TODAY CURRENT AFFAIRS IN TAMIL 14.10.2023

TNPSC PAYILAGAM
By -
0



TODAY CURRENT AFFAIRS IN TAMIL 14.10.2023

தமிழ்நாடு அரசு விருதுகள் 2023

  • 2023 ஆம் ஆண்டுக்கான பாரிவேந்தர் பைந்தமிழ் விருது- தமிழ் எழுத்தாளர் சிவசங்கரி
  • புதுமைப்பித்தன் படைப்பிலக்கிய விருது -தமிழ்செல்வி (சிலாவம் )
  • பாரதியார் கவிதை விருது ரவி சுப்பிரமணியன் (நினைவின் ஆழியில் அலையும் கயல்கள் )
  • அழ . வள்ளியப்பா குழந்தை இலக்கிய விருது அருண் (பெரிய தாத்தா ) மற்றும் சி . சரிதா (கடலுக்கு அடியில் மர்மம் )
  • ஜி .யூ .போப் மொழிபெயர்ப்பு விருது-  எம் . பூபதி (பாஸ்டியன் பட்டு )
  • ஏ .பி .ஜே . அப்துல்கலாம் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப விருது - க. மகதமூடி (இதம் தரும் இதயம் )
  • பரிதிமாற் தமிழ் அறிஞர் தமிழ் ஆய்வு அறிஞர் தமிழ்மல்லன் (தனித்தமிழ் இயக்கம் -ஒரு நூற்றாண்டு வரலாறு )
  • முத்தமிழறிஞர் கலைஞர் சமூக நீதி விருது சிவ. இளங்கோ (நிலத்தியில்பின் அரசியல் )
  • சுதேசமித்ரா தமிழ் இதழ் விருது மானுடம் இதழ் நிறுவனம்
  • தொல்காப்பியர் தமிழ் சங்க விருது மயிலை திருவள்ளுவர் தமிழ் சங்கம்
  • அருணாச்சல கவிராயர் விருது - மறத்தமிழன் கலைக்குழு.


உலகாளவிய கடல்சார் உச்சி மாநாடு (Global Maritime Summit) :

மகாராஷ்டிராவின் மும்பையில் அக்டோபர் 17-ல் மூன்றாவது உலகளாவிய கடல்சார் உச்சி மாநாடு நடைபெற உள்ளது.

இம்மாநாடானது துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழி அமைச்சகம் சார்பில் நடத்தப்பட உள்ளது.

பயணிகள் கப்பல் போக்குவரத்து சேவை (Passenger Shipping Service) :

40 ஆண்டுகளுக்குப் பிறகு நாகை - இலங்கை இடையே பயணிகள் கப்பல் போக்குவரத்து சேவை அக்டோபர் 14-ல் தொடங்கியது.

நாகை-இலங்கை இடையே பயணிகள் கப்பல் போக்குவரத்து சேவையானது 60 கடல் மைல் தூரமாக அமைந்துள்ளது

இந்த பயணிகள் கப்பலிற்கு செரியபானி என பெயர் சூட்டப்பட்டுள்ளது.

ஏரிகளின் நகரம் :

ராஜஸ்தான் அரசாங்கமும் சுற்றுச்சூழல் மற்றும் வனத் துறையும் இந்தியாவின் முதல் சதுப்பு நில நகரமாக மாற்றும் நோக்கில், ‘ஏரிகளின் நகரம்’ என்று அழைக்கப்படும் உதய்பூரை சர்வதேச அளவில் உயர்த்துவதற்கு ஒருங்கிணைந்த முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. 

உதய்பூர் அற்புதமான இயற்கை அழகு மற்றும் சுற்றுச்சூழல் முக்கியத்துவத்துடன் ராம்சார் மாநாட்டின் சதுப்பு நில தகுதி அனைத்தும் கொண்டுள்ளது .37 சதுர கிலோமீட்டர் பரப்பளவைக் கொண்ட இந்த நகரம் பிச்சோலா, ஃபதே சாகர், ரங் சாகர், ஸ்வரூப் சாகர் மற்றும் தூத் தலை ஆகிய ஐந்து பெரிய ஏரிகளால் சூழ்ந்துள்ளது .இந்த நீர்நிலைகள் கொண்ட நகரத்தை ‘ஏரிகளின் நகரம்’ என்று அழைக்கப்படுகின்றன.

