Monday, December 11, 2023

TODAY CURRENT AFFAIRS IN TAMIL 09.12.2023 to 10.12.2023

 


TODAY CURRENT AFFAIRS IN TAMIL 09.12.2023 to 10.12.2023


லஷ்மிபத் சிங்கானியா விருது : Lakshmipat Singhania Award

வி.மோகன் நீரிழிவு சிறப்பு மையம் மற்றும் மெட்ராஸ் நீரிழிவு ஆராய்ச்சி அறக்கட்டளையில் தலைவரான டாக்டர் வி.மோகனுக்கு லஷ்மிபத் சிங்கானியா விருதானது குடியரசுத்தலைவர் திரெளபதி முர்முவால் வழங்கப்பட்டுள்ளது.

இவ்விருதானது நீரிழிவு நோய்க்கான ஆராய்ச்சியில் சிறப்பாக செயலாற்றியதற்காக டாக்டர் வி.மோகனுக்கு கிடைத்துள்ளது.

இங்கிலாந்தின் சிவில் இன்ஜினியர்ஸ் நிறுவனத்தின் முதல் இந்திய வம்சாவளி தலைவராக அனுஷா ஷா பொறுப்பேற்றுள்ளார்:

சிவில் இன்ஜினியர்களுக்கான ஒரு சுதந்திரமான தொழில்முறை சங்கமான இன்ஸ்டிடியூட் ஆஃப் சிவில் இன்ஜினியர்ஸ் (ICE), 95,000 உறுப்பினர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் பிரிட்டனில் உள்ள தொண்டு நிறுவனம், அதன் 205 ஆண்டு கால வரலாற்றில் பேராசிரியராக உள்ள முதல் இந்திய வம்சாவளித் அனுஷா ஷா -தலைவரைத் தேர்ந்தெடுத்துள்ளது

ஐபோன் அசெம்பிளி ஆலை:

கர்நாடகத்தின் பெங்களூருவிற்கு அடுத்தாற்போல் டாடா குழுமமானது ஐபோன் அசெம்பிளி ஆலையை தமிழ்நாட்டின் ஓசூரில் நிறுவ உள்ளது.

இந்தியாவில் டாடா குழுமத்தால் இந்தியாவில் நிறுவப்படும் இரண்டாவது ஐபோன் ஆலையாகும்.

தாவர இனம் கண்டுபிடிப்பு

களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகத்தில் Impatiens Karuppasamyi என்ற புதிய தாவர இனம் கண்டறியப்பட்டுள்ளது.

அம்பேத்கர் – மெழுகு சிலை

இராஜஸ்தானின் மெழுகு அருங்காட்சியகத்தில் சட்டமேதை அம்பேத்கருக்கு மெழுகு சிலையானது நிறுவப்பட்டுள்ளது.

இராஜஸ்தானில் மெழுகு அருங்காட்சியகமானது ஜெய்பூரில் அமைந்துள்ளது.

ஆதித்யா எல்.1 விண்கலம்

சூரியனின் வெளிப்புறப் பகுதியை ஆராய விண்ணில் செலுத்தப்பட்ட ஆதித்யா எல்.1 விண்கலமானது சூட் (SUIT) தொலைநோக்கி மூலம் வெவ்வேறு அலைநீளங்களில் எடுத்த சூரியனின் படங்களை இஸ்ரோ வெளியிடப்பட்டுள்ளது.

2023 செப்டம்பர் 2-ல் ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து பிஎஸ்எல்வி சி-57 ராக்கெட் மூலம்  ஆதித்யா எல்-1 விண்கலம் விண்ணில் செலுத்தப்பட்டிருந்தது.

SUIT- Solar Ultraviolet Imaging Telescope

புவிசார் குறியீடு :

மேகாலயாவின் லடாங் மஞ்சள், பாரம்பரிய உடையான கடரோடக்மண்டா, மதுபானமான கரே சுபிட்சி, லர்னாய் மண்பாண்டங்கள் ஆகியவற்றிற்கு புவிசார் குறியீடானது வழங்கப்பட்டுள்ளது.

சம்மக்கா சரக்கா :

தெலுங்கானா மாநிலத்தில் சம்மக்கா சரக்கா மத்திய பழங்குடியினர் பல்கலைக்கழகமானது நிறுவப்பட உள்ளது.

வெங்காய ஏற்றுமதி – தடை

இந்தியாவில் மத்திய அரசானது வரும் 2024 மார்ச் வரை வெங்காய ஏற்றுமதிக்கு தடையை வெங்காய விலை உயர்வை கட்டுப்படுத்தம் விதமாக தடையை விதித்துள்ளது

மஹூமா மொய்த்ரா

அதானி குழுமத்திற்கு எதிரான குற்றச்சாட்டிற்காக அகில இந்திய திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினை சேர்ந்த மஹூமா மொய்த்ராவின் MP பதவியானது பறிக்கப்பட்டுள்ளது.

அகில இந்திய திரிணாமுல் காங்கிரஸ் தேர்தல் சின்னம் – இரட்டை மலர்கள்

உலகளாவிய செயற்கை நுண்ணறிவு மாநாடு

டிசம்பர் 12 முதல் 14 வரை தில்லியில் உலகளாவிய செயற்கை நுண்ணறிவு மாநாடு நடைபெறவிருக்கிறது.

உலக முதலீட்டாளர் மாநாடு:

உத்தரகாண்டில் நடைபெறும் உலக முதலீட்டாளர் மாநாடானது நடைபெற்றுள்ளது.

இம்மாநாட்டை பிரதமர் மோடி துவக்கி வைத்துள்ளார்.

சுப்ரதா பால்

இந்திய கால்பந்து அணியில் கோல்கீப்பரான சுப்ரதா பால் சர்வதேச கால்பந்து போட்டிகளிலிருந்து ஓய்வினை அறிவித்தார்.

குன்னூர், நஞ்சப்ப சத்திரம்

குன்னூர் ஹெலிக்காப்டர் விபத்தில் இறந்த முப்படை தளபதி பிபின் ராவத், பிபின் ராவத்தின் மனைவி மதுலிகா ராவத் மற்றும் 14 ராணுவ வீரர்களின் நினைவாக குன்னூர், நஞ்சப்ப சத்திரத்தில் நினைவுத் தூணானது திறக்ககப்பட்டுள்ளது.

வந்தே பாரத் ரயில்

சென்னையின் ஐசிஎஃப் மேற்கொண்டுள்ள 50வது வந்தே பாரத் ரயிலின் தயாரிப்பு பணியை விரைவில் முடித்து இம்மாத இறுதிக்குள் ரயில்வே வாரியத்திடம் ஒப்படைக்க உள்ளதாக திட்டமிட்டுள்ளது.

டெல்லி மற்றும் வாரணாசி இடையே முதல் வந்தே பாரத் ரயில் சேவையானது 2019-ல் துவங்கப்பட்டது.

எண்ணூர் கழிமுக எண்ணெய் கசிவு

தேசிய பசுமை தீர்ப்பாயமானது நிர்வாக ஆணைய தலைமையில் 9பேர் கொண்ட உயர்மட்ட குழுவானது எண்ணூர் கழிமுக எண்ணெய் கசிவு தொடர்பாக ஆய்வு மேற்கொள்ள அமைக்கப்பட்டுள்ளது.

தேசிய பசுமை தீர்ப்பாயம் – 2010

உலக பொருளாதார பட்டியல்

உலக பொருளாதார பட்டியலில் 11வது இடத்திலிருந்த இந்தியா 2014-2023 வரையிலான காலகட்டத்தில் 5வது இடத்திற்கு முன்னேற்றம் கண்டுள்ளதாக உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.

2027-ல் 3வது இடத்திற்கு முன்னேறுமென மோர்கன் ஸ்டான்லி பன்னாட்டு வங்கி மற்றும் நிதிச்சேவை நிறுவனம் கணித்துள்ளதாகவும் இருண்ட சூழலில் விடிவெள்ளி இந்தியாவென சர்வதேச நாணய நிதியம் வர்ணித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

பேருந்து – இலவசமாக பயணம்:

தெலுங்கானாவில் அரசுப்பேருந்துகளில் பெண்கள் மற்றும் திருநங்கையர்கள் இலவசமாக பயணம் மேற்கொள்ள மகாலெட்சுமி திட்டத்தினை தெலங்கானா முதலவர் ரேவந்த் ரெட்டி தொடங்கி வைத்துள்ளார்.

தெலுங்கானா சட்டப்பேரவை தொகுதிகள் – 119

கரியமில வாயு இலக்கை

குஜராத் மாநிலம் காந்தி நகரின் கிஃப்ட் சிட்டியில் 2வது சர்வதேச நிதிச் சேவை மையங்களின் ஆணைய அமைப்பு மாநாட்டில் (இன்ஃபினிட்டி ஃபோரம்) 2070க்கு பூஜ்ஜிய கரியமில வாயு எட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

அர்ஜுன் முண்டா

வேளாண் அமைச்சகத்தின் கூடுதல் பொறுப்பிற்கு மத்திய பழங்குடியின அமைச்சரான அர்ஜுன் முண்டா நியமிக்கப்பட்டுள்ளார்.

