Wednesday, November 1, 2023

TODAY CURRENT AFFAIRS IN TAMIL 01.11.2023



TODAY CURRENT AFFAIRS IN TAMIL 01.11.2023 :

இந்தியாவில் உள்ள இரண்டு நகரங்கள் உலகளவிலான படைப்பூக்கமிக்க நகரங்கள் பட்டியலில் இணையவுள்ளன:

இந்தியாவில் உள்ள இரண்டு நகரங்கள் உலகளவிலான படைப்பூக்கமிக்க நகரங்கள் பட்டியலில் இணையவுள்ளன. அக்.31 உலக நகரங்கள் தினமாகக் கொண்டாடப்படுகிறது. அதனையொட்டி இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது, ஐக்கிய நாடுகளின் கல்வி, அறிவியல் மற்றும் பண்பாட்டு அமைப்பான யுனெஸ்கோ. 

கேரளத்தில் உள்ள கோழிக்கோடும் மத்திய பிரதேசத்தில் உள்ள குவாலியரும் இந்தப் பட்டியலில் இணைகின்றன. கலாச்சாரம், படைபூக்கம் மற்றும் புத்தாக்க நகர மேம்பாட்டுக்கான அங்கீகாரமாக உலகம் முழுவதுமிருந்து 55 நகரங்களை இந்தப் பட்டியலில் புதிதாக சேர்த்துள்ளது, யுனெஸ்கோ.

கோழிக்கோட்டுக்கு இலக்கிய நகரம் என்கிற அங்கீகாரத்தை வழங்கியுள்ளது. கேரள இலக்கிய விழா மற்றும் புத்தக வெளியீடுகள் தொடர்ச்சியாக அங்கு நடைபெற்று வருகின்றன. 

குவாலியருக்கு, இசைக்கான நகரம் என்கிற அங்கீகாரத்தை யுனெஸ்கோ வழங்கியுள்ளது. இந்தியாவின் பழமையான ஹிந்துஸ்தானி இசை, நாட்டுப்புற இசை மற்றும் பக்தி இசையில் குவாலியர், தனித்துவமான கலாச்சாரத்தையும் பன்முகத்தன்மையையும் கொண்டுள்ளது.

ஐ.நா. மனித உரிமை இயக்குநர் ராஜிநாமா:

ஐ.நா. மனித உரிமைகள் இயக்குநர் கிரேக், தனது ராஜிநாமா கடிதத்தை உயர் ஆணையரிடம் வழங்கியுள்ளார். அவரின் கடிதத்தில், காஸாவை முற்றுகையிட்டு தாக்குதல் நடத்தும் விவகாரத்தில் ஐ.நா. அவை மற்றும் மேற்கத்திய நாடுகளின் அணுகுமுறை குறித்து அதிருப்தி தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சாலை விபத்துகளில் தமிழகம் முதலிடம்:

நாட்டிலேயே அதிக சாலை விபத்துகள் நிகழ்ந்த மாநிலங்களில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது. கடந்த ஆண்டு தமிழகத்தில் 64,105 சாலை விபத்துகள் பதிவாகி உள்ளன. உயிரிழப்புகளில் உத்தர பிரதேசம் முதலிடத்திலும், அடுத்தபடியாக தமிழகமும் உள்ளன. 

நாட்டில் ஒரு மணி நேரத்துக்கு சராசரியாக 53 சாலை விபத்துகள் ஏற்படுகின்றன என மத்திய நெடுஞ்சாலைப் போக்குவரத்து அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு நாடு முழுவதும் 4,61,312 சாலை விபத்துகள் நிகழ்ந்துள்ளன. இதில் 1,68,491 போ் உயிரிழந்தனா். 4,36,366 போ் காயமடைந்தனா். 2021-ஐ ஒப்பிடுகையில், விபத்துகளின் எண்ணிக்கை 11.9 சதவீதமும், உயிரிழப்பு 9.4 சதவீதமும், காயமடைவது 15.3 சதவீதமும் அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் மாஞ்சா நூலுக்குநிரந்தர தடை:

