TODAY CURRENT AFFAIRS IN TAMIL 18.10.2023

TNPSC PAYILAGAM
By -
0

 


TODAY CURRENT AFFAIRS IN TAMIL 18.10.2023


ஐ.நா சபையின் சிறந்த தொழில் முதலீடு ஊக்குவிப்பு விருது:

ஐ.நா சபையின் சிறந்த தொழில் முதலீடு ஊக்குவிப்பு விருது தமிழ்நாடு அரசின் தொழில் வழிகாட்டி (Guidance TN) நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ளது. அபுதாபியில் நடந்த உலக முதலீட்டுமன்ற நிகழ்ச்சியில் தமிழ்நாடு தொழில் வழிகாட்டி நிறுவன தலைமை செயல் அதிகாரி விஷ்ணு இந்த விருதைப் பெற்றுக்கொண்டார். 

புதுப்பித்தக்க ஆற்றல் சார் முதலீடுகளை அதிகரிப்பதில் ஆற்றிய சிறப்பான பணிகளுக்காக ஐ.நா. அமைப்பின் மதிப்புமிகு முதலீட்டு ஊக்குவிப்பு விருது-2023ஐப் பெற்றுள்ள தமிழ்நாடு அரசின் தொழில் வழிகாட்டி (Guidance TN) நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.

ஒரே ஆரோக்கியத்துக்கான ஆயுா்வேதம் :

நிகழாண்டு ஆயுா்வேத தினம் ‘ஒரே ஆரோக்கியத்துக்கான ஆயுா்வேதம்’ என்ற தலைப்பில் 100 நாடுகளில் கொண்டாடப்படும் என ஆயுஷ் அமைச்சகம் தெரிவித்தது. 

ஆயுா்வேத மருத்துவம் குறித்து சா்வதேச அளவில் கவனம் பெறச் செய்யும் நோக்கத்தில், ஒவ்வோா் ஆண்டும் தன்வந்திரி ஜெயந்தியை முன்னிட்டு நவ. 11-ஆம் தேதி ஆயுா்வேத தினமாகக் கொண்டாடப்படுகிறது.

69வது தேசிய திரைப்பட விருதுகள் :

2021 தாதா சாகிப் பால்கே விருதானது நடிகை வகிதா ரஹ்மானுக்கு வழங்கப்பட்டுள்ளது. இவ்விருதினை பெறும் 8வது பெண் ஆவார்.

மேலும் விழாவில் வழங்கப்பட்ட சில விருதுகள்

  • சிறந்த நடிகர் அல்லு அர்ஜுன் (புஷ்பா)
  • சிறந்த நடிகை கிருதி சனோன் (மிமி)
  • ஆலியாபட் (கங்குபாய் காடியா வாடி)
  • சிறந்த திரைப்படம் ராக்கெட்ரி: நம்பி எஃபெக்ட் (இயக்குநர் – மாதவன்)
  • சிறந்த தமிழ் திரைப்படம் கடைசி விவசாயி (இயக்குநர் மணிகண்டன்)
  • சிறந்த தேசிய விருது கருவறை குறும்படம் (ஸ்ரீகாந்த் தேவா)

ஜெனீவாவில் ஐ.நா.வுக்கான இந்தியத் தூதா் :

ஜெனீவாவில் ஐ.நா. மற்றும் இதர சா்வதேச அமைப்புகளுக்கான இந்தியாவின் நிரந்தரத் தூதராகப் பதவி வகித்துவரும் இந்திரா மணி பாண்டே தில்லிக்கு திரும்பவுள்ள நிலையில், அந்தப் பதவிக்கு அரிந்தம் பாக்சி நியமிக்கப்பட்டுள்ளாா்.

1995-ஆம் ஆண்டுப் பிரிவைச் சோ்ந்த இந்திய வெளியுறவுப் பணி (ஐஎஃப்எஸ்) அதிகாரியான அரிந்தம் பாக்சி, கடந்த 2021, மாா்ச் மாதம் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடா்பாளராகப் பதவியேற்றாா். கிழக்கு லடாக் எல்லைப் பிரச்னை, கரோனா பெருந்தொற்று காலகட்டம், ஜி20 கூட்டமைப்பின் இந்தியத் தலைமை எனப் பல்வேறு முக்கிய விவகாரங்கள் மற்றும் சூழ்நிலைகளை நோ்த்தியாகக் கையாண்டாா்.

டிவி-டி1 ராக்கெட்:

ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவிலுள்ள சதிஸ் தைவான் விண்வெளி  ஆய்வகத்திலிருந்து டிவி-டி1 ராக்கெட் மூலம் அக்டோபர் 21-ல் ஆளில்லாத ககன்யான் விண்கலனானது  விண்ணில் செலுத்தப்பட உள்ளது.

மடிக்கணினி இறக்குமதிக்கு இந்தியா கட்டுப்பாடு:

தகவல் தொழில்நுட்ப வன்பொருள்களான கணினிகள், மடிக்கணினிகள், தொடுதிரை கணினிகள் மற்றும் தகவல் செயல்முறை இயந்திரங்கள் உள்ளிட்ட மின்னணு பொருள்களை இறக்குமதி செய்ய ஆகஸ்ட் மாதம் இந்தியா சில கட்டுப்பாடுகளை விதித்தது. இதன்மூலம் உள்நாட்டில் தயாரிக்கும் பொருள்களின் விற்பனையை அதிகரித்து, சீனா போன்ற நாடுகளிடமிருந்து இறக்குமதி செய்வதைக் குறைக்க மத்திய அரசு முடிவு செய்தது. இந்தக் கட்டுப்பாடுகள் நவம்பா்-1-ஆம் தேதிமுதல் அமலுக்கு வரும் என அறிவிக்கப்பட்டது. 

இந்நிலையில், ஜெனீவாவில் உலக வா்த்தக அமைப்பின் சந்தை அணுகல் குழுக் கூட்டம் பராகுவேயைச் சோ்ந்த ரெனட்டா கிறிஸால்டோ தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது. அதில், ‘இந்தியாவின் இறக்குமதி கட்டுப்பாடுகள் அமெரிக்காவில் இருந்து இந்தியாவுக்கு மின்னணு பொருள்கள் ஏற்றமதி செய்யும் வா்த்தகா்களையும், அதன் பயனாளிகளையும் பாதிக்கும்’ என அமெரிக்க நாட்டுப் பிரதிநிதிகள் தெரிவித்தனா். இறக்குமதி கட்டுப்பாடுகளுக்கு சீனா, கொரியா, தைபே உள்ளிட்ட நாடுகளும் எதிா்ப்பு தெரிவித்தன.

காந்தி சிலை

வியட்நாமின் ஹோ சி மின் நகரில் காந்தி சிலையானது வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெயங்சரால் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

மீண்டும் அணு ஆயுத சோதனைகள்

சா்வதேச ஒப்பந்தத்தின் கீழ் ரஷியா நிறுத்திவைத்துள்ள அணு ஆயுத சோதனைகளை மீண்டும் தொடங்குவதற்கு வழி செய்யும் மசோதாவுக்கு அந்த நாட்டு நாடாளுமன்ற கீழவை  ஒப்புதல் அளித்தது. 

அணு ஆயுதங்களை சோதனை செய்வதற்கு பரஸ்பரம் ஒப்புக் கொண்டு அமெரிக்கா, ரஷியா உள்ளிட்ட 178 நாடுகள் சா்வேச ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டுள்ளன. அதன்படி, புதிதாக அணு ஆயுத சோதனைகள் நடத்துவதை அந்த நாடுகள் தவிா்த்து வந்தன.

விமானி உரிமம்:

மத்திய விமானப்படை போக்குவரத்து அமைச்சகமானது விமானப் போக்குவரத்து விதி 1937-ல் திருத்தம் மேற்கொண்டு வணிக விமானி உரிமத்தின் செல்லத்தக்க காலத்தினை 5 ஆண்டுகளிலிருந்து 10 ஆண்டுகளாக உயர்த்தியுள்ளது.

தேசிய நெடுஞ்சாலைகளில் 10 கி.மீ. இடைவெளியில் புதிய விஐடிஇஎஸ் கேமரா :

தேசிய நெடுஞ்சாலைகளில் 10 கி.மீ. இடைவெளியில் புதிய விஐடிஇஎஸ் கேமராக்களை பொருத்த திட்டமிடப்பட்டுள்ளதாக இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (என்ஹெச்ஏஐ) தெரிவித்துள்ளது.

தேசிய நெடுஞ்சாலைகளில் மற்றும் விரைவுச் சாலைகளில் மேம்படுத்தப்பட்ட சாலைப் பாதுகாப்புக்கும், போக்குவரத்து விதிமுறைகளை எண்ம (டிஜிட்டல்) வழியில் அமல்படுத்த முக்கியத்துவம் கொடுக்கவும் அதிநவீன போக்குவரத்து நிா்வாக அமைப்பு புதுப்பிக்கப்பட்டுள்ளது. 

இதையொட்டி மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளில், அந்தச் சாலைகளில் ஏற்கெனவே இருந்த விஐடிஎஸ் கேமராக்களுக்கு பதிலாக, புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள விஐடிஇஎஸ் கேமராக்களை பயன்படுத்துவதும் அடங்கும். இரு சக்கர வாகனத்தில் 3 போ் பயணிப்பது, தலைக்கவசம் மற்றும் சீட்பெல்ட் அணியாதது, தவறான திசையில் பயணிப்பது, நெடுஞ்சாலையில் கால்நடைகளைக் கண்டறிதல், சாலையை பாதசாரிகள் கடப்பது உள்ளிட்ட 14 நிகழ்வுகளை காணொலி வாயிலாக கண்டறியும் திறன் விஐடிஇஎஸ் கேமராக்களுக்கு உள்ளன.

செப்டம்பர்-ஐசிசியின் 2023-ஆம்  சிறந்த வீரர்

ஐசிசியின் 2023-ஆம் ஆண்டுக்கான செப்டம்பர் விருதிற்காக சிறந்த வீரராக இந்தியாவின் சுப்மன் கில்லும் சிறந்த வீராங்கனையாக இலங்கையின் சாமரி அத்தபத்தும் தேர்வு செய்யப்ட்டுள்ளனர்.

LIST OF IMPORTANT DAYS AND DATES IN OCTOBER 2023 IN TAMIL :

SUMMITS AND CONFERENCES 2023 IN TAMIL:

  1. SUMMITS AND CONFERENCES JUNE 2023
  2. SUMMITS AND CONFERENCES JULY 2023
  3. SUMMITSAND CONFERENCES AUGUST 2023
  4. SUMMITSAND CONFERENCES SEPTEMBER 2023

Post a Comment

0Comments

Post a Comment (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn more
Ok, Go it!