TODAY CURRENT AFFAIRS IN TAMIL 08.12.2023
மாநில பேரிடர் நிதி
மிக்ஜம் புயலால் ஏறப்பட்ட பாதிப்பிற்கா தமிழ்நாட்டிற்கு மாநில பேரிடர் நிதியாக 450 கோடி வழங்கப்பட்டுள்ளது.
மேலும் தமிழகத்தில் சென்னையில் முதற்கட்ட நகர்ப்புற வெள்ள மேலாண்மை திட்டத்திற்கு ஒப்புதல் அளித்தும், இத்திட்டத்திற்கு ரூ.561.29 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
ரெப்போ வட்டி விகிதம்
வங்கிகளுக்கான ரெப்போ வட்டி விகிதம் 5-ஆவது முறையாக எந்தவித மாற்றமுமின்றி 6.5 சதவிகிதமாகத் தொடரும் என்றும், வங்கிகளின் குறுகிய கால கடன் வட்டி விகிதங்களில் மாற்றமில்லை என ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் அறிவித்துள்ளார்.
நாட்டில் சில்லறை பணவீக்கம் அக்டோபர் வரை தொடர்ந்து குறைந்துள்ளது, சில துணைக் குறியீடுகளில் ஒப்பீட்டளவில் சரிவு ஏற்பட்டது. அக்டோபர் நுகர்வோர் விலைக் குறியீடு (சிபிஐ) நான்கு மாதங்களில் இல்லாத அளவுக்கு 4.87 சதவிகிதமாக இருந்தது, அதற்கு முந்தைய மாதத்தில் 5.02 சதவிகிதமாக இருந்தது.
நடப்பு 2023-24 நிதியாண்டின் ஜூலை-செப்டம்பர் காலாண்டில் நாட்டின் பொருளாதாரம் 7.6 சதவிகிதம் வளர்ச்சி அடைந்து, வேகமாக வளர்ந்து வரும் பெரிய பொருளாதார நாடாக மாறியுள்ளது. ஏப்ரல்-ஜூன் காலாண்டில் நாட்டின் ஜிடிபி வளர்ச்சி 7.8 சதவிகிதமாக இருந்தது. கடந்த நான்கு கூட்டங்களில், வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி அளிக்கும் வட்டி விகிதமான ரெப்போ விகிதத்தை 6.5 சதவிகிதத்தில் இருந்து மாற்றமில்லாமல் வைத்திருந்தது.
மிசோரோமின் முதலமைச்சராக பதவி ஏற்கிறார்:
ஜோராம் மக்கள் இயக்கம் கட்சியின் தலைவரான லால்துஹோமா மிசோரோமின் முதலமைச்சராக பதவி ஏற்கிறார்.
ஜோராம் மக்கள் இயக்கமானது மிசோரோமில் 27 தொகுதிகளை (40 தொகுதி) வென்று ஆட்சியை கைப்பற்றியுள்ளது
ஜோராம் மக்கள் இயக்கத்தின் தேர்தல் சின்னம் தொப்பி ஆகும்.
ஐ.நாவின் சட்டப் பிரிவு-99:
ஐ.நாவின் சட்டப் பிரிவு-99 என்பது ஐக்கிய நாடுகள் சாசனத்தின் அடிப்படையில் பொது செயலருக்கு அளிக்கப்பட்டுள்ள விசேஷ உரிமைகளில் ஒன்றாகும். உலகின் அமைதி மற்றும் பாதுகாப்புக்கு அச்சுறுத்தும் எதுவொன்றைக் குறித்தும் அவர், ஐ.நா உறுப்பினர்களின் கவனத்துக்குக் கொண்டுவர இதனைப் பயன்படுத்தலாம். ஐ.நாவின் உண்மையான அதிகாரம் 193 உறுப்பு நாடுகளிடம் குறிப்பாகச் சொல்லப் போனால் பாதுகாப்பு அவையில் உள்ள 15 நாடுகளிடம்தான் உள்ளது என்றபோதும் கூடுதலான அதிகாரத்தை இந்தப் பிரிவு பொதுச் செயலருக்கு அளிக்கிறது
1971-ல் அப்போதைய பொதுச் செயலர் யு தான்ட், இந்தச் சட்டப் பிரிவைப் பயன்படுத்தினார். இந்தியா பாகிஸ்தான் போர் விவகாரத்தை உறுப்பு நாடுகளின் கவனத்துக்குக் கொண்டுவர இந்தப் பிரிவு பயன்படுத்தப்பட்டது. 50 ஆண்டுகளுக்குப் பிறகு இஸ்ரேல்-ஹமாஸ் விவகாரத்தில்தான் இந்தப் பிரிவு பயன்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
எத்தனால் தயாரிப்பு தடை
மத்திய அரசானது இந்தியாவில் சர்க்கரை விலை உயர்வை கட்டுப்படுத்தும் நோக்கில் எத்தனால் தயாரிப்புக்கு கரும்புச் சாற்றையோ, கூழையோ பயன்டுத்த தடை விதித்துள்ளது.
Build for Bharat
டிஜிட்டல் வர்த்தகத்தில் உள்ள சவால்களை எதிர்கொள்ளும் வகையில் ஓபன் நெட்வொர்க் (ONDC), Google Cloud India, Antler in India. Paytm, Protean, Startup India ஆகியவற்றுடன் இணைந்து Build for Bharat என்ற முயற்சியை தொடங்கப்பட்டுள்ளது.
அஸ்ஸாமில் இந்திய குடியுரிமை பெற்ற வங்கதேசத்தினா் மத்திய அரசிடம் தகவல் கோரியது உச்சநீதிமன்றம்:
அஸ்ஸாம் மாநிலத்தில் 1966, ஜன.1 முதல் 1971, மாா்ச் 25 வரை இந்திய குடியுரிமை பெற்ற வங்கதேசத்தினா் எண்ணிக்கை குறித்த விவரங்களை டிச.11-ஆம் தேதிக்குள் தாக்கல் செய்யுமாறு மத்திய, மாநில அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
வெளிநாட்டினா் தீா்ப்பாயங்கள் உத்தரவு 1964-இன்படி அந்தக் காலகட்டத்தில் வெளிநாட்டினராகக் கண்டயறிப்பட்டவா்களின் எண்ணிக்கையைத் தெரிவிக்குமாறு நீதிமன்றம் தெரிவித்துள்ளது. 1971 இந்தியா-பாகிஸ்தான் போரின்போது, வங்கேதசத்திலிருந்து வெளியேறிய மக்கள் அஸ்ஸாம் உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களில் தஞ்சம் புகுந்தனா்.
அக்னி-1 ஏவுகணை சோதனை
இந்திய இராணுவமானது ஒடிசாவின் அப்துல்கலாம் தீவிலிருந்து பாலிஸ்டிக் ஏவுகணையான அக்னி-1 வெற்றிகரமாக பரிசோதனை செய்துள்ளது.
இந்த ஏவுகணையானது குறுகிய தொலைவுகளை உள்ள இலக்குகளை அழிக்கும் தன்மை உடையது.
'சிறந்த ஆளுமை- மாற்றுத்திறனாளிகளுக்கு அதிகாரமளித்தல்' என்ற மதிப்புமிக்க தேசிய விருது:(‘Best Personality- Empowerment Of Differently-Abled’)
மாற்றுத்திறனாளிகளுக்கான அதிகாரமளித்தல் துறை ஏற்பாடு செய்த விழாவில், நாராயண் சேவா சன்ஸ்தானின் தலைவர் பிரசாந்த் அகர்வால் , 'சிறந்த ஆளுமை- மாற்றுத்திறனாளிகளுக்கு அதிகாரமளித்தல்' என்ற மதிப்புமிக்க தேசிய விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார் .
இந்த விருதை ஜனாதிபதி திரௌபதி முர்மு விக்யான் பவனில் வழங்கினார் . இயலாமைக்கான அதிகாரமளிக்கும் நோக்கத்தில் அகர்வாலின் அர்ப்பணிப்பை இந்நிகழ்ச்சி எடுத்துக்காட்டுகிறது. குடியிருப்புப் பள்ளிகள், தொழிற்கல்வி மறுவாழ்வு மையங்கள் மற்றும் உதவி சாதனங்களை நிறுவுவதில் அவரது முக்கிய பங்கு பலரின் வாழ்க்கையை கணிசமாக பாதித்துள்ளது.
BBC -முன்னணி 100 பெண்கள் பட்டியல் – 2023
BBC நிறுவனமானது 2023-ஆம் ஆண்டுக்கான முன்னணி 100 பெண்கள் பட்டியலினை வெளியிட்டள்ளது
இதில் இந்தியாவின் நடிகை தியா மிர்சா (ஐ.நா. சுற்றுச்சூழல் திட்ட அமைப்பு நல்லெண்ண தூதர்), கிரிக்கெட் வீராங்கனையான ஹர்மன்ப்ரீத் கெளர் (விஸ்டன் சிறந்த 5 வீரர் பட்டியல்) புகைப்பட கலைஞர் ஆரத்தி குமார் ராவ் (தெற்காசிய பருவ நிலை மாற்றம்) ஆகியோர் இடம் பெற்றுள்ளன.
‘கா்பா’ நடனம் யுனெஸ்கோவின் மனிதாபிமான கலாசார பாரம்பரிய பட்டியலில் சோ்க்கப்பட்டது:
குஜராத் மாநிலத்தின் பாரம்பரிய நடனமான கா்பா நடனம் நவராத்திரி பண்டிகையின்போது நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் நடத்தப்படுகிறது. இதையடுத்து யுனெஸ்கோவின் கலாசார பாரம்பரிய பட்டியலில் கா்பா நடனத்தை சோ்க்க இந்தியா சாா்பில் பரிந்துரைக்கப்பட்டது. இந்தப் பரிந்துரை ஏற்கப்பட்டு, ‘கா்பா’ நடனம் யுனெஸ்கோவின் மனிதாபிமான கலாசார பாரம்பரிய பட்டியலில் சோ்க்கப்பட்டதாக அந்த அமைப்பு அறிவித்தது.
நாட்டில் மின் தேவை 8.5 சதவிகிதம் அதிகரிப்பு:
2023 ஏப்ரல் முதல் அக்டோபர் வரையிலான காலத்தில் மின்தேவை 8.5 சதவிகிதம் அதிகரித்து 9,82,233 யூனிட்களாக உள்ளது என்று நாடாளுமன்றத்தில் இன்று தெரிவிக்கப்பட்டது. 2022ஆம் ஆண்டின் முதல் ஏழு மாதங்களில் எரிசக்தி தேவை 9,05,443 யூனிட்டுகள் என்று மத்திய மின்துறை மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறை அமைச்சர் ஆர்.கே.சிங் மக்களவையில் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் தெரிவித்தார். இதே காலத்தில் மின் வினியோகம் 8.8 சதவிகிதம் உயர்ந்து 8,99,950ல் இருந்து 9,79,344ஆக உயர்ந்துள்ளது.
உலகின் 5-வது பெரிய பொருளாதார நாடாக இந்தியா :
உலகின் 5-வது பெரிய பொருளாதார நாடாக இந்தியா உருவெடுத்துள்ளது என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். மாநிலங்களவையில் விவாத நேரத்தின்போது எழுப்பப்பட்ட பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்து பேசிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியதாவது, இரண்டாம் காலாண்டில் பொருளாதார வளர்ச்சி கணிசமாக உயர்ந்துள்ளது. உலகிலேயே மிகப்பெரிய வளர்ச்சியாகவும் இது பதிவாகியுள்ளது. மேலும், வேகமாக வளர்ந்து வரும் பொருளாதாரம் என்ற நிலையை, தொடர்ந்து தக்கவைத்துக் கொண்டு வருகிறோம். 2014 ஆம் ஆண்டில் 10-வது இடத்தில் இருந்த இந்தியப் பொருளாதாரம், கடந்த 8 ஆண்டுகளில் உலகின் 5-வது மிகப்பெரிய பொருளாதாரமாக இந்தியா உருவெடுத்துள்ளது. இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி(ஜிடிபி) வளர்ச்சிக்கு, அனைத்து துறைகளும் முக்கிய பங்களிப்பை வழங்கியுள்ளன என்று அவர் தெரிவித்தார்.
5வது நாகாலாந்து தேனீ தினம்:
5வது நாகாலாந்து தேனீ தினம் கிசாமாவில் உள்ள நாகா பாரம்பரிய கிராமத்தில் 'தேனீ மற்றும் தேன் சோதனைகள்' என்ற கருப்பொருளின் கீழ் (டிசம்பர் 05, 2023 )கொண்டாடப்பட்டது.
நாகாலாந்து தேனீ வளர்ப்பு மற்றும் தேன் இயக்கத்தின் (NBHM) வழிகாட்டுதலின் கீழ், பாரம்பரிய தேனீ வளர்ப்பு மாநிலத்தில் பலருக்கு நிலையான வருமான ஆதாரமாக மாறி, பொருளாதார நிலைத்தன்மைக்கு பங்களிக்கிறது.
நாகாலாந்தில் தற்போது ஒரு லட்சம் தேனீ வளர்ப்பவர்கள் உள்ளனர். NBHM ஆனது சுமார் 500 கிராமங்களை உள்ளடக்கிய தேனீ வளர்ப்பிற்கான சரியான வழிகாட்டுதலுடன் மேலும் 25,000 பேரை சேர்த்துள்ளது. மாநிலத்தில் மொத்த தேன் உற்பத்தி ஆண்டுக்கு 440 மெட்ரிக் டன்களாக உள்ளது.
இஸ்ரோ 2024:
இஸ்ரோ 2024-ஆம் ஆண்டில் முதல் கட்டமாக புதிய சிறிய ரக செயற்கைக்கோள்களை செலுத்த வடிவமைக்கப்பட்ட எஸ்எஸ்எல்வி ராக்கெட் மூலமாக தொழில்நுட்ப விளக்க செயற்கைக்கோள் ஒன்றை விண்ணில் செலுத்த உள்ளது.
அதனைத் தொடா்ந்து, மனிதா்களை விண்வெளிக்கு அனுப்பும் ‘ககன்யான்’ திட்டத்தின் கீழ் ஆளில்லா விண்கலத்தை விண்ணுக்கு இரண்டு முறை அனுப்பி பரிசோதிக்க உள்ளது. கூடுதலாக, விண்கலம் விண்ணை நோக்கிப் பயணிக்கும்போது ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டால், அதிலிருந்து வீரா்கள் பாதுகாப்பாக வெளியேறும் பன்முக சோதனையையும் இஸ்ரோ மேற்கொள்ளும். மீண்டும் பயன்படுத்தும் வகையிலான ராக்கெட் வாகனத்தை ஓடுபாதையில் பத்திரமாக தரையிறக்கும் பரிசோதனையை 2 முறை மேற்கொள்ள உள்ளது.
நியோஸ்பேஸ் இந்தியா நிறுவனத்தின் (என்எஸ்ஐஎல்) வணிக ரீதியிலான ஒப்பந்தத்தின் அடிப்படையில் ‘ஜிசாட்20’ தகவல்தொடா்பு செயற்கைக்கோளை புவி சுற்றுப்பாதையில் இஸ்ரோ நிலைநிறுத்த உள்ளது. இவை தவிர, 6 பிஎஸ்எல்வி ராக்கெட்டுகளை இஸ்ரோ விண்ணில் ஏவ உள்ளது. இந்த ராக்கெட்டுகள் மூலம் விண்வெளி அறிவியல் ஆய்வு செயற்கைக்கோள், புவி கண்காணிப்பு செயற்கைக்கோள், 2 தொழில்நுட்ப விளக்க செயற்கைக்கோள்கள், என்எஸ்ஐஎல்-இன் 2 வணிக ரீதியிலான திட்டத்தின் கீழான செயற்கைக்கோள்களையும் விண்ணில் ஏவ உள்ளது. மேலும், 3 ஜிஎஸ்எல்வி ராக்கெட்டுகள் செலுத்தும் திட்டத்தின் மூலம் வானியல் ஆய்வு செயற்கைக்கோள், கண்காணிப்பு செயற்கைக்கோள், நாஸா-இஸ்ரோ கூட்டு ரேடாா் செயற்கைக்கோள்களை விண்ணில் ஏவம் திட்டத்தை இஸ்ரோ செயல்படுத்த உள்ளது. அதோடு, என்எஸ்ஐஎல்-இன் வணிக ரீதியிலான திட்டத்தின் கீழ் எல்விஎம்3 (மாக்-3) ராக்கெட் மூலம் செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்தும் திட்டத்தையும் இஸ்ரோ செயல்படுத்த உள்ளது
டிசம்பர் 8 - போதி தினம்ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 8 அன்று, போதி தினம் உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது, பொதுவாக பல்வேறு பெயர்களில். கௌதம புத்தரையும் அவரது பிரசங்கங்களையும் கௌரவிக்கும் வகையில், இது பொதுவாக சந்திர நாட்காட்டியின் 12வது மாதத்தின் எட்டாவது நாளில் நிகழ்கிறது.
LIST OF IMPORTANT DAYS AND DATES IN OCTOBER 2023 IN TAMIL :
- இந்திய தேசிய தினங்கள் முக்கிய நாட்கள் மற்றும் தேதிகள் பட்டியல்
- யுனெஸ்கோவில் அனுசரிக்கப்படும் சர்வதேச தினங்கள்
- 2023 ஆம் ஆண்டின் தமிழ் முக்கிய நாட்கள் மற்றும் தேதிகள் பட்டியல்
SUMMITS AND CONFERENCES 2023 IN TAMIL:
No comments:
Post a Comment