சுற்றுச்சூழல், வனத்துறைச் செயலா் சுப்ரியா சாஹூ  வெளியிட்ட அறிக்கை: காற்றாடி பறக்கவிடும் போட்டிகளின் போது மனிதா்களுக்கும் விலங்குகளுக்கும் குறிப்பாக பறவைகளுக்கும் பலத்த காயங்கள், உயிரிழப்புகள் ஏற்பட மாஞ்சா நூலே காரணமாக உள்ளது. மேலும், இவை வடிகால் பாதைகள், நீா்நிலைகளை அடைப்பதன் மூலம் கடுமையான சுற்றுச்சூழல் சீா்கேட்டை ஏற்படுத்துகின்றன. இது பறவைகள், பிற விலங்கினங்களுக்கு மிக ஆபத்தான சூழலை ஏற்படுத்துகிறது. இந்த நிலையில் விலங்குகள், பறவைகள், பொதுமக்கள் உயிரைப் பாதுகாக்கும் பொருட்டு மாஞ்சா நூல் என பிரபலமாக அறியப்படும் நைலான், நெகிழி அல்லது செயற்கை பொருள்களால் தயாரிக்கப்படும் மக்கும் தன்மையற்ற காற்றாடி நூலுக்கு அரசு முழுமையான தடை விதித்துள்ளது. அதன்படி, மாஞ்சா நூல் தயாரித்தல், விற்பனை செய்தல், சேமித்தல், கொள்முதல் செய்தல், இறக்குமதி செய்தல், பயன்படுத்துதல் போன்ற செயல்பாடுகள் முழுமையாக தடை செய்யப்படுகிறது. 

இது தொடா்பாக அக்.6-ஆம் தேதி உத்தரவு வெளியிடப்பட்டு, அக்.30-ஆம் தேதி தமிழ்நாடு அரசிதழில் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

பிரிட்டிஷ் அகாதெமி புத்தக விருது 2023:

பிரிட்டிஷ் அகாதெமி புத்தக விருது, கடந்த 2013 ஆம் ஆண்டிலிருந்து உலக கலாச்சாரங்களைப் பற்றி எழுதப்படும் சிறந்த நூல்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இந்த அண்டு சிறந்த புத்தகமாக நந்தினி தாஸின் கோர்ட்டிங் இந்தியா : இங்கிலாந்து, முகல் இந்தியா அன்ட் ஆரிஜின்ஸ் ஆப் தி எம்பையர் (Courting india : England, Mughal india and the origins of empire) நூல் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

பதிவு அஞ்சல் சேவைக்கு வயது 174:

பதிவு அஞ்சல் சேவை தொடங்கி இன்றுடன் 173 ஆண்டுகள் நிறைவடைந்திருக்கின்றன. இந்திய அஞ்சல் துறையில் பதிவுத் தபால் முறை கடந்த 1849 ஆம் ஆண்டு நவம்பா் 1 ஆம் தேதி அறிமுகப்படுத்தப்பட்டது. இந்தியாவில் தொடங்கப்பட்ட அதே நாளில்தான் லண்டனிலும் பதிவுத் தபால் முறை அறிமுகப்படுத்தப்பட்டது. சாதாரண தபால்களில் முக்கிய ஆவணங்களை அனுப்பிவைப்பதில் வாடிக்கையாளா்களுக்கு சந்தேகங்கள், சிக்கல்கள் இருந்த நிலையில், அதைக் கருத்தில் கொண்டு பதிவு அஞ்சல் சேவை தொடங்கப்பட்டது.

பன்னாட்டு தொழிற்நுட்ப பூங்கா:

சென்னை பல்லாவரம் நகரில் பன்னாட்டு தொழிற்நுட்ப பூங்காயொன்றை (International Technology Park) தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்துள்ளார்.

வரும் 2024-ஆம் ஆண்டு ஜனவரியில் உலக முதலீட்டாளர் மாநாடு-2024 சென்னையில் நடைபெற உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

சிறந்த தமிழ் உச்சரிப்பு விருது 2023:

தமிழ் வளர்ச்சிதுறை சார்பில் தமிழ்நாடு அரசின் சிறந்த தமிழ் உச்சரிப்பு விருதானது (Best Tamil Pronunciation Award) செல்வக்குமார், பொற்கொடி, சுஜாதா பாபு, திவ்ய நாதன் ஆகியோருக்கு வழங்கப்பட்டுள்ளது.

இந்தியா-வங்கதேசம் இடையேயான புதிய ரயில் சேவை:

இந்தியா-வங்கதேசம் இடையேயான புதிய ரயில் சேவையை பிரதமர் மோடி மற்றும் வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா ஆகியோர் இன்று தொடங்கிவைத்தனர். 1.11.2023 பிரதமர் மோடியும், ஷேக் ஹசீனா ஆகியோர் காணொளிக் காட்சி மூலமாக இந்தியாவின் உதவியுடனான மூன்று வளர்ச்சித் திட்டங்களைத் தொடங்கி வைத்தனர். 

