.

42வது இந்திய சர்வதேச வர்த்தக கண்காட்சி:

புதுதில்லியில் அமைந்துள்ள பிரகதி மைதானத்தில் 42வது இந்திய சர்வதேச வர்த்தக கண்காட்சியானது (India International Trade Fair) வாசுதேவ குடும்பகம் என்ற கருப்பொருளுடன் தொடங்கப்பட்டுள்ளது.

இக்கண்காட்சியாது 14 நாட்கள் நடைபெறுகிறது.

PM-PVTG மேம்பாட்டு இயக்கத் திட்டத்தை இந்தியப் பிரதமர் தொடங்கி வைத்தார்

இந்தியாவில் மொத்தம் 75 பாதிக்கப்படக்கூடிய பழங்குடி குழுக்கள் வாழ்கின்றன. குறிப்பாக பாதிக்கப்படக்கூடிய பழங்குடி குழுக்களைச் (PVTG) சேர்ந்த சுமார் 28 லட்சம் மக்களின் விரிவான வளர்ச்சியை ஊக்குவிப்பதை நோக்கமாகக் கொண்ட PM-PVTG மேம்பாட்டு இயக்கத் திட்டத்தை இந்தியப் பிரதமர் தொடங்கி வைத்தார் . நவம்பர் 15 2023 அன்று பழங்குடி சுதந்திரப் போராட்ட வீரர் பிர்சா முண்டாவின் பிறந்த நாள் கொண்டாட்டத்தில் இந்த திட்டம் தொடங்கப்பட்டது. 18 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 22,000 க்கும் மேற்பட்ட தொலைதூர கிராமங்களில் வசிக்கும் 75 PVTG சமூகங்களின் முக்கியமான தேவைகளை நிவர்த்தி செய்வதை PM-PVTG மேம்பாட்டு இயக்கம் நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த விரிவான அணுகுமுறை விளிம்புநிலை சமூகங்களை மேம்படுத்துவதற்கான அரசாங்கத்தின் உறுதிப்பாட்டுடன் ஒத்துப்போகிறது.

 பிரதம மந்திரி கிசான் பாய்’ :

பயிர் விலையை நிர்ணயிப்பதில் வியாபாரிகளின் ஏகபோகத்தை உடைத்து விவசாயிகளுக்கு அதிகாரம் அளிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்ட பிரதம மந்திரி கிசான் பாய்’ திட்டத்தை வேளாண் அமைச்சகம் அறிமுகப்படுத்தியது. உகந்த சந்தை நிலைமைகளுக்காக காத்திருக்கும் அதே நேரத்தில் தங்கள் விளைபொருட்களை சேமிப்பதில் சவால்களை எதிர்கொள்ளும் சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு ஆதரவளிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. மேலும், எப்போது விற்க வேண்டும் என்பதை முடிவு செய்யும் தன்னாட்சியை விவசாயிகளுக்கு வழங்குவதையும், அறுவடைக்குப் பிறகு குறைந்தபட்சம் மூன்று மாதங்களுக்கு தங்கள் பயிர்களைத் தக்க வைத்துக் கொள்ள அனுமதிப்பதையும் இது நோக்கமாகக் கொண்டுள்ளது.

இந்தியா-ஒபெக் எரிசக்தி பேச்சுவார்த்தையின் 6 வது உயர் மட்டக் கூட்டம்

ஆஸ்திரியாவின் வியன்னாவில் உள்ள ஒபெக் தலைமைச் செயலகத்தில் இந்தியா-ஒபெக் எரிசக்தி பேச்சுவார்த்தையின் 6 வது உயர் மட்டக் கூட்டம் நடைபெற்றது. உலகளாவிய எரிசக்தி சந்தைகளின் நிலைத்தன்மைக்கு உத்தரவாதம் அளிக்க கிடைக்கும் தன்மை, மலிவு மற்றும் நிலைத்தன்மையை உறுதி செய்வதில் இந்த கூட்டம் கவனம் செலுத்துகிறது, மேலும் எண்ணெய் மற்றும் எரிசக்தி சந்தைகள் தொடர்பான முக்கியமான பிரச்சினைகள் குறித்தும் விவாதிக்கப்படுகிறது.

மின்னணு ஆயுட்கால சான்றிதழ் இயக்கம் 2.0:

ஓய்வூதியம் மற்றும் ஓய்வூதியதாரர் நலத்துறை நாடு முழுவதும் மின்னணு ஆயுட்கால சான்றிதழ் இயக்கம் 2.0-ஐ 2023, நவம்பர் 1 முதல் 30 வரை நடத்துகிறது நாடு தழுவிய மின்னணு ஆயுட்கால சான்றிதழ் இயக்கம் 2.0 இந்தியாவின் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 100 நகரங்களில் 500 இடங்களில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இக்லா-எஸ் ஏவுகணை-புரிந்துணர்வு ஒப்பந்தம்

இந்தியா மற்றும் ரஷ்யா நாடுகளுக்கு இடையே இக்லா-எஸ் ஏவுகணைகளை கொள்முதல் செய்ய புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

போர் விமானங்களை தாக்கி அழிக்கும் தன்மையுடைதாகவும், 5 முதல் 6 கி.மீ தொலைவில் உள்ள இலக்குகளை தாக்கி அழிக்கும் தன்மை கொண்டுள்ளதாக இக்லா-எஸ் ஏவுகணைகள் அமைந்துள்ளன.

புவிசார் குறியீடு:

இமயமலை வனப்பகுதியில் செழித்து வளரும் ஒரு தாவரத்தின் இலைகளிலிருந்து வடிவமைக்கப்பட்ட உத்தராகாண்ட் மாநிலத்தின் பெரிநாக் தேயிலைக்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது .

கலாகர் புரஸ்கார்’ விருது :

புகழ்பெற்ற19 வது ‘கலாகர் புரஸ்கார்’ விருது பிரபல கொங்கணி பாடகர், பாடலாசிரியர் மற்றும் இசையமைப்பாளரான அபோலினரிஸ் டிசோசாவுக்கு வழங்கப்பட்டது. 2005-ம் ஆண்டு முதல் ‘கலாகர் புரஸ்கார்’ விருது வழங்கப்பட்டு வருகிறது. இசை, நடனம், நாடகம், நாட்டுப்புறவியல் மற்றும் சினிமா உள்ளிட்ட கொங்கணி கலாச்சாரம் தொடர்பான பல்வேறு துறைகளில் சிறந்த சாதனைகளை அங்கீகரிக்கும் வகையில் இந்த வருடாந்திர விருது கர்நாடகா பகுதியைச் சேர்ந்த நபர்களுக்கு வழங்கப்படுகிறது.

10-வது ஆசியான் (ASEAN) பாதுகாப்பு அமைச்சகர்கள் கூட்டம் :

நவம்பர் 16, 17 ஆகிய தேதிகளில் இந்தோனேசியாவின் ஜகார்த்தாவில் நடைபெறும் 10-வது ஆசியான் (ASEAN) பாதுகாப்பு அமைச்சகர்கள் கூட்டத்தில் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கலந்து கொள்கிறார்.

ASEAN – Association of Southeast Asian Nations

சின்னம்மை தடுப்பூசி:

பிரிட்டன் அரசு சின்னம்மை தடுப்பூசிகளை (Smallpox vaccine) பொதுமருத்துவமனைகளில் குழந்தைகளுக்கு செலுத்த நோய்த் தடுப்புக்கான நிபுணர்கள் கூட்டுக் குழுவிற்கு பரிந்துரை அளித்துள்ளது.

ஐசிசி-யின் 2023 ஆண்டிற்கான அக்டோபர் மாத விருது :

ஐசிசி-யின் 2023 ஆண்டிற்கான அக்டோபர் மாத விருதிற்கு நியூசிலாந்தின் வீரரான ரச்சின் ரவீந்திரா-வும் மேற்கிந்திய தீவுகள் வீராங்கனையான ஹெய்லி மேத்யூஸ்-யும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன.


LIST OF IMPORTANT DAYS AND DATES IN NOVEMBER 2023 IN TAMIL 

நவம்பர் 15 - ஜார்க்கண்ட் நிறுவன தினம்

ஜார்கண்ட் நவம்பர் 15, 2000 அன்று உருவாக்கப்பட்டது. பீகார் மறுசீரமைப்பு சட்டம் இந்தியாவின் 28வது மாநிலமாக பீகாரை நிறுவியது.

நவம்பர் 15 - பிர்சா முண்டா ஜெயந்தி

பிர்சா முண்டா, ஒரு மத மற்றும் பழங்குடி சுதந்திரப் போராட்ட வீரர், நவம்பர் 15, 1875 அன்று ஜார்க்கண்டின் குந்தி மாவட்டத்தில் உள்ள உலிஹாட்டுவில் பிறந்தார். இப்பகுதி பிரிட்டிஷ் இந்தியாவின் பீகாரின் ஒரு பகுதியாக இருந்தது. பிர்சா முண்டா இந்திய சுதந்திரப் போராட்டத்தில் குறிப்பிடத்தக்க நபராக இருந்தார்.பிர்சாமுண்டா பிறந்த தினத்தை முன்னிட்டு ஆண்டுதோறும் பழங்குடியினர் பெருமை தினம் கொண்டாடப்படுகிறது.


LIST OF IMPORTANT DAYS AND DATES IN OCTOBER 2023 IN TAMIL :

SUMMITS AND CONFERENCES 2023 IN TAMIL:

  1. SUMMITS AND CONFERENCES JUNE 2023 IN TAMIL
  2. SUMMITS AND CONFERENCES JULY 2023 IN TAMIL
  3. SUMMITSAND CONFERENCES AUGUST 2023 IN TAMIL
  4. SUMMITSAND CONFERENCES SEPTEMBER 2023 IN TAMIL
  5. SUMMITS AND CONFERENCES - OCTOBER 2023 IN TAMIL

Post a Comment

0Comments

Post a Comment (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn more
Ok, Go it!