புதிய வழிகாட்டுதல்:ரயில்வே வாரியம் அனுப்பியுள்ளது:

ரயில் ஓட்டுநா்கள், காா்டுகள் உள்ளிட்ட பணியாளா்களின் பணி நேரம் தொடா்பான புதிய வழிகாட்டுதல்களை, அனைத்து ரயில்வே மண்டலங்களுக்கும் ரயில்வே வாரியம் அனுப்பியுள்ளது. ரயில்களின் இயக்கம் பாதுகாப்பாக இருப்பதை மேம்படுத்த பணியாளா்களின் வேலை நேரம், அவா்களின் ஓய்வு நேரம் ஆகியவற்றை கவனித்துக்கொள்ளுமாறு மண்டலங்களுக்கு நினைவுபடுத்தும் அந்த வழிகாட்டுதல்கள், ஏற்கெனவே வழங்கப்பட்ட பல்வேறு வழிகாட்டுதல்களின் தொகுப்பாக உள்ளது. 

புதிய வழிகாட்டுதல்களில், ‘ரயில் ஓட்டுநா்களின் பணி நேரம் 9 மணி நேரத்தைத் தாண்டக் கூடாது. அதிகபட்சமாக 12 மணி நேரத்துக்கு மேல் வேலை செய்யக் கூடாது. நிலநடுக்கம், விபத்து, வெள்ளம் போன்ற அவசர சூழல்களில் கூடுதல் நேரம் பணியாற்ற நேரிடலாம் என்று அவா்களுக்கு ரயில் கட்டுப்பாட்டாளா் அறிவுறுத்த வேண்டும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

உடல் உறுப்பு தானத்தில் தமிழகம் முதலிடம்:

2023-ஆம் ஆண்டில் இதுவரை தமிழகத்தில் 128பேரிடமிருந்து 733 உறுப்புகள் தானமாக பெறப்பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை செயலர் ககன்தீப் சிங் பேடி தெரிவித்துள்ளார்.

2022-23 ஆண்டுக்கான உடல் உறுப்பு தானத்தில் தமிழகம் முதலிடம் பிடித்து விருதினை பெற்றுள்ளது.

உறுப்பு தான திட்டத்தின் கீழ் 36,472 பேர் பதிவு செய்துள்ளன. 1,737 பேரிடம் உடல் உறுப்பு தானம் பெறப்பட்டு 10,353 பெறப்பட்டுள்ளன.

சென்னை மெட்ரோ ரயில் 2-ஆம் கட்ட ஒப்பந்தம் -டாடா ப்ராஜெக்ட்ஸ்

சென்னை மெட்ரோ ரயில் 2-ஆம் கட்ட திட்டத்தின் 5-ஆம் வழித்தடத்தில் கொளத்தூா் சந்திப்பு, சீனிவாச நகா், வில்லிவாக்கம், வில்லிவாக்கம் பேருந்து நிலைய முனையம் மற்றும் வில்லிவாக்கம் எம்.டி.எச். சாலை என ஐந்து சுரங்கப்பாதை மெட்ரோ ரயில் நிலையங்கள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதுமட்டுமின்றி, கொளத்தூா் சந்திப்பு முதல் வில்லிவாக்கம் எம்.டி.எச். சாலை வரை இரட்டை சுரங்கங்கள், யு-பிரிவு பாதைகள் மற்றும் சாய்தள பாதைகள் உள்ளிட்ட பணிகளும் நடைபெறவுள்ளது. இப்பணிகளுக்கான ஒப்பந்தம் டாடா ப்ராஜெக்ட்ஸ் நிறுவனத்துக்கு ரூ.1,817.54 கோடி மதிப்பில் வழங்கப்பட்டுள்ளது. இதற்கான ஏற்புக்கடிதம் அக்.11-ஆம் தேதி வழங்கப்பட்ட நிலையில், ஒப்பந்தம் வெள்ளிக்கிழமை கையொப்பமானது.

ஜி20 நாடுகளின் நிதியமைச்சா்கள் மற்றும் மத்திய வங்கி ஆளுநா்களின் 4-ஆவது சந்திப்பு:

கிரிப்டோ சொத்துகள் தொடா்பான சிக்கல்களைச் சமாளிக்க ஜி20 அமைப்பின் வழிகாட்டுதல்களை ஒருங்கிணைந்து மற்றும் விரைவாக செயல்படுத்துமாறு ஜி20 நிதியமைச்சா்கள் கூட்டத்தில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. 

மொராக்கோவில் ஜி20 நாடுகளின் நிதியமைச்சா்கள் மற்றும் மத்திய வங்கி ஆளுநா்களின் 4-ஆவது சந்திப்பு நடைபெற்றது. இதில் இந்தியா சாா்பில் மத்திய நிதி அமைச்சா் நிா்மலா சீதாராமன், ரிசா்வ் வங்கி ஆளுநா் சக்திகாந்த தாஸ் பங்கேற்றனா். இந்தச் சந்திப்பில் கிரிப்டோ சொத்துகள் மீதான ஜி20 வழிகாட்டுதல்களை சா்வதேச நிதியம் மற்றும் நிதி நிலைத்தன்மை அமைப்பு இணைந்து தயாரித்த ஒரு தொகுப்பு அறிக்கையில் சமா்ப்பிக்கப்பட்டது.

உலக அளவில் வீடுகள் அதிக விலைபோகும் நகரங்கள் 2023:

உலக அளவில் குடியிருப்பு வீடுகள் அதிகம் விலைபோகும் நகரங்களின் பட்டியல் வெளியாகியுள்ளது. உலகம் முழுவதும் 46 நகரங்களில் சேகரிக்கப்பட்ட தரவுகளின்படி இந்தப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. லண்டனை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் நைட் ஃப்ராங்க் (Knight Frank) என்னும் ரியல் எஸ்டேட் நிறுவனம் இந்தப் பட்டியலை வெளியிட்டுள்ளது. 

2023 இரண்டாம் காலாண்டில் எடுக்கப்பட்ட தரவுகளின் படி, குடியிருப்பு வீடுகள் அதிக விலைக்கு விற்பனையாகும் நகரங்களின் பட்டியலில் இந்தியாவில் மூன்று நகரங்கள் இடம்பெற்றுள்ளன. 

ள்ளிகளுக்கான வழிகாட்டுதல்-UMMEED :

UMMEED-(Understand,Motivate, Manage, Empathise, Empower and Develop) (புரிந்துகொள்ளுதல், ஊக்குவித்தல், நிர்வகித்தல், அனுதாபப்படுத்துதல், அதிகாரம் அளித்தல் , மேம்படுத்துதல்) எனப்படும் பள்ளிகளுக்கான வழிகாட்டுதல்களை கல்வி அமைச்சகம் வெளியிட்டுள்ளது. இந்த வழிகாட்டுதல்களின் நோக்கம் மாணவர்களிடையே அதிகரித்து வரும் தங்களுக்கு தாங்களே தீங்கு விளைவிப்பது மற்றும் தற்கொலை பற்றிய கவலையை நிவர்த்தி செய்வதாகும்.

இந்த வழிகாட்டுதல்கள், “ஒவ்வொரு குழந்தையும் முக்கியம்” என்ற கொள்கையின் அடிப்படையில், தற்போது பொதுமக்களின் கருத்துக்காக திறக்கப்பட்டுள்ளன, மேலும் பள்ளிகள் சுய-தீங்கு வழக்குகளை கையாள்வதை மேம்படுத்துவதற்கான தெளிவான வழிமுறைகளை வழங்குகின்றன.முன்மொழியப்பட்ட நடவடிக்கைகளில், எச்சரிக்கை அறிகுறிகளைக் காண்பிக்கும் மாணவர்களையும், சுய-தீங்கு விளைவிக்கும் அபாயத்தில் உள்ளவர்களைக் கண்டறிந்து, அவர்களின் தேவைகளுக்கு உடனடியாகப் பதிலளிப்பதற்கும், ஆதரவை வழங்குவதற்கும் பொறுப்பான பள்ளி ஆரோக்கியக் குழுவை (SWT) நிறுவுதல் ஆகியவை அடங்கும்.

தமிழக அரசு ஆசிய விளையாட்டுப் போட்டியில் பதக்கங்களை வென்ற 20 வீரர்களுக்கு ரொக்கப் பரிசு :

19வது ஆசிய விளையாட்டுப் போட்டியில் 107 பதக்கங்களில் 28 பதக்கங்களை தமிழக வீரர்கள் வென்றுள்ளனர். ஆசிய விளையாட்டுப் போட்டியில் தமிழகத்தைச் சேர்ந்த 48 வீரர், வீராங்கனைகள் பங்கேற்று 17 பிரிவுகளில் 28 பதக்கங்களை (9 தங்கப் பதக்கங்கள், 11 வெள்ளிப் பதக்கங்கள், 8 வெண்கலப் பதக்கங்கள்) வென்றனர்.தமிழக அரசு பதக்கங்களை வென்ற 20 வீரர்களுக்கு மொத்த ஊக்கத்தொகையாக ரூ.9.40 கோடி ரொக்கப் பரிசு வழங்கியது. தங்கம் வென்றவர்களுக்கு ரூ.50 லட்சமும், வெள்ளிக்கு ரூ.30 லட்சமும், வெண்கலம் வென்றவர்களுக்கு ரூ.20 லட்சமும் வழங்கப்பட்டது.

புஷ் புல் ரயில்:

இரயில்வே நிர்வாகமானது எளிய மக்களும் அதிவேக ரயிலில் பயணிக்க புஷ் புல் ரயில் எனும் திட்டத்தினை அறிமுகம் செய்கிறது.

புஷ் புல் ரயிலின் பெட்டி பெரம்பூர் ஐசிஎஃப் தொழிற்சாலையிலும், புஷ் புல் ரயிலின் எஞ்சின் மேற்கு வங்கத்தின் சித்தரஞ்சன் லோகோமோட்டிவ் ஒர்க்ஸ் ஆலையிலும் தயாரிக்கப்படுகிறது.

2028 ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகள்-கிரிக்கெட்:

2028 ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகள் அமெரிக்காவில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ்லில்  நடைபெறுகிறது .சமீபத்தில் மும்பையில்  நடைபெற்ற சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் 141வது கூட்டத்தொடரில் கிரிக்கெட் போட்டி 2028 ஆம் ஆண்டு ஒலிம்பி போட்டிகளில் சேர்க்கப்பட்டுள்ளதாக அறிவித்தது .

எதிர்வரும் 2028 லாஸ் ஏஞ்சலஸ் ஒலிம்பிக்கில் கிரிக்கெட் உள்ளிட்ட ஐந்து விளையாட்டுகள் புதிதாக சேர்க்க சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி நிர்வாகக் குழு ஒப்புதல் அளித்துள்ளது.

பேஸ்பால் மற்றும் சாஃப்ட்பால், லாக்ரோஸ், ஸ்குவாஷ், ஃப்ளாக் புட்பால் மற்றும் கிரிக்கெட் என ஐந்து விளையாட்டுகள் சேர்க்க சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி நிர்வாகக் குழு ஒப்புதல் அளித்துள்ளது. 

இந்திய உயர்கல்வி ஆணைய மசோதா :

கல்வியின் தரத்தினை உயர்த்தவும், கல்வி நிறுவனங்களுக்கு தன்னாட்சி அந்தஸ்து வழங்கவும் இந்திய உயர்கல்வி ஆணையமானது அமைக்கும் சட்ட மசோதாவனது அறிமுகம் செய்யப்பட உள்ளது.

யுஜிசி, ஏஐசிடிஇ, என்சிடிஇ ஆகியவற்றிற்கு இந்த ஆணையமானது அமைக்கப்பட உள்ளது. மருத்துவம் மற்றும் சட்டக்கல்லூரிகள் இந்த ஆணையத்தின் கீழ் வராது.

கிரதரணி ரவிகுமார் :

பெங்களூருவில் நடைபெறும் தேசிய தடகள போட்டியின் தேசிய ஓபன் தடகள சாம்பியன்ஷிப் மகளிர் 100மீ பிரிவில் தமிழ்நாட்டை சேர்ந்த வீராங்கனையான கிரதரணி ரவிகுமார் முதலிடம் பிடித்துள்ளார்.

சி.பி.ஐ.யின் தற்காலிக சிறப்பு இயக்குநராக :

டி.சி.ஜெயின் மத்திய புலனாய்வு அமைப்பான சி.பி.ஐ.யின் தற்காலிக சிறப்பு இயக்குநராக  நியமிக்கப்பட்டுள்ளார்.

சர்வதே ஒலிம்பிக் கமிட்டி கூட்டம் (IOC Session) :

மகாராஷ்டிராவின் மும்பையில் சர்வதே ஒலிம்பிக் கமிட்டியின் 141வது கூட்டம் நடைபெற உள்ளது.

இந்தியாவின் தலைமையின் கீழ் 40 ஆண்டுகளுக்கு பிறகு இரண்டாவது முறையாக நடைபெற உள்ளது.

சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் தலைவராக தாமஸ் பாச் இருந்து வருகிறார்.

23.06.1894-ல் (IOC-International Olympic Committee) சர்வதே ஒலிம்பிக் கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது.


LIST OF IMPORTANT DAYS AND DATES IN OCTOBER 2023-அக்டோபர் 14

14th October சர்வதேச மின் கழிவு நாள் : மின்னணு கழிவுகளின் சவால்கள் மற்றும் வாய்ப்புகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் அக்டோபர் 14ஆம் தேதி சர்வதேச மின்னணு கழிவுகள் தினம் கடைபிடிக்கப்படுகிறது.

14th October உலக தர தினம் (World Standard Day)  : கருப்பொருள்: “shared vision for a better world: Incorporating SDG 3”

14th October உலக இடம்பெயர்ந்த பறவைகள் தினம் (World Migratory Bird Day) : உலக இடம் பெயரும் பறவைகள் தினம் 2023 என்பது ஒரு வருடத்திற்கு இரண்டு முறை கொண்டாடப்படும் ஒரு உலகளாவிய நிகழ்வாகும்.இந்த ஆண்டுஅக்டோபர் 14 அன்று அனுசரிக்கப்படுகிறது மற்றும் இதன் கருப்பொருள் “தண்ணீர்: பறவை வாழ்வை நிலைநிறுத்துதல்” ஆகும் .இந்த தினம் புலம் பெயர்ந்த பறவைகளின் முக்கியத்துவத்தையும் அவற்றின் பாதுகாப்பு முயற்சிகளையும் எடுத்துரைக்கும் நாள் ஆகும் . .உலக இடம் பெயரும் பறவைகள் தினம் ஆண்டுக்கு இரண்டு முறை கொண்டாடப்படுகிறது இந்த ஆண்டு மே 13 மற்றும் அக்டோபர் 14 உலக இடம் பெயரும் பறவைகள் தினமாக கொண்டாடப்படுகிறது கருப்பொருள்: “தண்ணீர்: பறவை வாழ்வை நிலைநிறுத்துதல்”“Water and its importance for Migratory Bird”.


LIST OF IMPORTANT DAYS AND DATES IN OCTOBER 2023 IN TAMIL :

SUMMITS AND CONFERENCES 2023 IN TAMIL:

  1. SUMMITS AND CONFERENCES JUNE 2023
  2. SUMMITS AND CONFERENCES JULY 2023
  3. SUMMITSAND CONFERENCES AUGUST 2023
  4. SUMMITSAND CONFERENCES SEPTEMBER 2023

Post a Comment

0Comments

Post a Comment (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn more
Ok, Go it!