இதில், அகர்தலா-அகவுரா குறுக்கு எல்லை ரயில் இணைப்பு, குல்னா-மோங்லா துறைமுக ரயில் பாதை மற்றும் வங்கதேசத்தின் ராம்பாலில் உள்ள மைத்ரீ சூப்பர் அனல் மின் நிலையத்தின் அலகு 2 ஆகும்.

இந்தியாவின் அகர்தலாவிலிருந்து வங்கதேசத்தின் அகவுரா வரை 15 கி.மீ. தூரத்துக்கு ரயில் சேவை தொடங்கப்பட்டுள்ளது. 5 கி.மீ. தூரம் இந்தியாவிலும், 10 கி.மீ. தூரம் வங்கதேசத்திலும் ரயில் பாதை போடப்பட்டுள்ளது.

முதல் மஞ்சப்பை விற்பனை நிலையம் :

சென்னையில் (பெசன்ட் நகர்) தமிழ்நாட்டின் முதல் மஞ்சப்பை விற்பனை நிலையமானது திறக்கப்பட்டுள்ளது.

தமிழக அரசால் மீண்டும் மஞ்சப்பை திட்டமானது 23.12.2021-ல் உருவாக்கப்பட்டது.

அக்டோபர் மாதத்தில் சரக்கு-சேவை வரி (ஜிஎஸ்டி) ரூ.1.72 லட்சம் கோடி :

நாட்டில் கடந்த அக்டோபர் மாதத்தில் சரக்கு-சேவை வரி (ஜிஎஸ்டி) ரூ.1.72 லட்சம் கோடி வசூலாகியுள்ளது. இது, முந்தைய ஆண்டின் இதே காலகட்டத்தில் வசூலானதைவிட 13 சதவீதம் அதிகமாகும். நடப்பு நிதியாண்டில் 2-ஆவது முறையாக ஜிஎஸ்டி வருவாய் ரூ.1.70 லட்சம் கோடியை தாண்டியுள்ளதாக மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.

புதுச்சேரி விடுதலை நாள்: முதல்வர் ரங்கசாமி தேசிய கொடி ஏற்றி மரியாதை:

புதுச்சேரியின் 69-வது விடுதலை நாள் இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டு வரும் நிலையில், முதலமைச்சர் ரங்கசாமி தேசிய கொடியை ஏற்றி வைத்தார்.

1947ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15ம் தேதி பிரிட்டிஷ் ஆதிக்கத்திலிருந்து இந்தியா விடுதலை அடைந்தது. ஆனால் புதுச்சேரியும், அதன் பிராந்தியங்களும் பிரெஞ்சு காலனியாகவே தொடர்ந்தது. இதையடுத்து பிரெஞ்சு அரசு 1954ல் பிரெஞ்சு பிரதிநிதிகளின் கருத்துக்களை வாக்கெடுப்பு நடத்திக் கேட்டறிந்தது. இதில் புதுச்சேரியைச் சேர்ந்த பிரெஞ்சு பிரதிநிதிகள் 192 பேரில் 178 பேர் வாக்களித்தனர். இதில் 170 பேர் இந்தியாவுடன் இணைவதற்கு ஆதரவாகவும், 7 பேர் எதிர்ப்பாகவும் வாக்களித்தனர். 1954 அக்டோபர் 24ம் தேதி இந்தியப் பிரதமர் நேருவும், பிரெஞ்ச் தூதர் இடையே ஒப்பந்தம் ஏற்பட்டது. இதன்மூலம் நிர்வாக மாற்றம் ஏற்பட்டது. 1954 அக்டோபர் 30ந் தேதி டியூப்ளே சிலை முன்பு பிரெஞ்சுக்காரர்கள் ஒன்று கூடி அவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி கப்பல் ஏறி விடைபெற்றனர்.நவம்பர் 1ந் தேதி புதுச்சேரி ஆளுநர் மாளிகையில் பிரெஞ்சு கொடி இறக்கப்பட்டு, இந்தியத் தேசியக்கொடி ஏற்றப் பட்டது. இந்த நாளை புதுச்சேரி விடுதலை நாளாக புதுச்சேரி அரசு கொண்டாடி வருகிறது. அதன்படி இன்று (நவ 01) புதுச்சேரியின் 69-வது விடுதலை நாள் விழாவையொட்டி அரசு விடுமுறை அளித்து கோலாகலமாகக் கொண்டாடப்பட்டு வரும் நிலையில், முதலமைச்சர் ரங்கசாமி தேசியக் கொடியை ஏற்றி மரியாதை செலுத்தி காவல்துறையின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றார்.

முதல் பாரம்பரிய ரயில் :

ஏக்தா நகர்-அகமதபாத் வழியாக குஜராத் மாநிலத்தின் முதல் பாரம்பரிய ரயிலானது (First Heritage Train) தொடங்கப்பட்டுள்ளது.

தீபாவளி பண்டிகை-தமிழகத்தில் 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க அனுமதி:

வருகிற நவம்பர் 12 ஆம் தேதி(ஞாயிற்றுக்கிழமை) தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதையொட்டி இந்த ஆண்டும் தமிழகத்தில் 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க அனுமதி என்று தமிழக சுற்றுச்சூழல் துறை அறிவித்துள்ளது. தீபாவளி அன்று காலை 6 மணி முதல் 7 மணி வரையும், இரவு 7 மணி முதல் 8 மணி வரையும் மட்டுமே அனுமதிக்கப்படுகிறது. நீதிமன்ற உத்தரவுபடி, பசுமைப் பட்டாசு மட்டுமே வெடிக்க வேண்டும் என்றும் தீபாவளியன்று காற்றின் தரத்தை மாசுக் கட்டுப்பாட்டு அதிகாரிகள் மாவட்டம் வாரியாக கண்காணிப்பார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டீசல் பேருந்து தடை– டெல்லி :

டெல்லியில் காற்றின் தரம் மோசமடைந்து வருவதால், காற்றின் தரத்தை மேம்படுத்தும் நோக்கில், பிற மாநிலங்களில் இருந்து வரும் டெல்லியில் இயங்கும் அனைத்து டீசல் பேருந்துகளும் நவம்பர் 1ம் தேதி முதல் தடை செய்யப்படும் என்று சுற்றுச்சூழல் மந்திரி கோபால் ராய் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து கூறிய அவர், குளிர்கால செயல் திட்டத்தின் கீழ் டெல்லி அரசு செயல்பட்டு வருகிறது. தற்போது வாகனங்களால் ஏற்படும் மாசு அதிகரித்து வருகிறது. டெல்லியில் அனைத்து பேருந்துகளும் சிஎன்ஜியில் இயங்குகின்றன. 800க்கும் மேற்பட்ட மின்சார பேருந்துகளும் உள்ளன. இருந்தும் உத்திரபிரதேசம், ஹரியானா, ராஜஸ்தான் மற்றும் என்சிஆர் பகுதிகளில் பிஎஸ் III மற்றும் பிஎஸ் IV டீசல் பேருந்துகள் இயங்குவதால் டெல்லியில் மாசு அதிகரித்து வருகிறது.

6வது சர்வதேச சோலார் கூட்டணி கூட்டம் :

சர்வதேச சோலார் கூட்டணியின் (ISA) ஆறாவது சட்டமன்றம், அக்டோபர் 31, 2023 அன்று புதுதில்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் கூடியது. இந்திய அரசின் மின்சாரம் மற்றும் புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்திக்கான மத்திய அமைச்சர் ஸ்ரீ ஆர்.கே.சிங் தலைமை தாங்கினார். ISA பேரவையின் தலைவர், இந்நிகழ்ச்சியில் 20 நாடுகளைச் சேர்ந்த அமைச்சர்கள் மற்றும் 116 உறுப்பு நாடுகள் மற்றும் கையொப்பமிட்ட நாடுகளின் பிரதிநிதிகள் வரவேற்கப்பட்டனர்.

சபையில் உரையாற்றிய ஸ்ரீ சிங், உலகளவில் சூரிய சக்தியை விருப்பமான எரிசக்தி ஆதாரமாக மாற்றுவதற்கான ISA இன் உறுதிப்பாட்டை வலியுறுத்தினார். 2030 ஆம் ஆண்டளவில் உலகின் மொத்த மின்சாரத்தில் 65 சதவீதத்தை வழங்கவும், 2050 ஆம் ஆண்டளவில் மின் துறையில் 90 சதவீதத்தை கார்பனேற்றம் செய்யவும் புதுப்பிக்கத்தக்க ஆற்றலின் திறனை அவர் எடுத்துரைத்தார்.

INFUSE என்ற புதிய ராக்கெட்டினை விண்ணில் செலுத்தியுள்ளது :

நட்சத்திரங்களின் உருவாக்கம் மற்றும் அதன் வாழ்க்கை சுழற்சியை ஆய்வு செய்யவதற்காக அமெரிக்காவின் நாசா விண்வெளி மையமானது INFUSE என்ற புதிய ராக்கெட்டினை விண்ணில் செலுத்தியுள்ளது.

பாலோன் டி’ஓர் விருது – 2023 :

கால்பந்து விளையாட்டில் சிறந்த வீரர் மற்றும் வீராங்கனைக்கு வழங்கப்படும் பாலோன் டி’ஓர் 2023 (Ballon d’or) விருதானது அர்ஜென்டினாவின் மெஸ்ஸிக்கும், ஸ்பெயினின் – அயிட்டானா பொர்மதிக்கும் வழங்கப்பட்டுள்ளது.

இவ்விருதினாது மெஸ்ஸி 8வது முறையாக வழங்கப்பட்டுள்ளது.

சச்சின் டெண்டுல்கர் சிலை :

கிரிக்கெட் ஜாம்பவானான சச்சின் டெண்டுல்கர் சிலையானது மும்மை வான்கடே மைதானத்தில் திறக்கப்பட்டுள்ளது.

லஞ்ச ஒழிப்பு விழிப்புணர்வு வாரம் (Anti-Bribery Awareness Week) – Oct 31 – Nov 5

கருப்பொருள்: “Say no to Corruption; Commit to the nation” (ஊழல் வேண்டாம்; தேசத்திற்கு அர்பணிப்புடன் இருங்கள்)

ரோகினி நய்யார் பரிசு :

சத்தீஸ்கரில் உள்ள பஸ்தாரில் பழங்குடியின பெண்களுக்கு அதிகாரம் அளித்ததற்காக தீனாநாத் ராஜ்புத் என்பவருக்கு ரோகினி நய்யார் பரிசு 2 வது பதிப்பு வழங்கப்பட்டது .

40 வயதுக்குட்பட்ட, கிராமப்புற இந்திய மக்களின் வாழ்க்கையை மேம்படுத்துவதற்காக, இளம் இந்தியர்களின் முன்மாதிரியான பங்களிப்பை அங்கீகரிப்பது ஒரு பரிசு.

மறைந்த பொருளாதார நிபுணர்-நிர்வாகி டாக்டர் ரோகிணி நய்யாரின் நினைவாக இந்த பரிசு வழங்கப்பட்டது.

ஆரம்ப் 5.0 :

ஆரம்ப் 5.0 இன் உச்சக்கட்டத்தில் 98வது பொது அறக்கட்டளைப் பயிற்சி அதிகாரிகளிடம் பிரதமர் உரையாற்றுவார். ஆரம்பத்தின் 5வது பதிப்பு, 'தடையின் சக்தியைப் பயன்படுத்துதல்' என்ற கருப்பொருளில் நடைபெறுகிறது. இது நிகழ்காலத்தையும் எதிர்காலத்தையும் மறுவடிவமைப்பதில் தொடர்ந்து ஏற்படும் இடையூறுகளை வரையறுத்து, ஆளுகை மண்டலத்தில் சீர்குலைக்கும் சக்தியைப் பயன்படுத்துவதற்கான பாதைகளை வரையறுத்து, உள்ளடக்கிய வளர்ச்சிக்கான முயற்சியாகும். 'மை நஹி ஹம்' என்ற கருப்பொருளைக் கொண்ட 98வது பொது அறக்கட்டளை பாடத்திட்டத்தில், இந்தியாவின் 16 சிவில் சர்வீசஸ் மற்றும் பூட்டானின் 3 சிவில் சர்வீசஸ்களில் இருந்து 560 அதிகாரி பயிற்சியாளர்கள் உள்ளனர்.


 LIST OF IMPORTANT DAYS AND DATES IN OCTOBER 2023 IN TAMIL :

SUMMITS AND CONFERENCES 2023 IN TAMIL:

  1. SUMMITS AND CONFERENCES JUNE 2023 IN TAMIL
  2. SUMMITS AND CONFERENCES JULY 2023 IN TAMIL
  3. SUMMITSAND CONFERENCES AUGUST 2023 IN TAMIL
  4. SUMMITSAND CONFERENCES SEPTEMBER 2023 IN TAMIL
  5. SUMMITS AND CONFERENCES - OCTOBER 2023 IN TAMIL

No comments:

Post a Comment

Featured Post

CURRENT AFFAIRS IN TAMIL NOVEMBER 2024 (14.11.2024)

காமன்வெல்த் ஆஃப் டொமினிகா தனது உயரிய தேசிய விருதான டொமினிகா விருதை பிரதமர் நரேந்திர மோடிக்கு வழங்குவதாக அறிவித்துள்ளது: