TODAY CURRENT AFFAIRS IN TAMIL 17.10.2023

TNPSC PAYILAGAM
By -
0

 


TODAY CURRENT AFFAIRS IN TAMIL 17.10.2023

ஆசிய பாரா ஒலிம்பிக் போட்டி:

ஆசிய பாரா ஒலிம்பிக் போட்டியில் 303 வீரர் - வீராங்கனைகள் பங்கேற்கவுள்ளதை மத்திய விளையாட்டுத் துறை அமைச்சகம் உறுதி செய்துள்ளது. மேலும், போட்டியில் பங்கேற்கவுள்ள 303 வீரர், வீராங்கனைகளுடன் 143 பயிற்சியாளர்களையும் மத்திய அரசு அனுப்பவுள்ளது. ஆசிய பாரா ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் அக்டோபர் 22ஆம் தேதி சீனாவில் தொடங்கவுள்ளது. அக்டோபர் 28ஆம் தேதி வரை போட்டிகள் நடத்தப்படவுள்ளன.

சர்வதேச மீன்வள மேலாண்மை மாநாடானது 

மீன்வளத்துறையில் உலகின் பருவநிலை மாற்றத்தால் ஏற்படும் பாதிப்புகள் விவாதிப்பதற்கு மத்திய மீன்வளத்துறை சார்பில் சர்வதேச மீன்வள மேலாண்மை மாநாடானது (International Conference on Fisheries Management) நடைபெற உள்ளது.

இம்மாநாட்டில் இந்தோ-பசுபிக் பிராந்தியத்தில் மீன்வள மேலாண்மை நடவடிக்கைகளை வலுப்படுத்துதல் பற்றியும் விவாதிக்கப்பட உள்ளது.

அமேஸ்-28:

முப்பரிமாண அச்சிடப்பட்ட தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி கட்டப்பட்ட முதல் கட்டடமான அமேஸ்-28 என்ற கட்டிடத்தை திறந்து வைப்பதன் மூலம் கட்டுமானத் துறையில் கேரளா குறிப்பிடத்தக்க மைல்கல்லை எட்டியுள்ளது. இந்த புதுமையான கட்டடக்கலை 380 சதுர அடி, ஒரு அறை கொண்ட கோடைகால வீடு கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் திறக்கப்பட்டது. இந்தியாவின் முதல் முப்பரிமாண அச்சிடப்பட்ட வீடு IIT-மத்ராஸில் துவஸ்தா என்ற பெயரில் திறக்கப்பட்டது.

நீர்வாழ் விலங்காக தேர்வு 

அருகிவரும் இவ்வினங்களான கங்கை நன்னீரில் வாழும் ஓங்கில்கள் (Dolphin) உத்திரபிரதேச மாநிலத்தின் நீர்வாழ் விலங்காக தேர்வு செய்யப்பட்டுள்ளது.

மேரி கங்கா, மேரி டால்பின் (Mary Ganga, Mary Dolphin) என்னும் பிரச்சாரத்தினை டால்பின்களை பாதுகாக்க மேற்கொண்டுள்ளது.

அசாமின் மாநில விலங்காகவும் இந்தியாவின் நீர்வாழ் விலங்காகவும் (2009) உள்ளது.

தமிழ்நாடு

  • மாநில விலங்கு-வரையாடு
  • மாநில பறவை-மரகதப்புறா
  • மாநில பூச்சி-தமிழ் மறவன் பட்டாம்பூச்சி
  • மாநில மலர்-காந்தள்
  • மாநில மரம்-பனை மரம்
  • மாநில பழம்-பலா
  • மாநில பண்-தமிழ்தாய் வாழ்த்து
  • மாநில விளையாட்டு-சடுகுடு
  • மாநில நடனம்-பரதநாட்டியம்

சக்ரவத் பயிற்சி 2023:

கோவாவில் சக்ரவத் (Chakravat) எனும் வருடாந்திர கூட்டு மனிதாபிமான உதவி மற்றும் பேரிடர் நிவாரண பயிற்சியை இந்தியாவின் முப்படைகள் மற்றும் அதன் கீழ் உள்ள படைகள் இணைந்து நடத்தியுள்ளன.

இப்பயிற்சியில் இந்திய பெருங்கடல் பிராந்தியத்தில் (Indian Ocean RIM Association) உறுப்பு நாடுகளான ஆஸ்திரேலியா. பங்களாதேஷ். கொமொரோஸ். பிரான்ஸ். இந்தியா. இந்தோனேசியா. ஈரான். கென்யா ஆகிய நாடுகள் பங்கேற்றுள்ளன.

உலகளாவிய கடல்சார் இந்தியா உச்சி மாநாடு 2023:

உலகளாவிய கடல்சார் இந்தியா உச்சி மாநாடு 2023-ன் மூன்றாவது பகுதியைப் பிரதமர் தொடங்கி வைக்கிறார். இந்த மாநாடு மும்பையில் அக்டோபர் 17 முதல் 19 வரை நடைபெறுகிறது.மூன்று நாட்கள் நடக்கும் இந்த மாநாட்டில், எதிர்காலத் துறைமுகங்கள் உட்பட, கடல்சார் துறையின் முக்கிய பிரச்னைகள் குறித்து விவாதிக்கப்பட உள்ளது. 

கரியமிலவாயு குறைத்தல், கடலோரக் கப்பல் போக்குவரத்து மற்றும் உள்நாட்டு நீர் போக்குவரத்து;, கப்பல் கட்டுதல், பழுதுபார்த்தல் மற்றும் மறுசுழற்சி, நிதி காப்பீடு மற்றும் நடுவர் மன்றம்,கடல்சார் குழுமங்கள், கண்டுபிடிப்பு மற்றும் தொழில்நுட்பம், கடல்சார் பாதுகாப்பு மற்றும் கடல்சார் சுற்றுலா போன்றவை அடங்கும். நாட்டின் கடல்சார் துறையில் முதலீடுகளை ஈர்ப்பதற்கான சிறந்த தளத்தையும் இந்த உச்சிமாநாடு அளிக்கும்.முதலாவது கடல்சார் இந்தியா உச்சிமாநாடு 2016 ஆம் ஆண்டில் மும்பையில் நடைபெற்றது. இரண்டாவது கடல்சார் உச்சி மாநாடு 2021 ஆம் ஆண்டில் காணொலி காட்சி வாயிலாக நடைபெற்றது.

அபான் (APAAN – Automated Permanent Academic Account Registry)  அடையாள அட்டை:

மத்திய கல்வி அமைச்சகம் சார்பில் இந்தியா முழுவதும் உள்ள மாணாக்கர்களுக்காக ஓரே நாடு ஓரே ஐடி (One Nation, One ID) திட்டதினை செயல்படுத்த உள்ளது.

தேசிய கல்வி கொள்ளை 2020ன் ஒரு பகுதியாக இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது

மாணவர்களின் மதிப்பெண்கள், சாதனைகளை அறிந்து கொள்ளும் வகையில் ஆரம்பகல்வி முதல் உயர்கல்வி வரையிலான ஒவ்வொரு மாணவர்களுக்கும் 12 இலக்க எண் அடங்கிய அபான் (APAAN – Automated Permanent Academic Account Registry)  அடையாள அட்டையானது வழங்கப்பட உள்ளது.

இந்தியாவின் சிறந்த சுற்றுலா கிராமம் 2023 :

பஞ்சாப் மாநிலம் குருதாஸ்பூரில் அமைந்துள்ள நவன்பிண்ட் சர்தாரன் கிராமம் சமீபத்தில் மத்திய சுற்றுலா அமைச்சகத்தால் “இந்தியாவின் சிறந்த சுற்றுலா கிராமம் 2023” என்ற பட்டத்தை வென்றது. தேசிய நெடுஞ்சாலை-54க்கு தெற்கே ஐந்து கிலோமீட்டர் தொலைவில் உள்ள நவன்பிந்த் சர்தாரன் கிராமம் மாதா வைஷ்ணோ தேவி கோயில், காங்க்ரா, தர்மசாலா, டல்ஹவுசி மற்றும் பிற பிரபலமான சுற்றுலா தலங்களுக்கு இடையே அமைந்துள்ளது.

இந்தியா-பிரிட்டன்

இந்தியா-பிரிட்டன் இடையே 2+2 பேச்சுவார்த்தை முதன் முறையாக புது தில்லியில் வைத்து நடைபெற்றுள்ளது.

வர்த்தகம், முதலீடு, பாதுகாப்பு, மருத்துவம், எரிசக்தி போன்றவற்றை குறித்து இரு நாடுகளின் வெளியுறவு மற்றும் பாதுகாப்பு துறை மூத்த அதிகாரிகள் இடம் பெற்று ஆலோசனை நடத்தினர்.

2023 ஆம் ஆண்டின் சிறந்த ஆண்களுக்கான தடகள வீரர் விருது:

2023 ஆம் ஆண்டின் சிறந்த ஆண்களுக்கான தடகள வீரர் விருதுக்கு நீரஜ் சோப்ராவை உலக தடகள அமைப்பு அதிகாரப்பூர்வமாக பரிந்துரைத்துள்ளது. இந்த கௌரவம், ஈட்டி வீசுதல் துறையில் நீரஜின் குறிப்பிடத்தக்க சாதனைகள் மற்றும் ஒலிம்பிக் மற்றும் உலக சாம்பியன்ஷிப் போட்டிகளில் அவரது தங்கப் பதக்க வெற்றியை வலியுறுத்துகிறது.

வாழ்நாள் சாதனை விருது :

2023 நவம்பரில் கோவாவில் நடைபெறும் 54வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் ஹாலிவுட் நடிகரான மைக்கேல் டக்ளஸ் (Michael Douglas)-க்கு சத்திய ஜித்ரே வாழ்நாள் சாதனை விருது (Sathya Jitre Lifetime Achievement Award) வழங்கப்பட உள்ளது.

கூட்டு ஆணைய கூட்டம்:

வியட்நாம் நாட்டின் ஹனோயில் இந்தியா மற்றும் வியட்நாம் இடையேயான 18வது கூட்டு ஆணைய கூட்டத்தில் இரு நாடுகளுக்கு இடையேயான 50 ஆண்டு கால ராஜீய உறவு சிறப்பிக்கும் விதமாக சிறப்பு தபால் தலை வெளியிடப்பட்டுள்ளது.

இந்தியா, வியத்நாம் இடையிலான வா்த்தக விற்றுமுதலை விரைவில் 20 பில்லியன் டாலராக (சுமாா் ரூ.1.66 லட்சம் கோடி) அதிகரிக்க இரு நாடுகளும் தீா்மானித்துள்ளன.

மொழி ஆய்வக திட்டம்:


தமிழகத்தில் அரசு பள்ளியில் 6 முதல் 8 ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களின் கேட்டல் , பேசுதல் படித்தல் ,எழுதுதல் திறன்களை மேம்படுத்தவதற்காக 2023 ஆம் ஆண்டு மார்ச் 15 ஆம் நாளில் “மொழி ஆய்வக திட்டம் ” தொடங்கப்பட்டது .இதன்மூலம் மாணவர்கள் தங்கள் கணினி மற்றும் செல்போன் வாயிலாக டிஜிட்டல் உள்ளடக்கத்தை பயன்படுத்தி மொழி அறிவை மேம்படுத்தி கொள்ள முடியும் . அக்டோபர் மாதம் முதல் 6,029 அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகளில் “மொழி ஆய்வக திட்டம் ” செயல்படுத்த உள்ளது.


LIST OF IMPORTANT DAYS AND DATES IN OCTOBER 2023-அக்டோபர்  17

17th October வறுமை ஒழிப்புக்கான சர்வதேச தினம் : கருப்பொருள்: “தகுதியான வேலை மற்றும் சமூகப் பாதுகாப்பு”.(“Decent work and Social Preotection; putting dignity in practice for all” )

LIST OF IMPORTANT DAYS AND DATES IN OCTOBER 2023 IN TAMIL :

SUMMITS AND CONFERENCES 2023 IN TAMIL:

  1. SUMMITS AND CONFERENCES JUNE 2023
  2. SUMMITS AND CONFERENCES JULY 2023
  3. SUMMITSAND CONFERENCES AUGUST 2023
  4. SUMMITSAND CONFERENCES SEPTEMBER 2023

Post a Comment

0Comments

Post a Comment (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn more
Ok, Go it!