உணவு பதப்படுத்துதல் துறையின் இணை அமைச்சராக ஷோபா கரந்த்லாஜேவும், பழங்குடியினர் விவகாரத்துறை இணை அமைச்சராக பாரதி பவாரும் மத்திய ஜல்சக்தித்துறை இணை அமைச்சராக ராஜீவ் சந்திரசேகரும் நியமிக்கப்பட்டுள்ளனர்

ரிசர்வ் வங்கி அறிவிப்பு

கடந்த டிசம்பர் 1-ஆம் தேதியுடன் இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பானது 60,400 கோடி டாலராக உயர்ந்துள்ளதென ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

ஜவாத் நினைவு பரிசு 2023

உருது-ஆங்கில மொழிபெயர்ப்புக்காக வழங்கப்படும் ஜவாத் நினைவு பரிசானது பூர்ணா ஸ்வாமியின் பலாஸ்தீனி கவிதை மொழிபெயர்ப்பிற்காக வழங்கப்பட்டுள்ளது.

அமெரிக்கா – தீர்மானமாம் ரத்து

அமெரிக்க தன்னுடைய வீட்டோ அதிகாரத்தினை பயன்படுத்தி ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கொண்டு வந்து காஸா உடனடி போரை நிறுத்த வரைவுத் தீர்மானமாத்தினை ரத்து செய்துள்ளது.

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் வரைவுத் தீர்மானத்தில் பொதுமக்கள் மீதான ஹமாஸ்தாக்குதல் குறித்த கண்டனம் தெரிவிக்கவில்லை என்பதற்காக ரத்து செய்யப்பட்டுள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.

டிசம்பர் 9 - சர்வதேச ஊழல் எதிர்ப்பு தினம்

ஊழல் சுகாதாரம், கல்வி, நீதி, ஜனநாயகம், செழிப்பு மற்றும் வளர்ச்சியை எவ்வாறு பாதிக்கிறது என்பதை எடுத்துக்காட்டுவதற்காக ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 9 அன்று சர்வதேச ஊழல் எதிர்ப்பு தினம் அனுசரிக்கப்படுகிறது.

கருப்பொருள்: “The Un Convention against corruption at 20 : Uniting the world against Corruption”

டிசம்பர் 10 - மனித உரிமைகள் தினம்

மனித உரிமைகள் தினம் டிசம்பர் 10 அன்று கொண்டாடப்படுகிறது. மனித உரிமைகளுக்கான உலகளாவிய பிரகடனம் ஐக்கிய நாடுகளின் பொதுச் சபையால் 1948 இல் ஏற்றுக்கொள்ளப்பட்டது. அனைத்து மக்களின் அடிப்படை மனித உரிமைகள் மற்றும் அவர்களின் அடிப்படை மனித சுதந்திரத்தை பாதுகாக்க இந்த நாள் அனுசரிக்கப்படுகிறது.

12.10.1993-ல் இந்தியாவில் மனித உரிமைகள் சட்டம் இயற்றப்பட்டது.தேசிய மனித உரிமைகள் ஆணைய தலைமையகம் – டில்லி

17.04.1997-ல் இந்தியாவில் தமிழ்நாட்டில் தான் முதன் மனித உரிமைகள் ஆணையம் தொடரப்பட்டது.

கருப்பொருள்: “அனைவருக்கும் சுதந்திரம், சமத்துவம் மற்றும் நீதி”

டிசம்பர் 10 - ஆல்பிரட் நோபலின் நினைவுநாள்

அவர் ஒரு பிரபலமான விஞ்ஞானி, கண்டுபிடிப்பாளர், தொழிலதிபர் மற்றும் நோபல் பரிசுகளை நிறுவியவர். அவரது தந்தை ஒரு பொறியாளர் மற்றும் கண்டுபிடிப்பாளர். 

அவர் அக்டோபர் 21, 1833 இல் பிறந்தார் மற்றும் டிசம்பர் 10, 1869 இல் இறந்தார். அவர் டைனமைட் மற்றும் பிற சக்திவாய்ந்த வெடிமருந்துகளைக் கண்டுபிடித்தார்.


நடப்பு விவகார வினாடிவினா - டிசம்பர், 2023/Current Affairs Quiz - December, 2023


விருதுகள் கௌரவங்கள் 2023 :
MONTH WISE TNPSC GK NOTES IN TAMIL 2023:

LIST OF IMPORTANT DAYS AND DATES IN OCTOBER 2023 IN TAMIL :

No comments:

Post a Comment

Featured Post

CURRENT AFFAIRS IN TAMIL NOVEMBER 2024 (14.11.2024)

காமன்வெல்த் ஆஃப் டொமினிகா தனது உயரிய தேசிய விருதான டொமினிகா விருதை பிரதமர் நரேந்திர மோடிக்கு வழங்குவதாக அறிவித்துள்ளது: